பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.

குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.

(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)

சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம்.


நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக- கோதுமையின்
அடிப்படையில் தயாரிக்கப் படுகிறது.

நெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்டலாம்.

குழந்தை கூட்டி உண்ண பழகினால்தான் பிறகு திட ஆகாரம் உண்ணமுடியும்.

நெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்து , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்து கொடுக்கலாம்.

மசித்த உருளைக்கிழங்கு, பழவகைகள் மசித்துக் கொடுக்கலாம்.

இட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின்
வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.

உதாரணமாக ஒரு டைம்டேபிள் கொடுத்திருக்கிறேன். (இதன் குறிக்கோள் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவுக் கொடுப்பதுதான். )

காலை 5 மணீ - தாய்ப்பால்.

காலை 8. மணி- இட்லி அல்லது நெஸ்டம்

காலை 9.30 மணி - கொஞ்சம் பால்.

12.மணீ - கஞ்சி, நெஸ்டம்.

1.30 மணி - பால்

4 மணீ - பழ மசியல் + நெஸ்டம்/ செரிலாக் / பிஸ்கெட் பாலில் நனனத்தது.

6 மணி - தாய்ப்பால்

8மணி - திட ஆகாரம்.

இரவு 10.மணி - தாய்ப்பால்.

செரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவையே நாக்கிற்கு
பழக்கமாகிவிடும். நெஸ்டம் ரைஸில் பருப்புத் தண்ணீர், 9/10
மாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக உப்பு/காரம் பழக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை,
இறைச்சி ஆகியவையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்த வேண்டும்.

மிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்
குழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை
உட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.

குழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது
ஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண
பழக்க வேண்டும்.


(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது
தெரிகிறது)

கறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.

7 comments:

ஆகா கலக்குறிங்கலே...ம்ம்ம் இம்சைக்கு நல்லா பாடம் எடுக்கறிங்க

மிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்
குழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை
உட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.

குழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது
ஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண
பழக்க வேண்டும்.

(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது
தெரிகிறது)

கறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.

ரொம்ப சரி எங்க வீட்டில கறை இல்லாத இடம் எதுவுமே இல்ல

ரொம்ப சரி எங்க வீட்டில கறை இல்லாத இடம் எதுவுமே இல்ல

பவன்,

அப்ப நீதான் எல்லாத்தையும் நல்லா கத்துக்கிட்டன்னு அர்த்தம்.

ஆனா அதுக்குன்னு அம்மா, அப்பாவுக்கு ரொம்ப தொந்திரவு தராத.

அவங்களூம் பாவம் இல்ல.

=) [எவ்வளவு வயசு ஆனாலும் அம்மாவுக்கு மகன்/மகள் இன்னும் குழந்தைன்னு சொல்வாங்களே. அதுக்குத்தான் இந்த ஸ்மைலி]

சாமான்யன் சிவா சொன்னது.
=) [எவ்வளவு வயசு ஆனாலும் அம்மாவுக்கு மகன்/மகள் இன்னும் குழந்தைன்னு சொல்வாங்களே. அதுக்குத்தான் இந்த ஸ்மைலி]//

அப்பாடி மொதத் தடவை உ.குத்து எதுவும் இல்லாம சரியா சொல்லியிருக்கீங்க.

நன்றி சிவா

<==
அப்பாடி மொதத் தடவை உ.குத்து எதுவும் இல்லாம சரியா சொல்லியிருக்கீங்க
==>
புதுகைத் தென்றல் சொல்ரார்.

உண்மையில அந்த ஸ்மைலிதான் என்னோட கமெண்ட்.அதுக்கு ஒரு வரி விளக்கம் கொடுக்க வேண்டியதாய்ப்போய்டுச்சு.

உங்க இந்த பாராட்டை என்னோட ப்ளாக்குல தலைப்புல போட்டுக்கலாமா?! =)
[பெண்ணுரிமைப்போராளி,பழமொழிப் பெருந்தகை,வாரம் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கும்,4வரி பதிவுக்கு 130 கமெண்ட் பெற்ற, புதுகைப்புயலின் முதல் பாராட்டுப்பெற்ற பதிவர்.......]

என்னவேணாம் பண்ணிக்குங்க அப்படீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா?

அஹா...........

வலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி சேர்க்கப்பட்டது
http://blogintamil.blogspot.com/2008/06/blog-post_19.html

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்