பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

வல்லி சிம்ஹன் பதிவிற்கு பின்னூட்டம் இடும் பொழுது தான் இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

எங்கள் வீட்டில் இருவருமே ஆண்பிள்ளைகள், அருகருகே வசிப்பவர்களுக்கு கூட பெண்மகவு இல்லை அதனால் என் சின்னப்பையனுக்கு பெண்களின் சகவாசம் அதிகம் கிடையாது.

ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த அவன் வழக்கத்தை மீறி ரொம்ப சோர்வாகவும் அதேசமயம் ரொம்ப கோபமாகவும் இருந்தான் ஆனா அவன் ரொம்ப அழுத்தம் அதுனால லேசில வாயிலிருந்து விஷயம் வராது எவ்வளவு அழுத்தம்னா, அவனுக்கு ஒரு 5 வயசு இருக்கும் போது தெரு முனையில இருக்கற கடைக்கு தேங்கா வாங்கிட்டு வான்னு 10 ரூபா குடுத்து அனுப்பிச்சோம் கொஞ்ச நேரம் கழிச்சு வெறும் கையோட வந்து நின்னான் நாங்க ரொம்ப பயந்து போய்

01. என்னாச்சு ரூபாய தொலைச்சிட்டயா – பதிலே இல்லை
02. கடைக்காரி தேங்க தரலயா – பதில் “தரல”
03. ஏன் - - பதிலில்லை
04. மீதி காசு எங்கே – “காக்கா தூக்கிட்டு போச்சு”
05. எதை தேங்கயவா காசையா – காசை
06. அப்ப தேங்கா என்ன ஆச்சு - பதிலில்லை
07. வரும்போது கீழ விழுந்திட்டதா – பதிலில்லை
08. எங்க அம்மா அதுக்குள்ள வந்து "குழந்தை கையில இருந்து யாராவது பிடிங்கிண்டு போயிருப்பா இதுக்குத்தான் சின்ன குழுந்தைய அனுப்பாதேன்னு சொன்னா நீங்க ஏதோ டிரெயின் பண்ரேன்னு அனுப்பிச்சேள் ஏண்டா கண்ணா யாராவது பிடிங்கிண்டு போயிட்டாளா" – பதில் “ஆமாம் பாட்டி ஒருத்தன் ஓடி வந்து பிடிங்கிண்டு ஓடியே போய்ட்டான்.”
09. நாங்க பொய் சொல்லாதே பாப்பா, நீ கீழ விழுந்திட்டயா – பதில் “ஆமாம் நான் கீழ விழுந்திட்டேன்…”
10. எங்க விழுந்த – திருப்பதி வீட்டுக்கு பக்கத்துல (அவன் வீட்டுக்கும் தேங்கா கடைக்கும் சம்பந்தமே கிடையாது)

இப்படி கேட்கிற கேட்விக்கெல்லாம் அவனுக்கு தோன்றிய படி பதில் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரியிடம் விசாரித்ததில் அவள் தேங்காயும் இரண்டு ரூபாய் சில்லரையும் கொடுத்து விட்டுருந்தது தெரியவந்தது, வழியில் எங்கும் தேங்காயை காணவில்லை இன்று வரை அது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. எங்கள் அனுமானம் தேங்காய் கீழே விழுந்திருக்கும் அவனுக்கு மண்ணைத்தொடப் பிடிக்காது எனவே எடுக்காமல் வந்திருப்பான் ஆனால் அவன் வாயில் இருந்து இன்று வரை என்ன நடந்தது என்று சொன்னதில்லை. எனவே இந்த மாதிரி ஏதாவது நடந்தால் உடனே நாங்கள் நித்தா தேங்கா வாங்கின கதைதான் என்று ஸ்டேட்மெண்ட் விடுவோம். அந்த அளவு அழுத்தமானவன் இன்று வரை அப்படித்தான் (இப்போது அவனுக்கு வயது 10) அதனால் யாரும் நேரடியாய் என்ன விஷயம் என்று கேட்கவில்லை.

இரவு வழக்கமாய் அவன் எங்களுக்கு கதை சொல்வான் அது அவனுக்கும் எங்களுக்கும் மிகவும் பிடித்த தருணம். நான் ஒரு மாதிரி சாயங்காலமா – பாப்பா இன்னிக்கி என்ன கதை என்று ஆரம்பித்து பின் மெதுவா என்ன ஆச்சு இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து ரொம்ப டல்லா இருந்தே யார் கூட பிரச்சனை என்றதும் தான் விஷயம் வந்தது.

அம்மா என்ன மிஸ் எடம் மாத்திட்டாங்க (அது வழக்கமாய் நடக்கும் ஒன்றுதான் அவர்கள் ஒரு மாதிரி பீரியாடிக்கலா பிள்ளைகளின் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் இதிலென்ன புதுசு என்று எண்னியபடி) க்ரேட் யாரு இப்ப உன் பக்கத்துல இருக்காங்க என்று கேட்டதும் தான் தாமதம், அதான் அந்த மேகி (மரகதமத்தின் சுருக்கம் இவர்களாக வைத்துக்கொண்டது) அவ பக்கத்துல போய் என்னப் போட்டிருக்காங்க நான் மிஸ்கிட்ட கம்ப்ளெயின் பண்ணியிருக்கேன் ஆனா நாளைக்கு மாத்தறேன்னு சொல்லியிருக்காங்க அப்படி மாத்தலேன்னா நாளைக்கு நான் எங்க சோசியல் மிஸ்கிட்ட சொல்லுவேன் என்று ரொம்ப ஆதங்கத்தோடு சொன்னான் (எனக்கு ஒரே ஆச்சரியம் ஏன்னா அவன் இப்படி எல்லாம் ரொம்ப சென்சிடிவா இருக்க மாட்டான் யாரு வந்தாலும் போனாலும் கண்டுக்கவே மாட்டான் அவன் உலகம் தனி என இருப்பான் இப்ப என்ன வந்தது என்ற எண்ணத்துடன்) ஏன் அந்த மேகி பக்கத்துல உக்காந்தா என்ன? என்றதுக்கு அம்மா அவ தல பூராவும் ஒரே பேன் எப்பவும் தலைய சொறிஞ்சிண்டே இருப்பா அவ பக்கத்துல இருந்தா எனக்கும் அவ தல பேன் பூரா வந்துரும் அவ டார்க்கா தலைக்கு எண்ணை தடவிண்டு வருவா (அந்தப்பெண்ணிற்கு சற்றே நீண்ட கூந்தல் அவள் தினமும் அழகாக அதைப்பின்னி ரிப்பன் வைத்து கட்டிக்கொண்டு வரும் அழகை நான் பார்த்து ரசிப்பதுண்டு) அதான் நான் மிஸ்கிட்டே சொல்லிட்டேன் மிஸ் அவ தலைல பேன் இருக்கு நான் அவ பக்கத்தில உக்கார மாட்டேன், சம்டைம் அவள் தலைல இருக்கிற எண்ணை என் சைட்டைல பட்டுடும்னு. மிஸ் நாளைக்கி இடம் மாத்திருவாங்க. என்று முடித்ததும் அவன் முகம் ரிலாக்ஸ் ஆனாது ஆனால் என் மனம் மிகவும் கனத்துப்போனது. உடன் ஒரு பெண் குழந்தை வளரும் பட்சத்தில் ஒரு ஆண் குழத்தையால் இவ்வளவு நிர்தாட்சண்யமாக ஒரு சக பெண்குழந்தையை நிராகரிக்க முடியுமா??? இதை கேட்ட அந்த பள்ளி ஆசிரியை, அந்த மாணவியின் மனது எப்படி இருந்திருக்கும் அதை நான் இவனுக்கு எவ்வாறு புரிய வைப்பது போன்ற பல கேள்விகள் என்னுள் பிறந்தது.

அதனால் பொதுவாக அன்றிலிருந்து நான் அவன் வயது பெண்குழந்த்தைகளைப்பற்றி அவனிடம் அதிகம் பேசத்துவங்கினேன். முடிந்த போதெல்லாம் அவர்களின் உலகம் பற்றிய புரிதலை அவனுள் விதைக்கத்தலைப்படுகிறேன். ஏனெனில் எதிர் எதிர் உலகமும் அதைச்சூழ்ந்த பிரச்சனைகளயும் புரிந்து கொள்பவரால் தானே நல்ல தகப்பனாய், பிள்ளையாய், நன்பனாய், கணவனாய், மனிதனாய் இருக்க முடியும்.

10 comments:

thats realy a very good approach..

என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியலை :(

ஆகா நல்லது செய்யறீங்க.. அதுவும் கடைசிபாரா முழுசுமே படிச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது..

ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.

கடைசி பாரா தான் ஹைலைட்.

வாழ்த்துக்கள்.

நல்ல அணுகுமுறை..கால காலம் இருந்துட்டு வர்ற ஒரு இடைவெளி..சரியான அணுகுமுறை இல்லேன்னா ப்ரச்னைதான்..

வாழ்த்துகள் கிருத்திகா..

வருகை தந்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.. நாம் செய்யும் இதுபோன்ற சிறு சிறு முயற்சிகளும் திருத்தங்களும் தானே நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் பாடமாக இருக்க முடியும்.

மைன்ட்ல வெச்சிக்கறேன்...டைம் வரும் போது யூஸ் பண்ணிக்கரேன்...

ரொம்ப ஆழமா ஆராயிந்து எழுதிருக்கிங்க. இந்து அளவுக்கு வெகு சிலரே தங்களோட பிள்ளைகள் பற்றி புரிஞ்சிவச்சிருக்காங்க.

இதுவும் பாலியல் சம்பந்தமான நோக்கு தான். இது மிகவும் வரவேற்கிறேன்.

ENNAI PORUTHAVARAI IPPOZHUDHU UNGAL KUZHANDHAI ENNAM KUZHANDHAITHANAM DHAAN.... KAALAPPOKKIL ADHU MAARIVIDUM...IRUNDHAALUM THANGALIN INDHA SEYAL ORU SIRANDHA "THAAIMAI UNARVAI THAAN VELIPADUTHUKIRADHU"... VAAZHTHUKKAL....(" HAMAM ADV LA VARRA AMMAVA NGYAABAGAPADUTHREENGA")

//எதிர் எதிர் உலகமும் அதைச்சூழ்ந்த பிரச்சனைகளயும் புரிந்து கொள்பவரால் தானே நல்ல தகப்பனாய், பிள்ளையாய், நன்பனாய், கணவனாய், மனிதனாய் இருக்க முடியும்.//
சரியான போக்கில் வாழ்க்கைக் கல்வி.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்