பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

"இவனைக் கட்டுப்படுத்தவே முடியலை...

விஷமம் தாங்கலை. இரு இரு ஸ்கூல் திறக்கட்டும்.
உன்னை முதலில் கொண்டுபோய் தள்ளிவிடறேன்."

"இருடி! அடிக்கிற டீச்சரா கிடைக்கணும்.
அப்பத்தெரியும்."

" இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாதான் நிம்மதியா இருக்கும்"

"ஸ்கூல் திறக்கட்டும். தரத் தரன்னு இழுத்துகிட்டுபோய்
ஸ்கூலில் சேத்துட்டுதான் மறுவேலை"

இதை எல்லாம் கேட்ட பின்னாடி பிள்ளை ஸ்கூல்
போக விரும்புமா?

பள்ளி என்றாலே ஏதோ பூச்சாண்டி இருக்கும் இடம்
என்பது போல் ஆகிவிடாதோ...

இப்படி சொல்வதை கேட்டு வளரும் பிள்ளைக்கு
பள்ளி ஒரு ஜெயிலாகவும், ஆசிரியர்கள் பூதங்களாகவும்,
படிப்பு எட்டிக்காயகவும் அல்லவா ஆகிவிடும்.

மாறாக, "ஹை பப்பு குட்டி ஸ்கூல் போகப்போறாளே!
ஜாலி, ஸ்கூலுக்கு போனா நிறைய ஃபெரண்ட்ஸ்
கிடைப்பாங்க" என்றோ,

சுரேஷுக்கு ஜாலி, புது ஸ்கூல், புது டீச்சர்,
போரடிக்காம எஞ்சாய் செய்யலாம் என்றோ சொல்வதனால்

புதிதாக பள்ளி செல்லும் குழந்தைக்கு பள்ளியின் மீதும்
பாடத்தின் மீதும் நல்ல அபிப்ராயம் ஏற்படும்.

ஜூன் மாதத்தில் டீச்சர்களே பயப்படும் அளவிற்கு
அழுது, ஆராட்டம் செய்து, பல சமயம், "என்னை
விடு!" என்று டீச்சரை அடிக்கவும் செய்யாமல்
குழந்தை தன்னை புது சூழலுக்கு தயார் செய்து
கொள்ளும்.
அதற்கு வீட்டில் நாம் தரும் பாசிடிவான
கமெண்டுகள் மிக முக்கியம்.

குழந்தையைக் கவர கடைக்கு அழைத்துச்சென்று
புது பேக், வாட்டர் பாட்டில், ஷூ, யூனிபார்ம்
போன்றவை, வாங்கிக் கொடுக்கலாம்.

முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தன் கணவருடன்
திரைப்படம் பார்க்கச் செல்வதை ஊர் மொத்தம்
சொல்லிக்கொண்டு செல்வார். அது மாதிரி
"எங்க சுஜா ஸ்கூலுக்கு போகப்போறா.
அவளுக்கு தேவையானது எல்லாம் வாங்கப்போறோம்"
என்று குழந்தையின் காதுபட 4 பேரிடம் சொல்லாம்
தப்பில்லை.

அதனால் ஏதோ நல்லது நடக்கபோகிறது போன்ற
அபிப்ராயமே பிள்ளையின் மனதில் ஏற்படும்.

பிள்ளைக்கு கல்வியின் அவசியத்தை அறிந்த நாமே
அவர்களுக்கு அதை எட்டிக்காயக்ககூடாது.

9 comments:

mind ல வெச்சிக்கிறேன். உபயோகமா இருக்கும்.

வாங்க சிவா,

:))))))))))))))))))))))))))

//மங்களூர் சிவா said...
mind ல வெச்சிக்கிறேன். உபயோகமா இருக்கும்.//

ஏதோ நல்லது நடக்கபோகிறது

பதிவு நல்லா இருக்கு அக்கா கல்யாணமாகப்போகும் அண்ணன்கள் மற்றும் கல்யாணமாகி இருக்கும் அண்ணன்களும் கூட இதை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது :)))))

ஏதோ நல்லது நடக்கபோகிறது//

வாங்க ஆயில்யன்,

எப்பத்திலிருந்து குறி சொல்ல ஆரம்பிச்சீங்க :))))

நல்லது நடந்தா சரி.

ஆஹா சரியான நேரத்துல நல்ல பதிவு போட்டு இருக்கீங்க.

//மங்களூர் சிவா said...
mind ல வெச்சிக்கிறேன். உபயோகமா இருக்கும்//

ஆஹா சிவா எல்லாம் ரெடி செஞ்சுட்டிய்யா? இந்த வருடம் அட்மிசனா? சொல்லவே இல்ல:((((

இங்க என்ன நடக்குது....

நாங்க எல்லாம் ஸ்கூலுக்கு விட்டு வீட்டுக்கு வரனுன்னா தான் அழுவோம்...

ஸ்கூலுக்கு போனாதான் நிறையா விளையாட பொம்மை கிடைக்கும், பிளேகிரவுன்ட் இருக்கு... நிறையா பிரண்ட்ஸ் இருக்காங்க... அழகா மிஸ் எல்லாம் இருக்காங்க...

நல்ல டிப்ஸ்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்