பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

தாய்மை என்பது அன்பும், பாசமும், சகிப்புத்தன்மையும் நிறைந்தது. குழந்தை அறியாமை நிறைந்தது. அதைப் போக்க அறியும் வேகத்துடன் சுட்டித்தனம் நிறைந்தது. குழந்தைகள் என்றும் சிறந்த குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம்தான் எல்லா நேரங்களிலும் சிறந்த பெற்றோராக இருக்க முடிவதில்லை.

தவறு.4.
குழந்தை தவறு செய்தால் தண்டனை கொடுப்பதுதான் திருத்தும் வழி என்று நினைப்பது.
காரணம்
தண்டனை கொடுக்கும்போது அதன் வலியைத்தான் உணருவார்களே தவிர, என்ன தவறு செய்தார்கள் என்பதை மறந்து விடுவார்கள். தண்டனை என்பது தற்காலிக மன பாதிப்பை ஏற்படுத்தும். அந்நிலையில் நல்ல முடிவையோ அல்லது நாம் சொல்லும் விளக்கத்தையோ புரிந்துகொள்ள முடியாது. இதனால் திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாமலேயே போய்விடும்.
தீர்வு
தவறு செய்யும்பொழுது நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். நமது தண்டனை சிறியதாக இருக்க வேண்டும். அதாவது முகத்தைக் கோபமாக (சிறிது நேரம் மட்டும்) வைத்துக்கொள்வது, no, wrong (தப்பு இப்படி செய்யக்கூடாது) என்று சொல்லிவிட வேண்டும். உடனே சிறிது நேரம் விட்டு (10-20 வினாடிகள்) முடிந்தால் முகத்தை சரி செய்துகொண்டு ஏன் தவறு என்று விளக்குங்கள். "தப்பு இப்படி செய்யக்கூடாது" என்பதை மந்திரமாக மாற்றிவிடுங்கள். அதாவது தேவையான நேரத்தில் மட்டும் உபயோகப்படுத்துங்கள். பிறகு அந்த வார்த்தையை கேட்கும்பொழுதே குழந்தை தான் செய்வது தவறு என்பதை புரிந்துகொள்ளும்.

தவறு.5.
அம்மா திட்டினால் அப்பாவும், அப்பா திட்டினால் அம்மாவும் குழந்தைக்கு support செய்வது.
காரணம்
திட்டும்பொழுது 1 அல்லது 2 தடவைக்குள் எது தவறு என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ளும். அது புரிவதற்குள் support செய்யும்பொழுது எது சரி, எது தவறு என்று புரிந்துகொள்வதற்கு பதிலாக, திட்டுபவர் கெட்டவர் என்றும், support செய்பவர் நல்லவர் என்றும் புரிந்துகொள்கிறது.
தீர்வு
1. திட்டும்பொழுது என்ன காரணத்தினால் திட்டுகிறோம் என்ற விளக்கத்தைக் கொடுத்துவிடுங்கள். திட்டும் வார்த்தைகளின் வீரியத்தைக் குறைத்து, விளக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். முதல் முறையே திருந்திவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். 2 அல்லது 3 முறை வாய்ப்புக் கொடுங்கள். அப்படியும் திருந்தவில்லையா “போடா செல்லம் அப்பா/ அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க” என்று sentimental அஸ்திரத்தை
பயன்படுத்துங்கள். மிக மிகக் கவனம் அடிக்கடி இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது. பிறகு இந்த அஸ்திரத்திற்கு பயன் இல்லாமல் போய்விடும்.
2. ஒருவர் திட்டும்பொழுது மற்றவரிடம் ஆறுதல் வேண்டி குழந்தை வரும். என்ன காரணத்திற்காக அழுகிறது என்று குழந்தையிடம் மற்றும் துணைவரிடமும் விசாரியுங்கள். பின் குழந்தையிடம் “இனிமேல் இப்படி செய்யாமல் இருங்கள், அம்மா அடிக்க/ திட்ட மாட்டார்கள்” என்று ஆறுதல் கூறுங்கள்.
3. அப்படி விசாரிக்கும்போது குழந்தை தவறே செய்யாமல் கூட திட்டப்பட்டிருக்கலாம். அப்பொழுதுகூட துணைவரிடம் சண்டைக்கு செல்லாமல் “ அம்மா/ அப்பா tensionல் இருக்கிறார்கள், அதன்னல் தான் திட்டிவிட்டார். பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று சமாதானம் கூறுங்கள். தனியே துணைவரிடம் (குழந்தைக்குத் தெரியாமல்) மன்னிப்புக் கோரும்படி சொல்லுங்கள்.
- இரா. வே. விசயக்குமார்.

3 comments:

பெரும்பாலான வீடுகளில் ஒருவர் திட்டும்போதோ அல்லது தண்டிக்கும்போதோ மற்றவர் சப்போர்ட் என்ற நிலைதான். பொறுமையாக புரிய வைப்பதே நலம். நல்ல பதிவு. வாழ்த்துக்களுடன் நன்றி.

அருமையாச் சொல்லியிருக்கீங்க விசயகுமார்.

பிள்ளைகளை ஒற்றர் போல் பயன்படுத்தும் அப்பா,

தனக்குத்தான் உரிமை என்று காட்டிக்கொள்ளும் முயற்சியில் ஆதரவு தரும் அம்மா,

பிள்ளைகள் எதிரில் மனைவியைக் கண்டிக்கும் கணவன்,
பிள்ளைகள் எதிரில் கட்டியவனை எதிர்த்துப் பேசும் மனைவி

இவங்களூம் கூட காரணங்கள் தான்.

ஆமாம்..சில நேரங்களில் செய்யாத தவறுக்காகத் தண்டனை அனுபவிக்கும் பிள்ளைகள்..

நல்ல டிப்ஸ்..

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்