பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.

மன்னித்தல்
-----------------
எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...

விட்டுக் கொடுத்தல்
------------------------------
என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார் டாக்டர்" என்று எப்பொழுதும் சண்டையாம். "நீ என்ன" என்றேன். "நான் நர்ஸ்" என்றாள். "நீ ஏன் டாக்டர் இல்லை" என்றேன். "எல்லாரும் டாக்டர் ஆனால், யார் தான் நர்ஸாக இருப்பதாம்", என்றாள். நியாயமான பேச்சு என்று தோன்றியது.

நம்பிக்கை
---------------
பள்ளியில் போட்டி ஒன்று முடித்து வந்திருந்தாள். "என்ன பரிசு கிடையாதா?", என்றேன். "நீ தானம்மா சொல்லி இருக்க, ப்ரைஸ் வாங்குவது முக்கியம் இல்லை, பங்கெடுப்பது தான் முக்கியம்", என்றாள். அவள் ஆணித்தரமாக கூறியது, நான் கூறும் விஷயங்கள் அவள் மனதில் பசுமரத்தாணி போல் பதிகின்றன என்பதை பறை சாற்றின.

செய்யக்கூடாதது
--------------------------
மற்றொரு நாள், கீதை போட்டியில் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாள். கேட்ட டேப்பை வாங்கிக் கொடுத்தேன். கற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது, கற்றுக் கொடு என்றாள். என்னால் சமஸ்கிருத உச்சரிப்பைக் கற்று சொல்லித் தர முடியாது என்றேன். பின் அவள் ஆர்வத்துக்காக ஒத்துக் கொண்டேன். அலுவலக மற்றும் வீட்டு வேலைகளுடன் இதையும் இழுத்துச் செய்ததால் ஒரு நாள் விளையாட்டாக, "இவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுக்கிறேன், ஒழுங்கா பரிசு வாங்கிட்டு வரணும்", என்றேன். ஒரு நாள், தலைவலியுடன் வீட்டிற்கு வந்தாள், பரிசு கிடைக்கவில்லை என்றாள். நன்றாக சொன்னாய் அல்லவா , அது போதும் என்று கூறினேன். பின் ஒரு நாள் அவள் ஆசிரியையைக் காணச் சென்ற பொழுது, "தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள், அன்று முழுவதும் தலைவலி என்று அழுது கொண்டிருந்தாள்", என்றார். எனக்கு அதிர்ச்சி, அன்று அவள் ஆணித்தரமாகப் பேசிய மொழிகளை நான் எத்தனை முறை என் தோழியரிடம் கூறி
பெருமையுற்றேன். அவளுடன் பேசிய பின்பு தான் புரிந்தது, நான் அன்று விளையாட்டாகக் கூறிய மொழிகள் அவள் மீது இத்தனை அழுத்ததைக் கொடுக்கும் என்று நான் உணரவில்லை. நாம் விளையாடுகிறோமா அல்லது உண்மை கூறுகிறோமா என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணக்கூடாது. நாம் தான் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற மற்றொரு விஷயம், சொன்னதை செய்தல். எப்பொழுதும் வாக்குறுதி கொடுத்து மறந்து விடாதீர்கள். நாம் அவர்கள் அசைவுகளை கவனிக்கிறோமோ இல்லையோ, அவர்கள் நமது ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறார்கள். சின்னதாக சாக்லேட் வாங்கி கொடுக்கிறேன் என்று, சொன்னால் கூட கடைபிடிக்க முயலுங்கள். முடியாவிட்டால், காரணம் கூறி மன்னிப்பு கேட்பது தவறல்ல. அப்பொழுது தான் அவர்களுக்கும் சொன்னதை செய்யும் பழக்கம் ஏற்படும்.

இவ்விஷயத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. தாய் நண்டு தன் சேய்க்கு நடை பயில கற்றுக் கொடுக்கிறது. பக்கவாட்டில் நடக்கும் பழக்கம் உள்ள அது, தன் குட்டி நேராக நடக்க ஆசைப்படும். எனவே நேராக நடக்க கூறும். ஆனால் குட்டி நண்டால் நடக்க முடியாது. கோபமுற்ற தாய் நண்டு, குட்டியைத் திட்டும். அப்பொழுது குட்டி நண்டு கூறும், "நீ ஒரு முறை நடந்து காட்டு அம்மா, அப்புறம் நான் நடக்கிறேன்", என்று.

மிக உண்மை. நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

******************************************************

இது அமுதா அவர்களின் என் வானம் வலைப்பூவில்
வெளியான பதிவு. பெற்றோர்களின் கடமை என்று
அவர் குறிப்பிட்டுள்ளது சத்தியமான உண்மை.

9 comments:

புதுகைத் தென்றல் said..
//பெற்றோர்களின் கடமை என்று
அவர் குறிப்பிட்டுள்ளது சத்தியமான உண்மை.//

ஆமாம் தென்றல். அதை அமுதா தலைப்பிலேயே அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருப்பது இன்னும் அருமை.

http://www.saromama.com/

Check this out. If its useful for any of the kids.

நண்டு கதையைப் படித்ததும் நினைவுக்கு வந்த விஷயம் இது தான்:

அப்துல்ரகுமான் அவர்கள் ஒரு கவிதையில் சொல்வார்: "புத்தகங்களே ஒழுங்காக இருங்கள்; குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்" என்று. பல வீடுகளில் இது பெற்றோர்களுக்கே பொருந்தி வரும் வாசகம் ஆகும்.

wow

ரொம்ப அழகா எழுதி இருக்காங்க.

இதை படிக்கும் போது எனக்கு ஒரு விஷயம் தோணுது. எங்க வீட்டுலே ஒரு பழக்கம் உண்டு எல்லாரும் சாப்பிட்ட ஒடனே அவுங்க அவுங்க தட்டை அவுங்களே கழுவு வைக்கணும். நான் இதை ரொம்ப நாள் செய்ய மாட்டேன். கேட்டா அப்பா செய்யலை நானும் செய்யலை அப்படின்னு பதில் சொல்லுவேன்.

இதுக்காக எங்க அப்பா செய்ய ஆரம்பிச்சாங்க. அன்னில இருந்து இன்று வரைக்கும் சாப்பிட ஒடனே தட்டை நானே கழுவனும். இல்லை என் மண்டையே வெடிச்சிடும். நான் எபோதும் நண்பர் வீட்டுக்கு போகும் போது எல்லாம் சொல்லுவாங்க 'தட்டை வெச்சிடுப்பா' அப்படின்னு அது மட்டும் என்னால முடியறதே இல்லை.

நல்லா இருக்குங்க!

நல்ல பதிவு.

இது பேரண்ட்ஸ் கிளப் ஆ...? தெரியாத்தனமா உள்ள வந்துட்டேன்..அடுத்த வருஷம் வந்து படிச்சுக்கிறேன்...

நல்ல விஷயங்கள்.
எஸ் கே சொல்லியுள்ள தட்டு சமாச்சாரம் நான் இப்போது இருக்கும் வீட்டில் பார்க்கிறேன். (யாரும் அவரவர் தட்டை கழுவுவதில்லை).பணிப்பெண்ணுக்காக காத்திருக்கிறார்கள்.
ரத்னேஷ் சொல்லியுள்ள அந்த ரகுமான் கவிதையும் நன்றாக இருக்கு.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்