பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

அப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.
//அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும். என் வீட்டுல இந்த கூட்டணிதா கலக்கிட்டு இருக்கு... என்னத்த சொல்ல//
இது அத்திரி அவர்களின் பின்னூட்டம்.

இதைப்பத்தியும் பேசணும். இரண்டு சம்பவங்களை
இங்கே தருகிறேன். இது சரியான்னு நீங்களே சொல்லுங்க.

சம்பவம்:1

இயற்கை அழைக்க எழுந்திருக்கிறார் மிஸ்டர். ரங்கு.
அப்படியே தண்ணீர் குடித்து விட்டு படுக்கலாம்
என்று போகும்பொழுது மகனின் அறைக்கதவு
திறந்து கிடக்க ஆச்சரியத்துடன் எட்டி பார்க்க அறைக்
காலியாக இருந்தது. மகன்களை காணோம்.!!!

மனைவியை எழுப்பி" என்ன ஆச்சு! பிள்ளைகளைக்
காணோமே?" என்று கேட்க, நீங்க தூங்கிக்கிட்டிருந்தீங்க!
அதனால பசங்க என் கிட்ட சொல்லிட்டுத்தான் அவங்க
ப்ரெண்ட்ஸ் வீட்டிற்கு போயிருக்காங்க!" என்றதும்
ரங்கமணிக்கு கோபம் தலைக்கேறியது. நள்ளிரவு
12 மணிக்கு மகன்களை வெளியே அனுப்பி அவர்களை
கெடுக்கிறாய் என்று கத்த,"19 வயசுப்பையன் பாதி
ராத்திர்க்கு வெளியே போனால் என்ன தப்புன்னு?"
தங்கமணி வாதிட பெரிய சண்டையாகிப்போனது.


இதில் வேறு அந்தத் தங்கமணி என்னிடம்,"பசங்க
சந்தோஷமா இருந்தாலே என் கணவருக்குப் பிடிக்காது!
என்று மகன்களுக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட்
செய்கிறார்.கைச் செலவிற்கு மகன்களுக்கு
வாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்
தருகிறார். (மத்தியதரக் குடும்பத்தில்
இது எவ்வளவுப் பெரிய பணம் இது!!)
ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்றால்
" I want to give them the better life"
என்கிறார்!!!!!!

சம்பவம் : 2

எனக்குத் தெரிந்த கணவன் - மனைவி விவாகரத்து
பெற இருந்தார்கள். எங்களுடம் பேச வேண்டுமென்று
சொல்லி வந்தார்கள்.(குழந்தைகள் 2ஆம் வகுப்பும்,
எல்.கே.ஜியும் படிக்கிறார்கள்)

மனைவி கணவன் மீது சொன்ன குற்றச்சாட்டு
தான் இந்த இரண்டாவது சம்பவத்தின் காரணம்!!

"கீழ குப்பை இருக்கக்கூடாதுங்கறாருங்க! சின்ன
பசங்க இருக்கற வீட்டுல குப்பை இல்லாமல் இருக்குமா?
அந்தக் குப்பையை பசங்க எடுத்து போடணும்னு
கத்தறாரு!!"

"என் கண்ணு முன்னாடியே என் பசங்களைத்
(!!!)திட்டும்போது மனசு விட்டுப் போகுது"
என் பசங்களை இவரு திட்டக்கூடது!

இப்படி நிறைய சொன்னார். தாய்க்கு மகனுக்கும்
மட்டும்தான் உறவு என்பது போலும், அதில்
கணவனுக்கு இடமில்லை என்பது போலவும்தான்
நிலமை. அந்தப் பெண்ணின் மகன் என்றால்
கணவருக்கும் அந்தக் குழந்தையின் மேல் உரிமை
இருக்கிறது தானே!

மேற் சொன்ன இரு சம்பவங்களிலும் அவர்கள்
வீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகளே!!

தாய் அன்பானவள். ஆனால் அந்த அன்பே
கண்மூடித்தனமாகி குழந்தையின் வாழ்வை
நாசமாக்ககூடாது தானே?

பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்
தாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.
பெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை
இல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு
பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்
அனைவருக்கும் மாற்று கருத்து இறாது
என நினைக்கிறேன்.

உங்க கருத்தையும் சொல்லிட்டு தமிழ்மணத்தில்
ஓட்டும் போட்டுட்டு போங்க.

நன்றி

33 comments:

மீ த ஃபர்ஸ்ட்

//அப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.//

என்ன தீடிரென்று அரசியலெல்லாம்

//கைச் செலவிற்கு மகன்களுக்கு
வாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்
தருகிறார்.//

இப்படியெல்லாம் கூட நடக்குமா?

//மேற் சொன்ன இரு சம்பவங்களிலும் அவர்கள்
வீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகளே!!

தாய் அன்பானவள். ஆனால் அந்த அன்பே
கண்மூடித்தனமாகி குழந்தையின் வாழ்வை
நாசமாக்ககூடாது தானே?//

இது என்னாங்க லாஜிக்கு
ஆண் குழந்தை என்றால் அம்மாக்களுக்கு மட்டும் தான் பிடிக்கனுமா?

// பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்
தாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.
பெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை
இல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு
பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டும் //

:-)))....

இது பாயிண்ட்டு!!!

//பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்
தாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.//

வேண்டவே வேண்டாம். எதா இருந்தாலும் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளட்டும்.

வாங்க வால்பையன்,

அரசியலெல்லாம் இல்லீங்க.


இப்படியெல்லாம் கூட நடக்குமா?//

நடக்குதுங்க.:(

ஆண் குழந்தை என்றால் அம்மாக்களுக்கு மட்டும் தான் பிடிக்கனுமா?//

பொதுவாகவே இப்படித்தான் இருக்கு.

மகன் மேல் கண்மூடித்தன்மாக வைக்கப்படும் பாசத்தினால்தான்
மாமியார்-மருமகள் பிரச்சனை வருவதும்.

வேண்டவே வேண்டாம். எதா இருந்தாலும் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளட்டும்.//

பேசி தீர்க்கற பிரச்சனையை பேசித்தான் தீர்க்கணும். நான் சொல்லும் பாலம் அன்பெனும் பாலம்.

அப்பாவும் நல்லவர்தான், அவரும் உன் வாழ்க்கையில் ஒரு பங்குன்னு சொல்லும் பாலம்.

வாங்க விஜய ஆனந்த்,

வருகைக்கு மிக்க நன்றி.

போய் எங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்..

/* இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்
அனைவருக்கும் மாற்று கருத்து இறாது
என நினைக்கிறேன்.*/
உண்மை தான்.

இரண்டுமே நியாயம் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

//போய் எங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்..//



ரிப்பீட்டு போட்டுக்குறேன்

எங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்//

:) இப்படித்தான் சொல்றீங்க. உங்க சங்கத் தலைவர் வரவே மாட்டாங்கறாரு

வாங்க அமுதா,

கருத்திற்கு மிக்க நன்றி.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு//

ஆமாம் சிவா.

வாங்க அத்திரி,

கூட்டிகிட்டு வாங்க.

எங்க வீட்டில் கூட இது மிக பெரிய பிரச்சனை..

//கைச் செலவிற்கு மகன்களுக்கு
வாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்
தருகிறார்.//
இப்படியெல்லாம் கூட நடக்குமா? //

வால் பையன் நடக்குமாவா.. எங்க வீட்டில் நடக்குது..ஆனா மாசத்துக்கு 1000 ரூ.. அதுவும் நான் இல்லை அவங்க அப்பா தருவாங்க.. :(

அம்மாக்களிடம் பிள்ளைகள் க்ளோஸ்'ஆக இருப்பது இயல்பு தான்.. அப்பாவிடம் பிள்ளைகள் நெருக்கமாக இருக்கமாட்டார்கள். செய்யற பித்தலாட்டம் இவரும் அந்த வயதில் செய்து இருப்பார் இல்லையா? எல்லாம் இருவருக்கும் தெரியுமே..அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)

அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் //

இதுதாங்க பாயிண்ட்.

அம்மா மேல இருக்கற அன்பால அம்மாவுடன் அதிக நெருக்கமா இல்லை, தன் வேலை ஈசியா நடக்கணும்.

எங்கத்தலைவர் ஆபிஸ் வேலையிலும், வலைச்சரத்திலையும் கொஞ்சம் பிசியா இருக்கார்

வர கொஞ்சம் லேட் ஆகும்

//பெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை
இல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு
பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்
அனைவருக்கும் மாற்று கருத்து இறாது
என நினைக்கிறேன்.//

நிச்சயமாக இருக்காது என்றே நானும் நினைக்கிறேன். குழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.

வர கொஞ்சம் லேட் ஆகும்//

:))))))))))))

குழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//

மிக மிக அருமையான கருத்து.
பாராட்டுக்கள்

// ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//
இது ரொம்ப ரொம்ப முக்கியமான புள்ளி!
வாராவாரம் ஆயிரம் ரூபாய் பாக்கெட் பணம்.....ரொம்ப டூமச்! அதுவும் மத்தியதரக் குடும்பத்துக்கு...அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல்...ஹையோ!!பல குடும்பங்களில் பிள்ளைகள் வழிதவர இதுவெல்லாம் காரணமாகிறது.

பல குடும்பங்களில் பிள்ளைகள் வழிதவர இதுவெல்லாம் காரணமாகிறது.//

ஆமாம் நானானி,

வெளியே தெரியாத பல அவலங்கள் வீட்டுக்குள்.

தங்கமணி ரங்கமணியைக் குத்தம் சொல்வார், ரங்கமணி தங்கமணியை குத்தம் சொல்வார்,

இந்தச் சண்டையில் பிள்ளைகள் குளிர் விட்டுப்போய் நடந்து கொள்கிறார்கள். இதுதான் பிள்ளை வளர்ப்பு.

//கைச் செலவிற்கு மகன்களுக்கு
வாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்
தருகிறார்.//

கொஞ்சம் ஓவராத்தான் கொடுக்கறாங்க.
வசதி இருந்தாலும், அளவாத்தான் கொடுக்கணும்.

//"19 வயசுப்பையன் பாதி
ராத்திர்க்கு வெளியே போனால் என்ன தப்புன்னு?"
தங்கமணி வாதிட //

12 மணிக்குமேல அப்படி என்ன வேலை, நண்பர்கள் வீட்டுல?

//தாய்க்கு மகனுக்கும்
மட்டும்தான் உறவு என்பது போலும், அதில்
கணவனுக்கு இடமில்லை என்பது போலவும்தான்
நிலமை. அந்தப் பெண்ணின் மகன் என்றால்
கணவருக்கும் அந்தக் குழந்தையின் மேல் உரிமை
இருக்கிறது தானே!//

பெண்களின் Possessiveness...
திருமணமானபின் கணவர் மீது .!!
பெற்றபின் குழந்தைகள் மீது.!!
அளவுடன் இருக்கும் வரை இரண்டுமே இனிமைதான். மீறும்போதுதான்..கசப்பாகிவிடுகிறது

//ராமலக்ஷ்மி said...
குழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//

ரிப்பீட்டேய்....!!

//கவிதா | Kavitha said...
அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)//

கொஞ்சம் பாசம் கான்பித்தால்போதும்.. ஏமாற்றலாம் :-))

//அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)//

இந்த கருத்தை கண்ணாபின்னாவென்று கண்டிக்கிறேன்..


பிள்ளை ஆசைப்படுதேன்னு அவர்கள் விருப்பத்திற்கு செவி சாய்க்கும் / செல்லம் கொடுக்கும் அம்மா இருக்காங்களே தவிர "ஏமாறுகின்ற" அம்மா இல்லை...

தவிர அப்பா வெளிக்காட்டாத கணிவும், பாசமும் அம்மாவிடம் கிடைப்பதால் தான், நாங்கள் அம்மா பிள்ளைகளாக வளர்கிறோம்.

:)))


Kathir.

// பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்
தாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.
பெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை
இல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு
பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டும் //
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்
ஆனால், ஆண்பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் அந்தப்பிள்ளைகள் தாயை மட்டுமே சார்ந்திருக்கின்றன.
எங்கள் வீட்டிலும் இப்படி இருக்கின்றது,
அக்கா - அக்கா மகன்
நிறைய செல்லம், இன்னமும் கை நிறைய காசு கொடுத்து வழி அனுப்புகிறார்கள், ஒன்றும் சொல்வதற்கில்லை.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்