பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.



சென்ற டிசம்பரில் நான் இந்தியா போன போது நல்ல மழைகாலம். ஊரில் வெள்ளம். அப்போது காலை அபி வழக்கமா பள்ளி போகும் போது சாப்பிட அடம். எனக்கு கோவம் வந்து லைட்டா திட்டினேன். உடனே அவளுக்கு நல்ல கோவம் வந்துவிட்டது. "சாப்பிட சொல்லி மாத்திரம் திட்டுறீங்க. ஆனா எனக்கு என்ன என்ன ஆசை இருக்கு தெரியுமா? அதை எல்லாம் கேட்டீங்களா ஒரு நாளாவது. நீங்களா கேஎட்[ஈங்கன்னு பார்த்தேன். ஒரு வார்த்தை கூட கேட்கலை நீங்க"ன்னு பொறிஞ்சு தள்ளீட்டா.


எனக்கு என் தப்பு அப்பதான் உறைத்தது.சிறு வயதில் இப்படியாக நினைத்தது உண்டு. அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக பல விஷயங்கள் நிராகரிக்க பட்டிருக்கின்றன. அதே நிலை என் பசங்களுக்கு வர கூடாது என அப்போதே நினைத்தேன். ஆனால் இப்படி அபி மனசுக்குள்ள இப்படி ஒரு ஆசைகள் இப்பதை கூட கண்டுக்காம இருந்து விட்டேனே என நினைத்து ஒரு பேப்பர் பேனாவை அவள் கையில் கொடுத்து "உனக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எல்லாம் எழுது" என்றான். அதை வாங்கிகிட்டு தன் ரூமிற்கு போய் விட்டா. பின்னே எழுதினாளா இல்லையா என தெரியாது. ஆட்டோ வந்தது பள்ளிக்கு போயிட்டா.


பின்னே பள்ளிக்கு எதிர் கடையில் இருந்து அவ அம்மாவுக்கு போன் செய்தா. அவளுடைய மேசை டிராயரில் அந்த லிஸ்ட் இருப்பதாக சொன்னா. நான் போய் அந்த லிஸ்ட் எடுத்து பார்த்தேன்.


1. லேடி பேர்டு சைக்கிள் (சிகப்பு கலர்)
2. என் யூனிபார்ம் அளவு தொட தொடனு இருக்கு. அம்மா இதை வைத்து இந்த வருஷத்தை ஓட்டு என்று சொல்லிட்டாங்க. அதனால வேற யூனிபார்ம் 2 செட். என சரியான அளவு சுடிதார் என் கப்போர்ட்ல் மேலேயே வச்சிருக்கேன்.
3. என் சைஸ் ஷூ (ஸ்போர்ட்ஸ் ஷு)
4. வெள்ளை கலர் சாக்ஸ் - 3 செட்
5. பியர்லெஸ் தியேட்டர் முறுக்கு 1 பாக்கெட்
6. தம்பிக்கு ஒரு நல்ல ஷூ வித் சாக்ஸ்(குளிருக்கு போடுவது போல)


என லிஸ்ட் இருந்தது. அப்போது காலை 8.30 குளித்து முடித்து சாப்பிட்டேன். ஒரு 9.30 மணிகு ஒரு குடையை எடுத்துகிட்டு, அள்வு சுடிதாரை ஒரு மஞ்சமையில் சுத்திகிட்டு நகரின் மழை நீரில் வேஷ்ட்டியை மடித்து கட்டி கொண்டு பெரிய ராஜன் தோட்டம் வழியாக முதலில் மணிகூண்டு காந்திஜி ரோட்டின் ஜெகந்நாதன் சைக்கிள் கம்பனிக்கு வந்தேன். அது தான் மயிலாடுதுறையில் பெரிய சைக்கிள் கம்பனி. ஷோ ரூமில் ஒரு சைக்கிள் லேடிபேர்டு சிகப்பு கலர் என்னை பார்த்து சிரித்தது. உள்ளே பலபேர் சைக்கிள் கோர்த்துகிட்டு இருந்தாங்க. என்ன விலைன்னு கேட்டேன். 3030 ரூபாய்ன்னு சொன்னார். சரி குடுங்கனு பணம் நீட்டினேன்.


இல்லப்பா அது கோர்த்து 6 மாசம் ஆகுது. வேற கோக்க சொல்றேன்ன்னு சொல்லி செந்தில் இங்க வாடான்னு கடை பையனை அழைத்தார். அந்த பையன் எங்க தெருதான். "வாங்க அண்ணே எப்ப வந்தீங்க. பாப்பாவுக்கு சைகிளா சூப்பரா கோர்த்து தறேன். அண்ணே எனக்கு ஒரு விசா அடிச்சு கூட்டிக்க கூடாதா" வழக்கமான 3 ம் கட்ட மக்களின் டயலாக். நான் கேட்டேன் "சரி பாஸ்போட் வச்சிருகியா" பட்டுன்னு பதில் வந்துச்சு "இல்லை நீங்க விசா அடிச்சுட்டு ஒரு போனை போடுங்க நான் திருச்சிக்கு போய் எடுத்துட்டு அந்த ஏற்போர்ட்ல இருந்து வந்துடுவேன் அண்ணே" எனக்கு பகுன்னு ஆகிடுச்சு.

சரி நான் கோர்த்து வைக்கிறேன். நீங்க எங்கயாவது போயிட்டு 1 மணி நேரம் கழிச்சு வாங்கன்னு சொன்னவுடன் எதிரே இருக்கும் சீமாட்டிக்கு போனேன். வாசலில் டைலர் மிஷினை துடைட்து கொண்டிருந்தார். அவரிடம் "அய்யா நான் உள்ளே போய் 2 செட் சுடிதார் துணி எடுத்து வருவேன் 1 மணி நேரத்தில் தைத்து தரமுடியுமா என கேட்க அவரு "2 மணி நேரம் ஆகும் தம்பின்னு சொல்லிட்டார். உள்ளே போய் பள்ளியின் பெயரை சொல்லி வாங்கிகிட்டு வந்து அளவு சுடிதாரையும் கொடுத்து விட்டு அங்கிருந்து 10 கடை தள்ளி இருக்கும் அப்சரா வந்தேன். அங்கே எல்லாரும் நல்ல பழக்கம் 30 வருஷ பழக்கம்.


அபிக்கு ஸ்போர்ட்ஸ் ஷு சாக்ஸ், தம்பிக்கு ஷூ எல்லாம் வாங்கிகிட்டு நேரா வண்டிகார தெரு நெரிசல் வழியா பியர்லெஸ் தியேட்டர் போய் முறுக்கு, கடலைமிட்டாய் வாங்கிகிட்டு (இத்தனைக்கு மழை நல்லா பெய்யுது) எல்லாம் நடராஜா சர்வீஸ் தான் திரும்ப தியேட்டரில் இருந்து கச்சேரி ரோடு வழியாக "பாண்டியன் சாமில் வந்து என் நண்பன் சங்கரிடம் 1 மணி நேரம் மொக்கை போட்ட பின் அவனே வண்டியிலே திரும்ப ஜெகந்நாதன் சைகிள் கடைல விட்டு போனான். தெரு பையன் என்பதீல் எக்ஸ்ராவா எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் போட்டிந்தான்.


எடுத்து கொண்டு வண்டிகாரதெரு மாரியம்மன் கோவில் பூக்கடையிலே அதுக்கு பொட்டு இட்டு, மாலை மாதிரு பூ போட்டு பூசை போட்டு விட்டு வந்து சுடிதாரை வாங்கிகிட்டு ஜெகஜோதியா வீட்டுக்கு வந்தேன். அப்போதும் மழை.


வந்து பெல் அடித்ததும் நட்டு தான் குடுகுடுன்னு ஓடி வந்தான். அந்த சைக்கிளை பார்த்ததும் அவன் அடைந்த சந்தோஷம் என்னால் எழுத வார்த்தை இல்லை. அபிக்கு 3 வயதா இருகும் போது ஒரு சைக்கிள் வாங்கி துபாயில் இருந்து வாங்கி குடுத்தேன். அது வாசலில் கட்டி போட்டிருப்பா. அவளின் இப்போதைய உயரத்துக்கு ஓட்ட முடியாது. அதிலே பலதடவை நட்டு ஏற முயன்று பல அடி பட்டிருக்கான். அதை "அய்க்கிள்"னு தான் சொலுவான். சரி அக்காவின் சைக்கிள அய்கிள்ன்னு சொல்றான் அப்படின்னு விட்டுட்டேன்.


இந்த புது சைக்கிளை பார்த்த உடனே "அய்க்கிள் அய்க்கிள்"ன்னு கத்திகிட்டே கிச்சன் போய் அவன் அம்மா புடவையை பிடிச்சு இழுத்து கிட்டு வந்து "அம்மா அய்ய்கிள் அய்க்கிள்"ன்னு காமிக்கிறான். கீழே புரண்டு விழுந்து சிரிக்கிறான். பெடலை வந்து சுத்துறான். சைக்கிளை வீட்டின் உள்ளே சாமிரூம் கிட்ட கொண்டு வந்து நிப்பாட்டி கிருஷ்ணா தலைமைல அங்க ஒரு பூஜை.
பின்னே அப்படியே அதை அலேக்காக தூக்கிகிட்டு மாடி ஏறினேன். நட்டுவும் தாவி தாவி ஏறுகிறான். மாடி ரூம்ல கொண்டு போய் வைக்கிறேன். பின்ன கிருஷ்ணா அந்த சுடிதார் ஷு எல்லாம் எடுத்து கொண்டு மேலே நட்டுவையும் தூக்கிகிட்ட்டு பின்னாலே வருது. எல்லாத்தையும் வைத்து ஒரு போர்வை போட்டு மூடினேன். பின்னே கீழே வந்து சாப்பிட்டு மதிய தூக்கம் போடும் போது 2 மணி. அபி 3 மணிக்கு வருவா. வந்தவுடன் அவ இரவு மாடிக்கு படிக்க போகும் போது ஆச்சர்ய படட்டும் என நினைத்தேன். அந்த மதிய தூக்கத்தின் போது நட்டுவும் தூளியிலே படுத்து தூங்கிடுவான். சரியா அபி ஆட்டோ நகர் முனைக்கு வரும் சத்தம் கேட்ட உடனே எழுந்து கேட்டுக்கு போய் அவ புத்தக மூடையை பிடித்து இழுத்து வந்து ஏகப்பட்ட கொஞ்சல் நடக்கும் அவன் அக்கா கிட்ட.


ஆனா அன்று தூங்கவே இல்லை கேட்டை பிடிச்சுகிட்டே நிக்கிறான். உள்ளே வர மாட்டேன்னு அடம். அபி வந்தா அவ்வளவுதான். அவன் ரியாக்ஷன் இப்பவும் என் மனசிலே வீடியோவா ஓடுது. வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. அவ புத்தக மூட்டையை சட்டை பண்ணலை அபியை இழுத்துகிட்டு மாடிகு இழுக்குறான். அக்கா அய்க்கிள் அய்க்கிள்னு சத்தம் வேற. தவ்வி தவ்வி ஏறுறான். பின்னாலயே அபியும் ஏறுறா. அந்த கண்கொள்ளா காட்சியை காண நானும் கிருஷ்ணாவும் மேலே போனோம்.
அங்கே போய் அந்த போர்வையை இழுத்து அக்கா அய்க்கிள் ன்னு புரண்டு புரண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான். (இதான் விழுந்து விழுந்து சிரிப்பதா). நான் அப்படியே அபி ரியாக்ஷனை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன். "போய் பாரும்மா" என கிருஷ்ணா சொல்கிறது. காலை 1 ஸ்டெப் எடுத்து முன்னே வைக்கிறாள். பின்னே பின்னால் இழுத்து கொண்டாள். என்னிடம் பேசவில்லை. பின்னே அதை தொட கூட இல்லை. அப்படியே கீழே போய்விட்டாள். என் மீது கோவத்தில் இருக்காலாம்.


பின்பு மேலேயே போகலை. எப்போதும் இரவு படிக்க மாடிக்கு போவது கூட அன்று போகலை. சீக்கிரமே என் கூட படுத்துட்டா. நான் தூங்கிட்டேன். இரவு 11 மணிக்கு நான் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த போது அபி என்னை பார்த்துகிட்டு உட்காந்து இருந்தா அந்த இரவிலே. நான் முழித்து என்னம்மா னு கேட்டேன்.


"அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா"ன்னு சொல்லிட்டு கண்ணை கசக்க ஆரம்பிச்சுட்டா. நான் எழுந்து வாடா மாடிக்கு போய் சைக்கிளை பார்க்கலாம் என கூட்டி போனேன். ஆசை ஆசையா சைக்கிளை கட்டி பிடிச்சுகிட்டா. அப்பா சுடிதாரை போட்டு பார்க்கிறேன்ன்னு போட்டு பார்த்தா. ஷூ வை போட்டு பார்த்தா. கடலை மிட்டாய் சாப்பிட்டா, நட்டுவின் ஷூவை எடுத்துகிட்டு தூங்கிகிட்டு இருந்த நட்டுக்குக்கு போட்டு அழகு பார்த்தா. அப்பா இப்பவே ஓட்டனும் போல இருக்குப்பா என சொல்லியது அந்த 11 மணிக்கு (இரவு) கீழீ இறக்கினேன். மழை விட்டு இருந்தது. நகரில் லைட் இல்லை. அவளை அழைச்சுகிட்டு ராஜேஸ்வரி நகர் (நல்ல ரோடும் லைட்டும் இருக்கும்) சைக்கிள் ஓட்டின்னா. அவளின் சந்தோஷத்தை விட நான் சந்தோஷ பட்டனா என்னை விட அவள் அதிகம் சந்தொஷ பட்ட்டாளா என பாலமன் ஆப்பையா பட்டி மன்றம் நடத்தினா கூட தீர்ப்பு சொல்ல முடியாது.


இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தைகள் ஆசைப்பட்ட நேரத்தில் வாங்கி கொடுங்க. இல்லாவிடில் அது அவர்கள் வாழ்க்கையில் தீராத வடுவாகவே ஆகி இருக்கும். பிறகாலத்தில் அவர்கள் சம்பாதிக்கும் போது நினைத்தா கூட அந்த விஷயங்களை நடத்தி கொள்ள முடியாது.
நான் அப்போதே சொன்னேன் "அபி உனக்கு எப்போது எது தேவையோ அதை கேட்டுவிடு. தயங்காதே."


10 நாள் முன்ன போன் செய்யும் போது "அப்பா நான் இனி ஆட்டோவிலே போகலை. எனக்கு ஆட்டோகாரர் எல்லா பசங்கலையும் இறக்கி விட்டு விட்டு கடைசியா தான் நம்ம நகர்க்கு வருது, அது போல காலை முதல் ஆளா என்னை எடுக்கிறார். கிட்ட தட்ட 2 மணி நேரம் எனக்கு ஆட்ட்டோ விலே போகுது. அதனால நான் சைக்கிள்ல போகிறேன்"
"சரி அப்படின்னு சொல்லிட்டேன். இப்ப அபி பள்ளிக்கு சைக்கிள்ல போறா சந்தோஷமா!


போட்டோ உபயம் கூகிள் இமேஜ் தேடல்

53 comments:

இதுதான் இந்த generation.

வளர்க ........

குழந்தைப் பருவம் போனாத் திரும்ப வருமா?

நானும் என் பொண்ணு எது கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவேன்.

அப்ப அங்கே இருக்கும் ஒரு தோழி(??) கேட்டாங்க..... எதுன்னாலும் வாங்கிக்கொடுத்துருவையான்னு? ( அவுங்களுக்கு ரெண்டு பசங்க. மூத்தது என் பொண்ணைவிட மூணு மாசம் பெரியவன்.ஒரே வகுப்பு வேற.
அந்தப் பிள்ளைகள் எது கேட்டாலும் அவுங்கம்மா சொல்றது என்னன்னா.... நீ பெரியவன் ஆகி சம்பாரிச்சு வாங்கிக்கோ'ன்னு.

நீங்களே சொல்லுங்க அவன் சம்பாரிக்க ஆரம்பிக்கும் காலத்துலே இப்போக் கேட்ட குரங்கு பொம்மையா வாங்குவான்)

அவுங்களுக்கு என் பதில் : எனக்கும் லிமிட் இருக்குங்க. 100 டாலர் வரைன்னா உடனே வாங்கிக் கொடுத்துருவேன். அதுக்கு மேலேன்னா கோபால்கிட்டே ஒரு வார்த்தைச் சொல்லிட்டு வாங்கித்தருவேன். இந்த வயசு போனால் திரும்ப வருமா?

நம்ம பிள்ளைகளுக்கு நாம் வாங்கலேன்னா பின்னே யார் வாங்கித்தருவா?

நீங்க செஞ்சது ரொம்பச் சரி/

வாங்க தருமி சார்!!! மிக்க நன்றி!!!

\\ துளசி கோபால் said...
குழந்தைப் பருவம் போனாத் திரும்ப வருமா?

நானும் என் பொண்ணு எது கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவேன்
\\

வாங்க டீச்சர்! அப்பதான் அந்த குழந்தைகளும் நம்ம மேல பாசம் காட்டுவாங்க்!!!!

சூப்பரா இருககு பதிவு.....உங்களுக்கு ஒரு பூங்கொத்து!அபிக்கு ஒரு பூங்கொத்து!

## அன்புடன் அருணா said...
சூப்பரா இருககு பதிவு.....உங்களுக்கு ஒரு பூங்கொத்து!அபிக்கு ஒரு பூங்கொத்து!

August 7, 2009 10:00 PM

/
வாங்க அருணா! பூங்கொத்துக்கு மிக்க நன்றி!!!

அருமை அபி அப்பா... படிக்க படிக்க உங்க சந்தோசம் எங்களை தொத்திகிச்சி... நல்ல விசயம் அழகா சொல்லியிருக்கீங்க...

நெகிழ்வா இருக்கு அபி அப்பா :)

ரொம்ப நெகிழ்வா உணர்ந்தேன்.

என் பொண்ணு என் கிட்ட அனிமல்ஸ் செட் காமிச்சு கடைல இது வேணும்னு கேக்கறப்போ அப்படியே கரைஞ்சு போய்ட்டேன்.

என்னன்ன விஷயங்களுக்கு ஏங்கிருக்கோம். வருஷத்துக்கு ரெண்டு சட்டை. அரசுப் பள்ளி, அங்க குடுக்குற செருப்பு & சீருடை - எக்ஸ்ட்ரா.

இதுக்கு நடுவுல எதாச்சும் வேணும்னா நடக்காது. இது மாதிரி பின்னாடி என் பொண்ணும் யோசிக்கக் கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன். அதே நேரம் நியாயமானத் தேவையா இருக்கனும். அவங்களுக்கும் புரியனும் இது கண்டிப்பான தேவை அப்படின்னு.

நான் கூட இப்டித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். புள்ளைங்க அந்தந்த வயசுல ஆசப்படுறத வாங்கிக்குடுக்கனும்னு.

புள்ளைங்களுக்கு கஷ்டம் வராம வளர்கனும், ஆனா கஷ்டம்னா என்னான்னே தெரியாம வளர்த்துற கூடாது. இதான் என் பாலிஸி.

ரொம்ப நெகிழ்சியான பதிவு.

u r nt with ur kids?? :-(

\\ வெண்பூ said...
அருமை அபி அப்பா... படிக்க படிக்க உங்க சந்தோசம் எங்களை தொத்திகிச்சி... நல்ல விசயம் அழகா சொல்லியிருக்கீங்க...

August 7, 2009 10:48 PM

\\

மிக்க நன்றி வெண்பூ!!!வருகைக்கும் கருத்துக்கும்!!!

\\ ☀நான் ஆதவன்☀ said...
நெகிழ்வா இருக்கு அபி அப்பா :)
\\

வாங்க் ஆதவன்!!! மிக்க நன்றி!!

\\ Jeeves said...
ரொம்ப நெகிழ்வா உணர்ந்தேன்.

என் பொண்ணு என் கிட்ட அனிமல்ஸ் செட் காமிச்சு கடைல இது வேணும்னு கேக்கறப்போ அப்படியே கரைஞ்சு போய்ட்டேன்.

\\
மிக்க நன்றி ஜீவ்ஸ்! என் நிலையும் இதான்!!!ஜெயஸ்ரீ கொடுத்து வச்ச குழந்தை!

\\ ஜோசப் பால்ராஜ் said...
நான் கூட இப்டித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். புள்ளைங்க அந்தந்த வயசுல ஆசப்படுறத வாங்கிக்குடுக்கனும்னு.

புள்ளைங்களுக்கு கஷ்டம் வராம வளர்கனும், ஆனா கஷ்டம்னா என்னான்னே தெரியாம வளர்த்துற கூடாது. இதான் என் பாலிஸி.

ரொம்ப நெகிழ்சியான பதிவு
\\

ஆமாம் ஜோஸப்! அபி கேட்டது எல்லாமே நியாயமான பொருட்கள்! அதனால் தான் வாங்கி கொடுத்தேன்!

\\ Lalitha said...
u r nt with ur kids?? :-(



வாங்க லலிதா! நாந்த்துபாய்ல இருக்கேன். பேமிலி மயிலாடுதுறை!

//இரவு 11 மணிக்கு நான் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த போது அபி என்னை பார்த்துகிட்டு உட்காந்து இருந்தா அந்த இரவிலே. நான் முழித்து என்னம்மா னு கேட்டேன்.

"அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா"ன்னு சொல்லிட்டு கண்ணை கசக்க ஆரம்பிச்சுட்டா.//

ஒரு தந்தையாக எனது கண்களும் கலங்கிவிட்டன. என்னதான் பணம் சம்பாதித்தாலும் இது மாதிரி பல விஷயங்களை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.

\\ துபாய் ராஜா said...
//இரவு 11 மணிக்கு நான் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த போது அபி என்னை பார்த்துகிட்டு உட்காந்து இருந்தா அந்த இரவிலே. நான் முழித்து என்னம்மா னு கேட்டேன்.

"அப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா"ன்னு சொல்லிட்டு கண்ணை கசக்க ஆரம்பிச்சுட்டா.//

ஒரு தந்தையாக எனது கண்களும் கலங்கிவிட்டன. என்னதான் பணம் சம்பாதித்தாலும் இது மாதிரி பல விஷயங்களை நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.

\\

அதாவது ராஜா காலையில் திட்டினதுக்காக என் மேல கோவமும் இருக்கு. அந்த பொருட்கள் வாந்தி வந்த் பின்னே என் மேல ஆசையும் இருகு ஆனா ஈகோ தடுக்குது. அதான் நான் தூங்கின பின்னே ஏழுந்து உட்காந்து என்னையே பார்த்துகிட்டு இருந்தா. திடீர்ன்னு நான் முழிச்சுகிட்ட பின்னே அவள் ஈகோ சட்டுன்னு போய் அனிச்சையா தேங்ஸ்ப்பான்னு சொலிட்டா. அதனால் வந்த கண்ணீர் தான் அது. அதே நேரம் நானும் க்லங்கி விட்டேன்.

அதனால தான் அந்த மழை நேரத்திலும் இரவு 11 மணிக்கு மாடியில் இருந்து சைக்கிளை தூக்கி வந்து இரவில் ஓட்ட கொடுத்தேன்!

பெண் குழந்தைகளுக்கே அப்பா மேல் பாசம் அதிகம் இருக்கும்.

நீங்க சொல்ற மாதிரி பல விஷயங்களை மிஸ் பண்றோம். சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டனும் நான்!!!

சின்ன வயசில எனக்கும் ஒரு சைக்கிள் வேணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். எனக்கு கிடைச்சதெல்லாம் ஆகி வந்த ஓட்ட ஒடசல்தான். அண்ணன் ஓட்டி அக்கா ஓட்டி அப்பறம்தான் கிடைக்கும். இதுக்காகவாச்சும் கடைக்குட்டியா பிறக்காம முதல்ல பிறந்திருக்கலாமேன்னு நினைப்பேன்.

வழக்கம் போலவே, நீங்கள் விவரித்திருக்கும் காட்சிகளோடு நாங்களும் ‘அயிக்களில்’ பயணித்தோம்:)!

நல்ல பதிவு. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்! அந்தந்த பருவத்தில் குழந்தைகளின் நியாயமான ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். அதை நானும் செய்து வருகிறேன்.

டச் பண்ணிடுச்சு. குழந்தைகளின் நியாயமாக ஆசைகளை நிறைவேற்றத்தானே பெற்றோர்கள். பெண் பிள்ளைகள் மேல் அப்பாக்களுக்கு தனிப்பாசம். அதுவும் அது முதற்பிள்ளையாய் இருந்து விட்டால், சொல்லவே வேண்டாம். எனக்கும் அப்படித்தான்.

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளோகில் சேருங்கள்! அதிக வாசகர்களை பெறுங்கள். Add-தமிழ் விட்ஜெட் மூலம் தமிழின் அணைத்து திரட்டிகளிலும் உங்கள் இனைய பக்கத்தை எளிதில் வெளியிடலாம்.இலவச தரவிறக்கம் செய்ய www.findindia.net

\\ சின்ன அம்மிணி said...
சின்ன வயசில எனக்கும் ஒரு சைக்கிள் வேணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். எனக்கு கிடைச்சதெல்லாம் ஆகி வந்த ஓட்ட ஒடசல்தான். அண்ணன் ஓட்டி அக்கா ஓட்டி அப்பறம்தான் கிடைக்கும். இதுக்காகவாச்சும் கடைக்குட்டியா பிறக்காம முதல்ல பிறந்திருக்கலாமேன்னு நினைப்பேன்
\\ வாங்க சின்ன அம்மனி, அதுபோல தலைச்சன் பிள்ளைகளுக்க்கும் பல கஷ்ட்டம் இருக்கு. பின் ஒரு நாள் விரிவா சொல்றேன் பதிவிலே. வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி!!

\\ ராமலக்ஷ்மி said...
வழக்கம் போலவே, நீங்கள் விவரித்திருக்கும் காட்சிகளோடு நாங்களும் ‘அயிக்களில்’ பயணித்தோம்:)!

நல்ல பதிவு. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்! அந்தந்த பருவத்தில் குழந்தைகளின் நியாயமான ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். அதை நானும் செய்து வருகிறேன்.

\\

வாங்க பிரண்ட்! மிக்க நன்றி பாராட்டுக்கு.
பையன் எது கேட்டாலும் வாங்கி கொடுத்துடுங்க நியாயமா இருக்கும் பட்சத்தில்!!! வருகைக்கு மிக்க நன்றி!

\\ சுல்தான் said...
டச் பண்ணிடுச்சு. குழந்தைகளின் நியாயமாக ஆசைகளை நிறைவேற்றத்தானே பெற்றோர்கள். பெண் பிள்ளைகள் மேல் அப்பாக்களுக்கு தனிப்பாசம். அதுவும் அது முதற்பிள்ளையாய் இருந்து விட்டால், சொல்லவே வேண்டாம். எனக்கும் அப்படித்தான்.

\\

வாங்க சுல்தான் பாய்! வாஸ்த்தவம் தான் பெண் குழாந்தைன்னாவே அப்பா மேல ரொம்ப பாசமா தான் இருப்பாங்க!!! நன்றி!!

மிகச்சரி தான்..அவங்க கேட்கும் பொழுது வாங்கித்தருவதில் இருவருக்கும் இருக்கும் மன நிரைவு வேறு எப்பொழுதும் இல்லை.. ஆனாலும் சில நேரம் எல்லாம் இருந்தும் வாங்கி தர சிறிது யோசிக்கவேண்டியும் இருக்கிறதே.. உதாரணம் நேற்று நாஙகள் ஷப்பிங் சென்ற பொழுது என் ” இரண்டரை வயது” மகள் ரித்து ”ஸ்கேட்டிங்” (போர்டு) வேண்டும் என்ற பொழுது .. இன்னும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் வாங்கி கொடுத்து விடலாமா என்று.. !!!!

அபி அப்பா நல்ல அப்பாங்குறத காட்டுற பதிவு!

நல்லா இருக்கு.

ரித்து அப்பா! வாங்க முதல் வருகைக்கு நன்றி!

கண்டிப்பா வாங்கி தாங்க! ஆனா சேஃப்டி முக்கியம். கூடவே இருங்க விளையாட கொடுக்கும் போது. எதுவா இருந்தாலும் பசங்களுகு 1 வாரத்துக்கு மேல அலுத்து விடும். பின்னே சீண்டி பார்க்க மாட்டாங்க. பின்னே மேல தூக்கி வச்சுடலாம்.

நான் அபிக்கும், என் தம்பி பையனுக்கு (ஒரே வயசுதான் 2 பேருக்கும்) 4 வது வயதில் வாங்கி கொடுத்தேன். கூடவே ஓடி ஓடி என் மனைவிக்கு உடல் இளைத்தது தான் கண்ட பலன்:-))

\\ அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அபி அப்பா நல்ல அப்பாங்குறத காட்டுற பதிவு!

நல்லா இருக்கு.

\\

வாங்க ஜோதிபாரதி! மிக்க நன்றி. தருமி சார் சொன்னமாதிரி இந்த ஜெனரேஷன் அப்பா எல்லாருமே நல்ல அப்பாதான் உங்களையும்சேர்த்து!!!

அருமை அருமை......
ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு.நீங்க எழுதியிருக்கும் விதம் அப்படியே உங்க கையைப் பிடித்துக் கொண்டு கூடவே வந்தது போல இருந்தது.

ஹூம் சான்ஸே இல்லை அபி அப்பா நல்லா தேறிட்டீங்க.எல்லாம் அபிமயம்..அபி உபயம்.ஒரு குறுநாவல் போல எந்த ஜோடனையும் இல்லாத யதார்த்தம்
நல்ல சைக்காலஜி..

\\ நாடோடி இலக்கியன் said...
அருமை அருமை......
ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு.நீங்க எழுதியிருக்கும் விதம் அப்படியே உங்க கையைப் பிடித்துக் கொண்டு கூடவே வந்தது போல இருந்தது.

\\

வாங்க நாடோடி இலக்கியன்! முதல் வருகை ந்நல்வரவாகுக!

உங்க கருத்துக்கு மிக்க நன்றி!!!

\\ கண்மணி said...
ஹூம் சான்ஸே இல்லை அபி அப்பா நல்லா தேறிட்டீங்க.எல்லாம் அபிமயம்..அபி உபயம்.ஒரு குறுநாவல் போல எந்த ஜோடனையும் இல்லாத யதார்த்தம்
நல்ல சைக்காலஜி..

\\

பின்னே தேற மாட்டோமா டீச்சர். உங்க வளர்ப்பாச்சே நாங்க எல்லாம்!!

\\

அப்படியே ஷாக்க்க்க்க் ஆயிட்டேன் ((வடிவேலு பாணியிலே) டீச்சர் ரொம்ப நாள் பின்ன பிளாக் பக்கம் வந்தது நினைச்சு.\\

\\ நல்லா இருக்கீங்களா? அண்ணன் எப்படி இருக்காங்க? கோபி மாதிரி சம்பள பதிவாவது போட்டா என்ன? மெயில் பண்ணுங்க டீச்சர்.

அண்ணே...படிக்கவே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. கூடவே இருந்து அனுபவிச்ச உங்க சந்தோஷத்தை வார்த்தைகளில் வடிக்கிறது ரொம்ப சிரமம். அதையும் நல்லாவே சொல்லி இருக்கீங்க.

\\ நிஜமா நல்லவன் said...
அண்ணே...படிக்கவே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. கூடவே இருந்து அனுபவிச்ச உங்க சந்தோஷத்தை வார்த்தைகளில் வடிக்கிறது ரொம்ப சிரமம். அதையும் நல்லாவே சொல்லி இருக்கீங்க
\\

வாப்பா பாரதி! மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும்!

தல பதிவை பத்தி சொல்ல ஒன்னும் இல்ல...நானும் அப்படியே கூட இருந்து அபி சைக்கிள் ஒட்டியாதை பார்த்தேன். ;))

மகிழ்ச்சி....மகிழ்ச்சி...மகிழ்ச்சி ;))

\\பின்னே அப்படியே அதை அலேக்காக தூக்கிகிட்டு மாடி ஏறினேன்\\

இங்க தான் உங்க காமெடி டச்..நீங்களே சைக்கிளை அதுவும் அலேக்காக தூக்கிட்டு...மாடி வறைக்கும் போனிங்க...இதை நாங்க நம்பானுமாக்கும்...அட போங்க தல...;)))

அண்ணி எடுத்துக்கிட்டு வந்தாங்கன்னு சொல்லுங்க...நம்புறோம் ;))

ஒரே காமெடி தான் உங்ககிட்ட ;))

சூப்பர் தொல்ஸ்ணா!

\\இங்க தான் உங்க காமெடி டச்..நீங்களே சைக்கிளை அதுவும் அலேக்காக தூக்கிட்டு...மாடி வறைக்கும் போனிங்க...இதை நாங்க நம்பானுமாக்கும்...அட போங்க தல...;)))

அண்ணி எடுத்துக்கிட்டு வந்தாங்கன்னு சொல்லுங்க...நம்புறோம் ;))

ஒரே காமெடி தான் உங்ககிட்ட ;))
\\

அடப்பாவி பப்ளிக்ல போட்டு உடைக்கிறியே கோபி கண்ணா!!!

நேத்தே உனக்கு வேற ஒரு விளக்கமும் சொல்லிட்டனே சேட்ல, அதை யார்கிடயும் சொல்லிடாதே!!!!

நன்றி மங்களூராரே!!!! மிக்கநன்றி!!! கல்யாணம் ஆனதீலிருந்ந்து ரொம்ப கெட்டு போயிட்டீங்க்க வீக் எண்ட் ஜொல்லு போடுவதே இல்லை!!!

very senti..

அப்பா - மகள் அன்பு..

ஒரு விஷயம் சொல்லட்டுமா அண்ணா?
அபியும் நானும் படம் பார்த்தப்ப நான் உங்களையும் அபியையும்தான் நெனச்சிக்கிட்டேன்..

ம்ம்.. நட்டு குழந்தையா இருந்தப்ப காட்டுனீங்களே போட்டோஸ்.. அப்போ ஒரு வார்த்தை சொன்னேன்.. நல்ல சுட்டி பையன்.. சுறுசுறுப்பா இருப்பான்ன்னு.. நீங்க இதுல சொன்னது அப்படியே மேட்ஜ் ஆகுது..

அபி அடுத்த கட்டத்துக்கு போயிட்டா.. அப்பா அம்மா செல்லமா இருந்தவ, இப்போ அவளே ஒரு அம்மாபோல் ஆயிட்டா (நட்டுக்கு). :-)

ஆமாம்டா அனும்மா!

இதுக்கு முந்தைய பதிவு "அபியின் அன்றாட வாழ்க்கை"ன்னு பதிவை பார் தெரியும்! வருகைக்கு நன்றிம்மா!

ஆசையே அலைப்போலே. நல்ல பதிவு அபி அப்பா

ஜஸீலா! இருக்கும்மா உங்களுகும், அபியாவது சைக்கிள் கேட்டா, உங்க பொண்ணு உங்க கார் மாதிரி கார் கேட்பா தன் தம்பியை வச்சு ரைர் விட அப்ப நான் பாடுவேன் ஆசையே அலைபோலன்னு:-)))

உங்க காரை தருவீங்களா, தங்கமச்சான் காரை தருவீங்களா புதுசா வாங்கி தருவீங்களான்னு பார்ப்பேன்!!!!

மிகவும் தரமான, நெகிழ்வான பதிவு. உணர்வுகளை அழகாக பதிந்திருக்கிறீர்கள்..

I dont if abi is lucky or abiappa.
Very touching post.

Priya.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தைகள் ஆசைப்பட்ட நேரத்தில் வாங்கி கொடுங்க. இல்லாவிடில் அது அவர்கள் வாழ்க்கையில் தீராத வடுவாகவே ஆகி இருக்கும். பிறகாலத்தில் அவர்கள் சம்பாதிக்கும் போது நினைத்தா கூட அந்த விஷயங்களை நடத்தி கொள்ள முடியாது.//

சத்தியமான உண்மை. கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்காமல் எதற்கு நோ சொல்லவேண்டும், எதற்கு எஸ் சொல்லவேண்டும் என்று பெற்றோர் தெரிஞ்சு செஞ்சா அபி மாதிரி எல்லா பசங்களும் சந்தோஷமா இருக்க முடியும்.

வாங்க தாமிரா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்னி!

பிரியா ரொம்ப நன்றிம்மா! எப்ப தமிழ்மணத்தில்லே சேர போறீங்க! குடத்தில் இட்ட விளக்காகவே இருக்க போறீங்களா? சின்ன துளசி டீச்சர்ன்னு பேர் எடுக்க வேண்டாமா?

வாங்க புதுகை தென்றல் அக்கா! ஏன் இத்தனை லேட்டு?

உங்கலால தான் அபி கெட்டு போனா! ஆஷிஷ் அம்ரிதாக்கு நீங்க கொடுக்கும் பரிசுகள் தான் இவளுக்கு இன்ஸ்பிரேஷன்!!!!

வாழ்க வளமுடன்!

என்ன ஒரு வில்லத்தனம் என் பாக்கெட்டை காலிபண்ண!

அயித்தானுக்கு தனி மடல் இடனும்!

வாங்க புதுகை தென்றல் அக்கா! ஏன் இத்தனை லேட்டு?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அபிஅப்பா இது நியாயமா நீங்க என்னிய அக்கான்னு கூப்பிட்டா நான் என்ன செய்ய.

என் வயதைச் சொல்லி ஒரு பதிவுபோட்டாத்தான் என்னிய அக்கான்னு சொல்றதை ரொம்ப பேரு மாத்திக்குவாங்க போல இருக்கே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்கலால தான் அபி கெட்டு போனா! ஆஷிஷ் அம்ரிதாக்கு நீங்க கொடுக்கும் பரிசுகள் தான் இவளுக்கு இன்ஸ்பிரேஷன்!!!!//

:))))))))))


வாழ்க வளமுடன்!//

நன்னி

என்ன ஒரு வில்லத்தனம் என் பாக்கெட்டை காலிபண்ண!

அயித்தானுக்கு தனி மடல் இடனும்!//

போட்டுத்தான் பாருங்க அபி அப்பா.
:)))))))))))))

நான் தான் 50 அடிச்சேன்

உண்மை, நான் சின்ன வயசுல ஆசை பட்டது எதுவும் எனக்கு அப்போ கிடைக்கல. இப்போ நான் நினைத்ததை வாங்க முடியும், ஆனாலும் அப்போ கிடைக்கலையேன்ற வருத்தம் இன்னமும் எனக்கு இருக்கு. நீங்க செய்தது மிக சரி.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்