பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகள் எப்போதும் விளையாடிக் கொண்டும் உடல் சோர்வை வெளிக் காட்டத் தெரியாமலும் சொல்லவும் தெரியாமல் இருக்கிற போது, குழந்தைகளுக்கு ஜலதோஷம் / சளி  பிடித்திருக்கு என்று பெற்றோராகிய நாம் எப்படிக் கண்டு பிடிப்பது?

  • குழந்தையின் கண்கள் கலங்கலாகவும், நிறம் / ஒளி குறைந்தும் இருக்கும்
  • வழக்கத்திற்கு மாறாக அழுகை அல்லது மகிழ்ச்சி குறைந்து இருக்கும்
  •  மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைபட்ட மூக்கு
  • தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல்
  • உடல் வெதுவெதுப்பாக இருக்கும்  / ஜுரம் இருக்கும்
  • தலையை உயர்த்தி பிடித்து வைத்துக் கொண்டால் சௌகரியமாக  உணரும்.
  • பசி குறைந்து இருக்கும் / சாப்பிட மறுக்கும்
  • சோர்வாய் இருக்கும், தூங்கி  வழியும், அதே சமயம் தூங்கவும் மறுக்கும்
  • நெஞ்சில் / முதுகில் கைவைத்துப் பார்த்தால் மார்பில் சளி கட்டிக் கொண்டு கர்கர் என்று ஒலி கேட்கும். இதனால் ஆஸ்துமா / இளைப்பு நோய் என்றெல்லாம் பயம் கொள்ள வேண்டாம்.
இரவு நேரம். அல்லது வேறேதோ இக்கட்டான சூழல். டாக்டரிடம் உடனடியாகக் கூட்டிச் செல்ல முடியாத நிலை. அப்போது என்ன செய்வது? 

  1. விக்ஸ் அல்லது யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை நெஞ்சிலும் முதுகிலும் மட்டும் தடவி விடவும். நெற்றியில் மூக்கில் தலையில் என்று சகட்டு மேனிக்கு எல்லாம் தடவ வேண்டாம்.
  2. கை, கால், நெஞ்சு, முதுகு, காது போன்ற உடல் பாகங்களை கெட்டியான துணி அல்லது பழைய காட்டன் புடவையால் நன்றாக சுற்றி வையுங்கள். சிறிது வளர்ந்த குழந்தை என்றால் ஸ்வெட்டர் போன்றவற்றை அணிவிக்கலாம். கம்பளியால் போர்த்துவதும் உதவும். ஆனால் முகத்தை மூடிக் கொண்டு விடும் அபாயம் இருப்பதால், பழைய காட்டன் புடவையை  உபயோகித்தல் நலம்.
  3. வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு சிறிய துண்டை (தோரயமாக அரை இன்ச் அளவு) நறுக்கி ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டு சப்பாத்திக் கல்லில் நசுக்கி, பின் ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் பிழிந்தால் மூன்று நான்கு சொட்டு இஞ்சிச் சாறு கிடைக்கும். இதை மூன்று சொட்டுத் தேனில் (டாபர் தேன் சுத்தமாக இருக்கிறது) குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுங்கள். உடனேயே இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் நின்று விடும். இதை நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். 
  4. இஞ்சிச் சாரை பிழிந்து ப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டாம். உடலுக்கு கெடுதல். அவ்வப்போது புதிதாக சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. எப்போதும் கைவசம், ஜலதோஷத்திற்கு என்று ஏற்கனவே மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட மருந்து வைத்திருக்கவும். அதை ஒரே ஒரு டோஸ் தரலாம். குழந்தைகளுக்கான பாராசிடமால் மருந்தும் அப்போதைக்கு நிலைமையைக் கட்டுப் படுத்த உதவும். குழந்தையின் தலை பாரத்தைக் குறைக்கும்.
  6. சிறிது வளர்ந்த குழந்தை (ஒரு வயதுக்கு மேல்) என்றால் வெஜ் கிளியர் சூப் (முட்டைகோஸ் மற்றும் சோளமாவு (cornflour) போட்டு உப்பு-மிளகு  தூவி கொடுக்கலாம். ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தை என்றால் வெது வெதுவென்றிருக்கும் (ஜாக்கிரதை) வெந்நீரில் சிறிது தேன் விட்டு டீஸ்பூனால்  கொடுக்கலாம். மிகவும் கவனமாகக் கொடுங்கள்.
  7. அல்லது பாலில் ஒரு சிட்டிகை (pinch) மஞ்சள் பொடி மற்றும்  ஒரே ஒரு சிட்டிகை மிளகுத் தூள்  போட்டுக் கொடுக்கலாம்.
சுய மருத்துவம் / கை வைத்தியம் என்றும் எப்போதும் ஒரு டோஸ்சுக்கு மேல் நீங்களாகச்  செய்ய வேண்டாம். முடிந்தளவு சீக்கிரம் மருத்துவரிடம் காட்டுங்கள். வழக்கமாக குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அப்போது இல்லை என்றால் அருகிலுள்ள பொது மருத்துவரிடம் காட்டி தெளிவு பெறுங்கள்.

புதிய மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நீங்கள் ஏற்கனவே குழந்தைக்கு கொடுத்திருக்கவில்லை என்றால், என்னதான் அவை குழந்தைகளுக்கான மருந்துதான் என்றாலும், தயங்காமல் மருந்துகளைப் பற்றி அந்த மருத்துவரிடம் தீர விசாரித்து, மருந்தின் தீவிரத்தன்மை (strength of the medicines to the child) பற்றி நன்கு அறிந்து, உங்களுக்கு (மனதிற்கு) திருப்தி ஏற்பட்ட  பின்பே குழந்தைக்கு கொடுங்கள். தான் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பற்றி உங்களுக்கு விவரிப்பது மருத்துவரின் கடமை. அவர் தப்பா நினைச்சுப்பாரோ என்று ஒன்றும் கேட்காமல் வந்து விடாதீர்கள்.

பெரும்பாலும் தாய்க்கு instinct என்ற உள்ளுணர்வு குழந்தைக்கான இடர்களை உணர்த்தும். எந்த புதிய மருந்தையும் ஒரு டீஸ்பூன் (தாய்/தந்தை) தானே ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்து பின்பே குழந்தைக்கு கொடுக்கவும்.

பரிந்துரைக்கப் பட்ட மருந்துகளில் புதியதாக ஏதும் இருந்தால், குழந்தைக்கு கொடுக்கும் முதல் டோஸ் பாதிக்கும் குறைவாக கொடுத்து, நான்கு மணிநேரம் குழந்தையை நன்றாக கவனித்து,  பக்க விளைவு ஏதும் இல்லையா என்று அறிந்த பின்பே முழு டோசும் கொடுக்கவும்.

பக்க விளைவுகள் இருப்பதற்கான அறிகுறிகள்:
  • பெரும்பாலும் முதலில் விரல் நகங்களில் வழக்கமான நிறம் மாறி, கறுத்துப் போகும் அல்லது நிறம் அடர்த்தியாகும். 
  • கை கால்கள் ஜில்லிட்டு விடும் 
  • காது மடல்கள் சூடாகி விடும்.
  • குழந்தை வாந்தி எடுக்கும்
  • உடலில், கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தடித்து, சிவந்து போகும். அரிக்கும், குழந்தை அந்த இடங்களைச் சொரிந்து விடும்.
  • உடலில் கட்டிகள் பொரிகள் தோன்றலாம்
  • குழந்தை சிறு நீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டு அழும்
  • பேதி ஏற்படக் கூடும்
இந்த மாதிரி ஏற்பட்டால், பதட்டப் படாமல் (சொல்வது எளிது.... இருந்தாலும்), குறைந்த பட்சம் நீங்களே அழுது சோர்ந்து போகும் அளவுக்கு பதட்டப் படாமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் முழுதும் காட்டன் துணியால் நன்றாகப் போர்த்தி, கூட்டிச் சென்று விடுங்கள். அப்படி செல்லும் போது, நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்துகள் அனைத்தையும், மருத்துவரின் பிரிஸ்க்ரிப்ஷனையும் (prescription), மருந்து வாங்கிய கடை-பில்லையும் (medical bill) கையோடு கொண்டு செல்லுங்கள்.

===============================
new update: மேலும் சில தகவல்கள் ஹுசைன்னம்மா கேட்டதால் பின்னூட்டத்தில் கொடுத்தேன். ரீடரில் படிப்பவர்களுக்காகவும், பின்னூட்டங்கள் படிக்காதவர்களுக்கும், இங்கே கொடுக்கிறேன்.
===============================
/// ஃபிரிட்ஜில் ஒருவாரம் வரை வைத்துக் குடித்து வருகிறார். ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது அல்ல என்று சொன்னதால் ஒரு குழப்பம், அதான்.///

இஞ்சிச் சாறு சீக்கிரம் புளித்து விடும். அப்போது அதில் இருந்து சுரக்கும் அமிலம் வயிற்றிற்கு கேடு விளைவிக்கும், மேலும் இஞ்சியின் உண்மையான மருத்துவ குணம் மாறுபடும்.

அதிக கடினமான (சுக்கு அல்ல), கனமான, தோல் சுருங்கி இருக்கும், கொளகொளவென்றிருக்கும், மிகவும் பிஞ்சாக, சின்னதாக இருக்கும் இஞ்சியை, மருத்துவ குணம் இல்லாமலோ இழந்தோ இருப்பதால், உபயோகிக்கக் கூடாது.

இஞ்சியை துண்டுகளாக மதிரா (ஆல்கஹால், வயின்,ஸ்பிரிட்) அல்லது ஷெர்ரி போன்றவற்றில் இட்டு கண்ணாடிக் குடுவை / கண்ணாடி ஜாடியில் பாதுகாக்கிறார்கள்.

இஞ்சித் துண்டுகளை வெல்லம் / சர்க்கரைப் பாகு / frozen ginger போன்ற வகைகளிலும் பாதுகாக்கலாம்.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக, இஞ்சிச் சாரை பாதுகாக்கும் முறைகள் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. http://www.ehow.com/how_5692283_preserve-ginger-juice.html

எப்படி இருந்தாலும், ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு, பழைய / frozen வகை உணவுகளை முடிந்த வரை / அறவே தவிர்க்கலாம்.

// இஞ்சி+எலுமிச்சைச் சாறு தினமும் ஒரு டீஸ்பூன் போல அருந்தி வந்தால் சளி பிடிக்காது //

உண்மைதான். ஆனால் ஒரு தம்ளர் சாதாரண அறை வெப்பநிலையில் (normal room temperature) உள்ள தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றிற்கு மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு என்ற அளவே பயன்படுத்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. வெறும் வயிற்றில் பருகுவதால், இதில் ஒரு பின்ச் (சிட்டிகை) சர்க்கரை மற்றும் ஒரு பின்ச் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

இரவில் இஞ்சி சாப்பிடக் கூடாது. வாயுக் கோளாறு, மற்றும் ஜீரணக் கோளாறுகள் வரும்.

///இஞ்சிச் சாறின் அடியில் தேங்கும் வெண்ணிறப் படலம் ‍ அதைப் பொதுவாக நாம் நீக்கிவிட்டுத்தான் குடிப்போம். ஆனால் ஒரு தோழி, அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் என்று சொன்னார்.///

கால்சியம் எல்லாம் இல்லைங்க. அது ஸ்டார்ச் / ginger starch. சாறாக குடிக்கும் போது அதைப் பயன்படுத்தக் கூடாது.

இஞ்சிச் சாற்றை பிரிட்ஜில் பாதுகாத்தால் இந்த வெள்ளை வண்டலை (ஸ்டார்ச்) நீக்கி விட்டே பாதுகாக்க வேண்டும். fermentation-ஆவதற்கு ஸ்டார்ச் உதவுவதால், கண்ணாடிக் குடுவை வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

மாறாக இந்த ஸ்டார்ச்சை மீன் வறுக்கும் போதும், சூப் போன்றவற்றிலோ கலந்து பயன்படுத்தலாம். இந்த வெள்ளை வண்டலை காயவைத்து பாட்டிலில் வைத்தும் பயன் படுத்தலாம். மொலாசெஸ் போன்றவற்றில் இஞ்சியை பயன்படுத்தவே கூடாது.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

அனைவருக்கும் பேரன்ட்ஸ் கிளப் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.

22 comments:

நல்ல பதிவு வித்யா. இஞ்சிச் சாறு குறித்துச் சில சந்தேகங்கள் உண்டு. கேட்கலாமா?

இஞ்சி மற்றும் தேன் - தெரியாத விடயம்.

இதில் என்ன தயக்கம்? கேளுங்களேன் ஹுசைனம்மா. தெரிந்திருந்தால் உடனே பதிலளிக்கிறேன். தெரியவில்லை என்றால் கொஞ்சம் பொறுங்கள். யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்கிறேன்.
உங்கள் வருகைக்கு நன்றி ஹுசைனம்மா.
--வித்யா

இஞ்சிச் சாறின் அடியில் தேங்கும் வெண்ணிறப் படலம் ‍ அதைப் பொதுவாக நாம் நீக்கிவிட்டுத்தான் குடிப்போம். ஆனால் ஒரு தோழி, அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அவ்வாறே செய்கிறாராம்.

அதோடு அவர் இஞ்சி+எலுமிச்சைச் சாறு தினமும் ஒரு டீஸ்பூன் போல அருந்தி வந்தால் சளி பிடிக்காது என்றார். (தகவலுக்காக)

அவர் அப்படி எடுத்து ஃபிரிட்ஜில் ஒருவாரம் வரை வைத்துக் குடித்து வருகிறார். ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது அல்ல என்று சொன்னதால் ஒரு குழப்பம், அதான்.

அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் - is it correct?

இஞ்சிச் சாறு சீக்கிரம் புளித்து விடும். அப்போது அதில் இருந்து சுரக்கும் அமிலம் வயிற்றிற்கு கேடு விளைவிக்கும், மேலும் இஞ்சியின் உண்மையான மருத்துவ குணம் மாறுபடும்.

அதிக கடினமான (சுக்கு அல்ல), கனமான, தோல் சுருங்கி இருக்கும், கொளகொளவென்றிருக்கும், மிகவும் பிஞ்சாக, சின்னதாக இருக்கும் இஞ்சியை, மருத்துவ குணம் இல்லாமலோ இழந்தோ இருப்பதால், உபயோகிக்கக் கூடாது.

இஞ்சியை துண்டுகளாக மதிரா (ஆல்கஹால், வயின்,ஸ்பிரிட்) அல்லது ஷெர்ரி போன்றவற்றில் இட்டு கண்ணாடிக் குடுவை / கண்ணாடி ஜாடியில் பாதுகாக்கிறார்கள்.

இஞ்சித் துண்டுகளை வெல்லம் / சர்க்கரைப் பாகு / frozen ginger போன்ற வகைகளிலும் பாதுகாக்கலாம்.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக, இஞ்சிச் சாரை பாதுகாக்கும் முறைகள் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது.
http://www.ehow.com/how_5692283_preserve-ginger-juice.html

எப்படி இருந்தாலும், ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு, பழைய / frozen வகை உணவுகளை முடிந்த வரை / அறவே தவிர்க்கலாம்.

நன்றி ஜமால்.

///அதோடு அவர் இஞ்சி+எலுமிச்சைச் சாறு தினமும் ஒரு டீஸ்பூன் போல அருந்தி வந்தால் சளி பிடிக்காது என்றார். (தகவலுக்காக)///

உண்மைதான். ஆனால் ஒரு தம்ளர் சாதாரண அறை வெப்பநிலையில் (normal room temperature) உள்ள தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றிற்கு மூன்று டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு என்ற அளவே பயன்படுத்த வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. வெறும் வயிற்றில் பருகுவதால், இதில் ஒரு பின்ச் (சிட்டிகை) சர்க்கரை மற்றும் ஒரு பின்ச் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

இரவில் இஞ்சி சாப்பிடக் கூடாது. வாயுக் கோளாறு, மற்றும் ஜீரக் கோளாறுகள் வரும்.

--அன்புடன்'
வித்யா

///இஞ்சிச் சாறின் அடியில் தேங்கும் வெண்ணிறப் படலம் ‍ அதைப் பொதுவாக நாம் நீக்கிவிட்டுத்தான் குடிப்போம். ஆனால் ஒரு தோழி, அது கால்சியம் என்றூம், அதை நீக்காமல் சேர்த்தே குடிக்க வேண்டும் என்று சொன்னார்.///

கால்சியம் எல்லாம் இல்லைங்க. அது ஸ்டார்ச் / ginger starch. சாறாக குடிக்கும் போது அதைப் பயன்படுத்தக் கூடாது.

இஞ்சிச் சாற்றை பிரிட்ஜில் பாதுகாத்தால் இந்த வெள்ளை வண்டலை (ஸ்டார்ச்) நீக்கி விட்டே பாதுகாக்க வேண்டும். fermentation-ஆவதற்கு ஸ்டார்ச் உதவுவதால், கண்ணாடிக் குடுவை வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

மாறாக இந்த ஸ்டார்ச்சை மீன் வறுக்கும் போதும், சூப் போன்றவற்றிலோ கலந்து பயன்படுத்தலாம். இந்த வெள்ளை வண்டலை காயவைத்து பாட்டிலில் வைத்தும் பயன் படுத்தலாம். மொலாசெஸ் போன்றவற்றில் இஞ்சியை பயன்படுத்தவே கூடாது.

நீங்கள் இஞ்சிசாற்றை புதியதாக பயன் படுத்துவதே சாலச்சிறந்தது. fridge-ஜில் வைத்து மீண்டும் பாட்டிலைத் திறக்கும் போது "டப்"பென்று gas வெளியேறினால் நிச்சயம் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல.

பெரும்பாலும் இஞ்சிச் சாறு ஒன்றிரண்டு சொட்டுக்கள் அல்லது கால் தம்ப்லருக்கும் குறைவாகவே பயன் படுத்துகிறோம். ஒருவேளை, காலையில் நேரமில்லை என்றால், முதல் நாள் இரவே தயாரித்து மறுநாள் காலையிலேயே பயன் படுத்தி விடுங்கள்.

வண்டல் தங்கும் அளவுக்கு ஒரேயடியாக அரைத்து சாறெடுத்து வைக்காதீர்கள். அடியில் தங்கும் வண்டல்களைப் பயன்படுத்த வேண்டாம்.

கையால் பிழிய நேரமில்லை என்றால், மிக்சியில் சுற்றி பயன்படுத்தலாமே. அதிக பட்சம் ஐந்து நிமிடம் கூட ஆகாதே?

ரொம்ப உபயோகமான ஒன்று.. பாராட்டுக்கள்...

விதூஷ் BSMS?

வித்யா,

மிகமிக நன்றி. எனக்கு இந்த கால்சியம் விஷயம் குறித்துத் தெளிவாக்கியதற்கு மீண்டும் நன்றி. நான் பலபேரிடம் கேட்ட பிறகும் விடை கிடைக்கவில்லை. இனி கவனமாக இருப்பேன்.

நான் வாரம் ஒருமுறையாவது இஞ்சி+தேன் பிள்ளைகளுக்குக் கொடுக்க முயல்வேன். அப்போதெல்லாம் இந்த குழப்பம் வரும்.

மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி. நான் மிக்ஸியில்தான் அரைப்பேன்.

அப்புறம், இன்னொரு சந்தேகம் (ஹி..ஹீ..விவரமான ஆள் கிடைச்சிட்டீங்க, சான்ஸை மிஸ் பண்ணக்கூடாதில்ல!)

நான் இருவேளையும் டீயில் இஞ்சி (சிறிது தூக்கலாகவே) சேர்த்துக் குடிப்பேன். என் அம்மா, இஞ்சி வாதம் உண்டாக்கும் தன்மையுடையது என்றும், அதனால் அதிகம் சேர்க்கக்கூடாது என்றும் சொல்கிறார். சரியா?

உணவில் இஞ்சி‍பூண்டும் தவறாமல் சேர்ப்பேன்.

உடனே பதில் அளிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் வசதிபோல நிதானமாகச் சொல்லுங்கள்.

அப்புறம், last but not least, நீங்க BSMSதானா? ;-D

நல்ல பதிவு வித்யா

அருமையான தகவல்கள் நிறைந்த பதிவுக்கு நன்றி வித்யா.

அப்புறம் என் சொந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆஷிஷ், அம்ருதாவிற்கு எப்போதும் சளி பிடித்து அவதி படுவார்கள். இத்தனைக்கும் ஃப்ரிட்ஜ்லிருந்து எதுவும் தரமாட்டேன், நோ கூல்ட்ரிங்க்ஸ், ஐஸ் வாட்டர்.

சமீபத்தில் குழ்ந்தை மருத்துவ நிபுணர் காது,மூக்கு, தொண்டை நிபுணரை சந்திக்கச் சொன்னார்.

பிள்ளைகளின் இந்த அவதிக்கு காரணம் மூக்கில் எலும்பு சற்றே விலகி இருப்பதும் adenide எனும் சதை மூக்கில் வளர்ந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இது பயப்பட வேண்டிய விஷயமில்லை. மருந்தில்/சிறிய ஆப்பரேஷனில் சரி செய்துவிடலாமாம். மூக்கின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும் என்பதால் அதற்கு மேலும் இந்த நிலை தொடர்ந்தால் மட்டுமே ஆப்பரேஷ்ன்.

சளி அடிக்கடி பிடித்தாலும் நாம் கவனமாக மருத்துவரை அதுவும் சிறந்த காது,மூக்கு, நிபுணரை சந்திப்பது அவசியம்

Print எடுத்து வச்சிட்டேன் வித்யா ஊருக்கு ஃபேக்ஸ் அனுப்ப.

எனக்கும் ஒரு சந்தேகம். ஜூனியருக்கு இந்த மழைக்காலம் தொட்டு சளி இருந்து கொண்டே இருக்கிறது. அவ்வப்போது வீசிங். ப்ரெவெண்டிவ் மெடிசினாக தினமும் இரவு MONTAIR டேப்லட் குடுக்க சொல்லியிருக்கிறார் மருத்துவர். இப்படி இருக்கையில் இந்த இஞ்சி சாறு கொடுக்கலாமா? லாம் என்றால் தினமுமா? அல்லது வாரத்திற்கு எத்தனை தடவை? ஜூனியர் வயது 2.5

மிக உபயோகமான தகவல்கள் வித்யா.

பகிர்வுக்கு மிக்க நன்றி!

நல்ல மற்றும் புதிய தகவல்கள்
ஓட்டும் போட்டுட்டேன்.

டாக்டர் அம்மா ஒரு கடையா ஆரம்பித்தா நல்லா கல்லா கட்டும்

அனைவருக்கும் நன்றி.

நன்றி அண்ணாமலையான். :)) BSMS எல்லாம் இல்லை, விதூஷ், தர்ஷிணிக்கு அம்மா மட்டுமே.

நன்றி ஹுசைனம்மா: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. வாரம் இரு முறை மட்டும் இஞ்சி பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் போதும். இது தவிர உணவுகளிளிலும் சேர்த்து கொண்டால், அன்று மீண்டும் இஞ்சி / பூண்டு சாப்பிடத் தேவையில்லை.
:)) BSMS எல்லாம் இல்லை, விதூஷ், தர்ஷிணிக்கு அம்மா மட்டுமே.

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி புதுகைத் தென்றல். நீங்கள் சொல்வது சரிதான்.
மூக்கு வளைந்து இருப்பதும் / மூக்கிற்குள் சதை வளர்ச்சியும் தகுந்த யோகா / ப்ராணாயாமப் பயிற்சிகள் மூலம் என் நண்பர்களுக்குச் சரியாகி இருப்பதை நானே நேரில் பார்த்துள்ளேன். இப்போது யோகா வகுப்புக்களுக்கு அதிக செலவும் ஆகிறது. மேலும் குழந்தைகளுக்கும் அதற்கெனச் செல்ல நேரமில்லை. ஆறு வயதுக்கு மேற்பட்டக் குழந்தைகளுக்கு "வாழும் கலை" அல்லது "வாழ்க வளமுடன்" போன்ற மையங்களில் நடத்தும் ஒரு வாரப் பயிற்சி போன்ற குறைந்த காலப் பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்புங்கள். பின் வீட்டிலேயே மூச்சுப் பயிற்சி மட்டும் செய்யப் பழக்குங்கள்.

நன்றி நவாஸ்.

நன்றி வித்யா: கேரள ஆயுர்வேத மையங்களில் "bronchure" போன்ற ஆயுர்வேத சிரப்புகள் கிடைக்கும். இதில் துளசி, மிளகு, இஞ்சி போன்ற ingredients-களே உள்ளன. நீங்கள் இந்தியாவில் இருந்தால் அருகிலுள்ள கேரள ஆயுர்வேத மையங்களில் இது பற்றி விசாரிக்கலாம். மேலும் ஆங்கில மருத்துவம் மூலம் நோயின் தீவிரம் உடனடியாகக் குறைகிறது. அதனால் ஆங்கில மருத்துவ முறைகளை பின்பற்றுவதில் தவறேதும் இல்லை. அதே சமயம் நிரந்தரத தீர்வுக்கும் வழி செய்ய வேண்டியது நம் கடமை இல்லையா? ஏழு வயதுக்குள் அவர்களின் உடல் நலமும், பிற்காலத்தில் வரும் நோய்களும் நிர்ணயமாகிறது என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். சிறிது சிறிதாக காலை உணவுக்கு முன் இஞ்சி+தேன் சாறு கொடுத்துப் பழக்குங்கள். இரண்டரை வயதுதானே ஆகிறது. இன்னும் ஆறே மாதத்தில் கொட்டும் மழையில் ஜுனியரோடு நீங்களும் ஆட்டம் போடலாம், அப்போது மழை பெய்தால். இல்லைஎன்றால் கூட கவலை இல்லை, வீட்டில் shower-ரில் தண்ணி கொட்டுமே.. :)) Don't worry. Everything will be alright.

நன்றி சுந்தரா

நன்றி கண்மணி

நன்றி நசரேயன்: நீங்க முதலீடரீங்களா? சுமார் நூறு கோடில ஆரம்பிச்சிடலாம்... :))

மீண்டும் நன்றி வித்யா. உங்கள் கருத்துக்களை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.

வித்யா அருமையான பதிவு...

இதைப்படிக்கும் ஓவ்வொரு பெற்றோரும் ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்

நன்றி வித்யா...

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்