பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

குழந்தைகளை நர்சரியிலோ, ப்ரீஸ்கூலிலோ சேர்க்கும்
முன் குழந்தைகளை தயார் செய்வது மிக முக்கியம்.
இண்டர்வ்யூவுக்கு தயார் செய்வது பத்தி நான் சொல்லவில்லை.

பசங்களுக்கு மைண்ட்செட் செய்வதற்கு முன்னாடி
பெற்றோர்கள் இதை ஒருவாட்டி படிச்சிக்கணும்.
ரொம்ப முக்கியம்.


பள்ளியில் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகமல்
இருக்க சில அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுப்பது
நல்லது. பள்ளிக்கு அனுப்பும்முன் பெற்றோர்கள் இதை
மனதில் வைத்து பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த
வேண்டியது அவசியம்.



1.TOILET TRAINING:

6 மாதம் முடிந்ததுமே இந்த பழக்கத்தை துவக்கிவிடலாம்.
டாய்லட் சீட்டில் உட்காரவைத்து பழக்கினால் பழகிவிடும்.
இது வீட்டில் பழக்கப்படாவிட்டால், பள்ளியில் பிரச்சனைதான்.
அதனால் கவனமாக, முக்கியமாக பழக்கவேண்டிய
விஷயம் இது.

2. தானாகவே சாப்பிடுவது:
”என் பிள்ளைக்கு நான் ஊட்டினால்தான் வயிறு நிறைஞ்சா மாதிரி!!”
அப்படின்னு சொல்லி சொல்லி ஊட்டி விட்டு பழக்கப்படுத்தியிருப்பீங்க.
ஆனா பள்ளியில யாரும் ஊட்டி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்க.
குழந்தை உட்கார ஆரம்பித்த உடனேயே தட்டு போட்டு
சாப்பிட வைப்பது அதுவும் தானாகவே சாப்பிட் வைப்பது
நல்லது.

3.பகிர்ந்து கொள்ளுதல்:
சில குழந்தைகள் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள
மாட்டார்கள். இதனால் யாருடனும் எளிதில் பழகவும்
மாட்டார்கள். பகிர்ந்து கொள்ள பழக்கினால் பள்ளியில்
வாழ்க்கை இனிதாகும்.

4. சின்னச் சின்ன வேலைகள் செய்வதை பழக்கப்படுத்த
வேண்டும். தன் உடையை கழற்ற மாட்ட, ஷூ அணிய
என பழக்கப் படுத்துவது அவசியம்.

பிறருக்கு உதவும் பாங்கு, sorry, thank u சொல்லப்
பழக்குதல், மரியாதையாக நடந்து கொள்ளுதல்,
தன் சாமான்களை பாதுகாத்துக்கொள்ளுதல் எல்லாமும்
மெல்ல மெல்ல பழக்க வேண்டும்.

இவை பள்ளியில் குழந்தை நல்ல முறையில்
செட்டாக உதவும்.

7 comments:

அவசியமான பதிவு.அழகாய் சொல்லியுள்ளீர்கள் தென்றல்.

நன்றி ராமலக்‌ஷ்மி

நல்லா சொல்லியிருக்கீங்க தென்றல்.

அருமையான பதிவு நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..

மூன்று நாளாக தான் இங்கு ரித்து பள்ளி சென்று வருகிறாள்..எந்த மிரட்டல் அழுகை ஆர்ப்பாட்டம் இல்லாமல்..


என்ன பன்ன அப்பாக்கள் எல்லாம் இந்த மாதிரி ப்ளாக் ல படிச்சு தான் தெரிஞ்கிக்க வேண்டி இருக்கு..

ஆன ரித்துவோட அம்மா தான் இத்துனையும் ..இன்னும்.. கற்று கொடுத்திருக்கிறார்கள் ரித்துவிற்க்கு..

நன்றி அமைதிச்சாரல்

வாங்க ரித்து அப்பா,

அதனாலதானே குழந்தையின் முதல் ஆசான் அம்மான்னுசொல்லி வெச்சிருக்காங்க.

ரித்துக்கு எனதன்புகள்

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன.

அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி ஒரு கோரிக்கையுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது, சகோதரர் அதிரைகாரன் எழுதியது சென்ற பாருங்கள் http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html தங்கள் கருத்தை பதியுங்கள், மற்ற தமிழ் இணைய ஆர்வளர்களுக்கும் உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்தால் உங்கள் வலைப்பூவிலும் பதியுங்கள், அதிக வாசகர்கள் வந்து செல்லும் வலைப்பூ தங்களுடையது.

கணினித்துறையில் தமிழுக்காக பல சேவை செய்த ஒரு தமிழருக்கு சிறிய அங்கீகார கிடைப்பதற்கான ஒரு முயற்சி (campaign)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்