பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

என் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா
போதும்!

என் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா
பொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி!!

இப்படி சொல்லும் வகை பெற்றோரா! உங்கள் குழந்தை அதிக
நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

ADD - ATTENTION DEFICIT DISORDER
அதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு
ஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை
ஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்
அதீதமாக ஆக்டிவாக இருப்பதும்,(hyperactive)
முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)
போன்ற குறைபாடுகளும் இருக்கும்.

இந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது
பல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்
என்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

முறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு
பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,
சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை
கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்
நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்
பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்
இந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்
அடிக்கும் எச்சரிக்கை மணி.

பரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு
சாத்தியம் இருக்கிறது
நாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,
உண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்
ஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக
இருக்கக்கூடும்.




பல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி
குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி
பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி
பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு
கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி
வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்
காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து
இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.

நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்
பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான
மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்
போகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான
பழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி
அதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,
குறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்
செய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து
ஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.


தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,
நொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.
வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட
இதே விளைவைத் தருகின்றன.

கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை
நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை
ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத
பொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய
உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

ADD - ATTENTION DEFICIT DISORDER இதன் அறிகுறிக்கள்:

சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,
சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு
தாவுதல்.

ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய
முடியாது.

ஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது
சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.

முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்
செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்
அதை செய்ய மாட்டார்கள்.

ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து
முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.

பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை
காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்
பெற்றோருக்கு வரும்.


பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.
குழப்பமான மனநிலை.

இவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.
தகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று
ஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,
ட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்
அறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.


ஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து
குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து
அதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.
வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.
அதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை
எடுத்துக்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட
சக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை
அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முறையான மனநலமருத்துவரைச் சந்தித்து
தேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்
குழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான
வாழ்க்கையை குழந்தைக்கு வழங்கலாம்.

10 comments:

சில மணி நேரங்கள் டி.வி யை நிறுத்தி விட்டு தினமும் பெற்றோர்கள் தமது குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருக்கலாம்.டி.வி பார்க்கும் நேரத்தை இப்படியாக கணிசமாகக் குறைக்கலாம்,ஆனால் அதற்கு பெற்றோர்கள் தயாராய் இருக்க வேண்டுமே முதலில் ! குழந்தைகள் டி.வி பார்ப்பதை குறைப்பதென்பது எளிதான விஷயம்,சாமர்த்தியமான பெற்றோர்கள் அதை எளிதாகச் செய்து விடலாம்.ஆனால் பெரியவர்கள் தங்களது தொலைகாட்சி நேரத்தை குறைக்க முன்வர வேண்டுமே! நடக்குமா!

அவசியமான பதிவு ,பகிர்வுக்கு நன்றி புதுகை தென்றல்

வாங்க கார்த்திகா,

நீங்க சொல்வது சரி. பெரியவங்க, பெத்தவங்க இதை முதலில் புரிஞ்சுகிட்டு
டீவி பார்ப்பதை குறைச்சுக்கணும். இந்த நோய் பெரியவர்களையும் தாக்கும்

வருகைக்கு நன்றி

காலத்தின் தேவைக்கேற்ற மிக மிக அவசியமான பதிவு.

நன்றி ராமலக்‌ஷ்மி

எங்க வீட்ல டிவி இருக்கு...ஆனா அட்டைப் பெட்டியில் போட்டு பரணில் வச்சு இருக்கோம்..,, பசங்க கொஞ்சம் பெரிசானதும் எடுக்கனும்.

வருகைக்கு நன்றி தமிழ்ப்ரியன்

மிக அற்புதமான தகவல்! இன்றைய இளம் பெற்றோர்கள் பலர் தங்கள் அறியாமையினால், குழந்தைகளிடம் போதுமான நேரத்தினை முறையாக செலவிட மறக்கின்றனர். “பெண்மை மென்மை” எனும் காலம் போய் குழந்தைகளிடம் (தான் நினைத்ததினை சாதிக்க / விரும்பும் விதத்தினில் வளர்த்திட) வன்மையினைக் காணும் போக்கினை பணிக்குச் செல்லாத இல்லத்தரசிகளிடமிருந்தும் அயலகத்திலிருக்கும் நான் கண் கூடாக காண்கின்றேன்.

This site is very very helpful for us. I like so much.

THANKS MR. SRIKANNAN.

It is a right content for me at the right time.... i want to keep up this... but i am unable to control myself seeing the TV... i have to reduce seeing the tv... thanks for the info and advice...

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்