பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.நாற்றங்காலில் இருந்து பகிரப்படுகிறது.
16 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கான கம்பெடிடிவ் எக்ஸாம்கள் பற்றிய பரவலான புரிதல் பல பெற்றோர்களுக்கு இல்லை என்பதை என் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் மூலம் புரிபட்டது. அதன் விளைவாகவே இந்த பதிவு.

பள்ளிப் பாடங்களே சுமையாக இருக்கிறது. அதற்கும் மேல் எதற்கு இப்படிப்பட்ட பரிட்சைகள்? பள்ளிப் பாடங்களைப் படித்தாலே போதாதா? நேரமே இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு இது வேறு கூடுதல் மன அழுத்தம் தருமே? என்றெல்லாம் இப்படி நினைப்பவர்களுக்கு, நீங்கள் உங்கள் குழந்தையின் அறிவு சார்ந்த கல்வி பற்றிய கருத்துக்களை மறு பரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.

16-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்னவெல்லாம் competitive exams இருக்கின்றன.

  1. ஒலிம்பியாட் (Olympiad)
  2. இண்டர்நேஷனல் சயன்ஸ் ஒலிம்பியாட் (Science Olympiad)
  3. இண்டர்நேஷனல் மேத்ஸ் ஒலிம்பியாட்(The International Mathematical Olympiad)
  4. ஐ.ஜி.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் எக்ஸாம் (IGSC Scholarship Examinations)
  5. மாக்மில்லன் ஐ.எ.ஐ.எஸ். (Macmillan IAIS)
  6. என்.சி.இ.ஆர்.டி. நடத்தும் டேலன்ட் ஸர்ச் (NCERT)
  7. என்.டி.எஸ்.ஈ. (NTSE)
  8. அஸ்செட் (ASSESSMENT OF SCHOLASTIC SKILLS THROUGH EDUCATIONAL TESTING (ASSET))
  9. ஸ்டார் (STAR)
  10. ஸ்பெல் பீ (Spell Bee)

ஏன் இவ்வகையான பரீட்சைகள் தேவையாக இருக்கின்றன?

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமூகச் சூழல்கள் உருவாக்கித்தரும் தினசரி சவால்களும் பொருளீட்டத் தேவையான வேலைகளும், அறிவு சார் தொழில்களும், நம் குழந்தைகள் ஆறு வயதில் இருந்தே independent ஆக இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. அதற்குத் தேவையான life-skills, cognitive skills(அறிவாற்றல்) diagnostic மற்றும் logical thinking skills வளர இது போன்ற பரிட்சைகள் தேவையாக இருக்கின்றன.

மேலும் இந்தியாவில் தற்போதையக் கல்வி முறையில் மட்டும் பயிலும், கல்வியை மட்டுமே ஆதாரமாக கொண்டிருக்கும் ஒரு மாணவர், பள்ளியோ/கல்லூரியோ முடித்த பின் இன்னொருவரிடம் பணிக்குச் செல்லும் வகையிலேயே இருக்கின்றன. தன்னார்வமோ, தொழில் பின்புலமோ இல்லாதிருக்கும் ஒரு சாதாரண மாணவன் தானே தொழில் துவங்குதைப் பற்றியோ, அறிவியல் ரீதியாகச் சிந்திக்கவோ வெறும் பள்ளி/கல்லூரிக் கல்வி மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.

ஒரு சாதாரண மாணவரை scientific, logical, analytical, ரீதியாகச் சிந்திக்கத் தூண்டி, வாசிக்கும் ஆர்வத்தையும் கொடுத்து, life-skills வளர்த்துக்கொள்ள இது போன்ற competitive பரீட்சைகள் அவசியமாக இருக்கின்றன.

மேலும் இது போன்ற பரிட்சைகள் மாணவர்களிடம் கல்வி குறித்த பதட்டத்தையும், பயத்தையும் குறைக்கின்றன. இப்பரீட்சைகளுக்குப் படிக்கும் எந்தவொரு பாடமும் நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் பரீட்சைகள் எழுதுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதாக இருக்கும். இப்பரிட்சைகள் சிலவற்றில் அதிக grade வாங்கி தேர்ச்சிப் பெற்று இருக்கும் மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்கவும் /படிப்பைத் தொடரவும் scholarship வழங்கியும் ஊக்குவிக்கிறார்கள்.

உங்கள் குழந்தைகளை இந்தப் பரிட்சைகளில் பங்கேற்க வைப்பது குறித்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். அப்படி உங்கள் குழந்தையின் பள்ளியில் இந்தப் பரிட்சைகள் நடத்தப் படாமல் இருந்தால், நீங்களே நேரடியாக குறிப்பிட்ட பரீட்சை நடத்தும் ஸ்தாபனங்களை தொடர்பு கொண்டு, வேறெந்த பள்ளிகள் இதை நடத்துகின்றன என்றும், அந்தப் பள்ளிகள் மூலம் எப்படிப் பங்கேற்பது என்பது பற்றிய கூடுதல் விபரம் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வெற்றியடைதல் என்பது வெறும் கிரேடுகளும் மார்க்குகளும் வாங்கிக் குவித்த பதக்கங்களின் எண்ணிக்கையால் மட்டும் நிர்ணயமாவதில்லை, அதையும் தாண்டி தம் வாழ்க்கையை குடும்பம், உறவுகள், நட்புக்கள், தொழில், பொருளாதாரம், சமூகம், என்று பல்வேறு கோணங்களிலும் திறம்பட நிர்வகிக்கத் தெரிந்த ஒருவருக்கு வெற்றி என்பது தினம் தினம் ஒரு நிகழ்வாகிப் போகிறது. அத்தகைய life-skills வளர்த்துக்கொள்ள இது போன்ற பரிட்சைகள் நிச்சயம் உதவுகின்றன.

படிக்காத மேதைகளும் இருக்கும் உலகம்தான் இது, அது போன்ற அதிருஷ்டத்திற்காகக் காத்திருக்கும் விரய-நேரத்தில், இது போன்ற பரிட்சைகள் எழுத ஊக்குவித்தல் உங்கள் குழந்தைகளின் independent ஆக்கி, நாம் இல்லாமல் போகும் போதும் திறம்பட தானே தன் வாழ்க்கையை நிர்வகித்துக் கொள்ள வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்கு இது குறித்த கேள்விகள் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். என்னால் இயன்றளவு விபரங்களைச் சேகரித்துத் தருகிறேன். நன்றி.

5 comments:

நன்றி! சிறந்த தகவல்கள். பெற்றோருக்குத் தேவையானத் தகவல்கள். மேலும் பகிர்ந்து கொள்வோம்.
-சங்கர்-

Really usefull info. Thanks . can provide the website link to know more details and check for the updates like current yr exam date and syllabus.

ரொம்பவே உபயோகமான தகவல்கள்

நன்றி

மிக அருமையான பதிவுகள்.

உங்கள் நல் முயற்சி பல பெற்றோர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். வாழ்க

தங்களது இப்பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு பெற்றோர்களும் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் இந்த நல்ல சேவை. வாழ்த்துகிறேன்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்