இன்றைய சூழலில் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. பெண்கள் வேலைக்குச் செல்வது அத்தியாவசியமாகிறது.
Dr.DAVID MACE எனும் மேரேஜ் கொவுன்சிலர் கூறியிருப்பதாவது," இன்றைய புதிய சமுதாயத்தில் வேலைக்குச் செல்லும் மனைவியும் ஓர் அங்கமாகிவிட்டார். உலகம் முழுவதும் அதிக அளவில் பெண்கள் வேலைகளை ஏற்று பணிபுரிய துவங்கிவிட்டனர்.
இதனால் திருமண வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டா? என பார்த்தால், இது ஒவ்வொரு தம்பதிகளைப் சூழ்நிலையைப் பொறுத்து அமையலாம். அதை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அமையலாம். இதனால் உண்டாகும் பாதிப்பு கணவன் - மனைவி சம்பந்தப் பட்டது.
குழந்தைகளைப் பற்றி பார்த்தால் ஆம் என்றுதான் சொல்வேன். பெண்கள் வேலைக்குப் போவது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும். எப்படி? என்கிறீர்களா?
குழந்தையின் 5 வயதுவரை தாயின் அருகாமை, அன்பு, அரவனைப்பு, அது தரும் சுகம் ஆகியவை தான் அவன் வளர்ந்த்து எப்படி பட்ட மனிதனாகிறான் என்பதை தீர்மானிக்கின்றது.

இந்தக் காலக் கட்டத்தில் சிறிதளவேனும் குழந்தையின் மனதில் ஏற்படும் மனநல பாதிப்புக்கள் வருங்காலத்தில் பெரியவனாகும் போது தீவிரமாக பாதிப்பினை உண்டாக்குகிறது"
யோசிக்க வேண்டிய விஷயம் ?
யோசிக்க வேண்டிய விஷயம் ?
உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறோம்..
புதுகைத் தென்றல்
புதுகைத் தென்றல்
48 comments:
நான் வேலைக்கு போகாத பொண்ணை கால்யாணம் பண்ணலாம்னு இருக்கேன். ஏன்னுல்லாம் காரணம் இல்லாமலே.
இது சரியா? தப்பா? இல்ல எதாவது ஈயம் பித்தாளையா!?!?
இந்த வலைப்பூவே அருமையான நோக்கத்துடன் ஆரம்பிக்க பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஒரு அப்பாவி
ப்யூச்சர் பேரண்ட்
எங்க வீட்டுத்தங்கமணி தன் தாய் அலுவலகத்திற்கு சென்றதால் அவர் இழந்தவற்றை கூறிக் கேட்டிருக்கிறேன்.
இதனாலேயே என் தங்கமணி வேலைக்குச் செல்வதில்லை. அவர் வேலைக்குச் செல்லாததால் நானும் அனாவசியமாக வீட்டு வேலைக்குள் வர வேண்டாம் என்கிறார் தங்கமணி :-)
மங்களூர் சிவா,
ஈயம், பித்தாளை பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது நமது தினசரிக்கு ஆகாது.
உங்களுக்கும், உங்கள் எதிர்கால மனைவிக்கும் எது சரி என்று தோன்றுகிறதோ அதனை செய்யுங்க.
இந்த பதிவுகளில் எழுதியிருப்பது போல, முதல் 5-6 வயது வரை குழந்தைகளூக்கு அம்மா என்ற உலகம் மிக முக்கியமாக, அது மட்டுமே உலகமாக இருப்பதை என் வீட்டில் பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்பை தாய்-தந்தையராக நாம் தருகிறோமா என்று யோசித்தால் சரியான முடிவினை எடுக்கலாம்.
அக்கா நீங்க சொல்வதை முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன், எங்கள் பவனுக்கு 2 வயது.
அவனுக்கு ஒரு வயது வரை அவன் அம்மா வீட்டில் இருந்து வேலை பார்த்தார்கள் அதனால் பிரச்சினை எதுவும் இல்லை.
ஆனால் கடந்த ஒரு வருடமாக அவர்கள் வேலை இடத்தில் வேலைக்கு போறாங்க. வீட்டில் பவனை பார்த்துக்கொள்ள காலை 9 முதல் மாலை 7:30 வரை ஒருவர் இருக்கிறார். அவர்கள் அவனை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.
இப்போது பிரச்சினை என்னவென்றால் எங்கள் இருவருக்கும் ரொம்ப பிரசர், டென்சன் கொடுக்க கூடிய மேனேஜ்மென்ட் ஜாப் அதனால் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டி உள்ளது, வீட்டில் பவனுடன் நேரம் ஒதுக்கி விளையாட முடியவில்லை.
என்ன செய்வது ஒன்றும் புரியல....
வாங்க சிவா,
அது அவரவை தனிப்பட்ட விஷயம். ஆனாலும் ஒரு தகவல் சொல்லலாம். குறைந்தது 5 வயதுவரை வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளலாம்.
பார்ட் டைமா வேலைப் பார்க்கலாம்.
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
பேரன்ட்ஸ் கிளப் said...
வாங்க சிவா,
அது அவரவை தனிப்பட்ட விஷயம். ஆனாலும் ஒரு தகவல் சொல்லலாம். குறைந்தது 5 வயதுவரை வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளலாம்.
பார்ட் டைமா வேலைப் பார்க்கலாம்.
அம்மாவிற்கு பதில் அப்பா பார்ட் டைம் வேலை பார்த்தால் என்ன, ஏன் குழந்தை அம்மாவிடம் மட்டும் தான் வளரவேண்டுமா.
எங்க வீட்டுத்தங்கமணி தன் தாய் அலுவலகத்திற்கு சென்றதால் அவர் இழந்தவற்றை கூறிக் கேட்டிருக்கிறேன்.
// ஆமாங்க. நானும் கஷ்டப்பட்டவள் தான். பாட்டி எங்களுடன் இருந்தாலும் அம்மா அருகில் இல்லையே என்று அழுத நேரங்கள் பல. முக்கியமா உடல்நிலை சரியில்லாத பொழுதுகளில். என்னைவிட தம்பி மிகவும் கஷ்டபட்டான். அதனால் இப்போ வேலைக்கு போகாத பெண்ணாக வேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.//
இதனாலேயே என் தங்கமணி வேலைக்குச் செல்வதில்லை.
// நானும் அதனால் தான் வேலைக்குச் செல்லாமல் குழந்தைகள் இருவரும் கொஞ்சம் வளர்ந்த பிறகு பார்ட் டைம் வேலை செய்கிறேன். அனுபவித்தவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். அதனால் அந்தக் கொடுமை என் குழந்தைகள் படக் கூடாது என்பதில் உருதியாய் இருக்கிறேன். உங்கள் மனைவிக்கு வாழ்துக்கள்//
அவர் வேலைக்குச் செல்லாததால் நானும் அனாவசியமாக வீட்டு வேலைக்குள் வர வேண்டாம் என்கிறார் தங்கமணி
//அவங்க சொன்னாலும் நீங்க ஹெல்ப் பண்ணுங்க. வீட்டுல இருக்கறவங்க வேலைக்கு ஓய்வே கிடையாது//
மங்களூர் சிவா,
ஈயம், பித்தாளை பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது நமது தினசரிக்கு ஆகாது.
உங்களுக்கும், உங்கள் எதிர்கால மனைவிக்கும் எது சரி என்று தோன்றுகிறதோ அதனை செய்யுங்க.
இந்த பதிவுகளில் எழுதியிருப்பது போல, முதல் 5-6 வயது வரை குழந்தைகளூக்கு அம்மா என்ற உலகம் மிக முக்கியமாக, அது மட்டுமே உலகமாக இருப்பதை என் வீட்டில் பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்பை தாய்-தந்தையராக நாம் தருகிறோமா என்று யோசித்தால் சரியான முடிவினை எடுக்கலாம்.
மதுரையம்பதி
உங்க கமெண்டுக்கு ட்ரிபில் ரிப்பீட்ட்டூ
வாங்க இம்சை,
பெண் தாயாக எத்தனையோ தியாகம் செய்கிறாள். வயிற்றில் பிள்ளையை சுமக்கும் போது, பெற்ற பிறகு என் பட்டியல் நீளம். அதில் தன் கெரியர் தியாகமும் ஒன்று. நானும் அதனாலேயே பார்த்திருந்த வேலையை விட்டேன்.
இது கணவன் மனைவி இருவரும் பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
அடுத்தவங்க ஆலோசனை இதில் எடுபடாது.
அம்மாவிற்கு பதில் அப்பா பார்ட் டைம் வேலை பார்த்தால் என்ன, ஏன் குழந்தை அம்மாவிடம் மட்டும் தான் வளரவேண்டுமா.
கருத்து நல்லா இருக்கு இம்சை,
நடைமுறைக்கு சாத்தியப் படுமா? ஆனாலும் ஒரு மாற்றுக் கருத்து. தாயன்புக்கு ஈடே இல்லை. ஆண் உண்மையான தாயுமானவன் ஆக முடியுமா என்பது கேள்விக்குறி.
@இம்சை
ரெண்டு பேரும் உக்காந்து பேசி ஒரு முடிவு பண்ணிக்கங்க!
என்னை பொருத்தவரை மிசஸை வேலைக்கு போகவேணாம்னு சொல்லுங்க
இப்பிடி சொல்லறதால புதுகை தென்றல் சண்டைக்கு வருவாங்க பரவால்ல வரட்டும்!!
இம்சை
ரெண்டு பேரும் உக்காந்து பேசி ஒரு முடிவு பண்ணிக்கங்க!
என்னை பொருத்தவரை மிசஸை வேலைக்கு போகவேணாம்னு சொல்லுங்க
இப்பிடி சொல்லறதால புதுகை தென்றல் சண்டைக்கு வருவாங்க பரவால்ல வரட்டும்!!
சிவா,
நான் ஏன் சண்டைக்கு வற்ரேன். நானும் மும்பையில் பாத்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டேன். என்னுடைய பின்னுட்டங்களை சரியா இன்னொருமுறை படிங்க.
உங்க கருத்தும் சரி. பேசி முடிவு எடுக்க வேண்டியது கணவன் - மனைவிதான்.
ம்ம்ம் உக்கார்ந்து பேசலாம் , ஆனால் அவர்கள் எனக்காக சிங்கப்பூரில் 4 வருடம் பார்த்து வந்த பெர்மனட் வேலையை உதறி விட்டு இங்கு வந்து என்னை திருமணம் செய்தார்கள், எனக்காக அவங்க அப்பா, அம்மா விருப்பம் இல்லாத போதும் என்னை திருமணம் செய்தாங்க. (இப்போ அவருடைய பெற்றோர் சரியாயிட்டாங்க).
இதற்கு மேலும் நான் என்ன செய்ய சொல்ல முடியும்
பேரன்ட்ஸ் கிளப் said...
வாங்க இம்சை,
பெண் தாயாக எத்தனையோ தியாகம் செய்கிறாள். வயிற்றில் பிள்ளையை சுமக்கும் போது, பெற்ற பிறகு என் பட்டியல் நீளம். அதில் தன் கெரியர் தியாகமும் ஒன்று.
அவர்கள் ஏற்கனவே நிறையா தியாகம் செய்துட்டாங்க, இனிமேலும் எப்படி செய்ய சொல்லமுடியும். அது மட்டும் இல்லை அவங்களுக்கு வேலையில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைத்து இருக்காங்க.
@ இம்சை
Career என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு. அடிப்படை தேவைகள் பாதுகாப்பிற்கு வங்கியில் ஓரளவு பணம் இருந்தாலே சிறப்பாக வாழலாம்.
அனில் அம்பானியிடம் கேட்டாலுமே நான் சம்பாதிக்கிறது பத்தாது என்றுதான் சொல்லுவார்.
அதை அவரவர் உணர்ந்தால்தான் உண்டு.
பேரன்ட்ஸ் கிளப் said...
அம்மாவிற்கு பதில் அப்பா பார்ட் டைம் வேலை பார்த்தால் என்ன, ஏன் குழந்தை அம்மாவிடம் மட்டும் தான் வளரவேண்டுமா.
கருத்து நல்லா இருக்கு இம்சை,
நடைமுறைக்கு சாத்தியப் படுமா? ஆனாலும் ஒரு மாற்றுக் கருத்து. தாயன்புக்கு ஈடே இல்லை. ஆண் உண்மையான தாயுமானவன் ஆக முடியுமா என்பது கேள்விக்குறி.
ஏன் முடியாது ஏன்று சொல்லறிங்க, நடை முறைக்கு ஏன் சாத்திய படாது...
//
இம்சை said...
ஏன் முடியாது ஏன்று சொல்லறிங்க, நடை முறைக்கு ஏன் சாத்திய படாது...
//
கண்டிப்பாக முடியும் வெங்கட் என் நண்பர் ஒருவர் மனைவி தவறிவிட்டார் அவர் மறுதிருமணம் செய்யாமல் தன் மகனை வளர்த்துவருகிறார் எல்லா விதத்திலும் சிறப்பாகவே அந்த குட்டி பையனுக்கு வயது மூன்று.
//
மதுரையம்பதி said...
மங்களூர் சிவா,
ஈயம், பித்தாளை பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது நமது தினசரிக்கு ஆகாது.
//
//
பேரன்ட்ஸ் கிளப் said...
மங்களூர் சிவா,
ஈயம், பித்தாளை பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது நமது தினசரிக்கு ஆகாது.
உங்களுக்கும், உங்கள் எதிர்கால மனைவிக்கும் எது சரி என்று தோன்றுகிறதோ அதனை செய்யுங்க.
இந்த பதிவுகளில் எழுதியிருப்பது போல, முதல் 5-6 வயது வரை குழந்தைகளூக்கு அம்மா என்ற உலகம் மிக முக்கியமாக, அது மட்டுமே உலகமாக இருப்பதை என் வீட்டில் பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்பை தாய்-தந்தையராக நாம் தருகிறோமா என்று யோசித்தால் சரியான முடிவினை எடுக்கலாம்.
மதுரையம்பதி
உங்க கமெண்டுக்கு ட்ரிபில் ரிப்பீட்ட்டூ
//
அதனாலதானுங்க கல்யாணத்துக்கப்புறம் உக்காந்து பேசறத விட கல்யாணத்துக்கு முன்னாடியே நின்னுகிட்டாவது பேசிறாலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
நன்றி
எங்க வூட்டுக்காரம்மா வேலைக்குப் போகமுடியாதுன்னு சொல்லிட்டு கொழந்தைங்களப் பாத்துகிறாங்க. எனக்கும் அதான் சரின்னு படுது. ஆனாலும், இது ஒவ்வொரு தம்பதியினரைப் பொறுத்து/எதற்கு முக்கியத்துவம் என்பதைப் பொறுத்து மாறும்.
பொதுவா, கொழந்தைங்க பள்ளி செல்லும் வயதுவரை, யாராவது ஒரு பெற்றோர் கூட இருப்பது மிக முக்கியம். என்னைப் பொறுத்தவரை!
மங்களூர் சிவா,
நல்ல விஷயம்தான். வூட்டம்மணி அதுக்குத் தயாரான்னு பாத்து செலக்ட் பண்ணுங்க!
அவர்கள் ஏற்கனவே நிறையா தியாகம் செய்துட்டாங்க, இனிமேலும் எப்படி செய்ய சொல்லமுடியும். அது மட்டும் இல்லை அவங்களுக்கு வேலையில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைத்து இருக்காங்க.
சாதிக்கச் சொல்லுங்க. நீங்க பிள்ளையை கவனமா பக்கத்தில இருந்து பாருங்க.
பல வீடுகளில் தாய் கவனமா பார்த்துக்கொள்வதனால் தான் ஆண்கள் சாதிக்க முடிகிறது. இது நான் மட்டும் சொல்லவில்லை.
நடிகர் சிவக்குமார் கூட தன் பையோகிராபியில் சொல்லியிருக்கிறார்,
நீங்க விதிவிலக்க இருந்து behind a every successful women there is a women அப்படின்னு சொல்ற மாதிரி இருங்க
பாடகி சுதா ரகுநாதன் குடும்பத்திலும் இப்படித்தானாம். ரகுநாதன் தான் குழந்தைகளை பொறுப்பாக பார்த்துக்கொள்கிறாராம்.
இப்படி பட்ட ஆண்களுக்கு பாராட்டு அல்ல பட்டமே தரனும்
ஏன் முடியாது ஏன்று சொல்லறிங்க, நடை முறைக்கு ஏன் சாத்திய படாது...
நீங்க கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கறீங்க. வாழ்த்துக்கள்
மத்தவங்க அப்படி இருக்க மாட்டங்களே!
அதனாலதானுங்க கல்யாணத்துக்கப்புறம் உக்காந்து பேசறத விட கல்யாணத்துக்கு முன்னாடியே நின்னுகிட்டாவது பேசிறாலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.
உங்களுக்கு exposure கிடைக்குது. எங்களுக்கு கிடைக்கல.
//
நீங்க விதிவிலக்க இருந்து behind a every successful women there is a women அப்படின்னு சொல்ற மாதிரி இருங்க
//
கரெக்சன்
behind a every successful women there is a man
அப்பிடின்னு சொல்ல வந்து!! அங்கயும் women னு சொல்லீட்டீங்க
வாங்க தஞ்சாவூர்காரன்
நீங்க சொல்றது சரி. இதோ என் தம்பிக்கு வேலைக்குப் போகாத பொண்ணாத் தேடறோம். கிடைக்க மாட்டேங்குதே. ரொம்ப கஷ்டம்,
//
தஞ்சாவூரான் said...
மங்களூர் சிவா,
நல்ல விஷயம்தான். வூட்டம்மணி அதுக்குத் தயாரான்னு பாத்து செலக்ட் பண்ணுங்க!
//
நன்றிங்க தஞ்சாவூரான்.
Thanks for the correction shiva,
it should be like this
BEHIND A EVERY SUCCESSFUL WOMEN THERE IS A MAN.
எப்பவும் மாத்தி சொல்லித் தானே பழக்கம் அதாவது behind a succesful men there is a women.
இது தானே நடைமுறையில் இருக்கும் சொலவடை. அதான் தப்பாயிடுச்சி.
<==
மங்களூர் சிவா சொல்ரார்
அதனாலதானுங்க கல்யாணத்துக்கப்புறம் உக்காந்து பேசறத விட கல்யாணத்துக்கு முன்னாடியே நின்னுகிட்டாவது பேசிறாலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ==>
ரொம்ப நேரமா நிக்காதீங்க.கால் வலிக்கும்.தரையிலாவது கொஞ்ச நேரம் உக்காருங்க. =)))
<==
புதுகைத் தென்றல் சொல்ரார்.
it should be like this
BEHIND A EVERY SUCCESSFUL WOMEN THERE IS A MAN.
எப்பவும் மாத்தி சொல்லித் தானே பழக்கம் அதாவது behind a succesful men there is a women.
இது தானே நடைமுறையில் இருக்கும் சொலவடை. அதான் தப்பாயிடுச்சி.
==>
இதுக்குதான் எல்லாத்துக்கும் copy-paste பண்ணக்கூடாதுன்னு சொல்ரது.
இதுக்குதான் எல்லாத்துக்கும் copy-paste பண்ணக்கூடாதுன்னு சொல்ரது.
vaanga saamanyan,
copy-paste பண்ணல. படிச்சது மனசுல இருந்தது அதைத் தான் எழுதினேன்.
இங்கேயும் காற்புள்ளி, முக்கால்புள்ளி வைக்காகம்ல் பின்னூட்டம் நேரடியா போட்டதுக்கு வாழ்த்துக்கள்.
@ இம்சை
எதுக்கும் இந்த கதைய ஒரு தரம் படியுங்களேன். நான் வலைச்சரம் தொடுத்தப்ப கொடுத்த லின்க்தான் உண்மை
@இம்சை
//
வீட்டில் பவனை பார்த்துக்கொள்ள காலை 9 முதல் மாலை 7:30 வரை ஒருவர் இருக்கிறார். அவர்கள் அவனை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.
//
எதுக்கும் ஒருதரம் இந்த வீடியோ பாருங்க
VIDEO
//அம்மாவிற்கு பதில் அப்பா பார்ட் டைம் வேலை பார்த்தால் என்ன, ஏன் குழந்தை அம்மாவிடம் மட்டும் தான் வளரவேண்டுமா//
இம்சை, குழந்தைக்கு அம்மாவிடம் கிடைக்கும் செக்யூரிட்டி ஃபீலிங் அப்பாவிடம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
என் பொண்ணு என்மேல எவ்வளவு பிரியமா இருந்தாலும் தூக்கத்துல அவ அம்மாகிட்டத்தான் போய் படுக்கறா.
என்ன பாசத்தை கொட்டினாலும் அம்மாவோட அருகாமையையும் அது தரும் பாதுகாப்பு உணர்வையும் அப்பாவால் தரவே முடியாது.
வேலைக்கு குழந்தையை விட்டுவிட்டு போவது என்றால் அது வேறு.
ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.
குழந்தையின் எதிர்காலத்துக்கு சம்பாதிக்க வேண்டுமென்றால், இப்போ குழந்தையுடனே இருக்க முடியாமல் போவது அதற்கு விலை.
விலை என்ன என்பதையும் அது நமக்கு கட்டுபடியாகுமா என்பதையும் நிர்னயம் செய்வதும் நாம்தான்.
நிலா வயிற்றில் வளர்வதிலிருந்து இப்போது வரை அவள் அருகாமையில் இருக்க நான் கொடுத்த விலை அதிகம் என்பது என் நன்பர்கள் உறவினர்கள் கருத்து.என்னுடைய வியாபார நடவடிக்கையிலிருந்து நிறய மாறிவிட்டேன்தான்.
ஆனால் நான் கொடுத்த விலை ரொம்பவே அற்பம் என்றுதான் இன்று வரை நினைக்கிறேன்.
என்ன வெச்சி ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலயே... நல்ல முடிவு எடுங்க நான் அப்புறம் வரேன்...
பையனுக்கு என்ன இருந்தாலும்,அம்மா அம்மாதான்...
என்னதான் பாசத்தை கொட்டினாலும் அப்பாவால்,அம்மாவை ஈடு
செய்ய முடியாதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து...
உங்க பொருதாளாதாரத் தேவைகள் பிரச்சனையில்லாம இருந்தா
தாய் வேலை வேலைன்னு அலையாம,
பிள்ளைக்கு ஏதோ தூரத்து உறவினர் போன்ற உணர்வை ஊட்டுவதை தவிர்க்கலாம்
அட்லிஸ்ட் உங்க குழந்தைகளின் பர்சனாலிட்டி வடிவமையும் இந்த நேரத்திலாவது
அவர்களோட நிறைய நேரம் செலவிட முயற்ச்சி செய்யுங்கள்...
இதுவும் உங்க எதிர்கால சம்பாதிப்பு தான்...
<==
மங்களூர் சிவா சொல்ரார்.
நான் வேலைக்கு போகாத பொண்ணை கால்யாணம் பண்ணலாம்னு இருக்கேன். ஏன்னுல்லாம் காரணம் இல்லாமலே.
இது சரியா? தப்பா? இல்ல எதாவது ஈயம் பித்தாளையா!?!?
==>
உங்களுடைய தேவைகளைப் பொறுத்துதான் சொல்ல முடியும்.உங்களுக்கு கல்யாணம் பண்ணியவுடன் ரூ.50 லடசத்துக்கு வீடு/ஃளாட் மற்றும் கார் வாங்கணும்னா வேலைக்குப்போன பெண்ணா இருந்தாத்தான் ஓரளவு முடியும்.
வாங்க நந்து
அருமையான கருத்துக்கள். நீங்க சொல்றதுல் நியாயம் இருக்கு.
இந்த பதிவு இம்சைக்கு மாத்திரம் அல்ல. எல்லோருக்கும் தான். அவர் தன்னோட நிலையைச் சொல்லியிருக்கார்.
அன்னையின் அருகாமைக்கு ஈடு இல்லைதான்.
சில இக்கட்டான சமயங்களை உருவாக்கிவிடுகிறான் ஆண்டவன்
<==
அவர் வேலைக்குச் செல்லாததால் நானும் அனாவசியமாக வீட்டு வேலைக்குள் வர வேண்டாம் என்கிறார் தங்கமணி
//அவங்க சொன்னாலும் நீங்க ஹெல்ப் பண்ணுங்க. வீட்டுல இருக்கறவங்க வேலைக்கு ஓய்வே கிடையாது//
==>
உதவி செய்யாம இருக்கறதே ஒரு உதவியா நினைச்சுதான் ர.மணிக்கள் உதவதறது இல்ல =)
//அட்லிஸ்ட் உங்க குழந்தைகளின் பர்சனாலிட்டி வடிவமையும் இந்த நேரத்திலாவது
அவர்களோட நிறைய நேரம் செலவிட முயற்ச்சி செய்யுங்கள்...
இதுவும் உங்க எதிர்கால சம்பாதிப்பு தான்...//
கோல்டன் பாயின்ட் ரசிகன்,
வாழ்த்துக்கள்.
இதுனால மனைவியை வேலைக்கு அனுப்பும் கணவன்களும், வேலைக்குச் செல்லும் மனைவிகளும் குற்றவாளிகள் அல்ல.
தவிர்க்க முடியாத சூழ்நிலைதான்.
வா பவன்,
உன்னை வெச்சா காமெடி பண்ணுவோம் கண்ணா. நல்லதே நடக்கும்னு நம்புவோம்.
<==
பேரன்ட்ஸ் கிளப் சைட்...
வாங்க இம்சை,
பெண் தாயாக எத்தனையோ தியாகம் செய்கிறாள். வயிற்றில் பிள்ளையை சுமக்கும் போது, பெற்ற பிறகு என் பட்டியல் நீளம். அதில் தன் கெரியர் தியாகமும் ஒன்று. நானும் அதனாலேயே பார்த்திருந்த வேலையை விட்டேன்.
==>
சொல்லிட்டீகள்ள.அடுத்த சட்டம் ரெடி.இனிமே,நிறுவனங்கள் ர.மணியின் சம்பளத்தை வங்கியில் செலுத்தும்போது த.மணி கணக்கிலும் அந்தந்த தியாகத்துக்குத் தக்கபடி போட்டுடணும்.கடசியில ர.மணி கணக்கில் ஒண்ணும் மிஞ்சாது. ஏற்க்கனவே நிலைமை அப்படித்தான் இருக்கு.அது சட்டமாவே வந்துரும்.
இது எதுக்குங்க கல்யாணம் பண்ணுவானேன்.கேரியர தியாகம் பண்ணுவானேன்.ஒண்ணுமே புரியலெ.
நீங்களே இப்படிச் சொல்றீங்களே.(இன்ஃபோசிஸ்) சுதா நாராயண மூர்த்தி வேலைக்கு வராமல் வீட்டிலே இருக்கணும்னு முடிவு எடுக்க எவ்ளோ திண்டாடிட்டு இருந்திருப்பாங்க.[நாராயணமூர்த்தியைவிட தான் தான் அவ்வேலைக்கு மிகவும் தகுதியானவர்னு அவங்களே எங்கியோ எழுதியதா ஞாபகம்]
<===
நீங்க விதிவிலக்க இருந்து behind a every successful women there is a women அப்படின்னு சொல்ற மாதிரி இருங்க
பாடகி சுதா ரகுநாதன் குடும்பத்திலும் இப்படித்தானாம். ரகுநாதன் தான் குழந்தைகளை பொறுப்பாக பார்த்துக்கொள்கிறாராம். ==>
அது சரி. ஒரே ஒரு கேள்வி.
அவ்வாறான சுழ்நிலையில், அக்குழந்தையிடம் மற்றவர்கள், "உன் அப்பா எங்கே வேலை பார்க்கிறார்?" என்று கேட்டால் அதற்க்கு "என் அப்பா ஹோம் மேக்கர்/ஹவுஸ் ஹஸ்பண்ட் என்று தைரியாமாக/பெருமையாகச் சொல்ல முடியுமா?
[இந்திய சுழ்நிலையில் உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுமில்ல குடும்ப கௌரவுமாகும்]
சாமான்யன்,
சொல்லிட்டீகள்ள.அடுத்த சட்டம் ரெடி.இனிமே,நிறுவனங்கள் ர.மணியின் சம்பளத்தை வங்கியில் செலுத்தும்போது த.மணி கணக்கிலும் அந்தந்த தியாகத்துக்குத் தக்கபடி போட்டுடணும்.கடசியில ர.மணி கணக்கில் ஒண்ணும் மிஞ்சாது. ஏற்க்கனவே நிலைமை அப்படித்தான் இருக்கு.அது சட்டமாவே வந்துரும்.
இது எதுக்குங்க கல்யாணம் பண்ணுவானேன்//
இதுக்கு பதில் சொல்ல வாய்துடிக்குது. அப்புறம் பெண்ணீயம் பேசுறேன் அது இது என்பீர்கள்.
டாபிக் மாறுவதை நான் விரும்பவில்லை.
பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு என்ன என்பதை அறிந்துகொள்ளும், அறிந்ததை பரிந்துகொள்ளும் முயற்சிதான் இந்த பிளாக்.
எனக்கும் கூட வேலைக்குப் போவது கஷ்டமாக இருந்தது..என் மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க நேரம் வேண்டுமென்பதாலேயே வேலைக்குப் போகவில்லை.
ஆனால், இரண்டு பக்கமும் அழகாகச் சமாளிக்கும் திறமைசாலிகளும் உண்டு. இது அவரவர் தனிப்பட்ட திறனைப் பொறுத்தது.
சமாளிக்கலாம் பாசமலர்,
அழகாக சமாளித்து ரெட்டைக்குதிரைச் சவாரி செய்யலாம்.
ஆனாலும் தாய் அருகில் இல்லாத அந்த கனத்தை குழந்தை உணரத்தான் செய்யும். (அதிலும் 5 வயது வரை)
எங்கள் வீட்டில் பாட்டி இருந்தாலும்
அம்மா அருகில் இல்லையே என்ற நினைப்புத்தான் என்னை வேலையை விட வைத்தது.
நாங்கள் எடுத்த முடிவே சரியான முடிவு :) பொழிலனுக்காக வேலைக்கு டாடா :)
வாழ்த்துக்கள் ஆகாயநதி
Post a Comment