"எங்க ஆபிஸ் ப்யூனோட பையனைப்
பாரு, டாகடருக்கு படிக்கறாப்ல!
ஆனா நீ ஒன்னுத்துக்கும் லாயக்கில்லை.
ராஜா சர் முத்தையா செட்டியார் வீட்டுல கூட
இப்படி வசதி இருக்காது! தெரிஞ்சுக்கோ!
உனக்கெல்லாம் நான் செஞ்சு கொடுத்திருக்கற
வசதிகளை நினைச்சுப்பாரு! வெளியில போனா
என் அருமை தெரியும்” என்று சொன்ன
அப்பாவை வெறுப்புடன் பார்த்தேன்.
காரணம் அப்பா ஆபீஸ் ப்யூன் செல்லையா
படிப்பு வராத தனது பெரிய மகனுக்காக
ஆபீஸுக்கு எதிரிலேயே டீக்கடை
வைத்துக்கொண்டு, சின்ன மகனை
டாக்டருக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி
எழுந்து விட்டேன்,” பதில் பேசுவதா
நினைக்காதீங்க அப்பா! உங்க கிட்ட
ரொம்ப நாளாவே பேசணும்னு நினைச்சு
அடக்கி வெச்சு கிட்டு இருந்தேன். இந்த
டயலாக்கை 1 லட்சம் தடவ சொல்லியிருப்பீங்க.
அப்படி என்னப்பா ஊருல இல்லாத வசதியை
செஞ்சு கொடுத்துட்டீங்க?” என்றேன்.
அப்பா ஒரு அரசு அதிகாரி. ஆனால்
சம்பாதிக்கும் காசை சேமிக்காமல்
செலவழிக்கும் மிகப் பெரிய செ
செலவாளி.
15 தேதிக்கு மேல் குடும்பம் நடத்த
அம்மா படும் பாட்டை நானறிவேன்.
அப்பா கோபம் கொண்டு பெரிதாக
கத்தினார். "உங்களுக்காகத்தான்
ஓடா தேயுறேன்! என்னிய பாத்து
என்ன செஞ்சீங்கன்னு நாக்குல நரம்பில்லாம
கேக்குறியா?” என்று அடிக்க கை ஓங்கி வந்தார்.
அம்மா வந்து அடியை தாங்கிக்கொண்டாள்.
அப்பா கொஞ்சம் அடங்கினார். 1 சொம்பு
தண்ணியை அவர் கையில் வைத்தேன்.
வாங்கிக் குடித்தார்.
“நான் சொல்வதில் கோபம் தான் வரும்
அப்பா! ஆனா உங்க ஆபிஸ் ப்யூன் தன்
மகனை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார்.
நான் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன்.
+2 முடித்ததும் சயன்ஸ் குரூப் எடுத்து
படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
என் மார்க்குக்கு ஈஸியா சீட்டு கிடைத்தும்
டாக்டருக்கு படிக்க வைக்க முடியாதுன்னு
சொல்லி vocational group படிச்சிட்டு
இன்னைக்கு பி.காம் படிச்சுகிட்டு இருக்கேன்.
உங்க ஆபிஸ் ப்யூன் பையன் இப்ப
டாக்டருக்கு படிச்சு கிட்டு இருக்காப்ல.
அவரை விட பலமடங்கு பெரிய போஸ்ட்ல
இருக்குற உங்க பையன் நான் திறமை இருந்தும்
உங்களால இப்படி இருக்கேன்.
வருசத்துக்கு 2 ட்ரெஸ் எடுத்து கொடுக்கறீங்க.
சாப்பாடு 3 வேளையும் சாப்பிடறோம். ஆனா
அதுல பல நாள் வெஞ்சனம் கூட இல்லாம
வெறும் சோறு மட்டும் தான் இருக்கும்.
செய்யுற கறி உங்களுக்கு மட்டும் தான்
அம்மா கொடுப்பாங்க. உங்களை விட
வீட்டோட நிலமை எனக்கு நல்லாவே
தெரியும். அதை விட உங்களைபத்தி
ரொம்ப நல்லாவே தெரியும்.
ப்யூன் செல்லையா தன் பசங்களுக்கு
ஒவ்வொரு பண்டிகைக்கும் ட்ரெஸ்
எடுத்து தர்றாரு. வருசத்துக்கு ஒருதடவை
குடும்பத்துல எல்லோரும் சேர்ந்து
சுற்றுலா போயிட்டு வர்றாங்க.
உங்களுக்கு எல்.டீ.ஸின்னு ஒன்னு
இருக்கு. ஆனா நாம ஒரு நாளாவது
ஏதாவது ஊருக்கு போயிருக்கோம்னு
சொல்லுங்க பாப்போம்.
உங்க ஆபீஸ் ப்யூன் கூட ஜம்பமா
டீ.வீ.ஏஸ் 50ல் ஆபிஸுக்கு வர்றப்போ
நீங்க நடராஜா சர்வீஸுதான்.
ஆபிசில் ப்யூன் கூட வீட்டுக்கு
போயிடுவாரு. ஆனா நீங்க மட்டும்
அங்கயே உட்கார்ந்து இருப்பீங்க.
அதுக்கப்புறம் உங்க ஃப்ரண்ட்ஸ்
கூட வெளியே போய் சீட்டாடறது,
தண்ணின்னு முடிச்சு நீங்க வீட்டுக்கு
வரும்போது அர்த்தஜாமம்தான்.
நேரத்துக்கு வீட்டுக்கு வந்தோம், பையனோட
கொஞ்ச நேரம் பேசுவோம், எங்கயாவது
வெளிய தெருவுல கூட்டிகிட்டு போவோம்னு
உண்டா?
ஊதாரித்தனமா செலவு செய்துட்டு
சொந்த பையனோட வாழ்க்கையை
நசுக்கிட்டீங்க.
வள்ளுவர் உங்களை மாதிரி அப்பாக்களுக்காகத்தான்
ஒரு திருக்குறள் சொல்லியிருக்கிறார்.
தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல் - என்பதுதான்
அந்தக் திருக்குறள்.
இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?
ஒரு அப்பா தன் மகனுக்கு செய்யும் உதவி
என்ன தெரியுமா? படிச்சவங்க இருக்குற
இடத்தில் எல்லாம் தெரிஞ்ச அறிஞனா
தன் மகனை ஆக்கறதுதான். தெரிஞ்சுக்கோங்க
என்று சொன்னேன்.
அப்பா வெகுநேரத்திற்கு தலையை தொங்க
போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.
**************************************
”இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.
ஈரடியில் என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்
கருத்துக்களை சொன்னவர் திருவள்ளுவர்.
அப்பெரியவர் சொன்ன திருக்குறள்களின்
கருத்துக்களை கதையாக வடிக்க
நானழைப்பது.
1.ஜீவ்ஸ்
2.கயல்விழி முத்துலட்சுமி
3. அப்துல்லா
விதிமுறைகள்:
கதை குறளின் பொருளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
எந்த அதிகாரத்திலிருந்தும் இருக்கலாம்.
3 பேரை எழுத அழைக்க வேண்டும்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
31 comments:
அட்டகாசமா ஆரம்பிச்சிட்டீங்க.. பாக்கலாம் மத்தவங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னு.. :))
நல்லா இருக்கு. ஆனா இந்த கதையே வேற மாதிரி பாக்குறேன் நான்:
"இப்படி பொறுப்பில்லாத அப்பாவுக்கு பையனா பிறந்தும், நான் வெறியோட படிச்சு, நல்ல மார்க் எடுத்து, கேம்பஸ்ல செலக்ட் ஆகி இன்னிக்கு நல்ல வேலையில இருக்கேன். நீங்க பண்ண தப்பை நான் சத்யமா பண்ண மாட்டேன் அப்பா. உங்க பேரனுக்கு/பேத்திக்கு ஒரு நல்ல தகப்பனா இருக்க போறேன். ஏன்னா
"மகன் தந்தைக்காற்றும் உதவி அவன் தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல். (குறளுல தப்பு இருந்தா வலிக்காம குட்டி திருந்துங்க பா)
இதை கேட்டதும் அப்பாவின் தலை அவமானத்தால் ஒரு நொடி தலை கவிழ்ந்தாலும், பெருமிதத்தால் மீண்டும் நிமிர்ந்தது.
கதைய கூட பாஸிடிவ்வா சொல்வோமே! என்ன சொல்றீங்க புதுகை அக்கா? :))
அட்டகாசமா ஆரம்பிச்சிட்டீங்க.. //
நன்றி வெண்பூ.
வலையுலக வரலாற்றுலயோ மிக அருமையான தொடர் விளையாட்டை ஆரம்பிச்சுருக்கீங்க அக்கா. இதை கட்டாயம் எல்லாரையும் செய்ய வைச்சு எல்லா குறளுக்கும் ஒரு ஒரு கதை என்னும் விதமா எழுத வைச்சா, அதை அப்படியே தொகுத்து வடிவில் புத்தகமா வெளியிடலாம்.
நீங்க எடுத்துக்கிட்ட குறளும், அதை எளிமையா விளக்குன விதமும் மிக அருமை.
இப்படி ஒரு 1330 கதை உருவான அருமையான புத்தகமா தொகுக்கலாம்.
குறளுக்காக கதையா அல்லது கதைக்காக குறளா என்ற கேள்வி எழ முடியாதபடி அருமையாக வந்துள்ளது.
//இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.//
அற்புதம் தென்றல்.
தொடரப் போகும் மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்.
பி.கு: அடுத்து என்னை tag பண்ணும் ஐடியா இருக்கா? ஹிஹி..வேண்டாங்கோ!இப்போது தொடர் அழைப்புகளைத் தவிர்த்து வரும் நான்.. என்னால் முடியும் எனத் தோன்றினால் யாரும் அழைக்காமலே இணைந்திடலாம் என்ற கொள்கையில் இருக்கும் நான்.. இதை முடிந்தால் கட்டாயம் செய்வேன். அழைக்கப் படுகையில் கமிட்மெண்ட்டாகி விடுகிறது.
அட்டகாசமா ஆரம்பிச்சிட்டீங்க.. பாக்கலாம் மத்தவங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னு.. :))
:p
கதைய கூட பாஸிடிவ்வா சொல்வோமே! என்ன சொல்றீங்க புதுகை அக்கா?//
சொல்லலாம் அம்பி,
ஆனா இங்கே ஒரு குறளுக்கு ஒரு கதை. ஆக நான் எடுத்துக்கொண்ட குறளுக்கு நெகட்டீவா சொன்னாத்தான் அப்பாக்களுக்கு மெசெஜ்.
நீங்க சொல்லியிருக்கிற குறளுக்கு பாசிட்டிவா கதை வரும்.
:))
வலையுலக வரலாற்றுலயோ மிக அருமையான தொடர் விளையாட்டை ஆரம்பிச்சுருக்கீங்க அக்கா.//
எய்தவன் இருக்க அம்பை நோவது இல்லை இல்லை புகழ்வது தவறு.
எய்தது ஜீவ்ஸ் என்பதை இங்கே பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
இதை கட்டாயம் எல்லாரையும் செய்ய வைச்சு எல்லா குறளுக்கும் ஒரு ஒரு கதை என்னும் விதமா எழுத வைச்சா, அதை அப்படியே தொகுத்து வடிவில் புத்தகமா வெளியிடலாம். //
ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே.
கண்டிப்பா செய்வோம்
குறளுக்காக கதையா அல்லது கதைக்காக குறளா என்ற கேள்வி எழ முடியாதபடி அருமையாக வந்துள்ளது.//
பாராட்டும்போது கூட உங்க புலமை வெளிப்படுது பாருங்க அங்க நிக்கறீங்க நீங்க ராமலக்ஷ்மி.
அடுத்து என்னை tag பண்ணும் ஐடியா இருக்கா? //
மன்னிக்கணும் இந்த முறை லிஸ்டில் உங்க பேரு கண்டிப்பா இருக்கு. உங்கள் சாய்ஸ் குறள், நேரம் எல்லாமே. சோ பொறுமையா எழுதுங்க.
(கொஞ்சம் லேட்டா கூப்பிடசொல்றேன்.)
வலையுலக வரலாற்றில் உங்கள் பெயரும் பொறிக்கப்படவேண்டும்.
(உங்க கரையைத் தேடி கதையை படிக்காதவங்களே இல்லையே)
Jeeves said...
அட்டகாசமா ஆரம்பிச்சிட்டீங்க.. பாக்கலாம் மத்தவங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னு.. :))
:p
சூத்ரதாரியே வாங்க.
தென்றல் அறிவுரை சொல்லிட்டே இருக்கீங்கப்பா.. ;)
குட்டீஸுக்கு சமையலுக்கு, கணவர்களுக்கு... இப்ப அப்பாவுக்குமா.. அதுவும் கதையிலே கலக்குங்க.. நன்றிப்பா எழுதறேன் கண்டிப்பா..
ஆமா இது என்ன சீஸன் ?
:)
குறளின் அருமை கதை வடிவினில் விளக்கப் பட்டிருக்கிறது. நன்று நன்று
நல்வாழ்த்துகள்
அன்புடன் ..... சீனா
http://cheenakay.blogspot.com
-------------------------------
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
தென்றல் அறிவுரை சொல்லிட்டே இருக்கீங்கப்பா.. ;)
குட்டீஸுக்கு சமையலுக்கு, கணவர்களுக்கு... இப்ப அப்பாவுக்குமா.. அதுவும் கதையிலே கலக்குங்க.. நன்றிப்பா எழுதறேன் கண்டிப்பா..
///
ரிப்பிட்டேய்ய்ய்ய்!!!!
hai friends,
I'm Vijay from Singapore.
I'm father for 4 month old son.
The posts are very useful. Interested to join with you.
பல அப்பாக்களுக்கு நல்ல குட்டு வைத்திருக்கிறீர்கள்! அம்பியின் வர்ஷனும் நல்லாருக்கு. ரத்தம் சூடாயிருக்கும் போது ஆடாத ஆட்டமாடிவிட்டு முதுமையில் பிள்ளைகளிடம் பாடாய்படும் அப்பாக்களுக்கு இக்கதை ஓர் அபாய மணி!
நல்ல கதை. :-)
VAANGA muthulatchum,
arivurai ellam sollapa, thiruvalluvar solli vachirukaratha en paniyil ellorukum puriya vachen ambututhen.
enna season nu kekkarengala thalaiva?
:)
tag season
thangalin varugaikum paratukum mikka nandri cheena sir
ayilyan unga repeatukum varugaikum mikka nandri
vaanga kadaisi pakkam,
kandipa sekkalam
thangalin varugaikum, pinnutathirukum mikka nandri
சான்ஸே இல்ல மேடம். கலக்கல ஒரு கருத்துக்கதை.
அருமையான கதை அக்கா!
அப்பாக்கள் சிந்திப்பார்களாக...
நான் கதைப் போட்டேன்.
அடுத்து யாருமே தொடரலை :(
வாங்க அம்ரிதவர்ஷிணி அம்மா,
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
வாங்க சுடர்மணி,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஜீவ்ஸ்,
கதை போட்டாச்சா இதோ வந்து பாக்கறேன்.
http://kaladi.blogspot.com/2008/10/blog-post_7927.html
ennoda kathaiyin chutti
Post a Comment