61. மாத நாட்காட்டி (காலண்டர்) ஓன்றை குழந்தைக்கு வழங்குங்கள். அதை பயன்படுத்துவது பற்றி அடிக்கடி விவாதியுங்கள்.
62. செல்லப் பிராணி ஒன்றை வாங்கிக்கொடுத்து, அதை வளர்த்தும் பொறுப்பை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
63. உடந்த பொருட்கள் எல்லாவற்றிற்கும் புது பொருள் வாங்கிக் கொடுக்காதீர்கள். பணத்தின் பெருமையை உணரச் செய்யுங்கள்.
64. இரவில் நடைக்கு (walking) அழைத்துச் செல்லுங்கள். பலவிதமான் ஒலிகளையும், நிலவையும் ரசிக்கச் சொல்லுங்கள். காற்றின் வாசனையை நுகரச் செய்யுங்கள்.
65. மழை பெய்யும்போது கோட் மற்றும் பூட்ஸ் அணிந்து மழையில் விளையாட அனுமதியுங்கல்.
66. செய்யும் வேலைகளில் குழந்தைகளின் முழு மனதும் மற்றும் உடலும் ஈடுபடும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுங்கள்.
67. எல்லாவிதமான் இசைகளையும் கேட்கும் வாய்ப்பை வழங்குங்கள்.
68. பலவிதமான கலைகளைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
69. பலவிதமான தொழில்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
70. பொருட்கட்சி மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் முதலியனவற்றிற்கு அழைத்துச் செல்லுங்கள்.
71. சப்தங்களைப் பற்றி விளக்குங்கள். உதாரணத்திற்கு T என முடியும் வார்த்தை எது என்று கேட்பது.
72. குழந்தைகளின் பொருட்களை வைப்பதற்குத் தேவையான் பெட்டிகள் மற்றும் உயரம் குறைந்த அலமாரி ஆகியவற்றைக் கொடுங்கள்.
73. அழகை ரசிக்கக் கற்றுக் கொடுங்கள். மலர்கள், மரக்கட்டைகள், கற்கள் மற்றும் இயற்கையான பொருட்களை கையில் வைத்துக்கொண்டு வர்ணனை செய்யுங்கள்.
74. குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருட்களை சேகரிக்க் உதவுங்கள்.
75. படம் வரைவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குங்கள். இறுதியில் சுத்தம் செய்வதற்குத் தேவையான பொருட்களையும் வழங்குங்கள்.
In English: Barbara Hacker (http://www.montessori.org/story.php?id=274)
தமிழாக்கம்: மரு. இரா. வே. விசயக்குமார்
vandhaan vadivelan
1 year ago
7 comments:
ஒவ்வொரு யோசனையும் உப்யோகமானது. தொகுப்புக்கு நன்றி விசயக்குமார்.
நல்ல விசயங்கள் விசயகுமார். நன்றி..
அப்துல்லா சார், நீங்க நிறைய்ய parenting tips கொடுத்திருக்கீங்க. ஆனா, முக்கியமான விஷயம் என்னன்னா, சில பேர் இந்த டிப்ஸ்களை படிச்சிட்டு, அந்த எல்லாத்தையும் தன் பிள்ளைகள் மேல் திணிக்க நினைப்பதுதான். எத்தனை பேரண்டிங் டிப்ஸ் படிச்சாலும் அவற்றை ஒரு guide line ஆகா கொள்ள வேணுமே தவிர, அந்த டிப்ஸ்களை வேதமாக கொள்ள கூடாது. காரணம், ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட ஆசா பாசங்கள் கொண்ட, தனித்துவம் கொண்ட, சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்டவர்கள். நம்முடைய குழந்தையை புரிந்து கொண்டு அவர்களின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு பகுத்தறிந்து பேரண்டிங் டிப்ஸ்களை செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் குழந்தையின் வாழ்க்கை நரகமாக மாறிவிடும். அதுமட்டுமில்லை, குழந்தைகளை ஒப்பிடவே கூடாது என்பதை எல்லா பெற்றோரும் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டும்
ராமலஷ்மி, வெண்பூ அவ்ர்களுக்கு நன்றி
செல்விக்கி அவர்களே,
சுருக்கமாக கருத்து சொல்லும்போது சில முரண்பாடுகள் வரும். அத்தகைய முரண்பாடுகளைத்தான் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.
எனது ஆரமப கால பதிவுகளிலிருந்து படித்தால் இன்னும் தெளிவு பிறக்கும்.
உங்கள் கருத்துக்கு இணையான ஒரு கருத்து: எவ்வளவு உன்னதமான் டிப்சாக இருந்தாலும் குழந்தை விரும்பாதபோது செய்யாமல் இருப்பதே உத்தமம்.
செல்வில்கி அவர்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நல்ல பதிவு...நன்றி !!!
Post a Comment