இப்போதெல்லாம் நம்முன் இருக்கும் மிகப்பெரும் சவால் மீட்டிங் த டெட்லைன் தான் இல்லையா அது குடும்பத்திலாகட்டும் இல்லை அலுவல் சம்பந்தமானதாயிருக்கட்டும் அதன் கோணங்களும் விகிதாசாரங்களும் மாறுவதேயில்லை. மாதம் பிறந்தால் மின்சாரக்கட்டணத்தில் இருந்து பால் அட்டை வரை குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்த வேண்டியுள்ளது, இரு பால் உறவுகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நேரம் தவறாமால் செய்யத்தவறினால் அவர்கள் பால் இருக்கும் அக்கறை கேள்விக்குறியாகிறது. அலுவல்கத்திலோ கேட்கவே வேண்டாம், இது போன்ற இன்றியமையாத பண்பை நம் பிள்ளைகளிடத்தில் சிறுவயதில் இருந்து வளர்ப்பது எப்படி என்று ஒரு எண்ண ஓட்டம் வந்ததும் அதற்கு நான் கடைப்படித்த வழி முறைகள் இதுவே.
01. மாதாந்திர சிறுவர் சஞ்சிகைக்கு பணம் கட்டி விட்டு முதல் சில மாதங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு புத்தகம் வந்து விட்டதா என்று அவர்களிடமே விசாரிப்பது. அதன் பலன் அடுத்த மாதத்தில் இருந்து அவனே அந்த தேதிகளில் தாபால் பெட்டிகளில் பார்க்கத்துவங்கிவிட்டான்.
02. அவர்களுக்கு வேண்டிய பேப்பர் பேனா போன்றவைகளை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாங்கித்தருவது என்றும் அந்த குறிப்பிட்ட தேதி வரை இருப்பை கணக்கு வைத்துக்கொள்வதும் பின் தேவைகளைச்சொல்வதும் அவர்கள் பொறுப்பு என்று நடைமுறைப்படுத்தினேன்.
03. கேபிள் காரனுக்கு பணம் தருவதை அவர்கள் பொறுப்பில் கொடுத்தேன். (தவறினாலும் நமக்கேதும் பாதகமில்லை தானே)
இது போல் இன்னும் பலதும் செய்யலாம் உங்கள் அனுபவங்களை/நடைமுறைகளள பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகளும் ஒருவேளை உங்களுக்குப் பயன்படலாம் முயற்சி செய்து பாருங்களேன்.
3 comments:
மிகச் சரியா சொன்னீங்க கிருத்திகா.
நானும் சில பொறுப்புக்களை பிள்ளைகளுகு கொடுத்திருக்கிறேன்.
அவர்களது பாக்கெட்மணியை தானே சென்று வங்கியில் போடுவது.
மாதாமாதம் பட்ஜெட் போட்டு(தனித்தனி கவரில் வைத்துவிடுவேன்) பணத்தை கவரில் வைக்க்கும்போது உடன் இருந்து பார்த்தல்.
என்னால் முடிந்ததை மட்டுமே வாங்குவேன். அதிகம் போனால் தனது பாக்கெட் மணியிலிருந்து தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.
சரியாய் சொன்னீர்கள் புதுகை. இது போன்ற புரிதல்களை ஆரம்பத்திலேயே வளர்ப்பது நல்லது.
நல்ல யோசனை தான்.. நன்றி.
Post a Comment