பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Dec
15

ஒரு மருத்துவர்தான் வைத்தியம் பாக்கணும்.
ஒரு இஞ்சினியர்தான் கட்டடம் கட்டணும்.
இப்படி அந்தத் துறையில் கல்வி கற்றவர்கள்தான்
அந்தந்த வேலையைச் செய்யணும்னு இருக்கு.
ஆனா டீச்சரா யார் வேணும்னாலும் வேலை பார்க்கலாம்.
என்ன கொடுமைங்க இது????

முறையா ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்கள்தான்
ஆசிரியர் வேலைப் பார்க்கணும்னு எந்த தனியார்
பள்ளியிலும் சட்டம் இருப்பதில்லை.

என்ன கொடுமைங்க இது?

B.Sc, M.Sc, B.A. M.A இதோடு B.T, B.Ed
முடிச்சிருந்தாத்தான் அவங்களுக்கு முறையான
பயிற்சி இருக்கறதா அர்த்தம்.

+2 பரிட்சைக்குபிறகு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்
பட்டம் பெற்றிருந்தாலும் ஒத்துக்கலாம்.
மாண்டிசோரி, ப்ரிஸ்கூல் டிப்ளமோ படிச்சிருந்தாலும்
ஒத்துக்கலாம். ஆனா இந்த மாதிரி ஆசிரியப் பயிற்சி
இல்லாதவங்கதான் இப்ப ஆசிரியரா இருக்காங்க.

அதிகமான விடுமுறை, வீட்டு வேலைக்கு பங்கம்
வராத வேலை நேரம் என்பதாலேயே பல பெண்கள்
இந்த வேலைக்கு வருகிறார்கள்.

குறைந்த சம்பளத்திற்காக வருபவர்களை விடாமல்
எடுத்துக்கொள்கிறது நிர்வாகம். இவர்கள் செய்யும்
தவறுகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

"படிச்சிட்டு சும்மா உக்காந்திருக்க முடியாது
பாருங்க, அதனால் ஏதாவது ஸ்கூலில்
டீச்சர் வேலைகாவது போகலாம்னு இருக்கேன்"
என்று சொல்பவர்கள் அதிகம்.
போலி டாக்டர் கிட்ட மருத்துவம் பாத்துக்குவாங்களா?
போலி டீச்சர்னு சொல்ல மாட்டேன், முறையான
பயிற்ச்சி இல்லாதவங்க எப்படி டீச்சர் ஆகலாம்?

பல ப்ரபலமான பள்ளிகளில் கூட பாருங்கள்.
நிலமை இதுதான். பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான்.
அரசாங்கமும் கண்டுகொள்ளப்போவதில்லை.
பெரிய பள்ளியில் இடம் கிடைத்தால் போதும்
என்று நினைக்கும் பெற்றோர்களும் இதைப் பற்றி
கவலைப்படுவதில்லை.

. ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்தான்
ஆசிரியராக ஆக்கவேண்டும் என அனைத்து பள்ளிகளும்
சட்டம் போட வைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்? வாங்க வந்து உங்க கருத்துக்களைச்
சொல்லுங்க.

*********************************************
ஆசிரியர் என்பவர் யார்?


ஒரு ஆசிரியர் பிள்ளைகளின் உணர்ச்சிகளுக்கு
மதிப்பளிப்பவராக, ஊக்குவிப்பவராக
பலதரப்பட்ட பயிற்சிகளை வகுப்பறையில்
அளிப்பவராக, தனக்குத் தெரிந்தது போதும்
என்று இராமல் தன்னை அப்டேட் செய்துகொள்பவராக,
இருக்கவேண்டும்.

ஒரு ஆசிரியராக அவர் கற்கவேண்டியதற்கு முடிவே
இல்லை எனலாம். LEARN WHILE YOU TEACH இதுதான்
ஆசிரியர் பயிற்சியில் கற்றுக்கொள்ளும் முக்கியமான
பாடம்.


ஆசிரியரின் பேச்சு, நடவடிக்கை, உடை,
உச்சரிப்பு, இவை பிள்ளைகளை பாதிக்கும்.

அன்றாட வகுப்பிற்கு பிறகு ஒரு ஆசிரியை
தன்னைத் தான் கேட்டுக்கொ்ள்ள வேண்டிய
கேள்விகள் இவை.

1. இன்றைய வகுப்பு வெற்றிகரமாக இருந்ததா?
2. எனது மாணவர்கள் கற்றது என்ன?
3. வகுப்பு நேரத்தை உபயோகமாக செல்வழித்தேனா?


A VALUABLE THOUGHT FOR ALL TEACHERS



One day I would like to teach
Just a few people
Many and beautiful things,
That would help them,
When they will one day
Teach a few people.


இந்தப் பதிவிற்கு தமிழ்மணத்தில் ஓட்டு போடுவீங்கன்னு
எனக்குத் தெரியும். போட்டவங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

35 comments:

எனக்கும் இந்த கோவம் ரொம்ப நாளா இருக்கு...

வாங்க நிஜமா நல்லவன்,

/முறையா ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்கள்தான்
ஆசிரியர் வேலைப் பார்க்கணும்னு எந்த தனியார்
பள்ளியிலும் சட்டம் இருப்பதில்லை./

முறையான பயிற்சி பெற்றவர்களில் கூட பலர் ஏதோ கடமைக்கு மட்டுமே வேலைக்கு போய் வருகின்றனர். இதுக்கு என்ன செய்றது?

தனக்கு பதவி உயர்வு கிடைத்ததற்கு பள்ளியிலேயே 'தண்ணி' பார்ட்டி கொண்டாடுறாங்க....வெளியில தெரிஞ்சா மட்டும் நடவடிக்கை எடுக்குறாங்க....இதுக்கு என்ன பண்ணலாம்?

முறையான பயிற்சி பெற்றவர்களில் கூட பலர் ஏதோ கடமைக்கு மட்டுமே வேலைக்கு போய் வருகின்றனர். இதுக்கு என்ன செய்றது?//

டாக்டர் வைத்தியம் பார்க்கறது சரியில்லைன்னா அவங்க கிட்ட போவோமா?

அந்த மாதிரி இப்படி பட்ட ஆசிரியர்களை நீக்க போராடணும்.

பள்ளியிலேயே 'தண்ணி' பார்ட்டி கொண்டாடுறாங்க..//

காலக்கொடுமைன்னு சொல்வது தவிற வேறென்ன சொல்வதுன்னு தெரியலை.

எனக்கும் இந்த கோபம் ரொம்பநாளா கோபமாவே இருக்கு !


//முறையான பயிற்சி பெற்றவர்களில் கூட பலர் ஏதோ கடமைக்கு மட்டுமே வேலைக்கு போய் வருகின்றனர். இதுக்கு என்ன செய்றது?///

கடமைக்குத்தானே போறாங்க?!

// நிஜமா நல்லவன் said...

தனக்கு பதவி உயர்வு கிடைத்ததற்கு பள்ளியிலேயே 'தண்ணி' பார்ட்டி கொண்டாடுறாங்க....வெளியில தெரிஞ்சா மட்டும் நடவடிக்கை எடுக்குறாங்க....இதுக்கு என்ன பண்ணலாம்//


இது ரொம்ப தப்புங்க! :(((

முறையான பயிற்சி இல்லாதவர்களை பற்றியதாக உங்கள் பதிவு இருந்தாலும்....முறையான பயிற்சி பெற்றவர்களை பற்றியே நிறைய பேசவேண்டி இருக்கிறது....எதிர்கால சமுதாயம் ஆசிரியர்கள் கையில் இருப்பதால் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாதவர்கள் ஆசிரியர் வேலைக்கு வராமல் இருந்தாலே போதுமானது...:)

நியாயமான கேள்வி!

நியாயமான கோபம்!

இதே போல அரசியல் போன்ற துறைகளிலும் கோபம் கொள்ள வேண்டும், நாம் :)

இதுல மறுப்பக்கம் ஒன்னு இருக்கு, அதை பாத்தீங்களா?

கேள்வியா கேட்குறேன்

முறையான பயிற்சி பெற்று அரசினர் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களிடம் படிக்கும் மாணவர்களின் வெற்றி % யும் இது போன்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வெற்றி % யும் எடுத்து பார்த்தால் உங்களால் எந்த முடிவுக்கு வர முடிகிறது?

தனியார் பள்ளிகளில் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்று தெரிந்தும் அங்கே அலை மோதும் கூட்டம் ஏன்? அனைத்து பயிற்சிகளையும் பெற்ற ஆசிரியர்கள் கொண்ட அரசு பள்ளிகள் திறந்து கிடப்பது ஏன்?

முறையான பயிற்சி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. முறையாகவும் ஆர்வமுடனும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் வேண்டும் என்பது தான் இன்றைய தேவை. இந்த தேவை தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் அதிகமாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.

நிஜமா நல்லவன் said...
//எதிர்கால சமுதாயம் ஆசிரியர்கள் கையில் இருப்பதால் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாதவர்கள் ஆசிரியர் வேலைக்கு வராமல் இருந்தாலே போதுமானது...:)//

மிகச் சரியாக கூறியிருக்கிறார். நீங்கள் சொல்வது போல பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்கிற சட்டம் கொண்டு வரலாம். அதையும் தாண்டி அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் செயல் படுகிறார்களா என்பதைப் பள்ளி நிர்வாகம் கண்காணித்து, இல்லையெனத் தெரிந்தால் களையெடுக்க வேண்டும்.

முறையான பயிற்சி பெற்றவர்களை பற்றியே நிறைய பேசவேண்டி இருக்கிறது..//

:(((((((

..எதிர்கால சமுதாயம் ஆசிரியர்கள் கையில் இருப்பதால் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாதவர்கள் ஆசிரியர் வேலைக்கு வராமல் இருந்தாலே போதுமானது...//

எனது விருப்பமும் அதான்.

வெற்றி % யும்//

இந்த வெற்றி என்பதை பற்றியும் பேச்வேண்டும்.

எது வெற்றி அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதுதான் வெற்றி என்றால் நான் அதை வெற்றி என்றே சொல்ல மாட்டேன்.

மனனம் செய்து எழுதி அதிக மதிப்பெண் பெற்றவனை விட அந்தப் பாடத்தைப் புரிந்து பதில் எழுதி 50 மதிப்பெண் பெற்றிந்தாலும் அந்த மாணவன் தான் வெற்றி பெற்றவன் என்பேன்.

ஏனென்றால் பாடத்தைப் புரிந்து கொண்டால்தான் தேர்ச்சி.

தனியார் பள்ளிகளில் முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்று தெரிந்தும் அங்கே அலை மோதும் கூட்டம் ஏன்? அனைத்து பயிற்சிகளையும் பெற்ற ஆசிரியர்கள் கொண்ட அரசு பள்ளிகள் திறந்து கிடப்பது ஏன்?//

நியாயமான கேள்வி. அனைவரும் யோசித்து பார்க்கவேண்டிய கேள்வி

முறையாகவும் ஆர்வமுடனும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் வேண்டும் என்பது தான் இன்றைய தேவை. இந்த தேவை தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் அதிகமாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.//

உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சிவா.

அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் செயல் படுகிறார்களா என்பதைப் பள்ளி நிர்வாகம் கண்காணித்து, இல்லையெனத் தெரிந்தால் களையெடுக்க வேண்டும்.//

இது பாயிண்ட் ராமலக்ஷ்மி.

ஆசிரியராக வேலைக்குச் சென்ற பிறகும் கூட கருத்தரங்குகள், மேல் பயிற்சிகள் ஆசிரியருக்கு வழங்கப்படவேண்டும்.

இதை நிர்வாகம் சரிவர செய்தல் அவசியம்.

//கருத்தரங்குகள், மேல் பயிற்சிகள் ஆசிரியருக்கு வழங்கப்படவேண்டும்.

இதை நிர்வாகம் சரிவர செய்தல் அவசியம்.//

இதுவும் பாயிண்ட் தென்றல்.

அப்படீன்னா நம்மள எல்லாம் கட்டிக் காப்பத்துற அரசியல்வாதீங்களுக்கு!?.....

அப்படீன்னா நம்மள எல்லாம் கட்டிக் காப்பத்துற அரசியல்வாதீங்களுக்கு!?.....//

அனானி,

அதைப்பத்தி பேச எனக்கு விருப்பமில்லை. வீணான நேர விரயம்.

வரவேண்டிய நியாமான கோவம்தான்.

எங்க குடும்பமே வாத்தியார் குடும்பம்தான்.

ரொம்ப கவலையாத்தான் இருக்கு..

/புதுகைத் தென்றல் said...
அப்படீன்னா நம்மள எல்லாம் கட்டிக் காப்பத்துற அரசியல்வாதீங்களுக்கு!?.....//

அனானி,

அதைப்பத்தி பேச எனக்கு விருப்பமில்லை. வீணான நேர விரய//

அவங்கள பத்தி பேசாதீங்கப்பா.. எனக்கு கோவம் கோவமா வரும்.. :))))

எங்க குடும்பமே வாத்தியார் குடும்பம்தான்.//

சேம் பளட்

அவங்கள பத்தி பேசாதீங்கப்பா.. எனக்கு கோவம் கோவமா வரும்.. //

:))))

அட..ஆமா..!
இதை நினைச்சே பாக்கலையே..

ஒரு பதிவே போடற அளவுக்கு மேட்டர் தேறும்போல இருக்கே!
நல்லா யோசிச்சிருக்கீங்க!

தங்களின் ஆதங்கத்தை தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.


//ஆசிரியரின் பேச்சு, நடவடிக்கை, உடை,
உச்சரிப்பு, இவை பிள்ளைகளை பாதிக்கும்.//

ஆசிரியர்களை Role Modelஆக மனதில்வைத்துக்கொள்ளும் மாணவர்கள் அதிகம்.
அதனால், பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தவறான Model ஆகும் ஆபத்து உள்ளது.

ஆசிரியர் பயிற்சி பிளஸ் அர்ப்பணிப்பு இரண்டுமில்லாதவர்களை பள்ளிக்குள்ளேயே சேக்கக்கூடாது.
இக்கால ஆசிரியர்களைப் பற்றி எனக்குப் பெரும் கவலையே உண்டு.
குறிப்பாக மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களைப் பற்றி பத்திரிக்கைகளில் படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது. இவர்களை என்ன செய்வது? நிவாகமும் பாதுகாப்பு கொடுக்கிறதே! என் செய்வது?

அன்பின் புதுகைத்தென்றல்

ஆதங்கம் - கோபம் புரிகிறது. இருப்பினும் ஆசிரியர் பயிற்சி என்பது பயிற்சி எடுத்துப் பட்டம் வாங்குவதிலும் இருக்கலாம் - அனுபவப்பாடம் படித்தும் பெறலாம் - இல்லையா

பட்டம் பெற்ற ஆசிரியர் எல்லாம் புத்திசாலி இல்லை - அனுபவப் பாடம் படித்த ஆசிரியர் எல்லாம் முட்டாளுமில்லை

கண்டிப்பா இது யோசிக்க வேண்டிய விஷயம்தான் இது....

வாங்க சுரேகா,

சீக்கிரம் பதிவு போடுங்க.

பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தவறான Model ஆகும் ஆபத்து உள்ளது.//

ஆமாம் கணிணி தேசம்,

தங்களின் வருகைக்கும் கருத்திர்கும் மிக்க நன்றி

ஆசிரியர் பயிற்சி பிளஸ் அர்ப்பணிப்பு இரண்டுமில்லாதவர்களை பள்ளிக்குள்ளேயே சேக்கக்கூடாது.//

சரியான தீர்ப்பு நானானி.

மிக்க நன்றி.

பட்டம் பெற்ற ஆசிரியர் எல்லாம் புத்திசாலி இல்லை - அனுபவப் பாடம் படித்த ஆசிரியர் எல்லாம் முட்டாளுமில்லை//

ஆமாம் சீனா சார்,

நானானி சொல்லியிருக்கற தீர்ப்பு சரி.

செய்யும் தொழிலில் அக்கறை இல்லாமல் கடனே என்று வேலை செய்பவர்களை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றுதான் தீர்வு.

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

110 வருஷத்துக்கும் மேலா தொடர்ந்து பள்ளிக்கூடம் நடத்துற குடும்பம் உங்களுது. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்