பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.
நன்றி: சங்கமம்
5 comments:
மிக உபயோகமான பதிவுக்கு நன்றி சூர்யா,
பல பெற்றோர்கள் தங்களதுஇயலாமை, கோபத்தை காட்டுவது பிள்ளைகளிடம் தான். அடிப்பது தீர்வாகாது.
அவசியமான இடுகை சூர்யா. பெற்றவர்கள் சிந்திக்க வேண்டும்.
//பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.//
மிகச் சரி. கண்டிப்பு என்பது அடிப்பது அல்ல என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
நன்றி புதுகை & ராமலஷ்மி.
கண்டிப்பு என்பது கண் பார்வையில் இருக்கணும்ன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க...
நல்ல பதிவு.
எங்கோ, எப்போதோ, நான் கேட்டது,
உங்கள் சிறு வயது குழந்தைகளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் துன்பப்படுத்தலாம்,,,,,,,,,,,,,,,,
...... அப்போதுதான், உங்கள் வயதான காலத்தில் உங்களைத் துன்பப்படுத்தும் வழிகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
(இந்த மாதிரி நான் எங்கேயும் கேட்டதில்லையே என்று கூறுபவர்களுக்கு:
நம்ம பொன்மொழிகளை எங்கேயோ கேட்டதுன்னுதான் சொல்லணும், இல்லைனா, யாரும் அதை ஒத்துக்க மாட்டாங்க!)
RIGHT THING AT RIGHT TIME FOR ME.YHANK YOU சூர்யா.
Post a Comment