மதியம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என நினைத்து சமைத்து அனுப்புவேன். ஆனால் வீடு திரும்பும் பிள்ளையின் டப்பாவில் சோறு அப்படியே இருக்கும்.
ஒரு வாய் மட்டும்தான் சாப்பிட்டு இருப்பான். மனம் பதைத்துப்போகும். தினமும் இப்படியே என்றால் என்ன செய்ய? ஒரு நாள் மகனைப் பக்கத்தில் இருத்தி கேட்டபோது கிடைத்த விடயம்
இதுதான்.
சோறு சாப்பிட பிடிக்கவில்லை. ஆறிப்போய் இருகிவிடுகிறது. சோறு சாப்பிட்டு கொண்டிருந்தால் விளையாட நேரம் குறைவாகி விடுகிறாதாம். :(
அன்றுமுதல் மதியம் சோறு கொடுத்தனுப்பாமல் வித்தியாசமாக செய்து கொடுத்தனுப்ப
ஆரம்பித்தேன். மகனின் வயறும், என் மனதும் நிறைந்தது.
Nesessity is the mother of invention என்பது மறுபடியும் உண்மையாகி விட்டது.
வித்தியாசமான, பிள்ளை விரும்பும் சமையல் கற்க ஆரம்பித்தேன். சரி இன்னைக்கு என்ன ரெசிப்பின்னு பார்ப்போம்:
தோசை வகைகள்:
பொதுவாக தோசை ஆறி வரட்டி மாதிரி ஆகிவிடும். மெலிதாக ஊற்றாமல் ஊத்தப்பம் மாதிரி
செய்யலாம்.
1. சின்னச் சின்ன ஊத்தப்பங்கள் ஊற்றி அதில் ஏதாவது ஒரு சட்னி, (தேங்காய்ச் சட்னி தவிர்த்து)வைத்தால் தோசை சாண்ட்விச் ரெடி. (இங்கே தான் நாம் புதினா சட்னி, கொத்துமல்லி சட்னி ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம்)
2. ஊத்தப்பங்களுக்குள் தோசை மிளகாய்ப்பொடி நெய் தடவி கொடுக்கலாம்.
3. ஊத்தப்பத்தில் தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி தழை சேர்த்து, மேலே சீஸ் தூவினால்
"ஹோம் மேட் பிட்சா" ரெடி.
4. தோசையை கட் செய்து, வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ்,, ப.மிள்காய சேர்த்து வதக்கினால், "கொத்து தோசை".
5. நெய் தோசை செய்து அதில் தோசை மிளகாய்ப் பொடி தூவி மடக்கி கொடுக்கலாம்.
6. சட்னியைத்தடவி மடித்து கொடுத்தால், தோசை ரோல் ரெடி.
7. டொமேடோ சாஸ், சில்லி சாஸ் தடவி கொஞ்சம் சீஸ் சேர்துக்க்கொடுக்கலாம்.
8. தோசை மாவில், வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக, மிளகுப்பொடி சேர்த்து கலக்கி
குழிப்பணியாரக் கல்லில் ஊற்றினால், மசாலா பணியாரம் ரெடி.
9. துருவிய கேரட், கோஸ் இவற்றை வதக்கி மாவில் கலக்கி குழிப்பணியாரம் செய்யலாம்.
இந்த தோசை மாவில் alphabet dosa,கடிகார தோசை, பூனை தோசை(டிசைன்ஸ்தான்)
இப்படி விதவிதமா ஊத்தினா கணக்கு வழக்கே இல்லாம சாப்பாடு உள்ள போகும்..
இப்போதைக்கு இதை செய்து பாருங்கள் மேலும் சிலக் குறிப்புகளோடு சந்திக்கிறேன்...
தொடரும்.
புதுகைத்தென்றல்
vandhaan vadivelan
1 year ago
9 comments:
அவ்வ்வ்
இங்க காய்ஞ்சு போய் கெடக்கோம் நல்ல சாப்பாடு கிடைக்காம
தோசை ரோல், ஹோம் மேட் பிட்சான்னுகிட்டு
ஒண்ணும் சொல்றதுக்கில்ல
ஆஹா,
வாங்க சிவா,
ஆஷிஷ் Nesessity is the mother புதுகைத்தென்றல்'s invention
என் ரெசிப்பிக்கள் தான் இன்வென்ஷன்
நிஜமா நல்லவன்.
ம்ம் இப்படி ஒரு அம்மா இல்லாம போயிட்டாங்களே எனக்கு.
நல்ல நல்ல ரெசிபி தான் புதுகை.. ஆனால் நம் பிள்ளைகள் நம்மை விட ஒரு படி மேல்.. எத்தனை விதமாய் தோசை செய்தாலும் அவர்களுக்கென்னமோ அது தோசைதான்.. சமயலரையில் தினம் ஒரு போராட்டம் தான்...
வாங்க கிருத்திகா,
விதவிதமான பெயர்களுடன் கொடுங்கள். இது என் அனுபவம்.
தோசை, இட்லினா சாதரண்மா?
எங்கம்மா விதவிதமாக செஞ்சு
கொடுப்பாங்கன்னு பிள்ளைகளிடம்
பெயர் எடுக்க கொஞ்சம் கஷ்டம் பட்டேன்.
கிருத்திகா சொல்வது போல் போராட்டம்தான்..சாப்பிட வைக்கறது ரொம்பக் கஷ்டம்..
உங்க ரெசிபி எல்லாம் நல்லாருக்கு
ஆகா இந்த மாதிரி அம்மா எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கனும்.
Post a Comment