ஜூஜ்ஜுலூ, அச்சுலு.....
பப்ளிக்குட்டி,
என்ன இதெல்லாம் என்று பார்க்கிறீர்களா?
சின்னக் குழந்தையை அதன் பாஷையில்
கொஞ்சுவதாக நினைத்துக்கொண்டு
நாம் செய்யும் கோமாளித்தனம் தான்.
இதைப் பார்த்து "நீ பேசும் பாஷையே
புரியலையே"! என்பது போல் சிரிக்கும் குழந்தை.
இது மிகத்தவறான ஒன்று. குழந்தையின்
மொழிவளர்ச்சி ஏற்படுவது தன் காதில்
கேட்கும் மொழி, வார்த்தைகளை வைத்துதான்.
பிறந்த குழந்தைக்கு எந்த ஒரு மொழியும் தெரியாது.
வீட்டில் பேசப்படும் மொழியை கணகச்சிதமாக
கற்றுத் தேர்கிறது.
ஆகவே நாம் சரியான முறையில், குழந்தையுடன்
பேசவேண்டும். உச்சரிப்புக்கள் சரியாக இருக்க வேண்டும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்:
எங்கள் வீட்டிற்கு கிராமத்திலிருந்து ஒரு அம்மா
வந்திருந்தார். அவரின் மகளுக்கு பேச முடியாது.
பிறவி ஊமை இல்லையாம். வீட்டில் அனைவரும்
வேலைக்குப் போய்விட, குழந்தையிடம் அமர்ந்து
பேச ஆளில்லை.
வேலை முடித்து வந்த பிறகும் அலுப்பு,
வீட்டு வேலை இவைகளால் பிள்ளையிடம்
உட்கார்ந்து யாரும் பேசவில்லை.
இந்தச் சூழலில் வளர்ந்தக்குழந்தை, மொளனத்தையே
மொழியாக்கிக்கொண்டது. பேசும் திறனை இழந்து
விட்டது. வயது 10 ஆகியும் பேச்சு இல்லை.
அந்தப் பெண்ணை தான் வேலை பார்க்கும்
பள்ளிக்கு அழைத்துச் சென்று, அங்கு பிள்ளைகளுடன்
உட்காரச் செய்தார் என் அம்மா.
6 மாதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
சின்னச் சின்ன வார்த்தைகள் அந்தப் பெண்
உச்சரிக்க தாயின் கண்ணில் கண்ணீர்.
1 வருடத்தில் நன்கு பேசக் கற்றுக்கொண்டாள்
இந்த உண்மைச் சம்பவம் தரும் உண்மை,
குழந்தைக்கு மொழிவளர்ச்சி இன்றியமையாதது.
அதிகமான வார்த்தைகளை பழக்குங்கள்.
சொல்வதை திரும்பச் சொல்லி பழக்க வேண்டும்.
பள்ளி செல்லும் முன்னரே சின்ன சின்னப் பாடல்கள்,
ஸ்லோகங்கள், ஆகியவற்றை சொல்லிக்கொடுக்கலாம்.
இவை மொழியறிவைத்தருவதுடன், ஞாபக சக்தியை
அதிகரிக்கச் செய்கிறது.
vandhaan vadivelan
1 year ago
6 comments:
///ஜூஜ்ஜுலூ, அச்சுலு.....
பப்ளிக்குட்டி,///
இப்படி எல்லாம் என்னை யாரும் கூப்பிடவே இல்லையே?
ரொம்ப யோசிக்க வைக்கிற பதிவு. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உளநிலை புரியாமல் தான் வளர்க்கிறாங்க. இதுல படிச்சவங்க படிக்காதவங்கன்னு வேறுபாடு இல்லை. ஒரே மாதிரிதான். நூற்றுல ஒரு பெற்றோர்தான் குழந்தை வளர்ப்பும் ஒரு கலைங்கிறத முழுமையா உணர்ந்து செயல்படுறாங்க. அந்தக்கால கூட்டு குடும்பத்தில யாராவது ஒருத்தர் மாற்றி ஒருத்தர் எப்பவும் குழந்தை பக்கத்திலேயே இருப்பாங்க. நிறைய விஷயங்களை சொல்லிகொடுப்பாங்க. பேசுவாங்க. இப்ப இருக்கிற நிலைய யோசிச்சு பாருங்க. குழந்தைங்க முக்கால்வாசி நேரம் ஆயா கூடவும் தனியாகவும் தான் வளர்கிறாங்க.
வாங்க நிஜமா நல்லவன்,
நாமல்லாம் குழந்தையா இருந்தப்ப
கொஞ்சலா? அப்படின்னா என்னன்னு கேக்கற மாதிரில்ல வளர்ந்தோம்.
ஆமாம் நிஜமா நல்லவன்,
சரியா சொன்னீங்க.
ஆயா கையால சாப்பிட்டு, ஆயா பேசற பாஷையக் கேட்டுகிட்டு
அவங்களையே தன் தாயா நினைக்கிற குழந்தைகள் தான் இப்ப இருக்காங்க.
குழந்தையா இருக்கப்போ நமக்கு எது வேணுமினு எதிர்பார்க்கிறோமோ அதைப் பெற்றோர் ஆனதும் நாமே செய்வதில்லை..சூழல் மிக முக்கியம்..
வாங்க பாசமலர்,
அருமையாச் சொன்னீங்க
Post a Comment