பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

நாம் குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் இங்கே தர முயன்றிருக்கிறேன். உங்கள் மதிப்புமிக்க விமர்சனத்தை எதிர்நேக்கி,

தவறு.1
கீழே விழுந்த குழந்தையை உடனே சென்று தூக்குவது. உடனே அழுகையை அடக்குவதற்காக ‘இந்த இடம் தானே, தள்ளி விட்டது’ என்று கீழே விழுந்த இடத்தை உதைப்பது அல்லது அடிப்பது.
காரணம்
உடனே தூக்கும் பெற்றோரது குழந்தையே அதிகமாக அழும். அந்த இடத்தை அடிப்பது, தன் தவற்றிற்கு அடுத்தவர்தான் காரணம் என்கிற பழி போடும் மனோபாவத்தை வளர்க்கும்.
தீர்வு
கீழே விழுந்த இடம், விழும்போது ஏற்பட்ட சத்தம் ஆகியவற்றைக்கொண்டு அதிகமாக அடி பட்டிருக்குமா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். குறைவாக அடி பட்டிருக்கும்பட்சத்தில் கண்டுகொள்ளாமல் நம் வேலையை கவனிப்பது நல்லது. அதிகமாக அடி பட்டிருக்கும் என்று உணரும் பட்சத்தில் உதவிக்கு செல்லலாம். அடிபட்ட உடல் பாகத்தை நன்கு தேய்க்க சொல்ல வேண்டும். ‘சிறிது நேரம்தான் வலிக்கும் பிறகு சரியாகிவிடும்’ என்று ஆறுதல் கூறலாம்.

தவறு.2
குழந்தை அடம்பிடித்தால் அப்போதைக்கு பிரச்சினையில் இருந்து விலக கேட்டதை வாங்கிக் கொடுப்பது.
காரணம்
அடம்பிடித்தால் எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்று குழந்தை உணர்ந்துகொள்கிறது. பிறகு எதற்கெடுத்தாலும் அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
தீர்வு
குழந்தை பொருளை முதல் முறை கேட்கும்பொழுதே வாங்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானித்து விட வேண்டும். வாங்க சம்மதமானால் “இன்று இந்த ஒரு பொருள் மட்டும்தான் அல்லது இன்னும் ஒரு பொருள் மட்டும்தான்” என்று சொல்லி விட்டு உடனே வாங்கிக்கொடுத்து விட வேண்டும், வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று தீர்மானித்துவிட்டல் அதற்கான காரணத்தை குழந்தையிடம் விளக்க வேண்டும். ஒரு முறைக்கு இரு முறை விளக்க முயற்சிக்கலாம். அதற்கு மேல் எவ்வளவு அடம் பிடித்தாலும் வாங்கிக்கொடுக்கக் கூடாது. சில நேரங்களில் அழுது வாந்தி எடுக்கும் நிலை வரை கூட அடம் பிடிக்கும்.

தவறு.3
குழந்தைகள் சொல்லும் சிறு சிறு செயல்களையும் குழந்தைதானே கேட்கிறது என்று செய்யாமல் இருப்பது.
காரணம் & தீர்வு
குழந்தைகள் கேட்கும் ஒவ்வொரு சிறு சிறு செயலையும் உடனே செய்யும்போது, குழந்தையும் நாம் சொல்லும்போது உடனே கேட்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதை நாம் மறுத்தால், நாம் சொல்லும்போதும் கேட்கத் தேவையில்லை என்று புரிந்துகொள்கிறது. அவர்கள் கேட்பதில் அதிகம் எளிதாக செய்யக்கூடிய காரியங்களாக இருக்கும். சில நேரங்களில் மட்டும் செய்யவே முடியாத காரியங்களாக இருக்கும். அந்நேரத்தில் ஏன் செய்ய முடியவில்லை என்ற விளக்கமும் கொடுத்து விட வேண்டும். நாம் அதிக தடவை அவர்கள் பேச்சைக் கேட்டுவிடுவதால், சில நேரங்களில் கேட்காமல் இருப்பது அவர்களுக்கு பெரிதாகத் தெரியாது.

6 comments:

கலக்கறீங்களே விசயகுமார்,

நல்ல கருத்துள்ள பதிவு.

விசயகுமார்,

அருமையான உளவியல் சார்ந்த தகவல்கள்.

எங்கள் தமிழ்ப் பெற்றோர்களும் மற்றோர்களும் பிள்ளை வளர்ப்பு சம்பந்தமான உளவியல் விடயங்களில் அறிவு குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

மேலும் எழுதுங்கள்.

அருமையான பதிவு..நல்ல விஷயங்களுடன் மேலும் தொடருங்கள்.

நல்ல அருமையான பதிவு..வாழ்த்துக்கள்... கொஞ்சம் லேட்டா வந்திட்டேன்.

It is very useful for parents to grow up their childrens. We are waiting for more tips on train our childrens. Well done for your tips.

அருமையான பதிவு..நல்ல விஷயங்களுடன் மேலும் தொடருங்கள்.


தங்கள் அனுமதி வேண்டி இந்த பதிவை வலை சரத்தில் இணைத்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_29.html

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்