பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

என்ன எல்லோரும் நலமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்.


கொஞ்சம் பிஸியாகிட்டேன். அதான்.


நீங்களும் பசங்க பரிட்சை, விடுமுறைன்னு பிசியா இருந்திருப்பீங்க.. :)




பிளையின் நூடில்ஸில் என்னென்ன செய்யலாம் அப்படின்னு
பார்ப்போமா?





1. வெஜி நூடில்ஸ்:


தேவையான பொருட்கள்:
ஹக்கா நூடில்ஸ் (பிளையின் நூடில்ஸ்) தேவையான அளவு.
பட்டர், மிளகுத்தூள், (துருவிய கேரட், முட்டை கோஸ்,
வெங்காயத்தாள், பீன்ஸ், மெலிதாக அரிந்தது..)
சோயா சாஸ்.


செய்முறை.
கொதிக்கும் தண்ணீரில் சமைய்ல எண்ணைய் 1 ஸ்பூன்,
உப்பு கொஞ்சம் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும்
சல்லடையில் போட்டு, குளிர்ந்த நீர் ஊற்றி வடிய வைக்கவும்.

வானலியில் பட்டர் போட்டு, காய்கறிகளை சேர்த்து வதக்கி,

வெந்ததும், உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சேர்த்து வெந்த

நூடில்சையும் போட்டு பிரட்டி எடுத்தால் வெஜி நூடில்ஸ்

ரெடி. காய் சாப்பிட அழும் குழந்தையும் அழாமல் இந்த

காய்கறி நூடில்சை சாப்பிட்டு விடும் :)

நூடில்ஸ் மஞ்சூரியன்:

நூடுல்ஸ் 1/2 கப், மைதா 1- ஸ்பூன்,

கார்ன்ஃபிலார் - 1 ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள்,

அஜினோமோட்டோ, சில்லி சாஸ் தேவைக்கேற்ப..

செய்முறை :

வேகவைத்த நூடுல்ஸ் உடன் எல்லாவற்றையும் சேர்த்து

பிசைந்து உருண்டை செய்து நன்கு கிரிச்பியாக பொரித்து

வைத்தால் தட்டில் ஒன்று கூட மிச்சம் இருக்காது.

1.நூடில்ஸ்/ பாஸ்தா இவைகளை மேற்சொன்ன முறையில்

செய்து அசத்தலாம்.

2. மேற்சொன்ன முறையிலேயே செய்து, மிளகுத்தூள், சோயாசாஸ்,

சேர்க்காமல், பாஸ்தா சாஸ் சேர்த்தால் டொமாடோ நூடில்ஸ்.

3. காய்கறிகள் சேர்க்காமல், பாஸ்தா சாஸ் சேர்த்து மேலே

சீஸை துருவி போட்டால் கிரீமி நூடில்ஸ்/பாஸ்தா ரெடி.


5 comments:

///என்ன எல்லோரும் நலமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்.///


ஆமா ரொம்ப நாளாச்சு. இனிமே நிறைய பதிவுகள் வெளிவரும்.சந்தோஷம்.

நீங்க சொல்லுற செய்முறைய படிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்குதே. ஆமா இதெல்லாம் யாரு செஞ்சு கொடுப்பாங்க?

வாங்க நிஜமா நல்லவன்,
இனி நிறைய பதிவுகள் வரும்.

வாங்க புதுகை ரொம்ப நாளாச்சு...

சீனர்களின் உணவில் கலக்கப்படும் அஜினோமோட்டோ உடலுக்கு தீயது, புற்றுநோயை உருவாக்கவல்லது என்பது ஆய்வின் முடிவு. இது வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுகிறது. ஆகவே இனி சமையல் குறிப்பில் அஜினோமோட்டோவை தவிர்ப்பது நலம்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்