பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Jul
24

முந்தைய பதிவுக்கு வாக்குப்பதிவு செய்து
தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துரையில் இடம் பெறச்
செய்தமைக்கு நன்றிகள் பல.

சென்ற பதிவில் சாதாரணமாக நாம் நினைக்கும் கணவன் மனைவி
சண்டை இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதே
என்று பயப்படுகிறீர்களா???

எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம் கையில்தான்.
அப்படின்னு சொல்லியிருந்தேன்.

தீர்வுகளைப் பார்ப்போமா!!

தலைப்பே சொல்லிடுமே. ஆம் காதல்,
அன்பு அதுதான் சரியானத் தீர்வு.
கணவன், மனைவி பரஸ்பரம்
அன்பை பொழிவதைத் தவிர
வேறு வழி இல்லை.




குழந்தையை அந்த அன்பின் பரிசாக
பாருங்கள். அப்போது அன்பு புரியும்.

மிருதுவான குழந்தைகளின் மனதை
மிருதுவாகவே இருக்க என்னென்ன செய்ய
முடியுமோ அத்தனையும் செய்ய வேண்டும்.
குழந்தைப் பருவம் வந்ததும் தெரியாமல்
போனதும் தெரியாமலிருந்தால் மனச்சுமை
அதிகமாகும்.

சின்னக்குழந்தைக்கு மென்மையாகச் சொல்லி
புரிய வைக்க வேண்டும்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் குழந்தைகள்
எதிரில் சண்டையிடுவது கூடாது.தன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டு, நிலைமையை
சமாளிக்க வேண்டும். பிறகு தனி்யாக
அறையில் வைத்துக்கொள்ளலாம் கச்சேரியை.



முடிந்த மட்டில் நம் மன்ச்சோர்வை பிள்ளைகளிடம்
காட்டாமல் இருத்தல் நலம். கணவன் மீதிருக்கும்
கோபத்தை மனைவி பிள்ளையின் காட்டினால்
எப்படி இருக்கும்?? பாவம் குழந்தை.

திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து
கணவன் - மனைவியாகி பிறகு
குழந்தையை பெற்றெடுத்து பெற்றோராவது
மிகப்பெரிய பொறுப்பான விசயம்.

குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது
என்பது அறியக்கலை.

பிரச்சனை எல்லையை மீறுவதாக உணர்ந்தால்
நல்ல மனோதத்துவ நிபுணரை அனுகி
கலந்தாலோசித்தல் நலம்.

நம் நாட்டில் இருக்கும் தவறான எண்ணம்
பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும்.
உடல்நிலை சரியில்லாமல் போனால்
எப்படி மருத்துவரை சென்று பார்க்கிறோமோ
அப்படியே மனநிலையும். Psychiatrist
என்பவர் மனநல மருத்துவர்.

உடல்நலம் போலவே மனநலவும் ஒருவரின்
இயல்பான, சந்தோஷமான வாழ்க்கைக்கு
அவசியம்.

பைத்திய நிலையை அடைந்த வர்களும்
மனதால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்களுக்கு
வைத்தியம் தருகிறார் என்பதற்காக
Psychiatrist அதாவது மனநல மருத்துவரிடம்
செல்வது தவறானது, தன்னைப் பற்றி
தவறான அபிப்ராயம் வந்து விடும் என்று
நினைப்பது தவறு.

தேவையான நேரத்தில் கவுன்சிலிங்
எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர்
குற்றம் சொல்வதை நிறுத்தி பிரச்சனையைத்
தீர்ப்பது எப்படி என்று பார்க்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் ஒழுங்காக
சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்க்கையை
நடத்த இயலாத குற்றத்தின் சுமையை
குழந்தையின் மேல் போடுவது எந்த
விதத்திலும் நியாயமில்லை.


பட்டர்ஃபிளை சூர்யா அவர்களின் இந்தப்
பதிவை கட்டாயம் படியுங்கள்.


கணவன் மனைவி உறவும் குழந்தை
வளர்ப்பும்
இதுவும் படிக்க வேண்டிய ஒன்று



இந்தப் பதிவுக்கு மறக்காமல் தங்களின்
வாக்கைப் பதிந்து செல்லுங்கள்.

தமிலீஷ்


நன்றி

23 comments:

கணவன் மனைவிக்கு இடையில் வரும் சண்டையில் 90 சதவீதம் சுற்றி இருப்பவர்களின் தூண்டுதல்களால் வருது என்பது என்னுடைய அனுபவமா போச்சு.. :(

/ தமிழ் பிரியன் said...

கணவன் மனைவிக்கு இடையில் வரும் சண்டையில் 90 சதவீதம் சுற்றி இருப்பவர்களின் தூண்டுதல்களால் வருது என்பது என்னுடைய அனுபவமா போச்சு.. :(/

Repeattuuuuu::(

தமிழ் பிரியன் சொன்னதை வழிமொழிகிறேன்.

நல்ல பதிவு தென்றல்.

அடுத்த பதிவைப் பார்த்து இங்கே வந்தேன். ஹி, எங்கள் ஆதரவு என்றும் உண்டு என்பதற்கு வாக்கே சாட்சி!

90 சதவீதம் சுற்றி இருப்பவர்களின் தூண்டுதல்களால் வருது //

இது மறுக்க முடியாத உண்மை தமிழ் பிரியன்

நிஜம்ஸ் நீங்களும் ஜமாலும் ரிப்பீட்டு போட்டிருக்கீங்க.

பலரும் மனதினுள் இதைத்தான் நினைசிருப்பாங்க.

இதுக்கு தீர்வு கணவன் மனைவிக்கு இடையே புரிதல்,தன்னலமற்ற அன்பு.

இதைச் சொல்லிக்கொடுத்தது நம் பெரியவர்கள்தான்

அடுத்த பதிவைப் பார்த்து இங்கே வந்தேன். ஹி, எங்கள் ஆதரவு என்றும் உண்டு என்பதற்கு வாக்கே சாட்சி!//

ஹா ஹாஹா

நன்றி ராமலக்‌ஷ்மி

வெறும் திருமணமானவங்களுக்கும் மட்டும்அப்போ எங்களமாதிரி மேரேஜ் ஆகாத இளைஞர்களுக்கு....எதிர்பார்க்கிறோம் அதுக்குதான் வாக்கு......

தீர்வுகள் :)

பயனுள்ள பதிவு.. வேறு அறையில் இருக்கும் என் கணவருக்கு கேட்பதற்காக சத்தமாக பதில் சொன்னாலே, என் மகள் என்னிடம் ஏன் சத்தமா பேசுற என்பாள். பதில் தான் சொன்னேன் என்றால் முகத்தில் ஒரு புன்னகை வரும்.

நான் இனிமேல்தான் காதல் செய்யலாம்னு இருக்கிறேன். செய்யலாங்களா?

ஓகே.. செய்வோம் :-)

வாங்க வசந்த்,

இப்போதைக்கு இந்த பாடங்களை கற்றுக்கொண்டால் திருமணமானதும் ஆனந்தமான வாழ்வுதான்.

வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி மணிநரேன்

ஆமாம் தியானா,

நீங்கள் சொல்லியிருப்பது நிஜம்.

நான் இனிமேல்தான் காதல் செய்யலாம்னு இருக்கிறேன். செய்யலாங்களா?//

கண்டிப்பா செய்யுங்க. தடை ஏதும் இல்லை. திருமணத்திற்கு பிறகும் காதலாய் கசிந்துருகிய வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்

நன்றி பழூர் கார்த்தி

///கணவன் மனைவிக்கு இடையில் வரும் சண்டையில் 90 சதவீதம் சுற்றி இருப்பவர்களின் தூண்டுதல்களால் வருது என்பது என்னுடைய அனுபவமா போச்சு.. ///

நானும் இந்தக் கருத்தை மும்மொழிகிறேன்....

அதிகமாக இப்பொழுது இந்நிகழ்வு தான் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது....

நன்றி புதுகை.

நேற்று கூட “மக்கள் தொலைகாட்சியில்” பெருகி வரும் குடும்ப வழக்குகள் குறித்து ஒரு அலசல் பார்த்தேன்.

பல விஷயங்கள் அதிர்ச்சியாக இருக்கிறது.

நல்ல பகிர்விற்கு நன்றி.

நல்லதொரு பகிர்வு.

ப்ரியங்கள் நிறைந்த என் ஜமால்...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே...பரமகுடியார்களுக்கு என் அன்பையும் தெரிய படுத்துங்கள்...நல்ல பதிவு ஜமால்!

பேரண்ட்ஸ் கிளப்-பில் எப்படி சேர்த்து கொள்வது??

--வித்யா

வருகைக்கு நன்றி வித்யா.

parentsclub08@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மெயிலிடவும்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்