திருமண உறவில் வி்ரிசல் ஏற்பட்டால் அதன் பாதிப்பு
கணவன் மனைவியை விட அவர்களின் குழந்தைக்குத்தான்.
கணவன் மனைவி இருவரும் பிள்ளையின் எதிரில்
சண்டை போடுவது பிள்ளைகளின் மனத்தில் காயத்தை
உண்டாக்கும். இதைப் பார்த்து வளர்ந்த குழந்தைகள்
மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். அவர்களை எப்போதும்
ஒரு சோகம் வாட்டிக்கொண்டே இருக்கும்.
இந்த சூழ்நிலையில் வளரும் சில குழந்தைகள் மூர்க்கத்தன
குணம் உடையவர்களாக இருப்பார்கள். சிலரோ
உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் தன்னுள்ளே
வைத்து வளர்வார்கள். இந்த இரண்டு நி்லையும்
ஆரோக்கியமானதல்ல என்பது வேதனைக்குறிய
விசயம்.
சந்தோஷமான தாம்பத்யம் இல்லாத தம்பதிகளினால்
பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை பார்ப்போம்:
1. பெற்றவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து
மனம் வெதும்பி போயிருக்கும் பிள்ளைகள் அவர்களை
மதிக்க மாட்டார்கள். இதனால் சொற்பேச்சு கேளாமல்
போய்விடுவார்கள்.
2. தனிமையை விரும்பும் குழந்தைகளாகி விடுவார்கள்.
கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்ப்பார்கள். இதனால்
வளர்ந்த பிறகு தனது வேலையில் கூட சரியாக
கவனிக்க முடியாமல் போகும்.
3. பெற்றோர்களின் சண்டைகள், வாக்குவாதங்கள்
பார்த்து பார்த்து தனக்கு யாருமில்லை, தானொரு
அனாதை எனும் எண்ணங்கள் வளர வாய்ப்பிருக்கிறது.
4.புரிந்து கொள்ள முடியாத கலக்கம், மனவருத்தம்,
பயம் அவர்களை ஆட்கொள்கிறது.
5. பார்க்க சந்தோஷமாக இருந்தாலும் உள்ளுக்குள்
வருத்தம், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும்,
தனது நிலையை அடுத்தவர்களுடன் பகிர்ந்து
கொள்ள தயங்கும் மனோபாவம் உடையவர்களாக
வளர்கிறார்கள்.
6. படிப்பில் மந்தமாகும். விளையாட்டு போன்ற
மற்ற விடயங்களை கற்கும் மனநிலை இருக்காது.
7. சி்றந்த திறமைசாலியாக இருந்தும் கூட
வாழ்வில் முன்னேற முடியாமல் போகும்.
8. மற்ற குழந்தைகளை துன்புறுத்தி,
கேலி, கிண்டல் செய்து அழவைத்துப் பார்க்கும்
மூர்க்கனாகி விடுவார்கள்.
9. பொறுமை என்பதே இல்லாமல் சிடுசிடுக்கும்
மனோபாவம் ஏற்படுகிறது.
10.தான் கேட்டது நடந்தே ஆகவேண்டும்,
என்ன ஆனாலும் சரி எனும் மனோ பாவம்
ஏற்பட்டு விடும்.(Demanding nature)
11.வீட்டை விட்டு வெளியே இருக்க
விரும்புவார்கள். தகாத சகவாசம் ஏற்படும்.
12. பெற்றோர்களின் சண்டைச் சச்சரவுகளைப்
பார்த்து பார்த்து குடும்பம்,உறவு ஆகியவற்றின்
மேல் வெறுப்பு ஏற்படுகிறது. அன்பு,நட்பு
ஆகிய உணர்ச்சிகள் ஏமாற்றாத்தைத்தான்
தரும் என தீவிர நம்பிக்கை கொள்வார்கள்.
13. சமுதாயத்தின் பார்வையில் இத்தைகய
குழ்ந்தைகள் கையாலாகதவர்கள், கர்வம் மிக்கவர்கள்,
பிடிவாதக்காரர்கள் என் பார்க்கப்படுகிறார்கள்.
இவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் காரணம்
இவர்கள் இல்லை. இவர்களின் குடும்ப அமைப்புதான்.
சாதாரணமாக நாம் நினைக்கும் கணவன் மனைவி
சண்டை இத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதே
என்று பயப்படுகிறீர்களா???
எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம் கையில்தான்.
அதற்கான வழிமுறைகளுடன் அடுத்த பதிவில்
சந்திக்கிறேன்.(மதியம் 2 மணிக்கு வெளிவரும்)
அதுவரை இந்தப் பதிவுக்காக
தமிழ்மணம் மற்றும் தமிலீஷில் மறக்காமல்
ஓட்டு போட்டு பலரும் படிக்க உதவுங்கள்.
தமிலீஷ் லிங்க்.
vandhaan vadivelan
1 year ago
26 comments:
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!
நன்றி டெல்பின்
நன்றி ராமலட்சுமி
பசங்க படத்துல வர மெசேஜ்!
பிள்ளைகள் பெற்றோர்க்கு கற்றுத் தருவது போல!
பிள்ளைகள் பெற்றோர்க்கு கற்றுத் தருவது போல!//
படத்துலதான் அது சாத்யம் சிபி.
பெரியவங்க சண்டைல நீங்க தலையிடாதீங்கன்னு குழந்தைகளை திட்டிட்டு பெத்தவங்க தன்னோட சண்டையை தொடர்வதுதான் நிதர்சனமான உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
excellent!
மிக நல்ல/தேவையான பதிவு,
சமூக அக்கரை கொண்ட ஒரு பதிவு.
வாக்கையும் பதிவு செய்து விட்டேன்
மிக நல்ல பதிவு..
இதனை அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும்!
நன்றி சிவா
நன்றி நர்சிம்
வாக்கையும் பதிவு செய்து விட்டேன்//
நன்றி கீழை ராசா
நன்றி தேவா
நல்லதொரு பதிவு.
பெற்றோர்கள் யோசிப்பார்களா??
யோசிக்க வேண்டிய விசயம் ..ந்ல்லா
அழகா சொல்லியிருக்கீங்க..!
//பெற்றோர்களுக்கு அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஆயிரம்காலத்து
பயிர் வளர.//
நல்ல கருத்து!
வேதாத்திரி மஹரிஷி இது பற்றிக்
கூறியிருக்கிறார்:
”பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை
தொடர்ந்து பிள்ளைகளின் உடல்வளமும்
அறிவும் ஆகும்
பெற்றோர்கள் நலம் அமைந்த
மக்கள் வேண்டில்
பிழைநீக்கும் தவம் அறமும்
ஆற்றவேண்டும்”
Important thoughts for our consideration.
பயனுள்ள பதிவுகள்...கண்டிப்பாக அனைவரது கவனத்திற்கும் இத்தளங்கள் எடுத்து செல்லப்பட வேண்டும்.
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு..வாழ்த்துகள் கலா..
நல்ல பயனுள்ள பதிவு புதுகை தென்றல்...
நல்ல பதிவு. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்காட்டுவதைவிட வாழ்ந்துகாட்டுதலே சிறந்தது.
அருமை..
குழந்தைகளாகவே இருந்துவிட்டால் பிரச்சினையில்லை, இவர்கள் வளர்ந்தபிறகும் தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மனதால் பாதிக்கப்படுபவர்களுக்கு அன்பு ஒன்றே அரவணைப்பு. அருமையான பதிவு.
மிகவும் அருமையான ஒரு பதிவு... நன்றி.
Post a Comment