இந்தக் கட்டுரை, என் அம்மா, பாட்டி போன்றவர் கூறியதை எல்லாம் குறித்து வைத்து கொண்டு, பின்பற்றிய என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. இதில் ஏதும் தவறு / சந்தேகம் / improvements / suggestions இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
குழந்தையின் மூன்றாம் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதத்திருக்கும் உண்டான குறிப்புக்களை தருகிறேன். இன்று ஒன்று முதல் ஆறு மாதம் வரையான பேணும் முறைகள். இது ஓரளவுக்கு guideline என்றே எடுத்துக்கொள்ளவும்.
அந்தந்த ஊரின் தட்பவெட்பம், மற்றும் குழந்தையின் உடல் நலம், தாயின் instinct (உள்ளுணர்வு) போன்றவை குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
==============================
மூன்று மாதம் முதல் ஐந்து வயது வரை, குழந்தை சரியான ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் பெறுமாறு கவனித்துப் பேணுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகிறது. இதனால் குழந்தை சரியான படி வளர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதில்தானே நமக்கும் peace of mind கிடைக்கிறது. குழந்தைகள் அதிகம் நோயுராமல் இருந்தாலே அவர்கள் நன்கு வளர்வார்கள்.
அதற்காக ஜுரம், ஜலதோஷம் கூட வராமலோ, பல் முளைக்கும் போது dysentry ஆவதையோ நம்மால் தடுக்க முடியாது. அது இயற்கை. இதனால் நோய் எதிர்ப்பு குழந்தையின் உடலில் அதிகரிக்கும். குழந்தைக்கு இந்தமாதிரி நேரங்களில் உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனைக்கு தக்கவாறு மருத்துவம் கொடுத்தால், மீண்டும் பழையபடி ஆரோக்கியம் அடைவார்கள்.
ஆறு மாதம் வரை போட்டால் போட்டபடியே கிடக்கிறதே குழந்தை என்று அலட்சியமாக நினைக்க முடியாது. அதே போல குழந்தைதானே என்று நினைத்து, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு முன் இஷ்டப்படி நடந்து கொள்வது அதன் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.
குடும்ப சூழ்நிலை, தாயின் மனநிலை முதல் தட்பவெட்பம் வரை ஒவ்வொரு விஷயமும் குழந்தை தாயின் வயிற்றில் உருவானதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும், குழந்தைகளைப் பாதிக்கிறது. இதற்கு தீர்வுல்கள் பலவாக இருந்தாலும், இன்று மிகக் குறைவான செலவிலேயே, சாதாரண இந்திய குடும்பத்தில் வழக்கமாக இருக்கும் உணவுப் பழக்கங்களை பின்பற்றியே, அதை ஒழுங்கு செய்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதைப் பார்க்கலாம்.
====================================
பிறந்த / கைக் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து அளிப்பது எப்படி?
- தாய்ப்பால் மிக அவசியம். பிறந்த அன்றிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வயது வரை, முடிந்தால் இரண்டு வயது வரைக் கொடுப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திஅதிகமாகிறது. ஆரோக்கியம் நிறைந்த குழந்தையாக இருக்கிறது. பாலூட்டும் தாய், ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை, பூண்டு, மீன், கோதுமை அடிப்படையிலான உணவுகள், பால், தயிர், மோர் ஆகியவற்றை உண்பதால்அதிகம் பால் சுரக்கும். அரிசி, வாயு உண்டாகும், காய்கறிகள் (உருளை, சேனை போன்ற) மொச்சை, பயறு, பருப்பு வகைகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும், ஊறுகாய், உப்புகரிக்கும் பண்டங்கள் சாப்பிடாமல் இருப்பதாலும் பால் வற்றாமல் இருக்கும். பாலூட்டும்தாய் காரமான மற்றும் மாமிச வகை உணவுகள் அல்லது வாயு பதார்த்தங்களைசாப்பிடுவதால் குழந்தைக்கு ஆஸ்துமா, ஜலதோசம் போன்றவை ஏற்படுகிறது. குழந்தைக்குஜெரிக்கும் சக்தி (செரிமானம்) குறைந்து நாக்கு வெள்ளை படிந்து, மலஜலம் கழிப்பதிலும்அசௌகரியம் ஏற்படுகிறது. சரியான உணவு உண்பதால், தாயும் உடல் எடை அதிகரிக்காமல்பார்த்துக் கொள்ள முடியும். குழந்தைக்கு பத்து வயது வரை, செரிமானம் மற்றும் மல-ஜலம்கழிக்கும் பழக்கங்கள் சீராக இருந்தாலே, நோய் ஏற்படாமல் காக்க முடியும். "யாகாவாரயினும் நா காக்க" என்பது உணவு பழக்கத்திற்கும் பொருந்தும்.
- குழந்தையை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணிக்குள், காலை வெய்யில் படுமாறு ஒரு அரை மணிநேரம் கிடத்தி வைக்கவும். அப்படி போடும் போது, உடம்பில் டாபர் லால் தேல் அல்லது ஆலிவ் / கடுகு / நல்லெண்ணெய் தடவி, தலை உச்சியிலும் தொப்புளிலும், பிறப்புறுப்பிலும் சிறிது விளக்கெண்ணை தடவி (சும்மா தொட்டு தடவினால் போதுமானது) நல்ல துவைத்த காட்டன் வேஷ்டி அல்லது மல் துணியை கீழே போட்டு அதன் மேல் போடவும். வெறும் தரையில் யாருமே படுக்கக் கூடாது. வெய்யிலில் இருப்பதால் வைட்டமின் டி கிடைக்கிறது. (குளிர் நாட்களிலும், மழை நாட்களிலும் விளக்கெண்ணை உபயோகிக்க வேண்டாம்).
- குழந்தைக்கு nappy (huggies போன்றவை) உபயோகப்படுத்தினால், இரவில் மட்டுமேஉபயோகிக்கவும். குளிப்பாட்டிய பின் சிறிது நேரம் மல் துணியால் ஆனஜட்டி உபயோகிக்கவும். அல்லது இப்படத்தில் கொடுத்த படி தைத்துவைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும். இதனால் nappy rash வருவதை தவிர்க்கலாம்.
- தினமும் குழந்தையைக் குளிப்பாட்டவும். குளிப்பாட்டிய உடனேயே நன்குநெஞ்சு/முதுகுபகுதிகளை உடனே துடைக்கவும். எப்போதும், முகத்திலும் தொப்புள் மற்றும்பிறப்புறுப்புப்பகுதிகளில் talcum powder போட வேண்டாம். அவசியம் என்றால் மட்டும், சிறிதுவிரலில்தொட்டு முகத்தில் தடவி விடவும். இதனால் சுவாசக் குழாயில் பவுடர் போவது தவிர்க்கலாம். சாயந்திர நேரங்களில் நல்ல சுத்தமான டர்கீ டவலை மிதமான வெந்நீரில் நனைத்துப் பிழிந்து உடலை நன்கு துடைத்து விடுங்கள்.
பொறுமை இல்லாத தாய்மார்கள் / creche / care takers / ஆயாக்களுக்கு - யாரும்தான் இப்போ பக்கத்தில இல்லையே.யாருக்குத் தெரியப் போகிறது என்று உங்கள் அலட்சியம், உங்களுக்கு சம்பளம் ஈட்டும் தொழிலுக்கு வஞ்சனை மட்டும் இல்லை, ஒரு குழந்தையின் அன்பையும், எதிர்காலத்தையும் shatter செய்து பார்க்கிறீர்கள். இதனால் இழப்பு கடைசியில் உங்களுக்குத்தான் என்பதையும் உணர்ந்து, குழந்தைக்காக செய்யும் சிறிய வேலையையும் முழு ஈடுபாடோடு செய்தால், நீங்கள் குழந்தையோடு அதிகம் போராட வேண்டியிருக்காது.
-----வித்யா
.
7 comments:
ஆகா, நல்ல பகிர்வு.
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.
தொடருங்கள் வித்யா.
அருமை..
மிகவும் அருமை.
உங்கள் கட்டுரை எங்கள் போன்ற இளம் தம்பதிகளுக்கு ஒரு ஊட்டச்சத்து
இறைவன் உங்களுக்கு நிறைவான ஆரோக்கியம் வழங்குவானாக!
Post a Comment