வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.
காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று குழந்தைகளுக்கு விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
குழந்தைகள் மட்டுமல்ல அனைவரும் கடைபிடிக்க வேண்டியவையே.
நன்றி: வெப்துனியா
6 comments:
//பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். //
உண்மைதான். விடாமுயற்சி எனக்கு ஏற்கனவே நண்பர்தான். ஆனால் பொறுமையையும் எனக்கு நண்பனாகியது என் மகள்தான்.
அருமையான பதிவு
(parent's club-பில் உள்ள label-சை கொஞ்சம் சரி செய்யுங்களேன். பல பிலாகுகளை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கு.)
--வித்யா
அருமை நண்பரே.
நன்றி வித்யா.
சரி செய்வோம்.
நன்றி அய்யா.
அருமை வித்யா
(parent's club-பில் உள்ள label-சை கொஞ்சம் சரி செய்யுங்களேன். பல பிலாகுகளை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கு.)
பலரும் எழுதுவதால் இந்த நிலை. உங்களுக்கு ஆதரைசேஷ்ன் அனுப்புகிறேன். முடிந்த பொழுது மாற்றி அமைத்து தாருங்கள்.
கைவலியால் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன் வித்யா. நன்றி
அன்பின் புதுகைத் தென்றல்:
அனுப்புங்கள்.இதற்காகவே நேரம் ஒதுக்கி நிச்சயம் செய்கிறேன். நல்ல பதிவுகள் நிறைய இருக்கிறது. அதனாலேயே இந்த வேண்டுகோளை மீண்டும் மீண்டும் வைத்தேன். நன்றி.
-வித்யா
Post a Comment