ஒற்றுமை வலிமையாம்
ஒரு ஊருல, வயலோரத்தில் அடர்ந்த புளிய மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த புளியமரத்தில் ஏராளமான கொக்குகள் வசித்து வந்தன.
அந்தக் கொக்குகள் பொறாமையின் காரணமாக தங்களுக்குள் "நீ பெரியவனா.. நான் பெரியவனா.." என்று போட்டியிட்டவாறு வாழ்ந்து கொண்டிருந்தன.
வரப்போரமாக நின்று கொண்டு தனித்தனியாகப் பிரிந்து தாங்கள் இரையை தேடி அலைந்தன.
ஒரு நாள் வேட்டைக்காரர் ஒருவர் அந்த புளியமரத்தின் பக்கமாக வந்தார். அவர் பார்வைக்கு கொக்குகள் எல்லாம் தெரிந்துவிட்டன. அதுவும் ஒவ்வொரு கொக்கும் தனித்தனியாக பிரிந்து சென்று இரை தேடிக் கொண்டிருப்பதையும் கண்டார். உடனே தன் வேட்டை துப்பாக்கியை எடுத்து தனித்தனியாக நின்று கொண்டிருக்கும் கொக்குகளை எல்லாம் சுட ஆரம்பித்தார்.
"ஆஹா.. இன்று எனக்கு நல்ல வேட்டைதான். இதோ மூன்று கொக்குகளை சுட்டு வீழ்த்தி விட்டேன். இனி நாளை வேட்டையாட வந்தால் போதும்" என்று மகிழ்ச்சியடைந்தார்.
மூன்று கொக்குகள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டதை கண்ட புளிய மரம் மிகவும் வருந்தியது.
"இந்த கொக்குகளுக்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் இனிமேல் இந்த வேட்டைக்காரனுக்கு மிகவும் கொண்டாட்டமாகவே இருக்கும். தினமும் இங்கு வந்து இந்த கொக்குகளை எல்லாம் வேட்டையாட ஆரம்பித்துவிடுவான். நாம் அதற்கு முன்னர் இந்த கொக்குகளை ஒற்றுமையாக இருக்கும்படி செய்துவிட வேண்டும்" என்று எண்ணியது.
மாலை நேரத்தில் கொக்குகள் எல்லாம் இரை தேடி முடித்து விட்டு மரத்தில் வந்து தங்கத் தொடங்கின. அதுவரையிலும் கொக்குகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த புளியமரம், கொக்குகளைப் பார்த்து, புளியமரம் பேசியது.
"பறவையின நண்பர்களே நெடு நாட்களாக என் மனதில் இருந்து வந்ததை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அதனை கவனமுடன் கேட்கின்றீர்களா?" என்று அன்போடு கேட்டது.
புளியமரம் அன்போடு பேசுவதை கண்டு கொக்குகளும் அதன் பேச்சை கேட்க வேண்டி ஆவலாயின.
"புளியமரமே! உனது கிளைகளில்தான் நாங்கள் எல்லோரும் கூடுகட்டி வசித்துக் கொண்டிருக்கிறோம். உன் நன்றியை மறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாங்கள் உனது பேச்சைக் கேட்க மறுப்பு தெரிவிக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் எங்களிடம் தாராளமாக கூறலாம்" என்றன.
"பறவையின நண்பர்களே! நீங்கள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு வாழ்வதால் உங்களில் மூன்று பேர்கள் வேட்டைக்காரனின் துப்பாக்கிக்கு பலியாகி விட்டார்கள். இனிமேலும் நீங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்தால் வேட்டைக்காரருக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். உங்கள் கூட்டத்தினர்கள் ஒவ்வொருவரையும் அவர் சுட்டு வீழ்த்திக் கொண்டேயிருப்பார். முடிவில் உங்கள் கூட்டத்தினர்கள் எல்லோருமே காலியாகிவிடுவீர்கள். இதனை நன்கு யோசித்து உங்கள் பொறாமை எண்ணத்தை கைவிட்டு ஒற்றுமையோடு வாழுங்கள்" என்று கூறியது.
மறுநாள் வேட்டைக்காரர் கையில் வேட்டை துப்பாக்கியுடன் புளியமரத்தின் அருகே வந்தார். வேட்டைக்காரர் எதிர்பாராத வண்ணம் புளிய மரத்திலிருந்து கொக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக வேட்டைகாரரை நோக்கிப் பறந்தன.
அவரை சூழ்ந்து கொண்டு அவர் கையில் இருந்து வேட்டை துப்பாக்கியை கீழே தட்டிவிட்டு கைகளை பலமாக தம் அலகுகளால் கொத்த தொடங்கின. இன்னும் சில கொக்குகள் அவரின் முகத்தைப் பலமாக தாக்கத் தொடங்கின.
கொக்குகளின் கூட்டமான தாக்குதலுக்குப் பயந்துபோய் வேட்டைகாரர் ஓட்டமெடுத்தார்.
கொக்குகள் எல்லாம் ஒற்றுமையின் வலிமையை உணர்ந்தன. கொக்குள் எல்லாம் மனம் மாறியதைக் கண்டு புளியமரம் மகிழ்ச்சியடைந்தது.
ஒற்றுமையுடன் வாழ்வதால் எந்த தீமையும் நம்மை நெருங்காது.
=================================================================
குழந்தைகள் கற்றுக் கொள்ளும் புதிய வார்த்தைகள்:
வயல்
வரப்பு
கொக்கு
புளியமரம்
வேட்டைக்காரன்
துப்பாக்கி
ஒற்றுமை
கொத்துதல்
அலகு
எதிர்பாராதது
பொறாமை
=================================================================
குழந்தைகளுக்கான தமிழ் ரைம்ஸ் இங்கே தொகுத்துள்ளேன்.
அன்புடன்,
விதூஷ்
.
vandhaan vadivelan
1 year ago
11 comments:
நல்லாயிருக்கு கதை..
குழந்தைகள் படிக்க நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்!!
வருகிற விடுமுறையில் பிள்ளைகளுக்கு படித்துக்காட்ட கதைகள்.
நன்றி வித்யா
ஒற்றுமையே பலம என்ற விகிதத்தில் அமைந்திருப்பது நலம்...
தொடருங்கள் நிச்சயம்...
Good Moral Story
நான்கு பசுக்களும், ஒரு சிங்கமும் எனும் கதையைப் போலவே வெகு சுவாரஸ்யமான கதை.
நான் சுவாரசியமாக ரசித்துப் படித்தேன் கதை பிடித்திருக்கு
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
அருமை வித்யா... பாராட்டுகள்... நான் முன்னமே சொன்னது போலே இனி ஒவ்வொரு வாரமும் உங்களது "ஒரு ஊருல" கதைகளுக்காக எதிர் பார்த்து இருப்பேன்... நன்றி.
Hi ssrividhyaiyer,
Congrats!
Your story titled 'ஒரு ஊருல - கதைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th September 2009 04:44:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/110471
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
THANKS TO ALL WHO VOTED THIS POST.
vasanth1717
menagasathia
arasu08
kvadivelan
tharun
Vino23
idugaiman
-VIDHYA
THANKS TO ALL WHO COMMENTED HERE. Sorry, could not address individually. Lacking time :)
-vidhya
எப்படியோ என் வீட்டுல நேரம் ஓடுகிறது உங்கள் புண்ணியத்தில் :-))
Post a Comment