உடலினை உறுதிசெய்
ஒரு ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.
குகைக்கு வெளியே வந்து நின்ற கரடி "நரியாரே! உமக்கு என்ன நேர்ந்தது! ஏன் குகையை விட்டு இரண்டு நாளாக வெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.
கரடி காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி குகையின் உள்ளே சென்றது.
சுருண்டு படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்கு என்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா? அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு கேட்டது.
"கரடியாரே! நான் என்ன செய்வது? எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. அதன் காரணமாக உடலும் சோர்வடைகிறது. நாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டே போகிறது" என கவலையுடன் கூறியது.
அதனைக்கேட்ட கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும் அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலைவலுப்படுத்த நீர் துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர். அதனால்தான் உமக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றது.
கரடியாரே என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன். என் உடல் நிலை சீராக நீ எனக்கு உதவி செய்வாயா என்று கேட்டது நரி.
நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும். நாம் இருவரும் சிறிது நேரம் உற்பயிற்சி செய்யலாம். என்றது கரடி.
நரியும், கரடியும் ஒரு மரக்கிளையின் அருகே வந்தன.
கரடி வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத் தொடங்கியது.
தன் உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரி உணர்ந்தது.
அதே நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? ஏதோ உற்சாகம் நிரம்பியவர் போன்று காணப்படுகின்றீரே என்று கேட்டது.
ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனைப் போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம் மறைந்துவிடும். என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.
அன்று முதல் நரி தினமும் கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.
நம் உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
.
10 comments:
உடல் உறுதியா இருந்தாத்தான் உள்ளம் உறுதியாகும்.
கைவசம் நிறைய்ய ஸ்டாக் இருக்கு போல இருக்கு வித்யா. சூப்பர்
அருமை....சூப்பர்
சிறுகதை பட்டறை நல்லா வேலை பாக்குதே.
என் மகனுக்கு சொல்ல கதை கிடைச்சாச்சு.
இந்த வார "ஒரு ஊருல" கதையும் சூப்பர்... ரொம்ப நன்றிங்க வித்யா. அருமையா கதை சொல்லறீங்க... உங்க குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்...
புதுகை தென்றல்: ஆமாம்.. என் பெண்ணுக்கு முதல் சாதம் கொடுக்கும் போதிலிருந்து இதெல்லாம் தினம் ஒன்றாக சொல்வேன். அதான். இப்போ அவளே எனக்கு நிறையா கதை சொல்லுவாள். எல்லா கதையும் கலந்து கட்டி. அதும், விநாயகர் இமயமலையில் விளையாடிய கதை, ரொம்ப humorous ஆக இருக்கும். அதையும் பகிர்கிறேன் - விரைவில்.
தியா: நன்றிங்க.
ஜெரி: இப்போ சொல்லும் கதைகள் செவி வழி கேட்டதுதான். அதோடு கொஞ்சம் என் எழுத்தும் கலந்திருக்கும். முழுதும் என் சொந்த கற்பனை எல்லாம் இல்லைங்க. நானே எழுதும் போது "நான் எழுதியது" என்று சொல்லுவேன்.
ராசு: வீடு நிறையா குழந்தை"ங்க"ளாக இருக்க வேண்டும்னு தான் ஆசை. இறைவன் போட்ட கருணைபிச்சை ஒரே பொண்ணுதான்.
--வித்யா
விதூஷ் கலக்கறீங்க, ரொம்ப அழகான கதை.// விநாயகர் இமயமலையில் விளையாடிய கதை, // காத்துக்கிட்டிருக்கோம்.
மேலும் ஒரு நல்ல கதைக்கு நன்றி.
உங்களின் இந்த பன்முகம் பெரிய ஆச்சர்யம் வித்யா!ஜமாலுக்கு,ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள் மக்கா!
நல்ல கதை..
வாழ்த்துக்கள்.
நல்ல கதை வித்யா.. குழந்தைகளிடம் இப்போ கதை கேட்கிற ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. ( பெற்றோர்களுக்கு கதை சொல்லும் ஆர்வம் இருந்தால்தானே :( ) இது போல பல கதைகள் குழந்தைகளுக்கு சொல்ல நல்லது. நன்றி
Post a Comment