”நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா”!!!
”எனக்கொரு முயல்குட்டி வேணும்”
ஐயோ, இந்த பூனையை பாருங்களே”ன் எவ்வளவு
அழகா இருக்கு, நாம வளக்கலாம்”!!
இதெல்லாம் உங்க வீட்டுல பிள்ளைங்க அடிக்கடி
சொல்ற வார்த்தைகள் மாதிரி இருக்கா???
பிள்ளைகளுக்கு செல்லப்பிராணி வெச்சுக்கணும்னு
ரொம்ப ஆசை இருக்கும். அது நல்லதும் கூட.
செல்லப்பிராணி வீட்டுல வளர்ப்பதால பிள்ளைகளுக்கு
மனதளவில் நல்ல மாற்றம் இருக்கும். தனது
தோழனா நினைச்சு அவங்க அந்தப் பிராணியோடு
நேரம் போக்குவது அவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும்.
செல்லப்பிராணியை வளர்க்கும் பொறுப்பை
பிள்ளைகளிடம் கொடுப்பதால் அவர்களுக்கு
பொறுப்பு கூடுகிறது, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை
கவனித்துக்கொள்ளும் வளர்ச்சி ஏற்படும்.
உங்கள் வீட்டின் சூழ்நிலை, உங்களின் நிலை
எல்லாவற்றையும் யோசித்து, பிள்ளைகளுடன்
கலந்தாலோசித்து அவர்கள் விரும்பும் செல்லப்
பிராணியை பரிசளிக்கலாம்.
pets and kids எனும் இந்த வலைத்தளத்தை
பாருங்கள். நமக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும்.
ஆனால் எல்லா குழந்தைகளாலும் செல்லப்பிராணிகள்
வைத்துக்கொள்ள முடியாது. வசதியைப் பற்றிச்
சொல்லவில்லை. அவர்களின் உடல்நிலையை
பற்றி சொல்கிறேன்.
சைனஸ்,அலர்ஜி, சுவாச பிரச்சனை உள்ள
குழந்தைகளுக்கு நாய்,பூனை இவற்றின் முடியினால்
பிரச்சனை அதிகமாகும்.
இது தெரியாமல் பிள்ளை ஆசை படுகிறானே என
வாங்கிக்கொடுத்து அவஸ்தைக்கு ஆளாக நேரும்.
குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு பிள்ளைக்கு
எந்த பாதிப்பும் இராத பட்சத்தில் செல்லப்பிராணி
ஒன்றை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.
இல்லையேல் இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்
வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.
vandhaan vadivelan
1 year ago
11 comments:
/*வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.*/
இது தாங்க கொஞ்சம் ஈசி... :-) நானும் குழந்தைகளுக்காக முயல், லவ் பேர்ட்ஸ் எல்லாம் ட்ரை பண்ணி கடைசியில இப்ப ஒரு ரெண்டு மூணு மீன் தொட்டி இருக்குது வீட்ல...
அழகாச் சொல்லியிருக்கீங்க தென்றல்.
//செல்லப்பிராணியை வளர்க்கும் பொறுப்பை
பிள்ளைகளிடம் கொடுப்பதால் அவர்களுக்கு
பொறுப்பு கூடுகிறது, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை
கவனித்துக்கொள்ளும் வளர்ச்சி ஏற்படும்.//
உண்மைதான்.
//இல்லையேல் இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்
வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.//
இது நல்ல சாய்ஸ்.
நல்ல இடுகை
ஆமாம் அமுதா,
வண்ண மீன்கள் துள்ளி விளையாடுவதை பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கும்.
வருகைக்கு நன்றி
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி நவாஸுதின்
//அவங்க அந்தப் பிராணியோடு
நேரம் போக்குவது அவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும்.//
அப்படியா சொல்றீங்க..? அது கடிக்க வரும்போது டென்ஷன் ஆக மாட்டாங்க?
என் பையன் என்கிட்டே "பெரிய வீடா கட்டுப்பா" என்றான்
"எதுக்குடா" என்று கேட்டால் ,"cow ,horse ,elephant " எல்லாம் வளர்க்கலாம்ப்பா என்கிறான்
அது கடிக்க வரும்போது டென்ஷன் ஆக மாட்டாங்க//
ஆரம்பத்துல கொஞ்சம் டென்ஷன் தான். அப்புறம் பழகிடும்னு அனுபவப்பட்டவங்க சொல்ல கேள்வி
"cow ,horse ,elephant " எல்லாம் வளர்க்கலாம்ப்பா என்கிறான்//
:))) பிள்ளை மனம் வெள்ளை குணம்
அழகாச் சொல்லியிருக்கீங்க....
Post a Comment