குட்டி ரோஜாக்களாய் என்றும் எங்கும் மணம் பரப்புவது
குழந்தைகள் தான்.
அந்த அழகு குட்டிச் செல்லங்களுக்கு எங்கள் பேரண்ட்ஸ்
கிளப் சார்பில் மனமார்ந்த குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின் நல்லவர்
ஆவதும் தீயவராவது பெற்றவர் வளர்ப்பினிலேன்னு
பாட்டே இருக்கு.
உண்மையில் குழந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
குழந்தை பிறந்த பிறகு நாம் நிறைய்ய கற்கிறோம்.
கதை சொல்ல, அமுதூட்ட, பொறுமையாக அவர்களின்
நள்ளிரவு விளையாட்டை ரசிக்க என பல கற்றல்கள்
நடக்கின்றன்.
நம்மை கற்க வைத்த அந்த குழந்தைகளுக்கு,
பெற்றவர்களாக்கிய பெருந்தெய்வங்களுக்கு
இந்த நல்ல நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
vandhaan vadivelan
1 year ago
15 comments:
நம்மை கற்க வைத்த அந்த குழந்தைகளுக்கு,
பெற்றவர்களாக்கிய பெருந்தெய்வங்களுக்கு
இந்த நல்ல நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
ம்ம் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறோம் :)))
:)))))))))))
azagu kutti chellangalukku HAPPY CHILDRENS' DAY
ennoda blog il ANICHA MALAR poem intha kutties ikku arpanam
4/11/2009 issue of vikaten il unga blogspot patri pottu irukkanga
congrats to PRENTS CLUB 08
hipip hurraay for ur service to children
To all kutties I dedicate this poem on childresns day
I write this poem im my blog
அனிச்ச மலர்
என் ஆன்மாவின் கர்ப்பமே ..
நான் சூலுறாத சொர்க்கமே.. .
என் இள உருவின் பேரழகே...
என் மகளே.. என் தாயே ..
மகரந்தச் சேர்க்கையின்
போதே அறிந்தேன் ..
நீ சூல்கொண்டதை
தேனே.. என் தெய்வமே..
உனக்குச் சோறூட்டிப்பசியாறி
நீ தூங்கி நான் விழித்து ..
திரிசங்கு சொர்க்கத்தில் நான்.. .
உனக்கு வரும் நோயெல்லாம்
பாபர் போல்
எனக்கு வேண்டி...
பென்டெனிலிருந்து பிஎஸ்பி வரை
உன்னோடு களித்திருந்து ...
விழிப்பும் கனவும் அற்ற பேருலகில்..
நீ பள்ளி செல்ல
நான் அழுத கதை
ஊரறியும்...
பைக் ரேஸராகவோ.,
காரம் சேம்பியனாகவோ.,
ஸ்குவாஷ் ப்ளேயராகவோ
வருவாயென நினைத்தேன் ..
உன் குரலெனும் குழலில்
கண்ணன் காலுறை கோமாதாவாய்
என்னைக் கட்டினாய்...
கட்டழகுப் பொக்கிஷமே...
கொலுசணிந்த சித்திரமே...
கனிந்து வந்த பால் மணமே...
ஊனோடும் உயிரோடும்
உருவான உயிரழகே ...
டால்பினைப் போல் ..
யாழும் குழலுமான
உன் பிஞ்சுக் குரலில்
மிழற்றினாயே ...
ஊடகங்கள் உன் குரலை
ஓங்கி ஒலிபரப்ப...
என் ஒவ்வொரு நரம்பிலும்
ஊடுருவிப் பெருமிதத்தில் ...
கடைசிச் சுற்றில்
தரவிரக்கமானபோது
என் நெஞ்சு வெடித்ததடி...
வெடித்த நிலம் போல்
நான் பிளக்க...
மேன்மகளே...
மேகத்து நீர்போல்
கலங்கும் கண்களுடன்
நீ புன்னகைத்தாய் ...
இன்னும் இருக்கு வாழ்க்கை...
சிகரம் எட்ட...
என்றாய் என் அற்புத அனிச்சமே...
உன்னைப் பெற்ற பொழுதிலும்
பெரிதும் உவந்தேன்
நான்......
இந்த உலகில் இருக்கும் எல்லா குட்டிச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நானும் குழந்தைகள் தின வாழ்த்து சொல்கிறேன்
நன்றி தேனம்மை,
பாராட்டுக்களுக்கும், கவிதைக்கும்
நன்றி கலை
நன்றி தியாவின் பேனா
மழலைகளுக்கு வாழ்த்துகள்..
மழலைச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான முயற்சி. மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சூர்யா, நவாஸுதீன்,அருண் சங்கர்,
மனமார்ந்த நன்றிகள்
ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.
Post a Comment