பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

பிள்ளைகள் மனது கல்மிஷமில்லாதது, பரிசுத்தமானது.
அதனால் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள்.

கள்ளங்கபடமற்ற அந்த பூக்களின் சுகந்தம் தரும்
சுகம் சுகமோ சுகம்.

அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விளைவிப்பது போல
பெரியவர்கள் நாமே பல செய்கைகள் செய்கிறோம்.
இது மிக மிக தவறு.

அப்படி என்னங்க செஞ்சிடறோம்னு கேட்டா...
பல பெரியவங்க அந்தக்கால ஆளுங்க மட்டுமில்ல
மாடன் காலத்து காரங்களும் தான் ஒரு குழந்தையை
பார்த்தா கொஞ்சினோமா, பேசினோமான்னு வாரது இல்ல.

கலர் குறைவா இருக்கற குழந்தையா இருந்தா
“உங்கப்பா,அம்மா என்ன நேரம்!! நீ மட்டும்
ஏண்டி கரிக்கட்டையா பொறந்திருக்க” என்று
சொல்வது.

”உங்க கலர் உங்க குழந்தைக்கு வரலை சார்”என்பது
இதெல்லாம் குழந்தையின் மனதில் நஞ்சை கட்டாயம்
விதைக்கிறது.

நிறத்தில் என்ன இருக்கிறது??? புற அழகு முக்கியாமா?
அக அழகு முக்கியமா??? அகம் அழுக்கு இல்லாமல்
இருந்தால் புறத்தில் தானாகவே தெரியும்.


பாரதியின் இந்தக் கவிதையை எப்போதும்
மறக்காதீர்கள் பெற்றோர்களே, பெரிய்வர்களே!!!


வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.



அடுத்த நஞ்சு,” பிள்ளைக்கு சோறே போட மாட்டீங்களா!!இப்படி
நோஞ்சானா இருக்கு!!”

பிள்ளை பெத்த பிறகு நீ நல்லா ஊறியிருக்க, உன் பிள்ளை
சவங்கி கிடக்கு”

இத்தகைய வார்த்தைகள் பிள்ளைகளின் மனதில் ஆறாத
காயத்தை உண்டாக்கி விடுகின்றன. எதிர்த்து பேசாமல்
குழந்தை இருக்கிறது என்பதற்காக பெரியவர்கள் செய்வது
எல்லாமும் சரியில்லை.

பல பிள்ளைகள் மனதுக்குள் வைத்து கொண்டே மெல்ல
மொளனமாக அழுவார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


தயவு செய்து பிள்ளை மனத்தில் நஞ்சு வளர்க்க வேண்டாம்.

6 comments:

சரிதான். குழந்தைகள் பெரியவர்கள் சொல்வதை உன்னிப்பாக கவனிப்பார்கள். சமயத்தில அவங்ககிட்ட சொல்றத அடுத்த குழந்தைகிட்ட சொல்லி வம்பிழுத்து வெச்சிருவாங்க :)

மிக அருமையான பதிவும், பாரதியின் கவிதையும், நன்றாக வந்துள்ளது.

--வித்யா

நல்ல கருத்து.

தெளிவா அழகாச் சொல்லியிருக்கீங்க தென்றல். பூப்போன்ற குழந்தைகளின் மனம் வாட பெரும்பாலும் பெரியவர்களே காரணமாகிப் போகிறார்கள். கவனம் கொள்ளச் செய்யும் நல்ல பதிவு.

நல்ல பதிவு...நிஜம் தான் ; என்ன பேசுகிறோம் என்ற தெளிவில்லாமல் பலரும் பல வேளைகளில் சின்னஞ்சிறு மனங்களில் நச்சை விதைத்து விடுகிறோம் தான்.ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.

நன்றி ஃபண்டூ

நன்றி வித்யா

நன்றி ஜமால்

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி மிஸஸ் தேவ்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்