பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

நாளின் முதல் உணவாகிய காலை உணவு எவ்வளவு
அவசியம் என்பது சொல்லத்த் தேவையில்லை.
இருந்தாலும் ஒரு ஞாபகத்திற்காக இங்கே.


ஆகவே பிள்ளைகளை வெறும் வயிற்றோடு பள்ளிக்கு
அனுப்பாதீர்கள். (நாங்க எங்க அனுப்பரோம். அவங்கதான்
சாப்பிடறதில்லைன்னு சொல்வது காதுல விழுது)

நான் பற்றும் முறை உங்களுக்கு சரிவருமா என்று
பாருங்கள். இதோ தருகிறேன்:

இரவு 9 மணிக்கு பிள்ளைகள் தூங்கப் போயிவிடவேண்டும்.
(நானும் தூங்கிவீடுவேன்.) அப்போதுதான் காலையில்
எழுவது ஒரு பெரிய எபிசோட் டிராமாவாக இராது.

காலையில் எழுந்ததும், பல்துலக்கியு உடன் பால்
அருந்தாமல், ஒரு டம்பளர் தண்ணீர் குடித்து, சின்ன
உடற்பயிற்சி ( 5 நிமிஷம் தான். யோகா மாதிரி)
செய்வார்கள். இதனால் "காலைக்கடன்கள்"
ஒழுங்காக முடிந்து, குளித்து காலை உணவு
(2 இட்லியாவது) சாப்பிட்ட உடன், பாலைக் குடித்து
செல்வார்கள். வயிறும் நிறைந்திருக்கும்.

பள்ளி சென்றபின் வயிறு உபாதை பிரச்சனனயும்
இல்லை.

சரி இப்போ உணவு என்னன்னு பார்ப்போம்:

ஆபாத்பாந்தவன், அனாத ரட்ச்கன் என்று கொண்டாடப்
படும் இட்லி மாவை வைத்து என்ன செய்யலாம்? (இட்லி
மாவை வைத்து இட்லிதான் சுடுவாங்கன்னு கடிக்காதீங்க :) )

இட்லி இது சில பிள்ளைகளுக்கு பிடிக்காது. கொடுக்கும்
விதத்தில் கொடுத்தால் விரும்மி சாப்பிடுவார்கள். இனி
உங்கள் வீட்டில் இட்லி வேண்டாம் என்று யாரும் சொல்ல
மாட்டார்கள். ரெசிபிக்கு போகலாம்.

1. குட்லி:

பட்டன் இட்லி/14 இட்லி எனப்படும் இட்லிதான். அந்த
சின்ன இட்லி பிளேட்டில் இட்லி செய்து கொள்ளுங்கள்.

சாம்பார் செய்து, அதைக் குட்டி இட்லியின் மேல் ஊற்றி
(விரும்பினால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து) 1 ஸ்பூனையும்
வைத்து அனுப்புங்கள்.


2. இட்லி மஞ்சூரியன்:

பட்டன் இட்லி அல்லது சாதாரண இட்லி தட்டில் செய்த
இட்லியாக இருந்தால் 4 ஆக வெட்டிக்கொள்ளவும் .

பட்டர் கொஞ்சம். பாஸ்தா சாஸ் (மெக்ரோணி சாஸ் என்றும்
சொல்வார்கள். இதில் சிக்கன் ஸ்டாக் சேர்த்ததும்
கிடைக்கும்)

வாணலியில் பட்டர் போட்டு உறுகியதும், இட்லி
துண்டுகளைப் போட்டு வறுக்கவும். தேவையான
அளவு பாஸ்தா சாஸ் சேர்த்து கிளறி இரக்கி,
கொத்துமல்லி தழை தூவினால் இட்லி
மஞ்சூரியன் ரெடி.


3. இட்லி ஃப்ரை:

இட்லியை வெட்டி, பட்டர் சேர்த்து வறுத்து,
மேலே இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து
பிரட்டினால் ஃப்ரை ரெடி.

விரூம்பும் பிள்ளைகளுக்கு மேலே
கெட்டித்தயிர் விட்டு அனுப்பலாம்.


4. இட்லி காய்கறி உருண்டை:

வேகவைத்த இட்லி - 4, கேரட்- துருவியது கொஞ்சம்,
கோஸ், பொடியாக அரிந்தது, வெங்காயம்- பொடியாக
நறுக்கியது, உப்பு, ப.மிளகாய் தேவைக்கேற்ப.

செய்முறை: இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய்
வெங்காயம் வதக்கவும், பிறகு காய்கறிகள் சேர்த்து வதக்கி
உதிர்த்த இட்லி, உப்புசேர்த்து வதக்கி இரக்கவும்.

இதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி
டப்பாவில் வைத்து அனுப்பினால் மிச்சம் வைக்காமல்
சாப்பிடுவார்கள்.

5. இட்லி உசிலி:

டலைப் பருப்பு, கறிவேப்பிலை, கடுகு தாளித்து,
மிளகாய், வெங்காயம் வதக்கி அதில் உதிர்த்த
இட்லி சேர்த்து உருண்டை பிடித்து செய்யலாம்.

துருவிய சீஸை சேர்க்கலாம்.


6. இட்லி Finger chips:

இட்லியை நீளவாக்கில் நறுக்கி எண்ணையில்
பொரித்து, டிஷ்யூ பேபரில் வைக்கவும். ஆறியதும்
எடுத்து மேலே மிளகு/சீரகத்தூள் உப்பு சேர்த்து
கொடுக்கலாம்.

7. ஸ்டஃப்டு இட்லி:

இட்லி உருண்டைக்கு சொன்னது போல் காய்கறிகளை
கல்நது, இட்லி அவிக்கும் போது நடுவில் வைத்து
அவித்தால் இட்லி ரெடி.

8. மசாலா இட்லி:

பட்டரில் வெட்டிய இட்லி சேர்த்து வதக்கி,
மேலே கரம் மசாலா, உப்பு சேர்த்து பிரட்டினால் ரெடி.

விரும்பினால் மேலே கெட்டித்தயிரும், வெங்காயமும்
சேர்க்கலாம்.

பிள்ளைங்க சாப்பிட என்னென்ன செய்ய வேண்டியது
இருக்கு என்று சொல்கிறீர்களா?ஆமாம் என்ன
செய்வது. நோகாமல் நோன்பு கும்பிட முடியாதே?!!!!!!

மேலும் சில ரெசிப்புக்களோடு சந்திக்கிறேன்.

அன்புடன்,
புதுகைத்தென்றல்

14 comments:

//
நான் பிற்றும் முறை உங்களுக்கு சரிவருமா என்று
பாருங்கள். இதோ தருகிறேன்:
//

பின் பற்றும்முறைன்னு மாத்துங்க!

குட்டி இட்லியாம்

மஞ்சூரியாம்

பட்டர் இட்லியாம்

ம் எங்க ஆத்தா இதெல்லாம் ஒண்ணுமே செஞ்சு குடுக்கலியே

:(((((((

எனக்கு தெரிஞ்சதெல்லாம்

குக்கர் இட்லி

குக்கர் இல்லாம இட்லி பாத்திரத்துல துணி போட்டு வெக்கிற இட்லி

அப்புறம்

குஷ்பு இட்லி!!!!!!

வாங்க சிவா,

மாத்திட்டேன்.

நம்ம ஆத்தாக்கள் என்ன செஞ்சு போட்டாலும் நாம சாப்பிட்டு போகணுமே.

ஆமா காலைல டிபன் கொடுப்பாங்களா என்ன? பழைய சோறுதான். (ஐஸ் பிரியாணிதான்)

போட்டத சாப்பிடணும்னு.

இவ்வளவு இட்லி வகை தெரிஞ்சிருக்கே சிவா :)))))))

இதெல்லாம் குழந்தைங்க சாப்பிடவா இல்ல அவங்க பேர சொல்லிட்டு நாம சாப்பிடவா?

ம்ம்ம் ஆண்ட்டி சூப்பரு, ஆனா கொஞ்சம் கேர்வுள்ளா இருக்கனும், எங்க பாட்டி இப்படித்தான் இம்சைக்கு விதம் விதமா தினம் தினம் வெரைட்டி வெரைட்டியா பாவம் வளர்ர பையன்னு செஞ்சி போட்டு ஓவர் வெயிட் ஆக்கி வுட்டிட்டாங்க... ஆனாலும் இதெல்லாம் சாப்பிட நல்லா இருக்கும்...

குஷ்பு இட்லி!!!!!!

அது என்ன மாமா குஷ்பு இட்லி அது பத்தி சொல்லுங்க... இம்சை கூட எப்ப பாரு குஷ்பு பத்தி தான் பேசுவாரு

நாமளும் நம்ம அம்மா, அப்பாக்கு பிள்ளைகள்தானே அதனால நாமளும் சாப்பிடலாம்.

ஆனா பட்டர் அதெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கனும் நிஜமா நல்லவன்.

வா பவன்,

நாங்க சாப்பிடத்தான் கேர்ஃபுல்லா இருக்கணும். உன்ன மாதிரி சின்னப் பசங்க நல்லா சாப்பிடணும் கண்ணா.

இட்லியில் எத்தனை வகைகள்..சூப்பர்தான்..

வாங்க பாசமலர்,

நன்றி.

wow! இட்லியில் இத்தனை வகையா! கண்டிப்பாகச் செய்து பாக்கணும்போல இருக்கு. நன்றி!

கண்டிப்பாகச் செய்து பாக்கணும்போல இருக்கு//

செஞ்சு பாருங்க தீபா.

வருகைக்குமிக்க நன்றி

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்