பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

அம்மாக்களின் வலைப்பூவில்

புது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ் எனும்
பதிவில்

லக்கிலுக் அவர்கள்,

யாராவது நாலு பெருசுங்க சேர்ந்து
அப்பாக்களின் வலைப்பூ ஆரம்பிக்கலாமில்லையா? :-)

எங்களை மாதிரி பேச்சுலர்ஸ் சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போமே?//

அப்படின்னு கேட்டிருந்தார்.

ஆமாங்க. கண்டிப்பா இந்த வேலையை யாராவது ஆரம்பிங்க.
சென்ற தலைமுறையில் அப்பான்னாலே
சிம்ம சொப்பனம் தான். ஒரு ஆரோக்கியமான
புரிதல், உறவு இல்லை. மதிப்பு,மரியாதை கொஞ்சமே
கொஞ்சம் பாசம் தான் இருந்தது.

தான் வளர்ந்து பெரியவனாகும்போது தந்தையின்
நிலை புரிந்து தந்தையின் மீது அள்வு கடந்த பாசம்
உண்டாகியது.

இப்போதோ தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே
நெருக்கம் அதிகம். ஃப்ரெண்ட்லியான அப்பாக்கள்தான்
இப்போது அதிகம்.

பிள்ளை வளர்ப்பில் தந்தைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
முல்லை அந்த பதிவில் சொல்லியிருப்பது போல
மனைவியின் நிலையை புரிந்து கொண்ட கணவன்கள்
முக்கியம். அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தை
வளர்ப்பு சாத்தியமாகும்.

உங்களின் அனுபவங்கள் பலருக்கும் உபயோகமாக
இருக்கும்.

இந்த வலைப்பூவிலேயே எழுத விரும்பினாலும்
சந்தோஷமே.(நான் பாட்டுக்கு மாண்டிசோரி பதிவுகள்
மட்டும் போட்டுட்டு போறேன்:))

மொத்தத்தில் அப்பாக்கள் களத்தில் சீக்கிரம்
குதித்து ஆவன் செய்ய வேண்டும்.

விருப்பம் இருப்பவர்கள்
parentsclub08@gmail.com மடலிடவும்.




Charlie Hinton (எடி மர்ஃபி) Kim Hinton அவரின் மனைவி
இருவரும் வேலைப்பார்ப்பவர்கள். சார்லியின் மனைவி ஒரு
வக்கீல்.
கண்டிப்புக்கு பேர்போன சாப்மென் அகெடமியில் தனது
மகனை சேர்க்கின்றனர். இதை நடத்துவது கண்டிப்பும் கறாரும்
மிக்க திருமதி.Harridan.

சார்லி வேலை பார்க்கும் பிரிவு மூடப்பட வேலையை இழக்கிறார்.
6வாரங்கள் வேலைக்காக அலைந்து திரிந்து வெறுத்துப்போகிறார்.
தனது இரு நண்பர்கள் Phil & Marvin உதவியுடன் டே கேர் செண்டர் ஒன்றை தன்
வீட்டிலேயே திறக்கிறார்.





சாப்மென் அகெடமியை விட ஃபீஸ் குறைவாக இருந்தாலும்
தரத்தில் உயர்ந்தாக இருக்கிறது சார்லியின் செண்டர்.
இதனால் பெரும்புகழ் அடைகிறது அவரது செண்டர். சாப்மென்
அகெடமியின் புகழ் மங்குகிறது.


இதனால் கோபமடைந்த Harridan அந்த டே கேர் செண்டரை
மூட என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளீலும்
ஈடு படுகிறார். குழந்தைகளுக்கு சேவை நிறுவனத்தின் தரம்
குறைவாக இருப்பதாக புகார் செய்கிறார். Mr. Cubitz குழந்தை
நல சேவை நிறுவனதின் இயக்குநர் சார்லியின் செண்டரில்
இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி அவை நீக்க வைக்கிறார்.


தனது வீட்டிலேயே டே கேர் செண்டர் நடத்தும் சார்லி,
அதில் அதிகமான பிள்ளைகள் இருப்பதால் வேறு இடத்திற்கு
மாற்ற வேண்டுமென Mr. Cubitz கூறுகிறார். ஒரு இடத்தை
வாங்க நினைக்க "Rock for Daddy Day Care." எனும் பெயரில்
நிதி வசூலிக்க விழா ஒன்று நடத்துகிறார் சார்லி.


இதை அறிந்த சாப்மென் அகெடமியின் Harridan மற்றும்
அவரது வேலை ஆட்கள் அனைவரும் சேர்ந்து அந்த
விழாவை நடக்க விடாமல் என்னென்ன செய்ய இயலுமோ
அவ்வளவும் செய்கிறார்கள். நிதி வசூலிக்க முடியாததால்
கட்டிடத்தை வாங்க இயலாமல் போகிறது.


சார்லிக்கும் அவரது நண்பர்கள் இருவருக்கும் வேறு
வேலை கிடைக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள தயாரானபோது
சாப்மென் அகெடமியின் Harridan தானே டேடி டே கேரை
வாங்கிக்கொள்வதாக சொல்கிறார்.





வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் சார்லிக்கு மனது
அதில் ஒட்டவில்லை. தான் பார்க்க வேண்டிய வேலை
இதுவல்ல என்பதும் தன் மனம் டேடி டே கேர் செண்டரை
சுற்றியே இருக்கிறது என்பதையும் உணர்ந்து வேலையை
விட்டு சாப்மென் அகெடமிக்கு சென்று அங்கிருக்கும்
தனது செண்டர் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் பேசி
திரும்பவும் டேடி டே கேர் செண்டரை துவக்குகிறார்.


இந்த முறை டேடி டே கேர் செண்டர் மிக வெற்றிகரமாக
நடைபெறுகிறது இதன் புகழால் சாப்மென் அகெடமியை
மூடவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு வேலை பார்ப்பவர்கள்
சார்லியிடம் வந்து சேருகிறார்கள்.

******************************

எழுதியவர் Geoff Rodkey, இயக்கியவர் Steve Carr.
மே 9 2003 ஆண்டு திரையிடப்பட்டது.

தயாரிப்பு Revolution Studios for Columbia Pictures.

தாயுமானவராக தந்தையும் பிள்ளையை பேணி வளர்க்க
முடியும் என்பதை நகைச்சுவாயாக சொல்லியிருக்கும் படம்.



எடி மர்பிக்கும் அவரது மகனுக்கு இடையேயான காட்சிகள்
படு சுவாராசியம். கட்டுகோப்பான பள்ளிகளில் பிள்ளைகள்
கற்பது என்பதே கிடையாது. சிட்டு போல் துள்ளித் திரிகையில்
அவர்கள் கற்பது ஏராளம் எனும் செய்தியைச் சொல்லும் படம்.

தந்தையர்கள் அனைவருக்கும் பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள்
சார்பில் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்.


மகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் ... துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற மழலையின் மனசு வேண்டும்...
இறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்.....

- சாக்ரடீஸ்.




குடும்பம் என்ற கூட்டில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யனமான உணர்வுகள். அதுவும் குழந்தைகளுடனான உலகம் சற்றே வித்தியாசமானது. மிகவும் மகிழ்ச்சியானது , கவலையில்லாதது , வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது.



அங்கும் பொறாமை, கோபம், ஏக்கம், துக்கம் உண்டு அதன் ஆயுள் குறைவு , மகிழ்ச்சி மட்டுமே அங்கு சாகா வரம் பெற்றது. அப்படியொரு மகிழ்ச்சியான அனுபவத்தின் ஊடே ஒரு ஏமாற்றமும் கவலையும் கொண்ட சிறு பெண்ணின் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட உணர்வுகளே
" The White Balloon "



ஈரானிய புத்தாண்ட்டு கொண்டாட்டங்களுக்காக கடை வீதியில் பல வித பொருட்களையும் புதிய உடைகளையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேருகிறார்கள் ரசியாவும் அவளது தாயும். தான் வெகு நாளாக கடை வீதியில் பார்த்து வைத்திருக்கும் அழகிய குண்டு தங்க மீன் வேண்டும் என்று சினகி கொண்டே எதையும் ரசிக்காமல் கூடவே வருகிறாள் ரசியா.



ஏற்கனவே வீட்டிலுள்ள தொட்டியில் வண்ண மீன்கள் உள்ளதென்றும் இப்போது 100 ரூபாய்க்கு மீன் வாங்கி செலவழிக்க வேண்டாமே, இருப்பது போதும் என்கிறாள் தாய். ஆனாலும் அதெல்லாம் விட அந்த குண்டு மீன் தான் தனக்கு பிடித்ததென்றும் அது தண்ணீரில் நீந்தும் போது உடலசைப்பில் டான்ஸ் ஆடுவது போலுள்ளதென்று அடம் பிடிக்கிறாள் ரசியா.




ஏறகனவே நிறைய பணம் செலவழித்து விட்டதாகவும் புத்தாண்டிற்கு வீட்டிற்கு வருபவர்களை உபசரிக்கவும் பரிசு பொருட்கள் வாங்க மட்டுமே சிறிது பணம் உள்ளதென்றும் கூறுகிறாள் தாய். தன் அண்ணன் அலியிடமும் முறையிட்டு அழுகிறாள் ரசியா. தங்கை மீதுள்ள பாசத்தால் அவள் அழுவதை பொறுக்க முடியாமல் தாயிடன் சென்று குழைந்து பேசி தாயை சம்மதிக்க வைக்கிறான் அலி.




தாயும் இப்போது சில்லறை காசில்லை என்றும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டாக உள்ளதென்றும், சிறிது நேரம் கிடைத்ததும் மாற்றி தருவதாக சொல்கிறாள் தாய். தாயின் சம்மதம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வண்ண மீனின் விலை 100 ரூபாய் என்றும் தானே கடைக்கு சென்று வாங்கி கொண்டு மீதி பணத்தை கொண்டு வருவதாக சொல்லி ஒட்டம் பிடிக்கிறாள் ரசியா.



“ பணத்தை தொலைத்து விடுவாய்” பொறுமையாய் இரு.. நானும் வருகிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் 500 ரூபாய் நோட்டுடனும் மீன் வாங்க கண்ணாடி குடுவையுடனும் தெருக்கோடியை கடந்து விட்டாள் ரசியா.



போகும் வழியில் பாம்பு வித்தைகாட்டி கூட்டம் சேர்ந்திருக்க எட்டி பார்க்கிறாள் ரசியா. தந்திரமாய் பேசி பணத்தை அபகரிக்கிறான் வித்தை காரன். பணத்தை திருப்பி கொடுக்குமாறு அழுது புலம்ப தொடங்குகிறாள் ரசியா. அவள் அழுகையை பார்த்து இரக்கப்பட்டு பணத்தை திருப்பியும் தந்து விடுகிறான்.



பணத்தை குடுவையில் போட்டு கொண்டு பணத்தை மீட்ட மகிழ்ச்சியில் மார்க்கெட் பகுதியை நோக்கி விரைந்து ஒடுகிறாள் ரசியா. வண்ண மீன் விற்கும் கடையையும் அடைகிறாள். ஆனால் அவள் பார்த்து வைத்திருந்த குண்டு வண்ண மீன் 150 ரூபாய் என்றும் 100 ரூபாய்க்கு சிறிய மீன் மட்டுமே தர முடியும் என்கிறார் கடைக்காரர். தன்க்கு அதே மீன் 100 ரூபாய்க்கு தர வேண்டும் என்று கெஞ்சுகிறாள். கடைக்காரும் முதலில் கறாராக மறுக்கிறார். பின்னர் மனம் மாறி தர சம்மதிக்கிறார்.



குடுவையில் பார்த்தால் பணத்தை காணவில்லை. அதிர்ச்சியும் அழுகையும் பீறிட்டு செயவதறியாது திகைக்கிறாள் ரசியா. நிலைமையை கடைக்காரரிடம் சொல்லவே, வந்த வழியிலேயே சென்று தேடுமாறு சொல்கிறார் கடைக்காரர்.



பதட்டத்துடனும் பயத்துடனும் வந்த வழியிலேயே தேடி கொண்டு வருகிறாள். மார்க்கெட் முழுவது ஒரே கூட்டம். புத்தாண்டை கொண்டாட ஆடி பாடி சென்று கொண்டிருக்கிறார்கள் மக்கள்.


வரும் போது கேக் கடையருகே சிறிது நேரம் வேடிக்கை பார்த்தது நினைவிற்கு வரவே அங்கே தான் தவற விட்டிருக்க வேண்டும் என்று யூகித்து வந்து சேர பணம் பூட்டிய ஒரு கடையின் அருகே கிடப்பதை பார்த்து பூரிக்கிறாள் ரசியா. பணத்தை ஒடி சென்று எடுப்பதற்குள் வேகமாக வந்த ஸ்கூட்டரால் பணம் பறந்து போய் கடையின் வாயிலருகே உள்ள வற்றிய சாக்க்டைக்குள் விழுந்து விடுகிறது.



இரும்பு கம்பிகளால் மூடப்படிருக்கும் சாக்கடையை எட்டி பார்க்கிறாள் ரசியா. உள்ளே பணம் விழுந்து கிடக்கிறது. கவலையும் பயமும் அதிகரிக்க வேதனையோடு எப்படி பணத்தை எடுக்க வழி தெரியாது திகைக்கிறாள்.



வெகு நேரமாகியும் வீடு திரும்பாத தங்கையை தேடிக்கொண்டு வந்தும் விடுகிறான் அண்ணன் அலி. அவனிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறாள் ரசியா. பணத்தையும் காட்டுகிறாள். அவளை கண்டபடி திட்டுகிறான் அலி.



பக்கத்து டெய்லர் கடையில் சென்று விசாரிக்க, பூட்டிய கடையை திறந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென்றும் கடைக்காரர் காலையில் தான் கடையை மூடி விட்டு புத்தாண்டுக்காக ஊருக்கு கிளம்பியதாகவும் சொல்கிறார் டெய்லர். முதலில் அவரும் பணத்தை எடுக்க முயற்ச்சிகிறார். எதுவும் நடக்கவில்லை..



தாய்க்கு என்ன பதில் கூறவது என்று இருவரும் வேதனை படுகின்றனர். அந்த வழியே வந்த ராணுவ வீரனும் இவர்களுக்கு உதவ முயற்ச்சிக்கிறான். பணத்தை எடுக்க பல வித முயற்ச்சிகள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை. பணத்தை எடுக்கவும் முடியவில்லை.




டெய்லரும் பணியை முடித்து விட்டு கடையை மூடி விட்டு செல்லும் முன் பூட்டிய கடையின் கடைக்காரரின் விலாசத்தை அறிந்து கொண்டு அவரை அழைத்து வர ஒடுகிறான் அண்ணன். பூட்டிய கடையின் அருகேயே அமர்ந்து கொண்டு பணத்திற்கு காவலாக இருக்குமாறு ரசியாவிடம் கூறிவிட்டு செல்கிறான் அலி.



அவரும் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருப்பதாகவும் வந்த்தும் அனுப்பி வைப்பதாகவும் குடும்பத்தினர கூறவே, மீண்டும் திரும்ப வந்து விடுகிறான்.



அப்போது பலூன் விற்கும் சிறுவன் ஒருவனை பார்த்ததும் அண்ணனுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அவன் பலூன்களை கட்டி வைத்துள்ள பெரிய குச்சியால் எடுத்து விடலாம் என்றெண்ணி அந்த குச்சியை கொண்டு முயற்ச்சிக்கின்றனர். அதுவும் நடக்கவில்லை.




பபுள்கம் போன்று ஏதாவது ஒட்டு பொருள் இருந்தால் அதை வைத்து எடுக்கலாம் என்று யோசனை சொல்கிறாள் ரசியா. பபுள்கம் வாங்க கூட இருவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. பலூன் விற்பவனிடமே கடனாக கேட்கிறான் அண்ணன். அவனுடன் இப்போது தான் விற்பனைக்கு வந்ததாகவும் இன்னும் போணியாகத்தால் கையில் காசு இல்லை என்று கூறி விட்டு நடையை கட்டுகிறான்.




மேலும் மேலும் நேரமாவதாலும், வானமும் இருட்டி கொண்டு மழை வரும் போல இயற்கையும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் குழம்பி போகிறார்கள் அண்ணனும் தங்கையும்.




நடையை கட்டிய பலூன்காரன் நிறைய பலூன்களை விற்று முடித்து குழந்தைகளுக்காக இரக்கப்பட்டு பபுள்கம் வாங்கி கொண்டு திரும்பி வருகிறான். அவன் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சியில் குதிக்கின்றனர் அலியும் ரசியாவும்.



பலூன்காரனின் குச்சியின் துணையை கொண்டு பணத்தையும் எடுத்து விடுகின்றனர். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் இருவரும் ஒடிச்சென்று 100 ரூபாய்க்கு ரசியா விரும்பிய தங்க மீனையும் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி ஒடுகின்றனர்.



விற்காமல் போன ஒரே வெள்ளை நிற பலூன் காற்றில் அசைந்து கை காட்டி செல்வது போல் திரைப்பட்ம் நிறைவடைகிறது...



Abbas Kiarostami யின் திரைக்கதையை இயக்கியிருப்பவர் Jafar Panahi . இயக்குநரின் முதல் திரைப்படம் இது.

கிட்டதட்ட 90 நிமிடங்களே ஒடக்கூடிய இத்திரைப்ப்டத்தை குழந்தைகளை கொண்டு படைத்திருக்கிறார்கள் மிகச்சிறந்த படைப்பாளிகளான இவ்விருவரும். மிக இயல்பாக குழந்தைகள் நடித்திருப்பதும், காட்சிகளை அதற்கு ஏற்றார்போல் சித்தரித்துள்ளதும் இயக்குநரின் திறமைக்கு இந்த திரைப்படம் ஒரு சான்று.



1995 ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் பரிசை அள்ளியது.கனடா, டோக்கியோ திரைப்பட விருதுகள் என்று பல பரிசுகளை வாரி குவித்ததுடன் உலகின் பல விழாக்களில் பங்கு பெற்றது.



Abbas Kiarostami மஜித் மஜிதியை போன்றே குழந்தைகளை பின்னணியில் பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கியவர்.



கடுமையான ஈரானிய தணிக்கை இருந்தும் அதை மறுக்க முடியாமல் அந்த கட்டுபாடுகளிடையே மிகச்சிறந்த திரைப்படங்களை உருவாக்குபவர். ஒரு வேளை இந்த கட்டுபாடுகள் தான் மிக்சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதன் மன நிலையை தோற்று விக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.



பெரியவர்களை விட குழ்ந்தைகள் குறைவாகவே எதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்வின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. குழந்தைகளை மறைந்து வாழும் ஞானிகள் என்று தான் கூறுவேன். அதனால் தான் சீன தத்துவஞானியான லா ஒட்ஷேவிற்கு வயதான குழந்தை என்று புனைபெயர் இருக்கிறது. ஒரு சூபி ஞானியைப் போல குழந்தைகள் அந்த கணத்தை மட்டும்தான் விரும்புகிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்லும் Abbas Kiarostami கூற்றிற்கு இத்திரைப்படம் ஒரு தன்னிலை விளக்கம்.


சந்தர்ப்பம் கிடைத்தால் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிகச்சிறந்த திரைப்படம்.


Please Don't Miss.....


எண்ணெய் கடைக்காரர், பால்காரர், தயிர்க்காரம்மா
ஆகியோர் சிந்தாமல் சிதறாமல் லாவகமாக
வேலை பார்க்கும் அழகே அழகு!!



மாண்டிசோரி கல்வியில் POURING EXERCISE
என்று ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு
பாத்திரத்திற்கு சிந்தாமல் ஊற்றக் கற்றுத் தருவோம்.




இதுல என்ன கற்க இருக்குன்னு கேக்கறீங்களா?

கவனமாக இருந்தால்தானே கீழே சிந்தாமல்
வேலை பார்க்க முடியும்? கவனத்தை
ஒருங்கிணைக்க குழந்தை கற்கிறது.

கண்களுக்கு பயிற்சி.

சின்ஞ்சிறு கைகளுக்கு கொஞ்சமாக
பளு தூக்கும் பயிற்சி

பரிட்சையில் தோற்றவர்களின் மனதை மயிலிறகால்
வருடும் நர்சிம் அவர்களின் இந்தப் பதிவை
படித்திராதவர்கள் தயவு செய்து படித்து விடுங்கள்.

தேர்வில் தோற்றவர்களுக்கு

தேர்வில் தோற்றவர்களை திட்டுவது,
புரட்டி எடுப்பது(அடிதான்), அடுத்த வரும் வருடங்களில்
மதிக்காமலேயே இருப்பது இவைகள் தான் நடக்கும்.
தோல்வி தந்த வலிகளைத் தவிர ஒன்றுக்கும் உதவாதவனாக
நடத்தப்படும்போது வரும் வலிகள் அதிகம்.


தேர்வில் தோற்பதற்கு சரியாக படிக்காமல்
இருப்பது மட்டும் காரணம் இல்லை.

நான் +2 படித்த பொழுது +1 & +2 இரண்டு வருடங்களும்
ஆங்கிலத்தில் 200க்கு 195 தான். வேண்டுமென்றே
என் டீச்சரி அந்த 5 மார்க் குறைத்து போட்டு வைப்பார்கள்.
இரண்டு வருடமும் நான் தான் பள்ளியிலேயே ஆங்கிலத்தில்
அதிக மதிப்பெண் என்பதற்காக பரிசு கூட வாங்கியிருக்கிறேன்.

பப்ளிக் பரிட்சையில் நான் ஆங்கிலத்தில் எங்கள் ஊரிலேயே
முதலாவதாக வருவேன் என்று எங்கள் டீச்சருக்குள்ளேயே
பெட்டிங் எல்லாம் நடந்தது!!! ஆனால் ரிசல்ட் வந்த போது
செம அதிர்ச்சி. நான் 126 தான் எடுத்திருந்தேன். எங்கள்
பள்ளி மாணவி என்னை விட 50 மார்க் அதிகம் எடுத்திருந்தாள்.
அந்த பொண்ணா சான்சே இல்லையே!! என்று டீச்சர்களும்
சொன்னார்கள்.

அம்மா தான் கல்வித்துறையில் இருக்காங்களே.
யார் யாரையோ பிடித்து என் பேப்பரை மறுபரிட்சார்த்தர்த்துக்கு
ஏற்பாடு செய்து பார்த்தால் என் பேப்பரில் என் கையெழுத்தே
இல்லையாம்!!! என் பேப்பரை விலைக்கொடுத்து வாங்கி
வேலை நடந்ததை கண்டுபிடித்து எடுத்த பிறகுதான் என்
மன அழுத்தம் குறைந்தது.

இது சாத்தியமா என்று கேட்காதீர்கள். மிக சத்தியமாக
சாத்தியம்.

இதைத் தவிரவும் மதிப்பெண் குறையவோ, தோல்வி
அடைவதற்கோ இருக்கும் பொதுவான காரணங்கள்
சிலவற்றை பார்ப்போம்:

1. அதிக எண்ணிக்கையில் தாள்களை திருத்துவதாலும்
அவர்களுக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸாலும் ஆசிரியர்கள்
கவனக்குறைவாக இருத்தல்.

2. அவசரத்தில் எழுதுவதால் கையெழுத்து புரியாமல்
இருந்தால் அந்த பேப்பருக்கு மதிப்பெண் கிடைப்பது அரிது.

3. பரிட்சைக்கு படிக்கும் பிள்ளைகளுக்கு சரியான
சூழ்நிலையை தரவேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள்,
எப்போதும் சீரியல் பார்ப்பதை அம்மாக்கள் விட்டுக்கொடுக்க
வேண்டும்.

4. இப்படி சொல்கையில் இன்னொரு கஷ்டமும் இருக்கு.
எனது உறவில் ஒரு பையன் +2 படிக்கிறான் என்பதற்காக
கேபிள் கனெக்‌ஷன் கட், இண்டர்நெட் கட், வெளியே
போகக்கூடாது என ஏகப்பட்ட நோக்கள். பாவம்
அதிகம் டென்ஷனாகி பயலுக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய் அவதிப்பட்டான்.

5. 10 மற்றும் +2 பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு
பள்ளியில் தரப்படும் ஸ்ட்ரெஸ் அதிகம். அந்த நிலையில்
வீட்டிலும் அவனுக்கு ரிலாக்ஸாக்கிக்கொள்ள வாய்ப்பில்லை.
வெளியே சென்று விளையாடவும் கூடாது எனும் பொழுது
அந்த மன அழுத்தமே படித்ததை கூட சரியாக எழுத
முடியாமல் ஆக்கிவிடுகிறது.

6. என்னுடைய இந்தப் பதிவையும் படித்து பாருங்கள்.

7. பெண், கார், போதை, சிகரெட் என எது கேட்டாலும் சரி
ஆனால் எனக்கு 90க்கு மேல் மார்க் மட்டும் கொண்டுவா என்று
ஒரு தந்தை கேட்டதாக ஒரு புத்தகத்தில் படித்த போது
அதிர்ந்தேன். (சத்தியமாக இந்த வார்த்தைகள் படித்தவை.
என் கற்பனை அல்ல)

8. போஷாக்கான உணவுகள், ரிலாக்ஸாக்கிகொண்டு படிக்கும்
வகையில் டைம் டேபிள் போட்டுக்கொண்டு நிம்மதியான
தூக்கம் என பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

9. அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுப்பதை விட
பெற்றோராக நம் சப்போர்ட் மிக முக்கியம். நானிருக்கிறேன்
என்ற தைரிய வார்த்தை தரும் 100 பாட்டில் குளுகோஸின்
சக்தியை.

10. 100 சதவிகிதம், 90 சதவிகித்திற்கு மேல் எடுக்க வேண்டும்,
அதுதான் தனக்கு பெருமை என்று சொல்வதை விடுத்து
குழந்தையால் என்ன செய்ய முடியும்? அவனுடைய தகுதி என்ன?
என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.


//ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..//

இப்படி ஒரு பின்னூட்டம் நர்சிம் அவர்களின் பதிவில்
என்ன செய்யலாம்? உங்க கருத்தையும் சொல்லுங்க.

சிறுவனாக நடிச்சாரே சிவா
இப்போ எங்கிருக்காருன்னு பார்க்க எல்லாருக்கும் அவா
முன்னெல்லாம் வீக்கெண்ட் ஜொள்ளு வடியும் அவர் பதிவுல
இப்போ தினம் தினம் அசடோ அசடு வழியுதாம் வீட்ல


இவர் பதிவு முன்னெல்லாம் சும்மா டெர்ரரு
இப்ப இவரை பாத்து எல்லாரும் சொல்றாங்க டன்டன்னா டர்ருரு
இவரு விட்ட ஜொள்ளுல உண்டாச்சு பெரிய ஆறு
கல்யாணத்தப்புறம் இவர் போட்ட பதிவோ வெறும் ஆறு

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லிக்கிட்டாரு அவரு யூத்து
கல்யாணத்துக்கு அப்புறம் அவர் பதிவு வாங்குது வெறும் காத்து
வருஷம் பலவும் ஆகிப்போச்சய்யா... இன்னுமாய்யா நீ யூத்து
இருந்தாலும் இப்ப நாங்க சொல்றோம் உனக்கு பொறந்தநாள் வாழ்த்து


( போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கார்க்கிக்கே )

கவிதையில் வாழ்த்தியது*ஜீவ்ஸ்*

நாம் பொதுவாக செய்யும் தவறு பிள்ளைகளை
சமையலறைக்குள் நுழைய வி்டுவதே இல்லை.

ஆனால் அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகள்
செய்ய கற்றுக்கொடுப்பது நல்லது.
வீட்டு வேலை செய்து பழகும் பிள்ளைகளுக்கு
கவனம் அதிகமாக இருக்கும். இது அவர்களின்
படிப்பிற்கு மிகவும் உதவியாய் இருக்கும் என
கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதோ இந்த குழந்தை செய்வது போல்
கேரட்,வெள்ளரிக்காய் போன்றவற்றிற்கு
தோல் சீவ சொல்லிக்கொடுக்கலாம்.



கைகளை கழுவிக்கொண்டு தோல்சீவியால்
அழகாக சீவ பழக்கலாம்.




சீவிய தோல்களை எடுத்து பதமாக
குப்பைத் தொட்டியில் போடப் பழக்குவதால்
சுத்தத்தை சொல்லி கொடுக்கிறோம்.



சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒரு காட்சி.

அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க
ஜெனிலியா ”க்ரீச்” என்ற சப்தத்துடன் நாற்காலியை
இழுத்து உட்காருவார்.

அப்போது அங்கே இருக்கும் அனைவரின் முகத்தையும்
ஒருமுறை நினைவுக்கு கொண்டுவாருங்கள்.

ஆமாம். நாராசமாக இருக்கும். இது நாகரீகமான
முறை அல்ல.

மாண்டிசோரி கல்வியில் 2 1/2 வயது குழந்தைக்கே
நாங்கள் நாற்காலியை எப்படி எடுக்க வேண்டும்
என்று கற்றுக்கொடுத்து விடுவோம்.

நாற்காலியை இழுக்காமல் இப்படி தூக்கி
வைப்பதுதான் சரியான முறை.
இரு கைகளாளும் இந்தக் குழந்தை எப்படி
பேலன்ஸ் செய்கிறது பாருங்கள்.


நாமும் இம்முறையை பின்பற்றி நாற்காலியை
இழுக்காமல் தூக்கி வைப்பது மிக முக்கியம்.

நம்மை பார்த்துதானே பிள்ளை கற்கிறது??

சரி இதனால் குழந்தை என்ன கற்கிறது என்று
பார்ப்போம்.

க்ரீச் சத்தத்துடன் நாற்காலியை இழுக்காமல்
அழகாக தூக்க பழகும்.

கால்களின் பலத்தால் முறையாக நடக்க பழகுகிறது.

கைகளுக்கு, சதைக்கு பளு தூக்கும் பயிற்சி

கண் பார்த்து கை செய்யும் பயிற்சி

தனித்தன்மை, தன்னால் தனியாக செய்யமுடியும்’எனும்
தன்னம்பிக்கை.




சுற்றுபுறத்தை பற்றிய அக்கறை(சத்தம் எழுப்பாமல் இருத்தல்)

கவனமாக இருத்தல்

நாற்காலியை முறையாக கையாளக் கற்பதில் எத்தனை
கற்றல் நடக்கிறது பாருங்கள்!!!

வேலைப்பளு, விருந்தினர் வருகை ஆகிய காரணங்களால்
இந்தத் தொடரை தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு
வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை எனது வலைப்பூவிலும்,இங்கேயும்
வந்த இந்தத் தொடர் இனி இங்கே மட்டும்
தொடரப்படும்.

முந்தைய பதிவுகளின் லிங்குகள் இங்கே
கொடுத்திருக்கிறேன்.

முதல் பதிவு

அழைப்பு மணி

சுத்தம் சுகாதரம்

சுத்தம் பாகம்: 2

சுத்தம் பாகம் 3

Dressing/undressing

துணி மடித்தல்

எறும்புக்கு இணையாக
வரிசை


show lace கட்டுதல்

இனி இந்தத் தொடர் தொடரும்.

மற்ற பாடங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

குறும்புக்காரக் குழந்தைகள் நமது பார்வையில் வால் குழந்தைகள், அடங்காபிடாரிகள், முந்திரிக்கொட்டைகள், சொல்பேச்சு கேளாதோர், உருப்படாதது.....

ரஷ்ய ஆசிரியர் அமனஷ்வீலி அவர்களின் பார்வையில்:
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக்கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்.

குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள், விளையாட்டுத்தனமற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள், கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்ப்பார்கள்.

குறும்புக்காரக் குழந்தைகள் நன்கு கலந்து பழக க் கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரையெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும்போதுதான் குறும்புகள் பிறக்கின்றன.

குறும்புக்காரக் குழந்தைகள் செயல்முனைப்பான கற்பனையாளர்கள். இவர்கள் சுற்றியுள்ளவற்றை சுயமாக அறியவும், மற்றியமைக்கவும் விழைகின்றனர்.

குழந்தைகளின் குறும்புகள்- வாழ்க்கையின்மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.

குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையான குழந்தைகள். குறும்புக்காரக் குழந்தைகளை தண்டிக்கலாம், ஆனால் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.

குழந்தைகளைப் பற்றிய உங்களது பார்வையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

இது ‘குழந்தைகளின் எதிர்காலம்’ எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர்.ஷ.அமனஷ்வீலி.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்