அதென்னவோ பல வீடுகளில் நிலமை இதுதான்.
அந்த வீட்டு தங்கமணி இப்படித்தான் பாடுவாங்க.
“அழைப்பு மணி எந்தன் வீட்டில் கேட்டால்
அடுக்களையில் இருந்தாலும்
ஓடி நாந்தான் வந்து பார்ப்பேன்”
ஓ புரிஞ்சிடுச்சா! கரெக்ட்
நாம் பார்க்கப்போகும் பாடம் ANSWERING THE CALL.
அழைப்புக்கு பதில் சொல்லுதல்.
(முக்கியமான விஷயம். இந்த பாடத்தை
எல்லாம் பிள்ளைகளிடம் விளையாட்டா
கொண்டு போகணும்.)
வா கண்ணா நாம் இப்ப ஒரு விளையாட்டு
விளையாடலாம்னு சொல்லி ஆரம்பிங்க.
தேவையான பொருட்கள்:
மணி.
கதவுக்கு பின்னால் நாம் நின்று கொள்ள வேண்டும்.
குழந்தையிடம் மணியைக்கொடுத்து அடிக்கச் சொல்லவும்.
மணியோசை கேட்டதும் மெல்லக் கதவைத் திறந்து
இன்முகத்தோடு,”யாரு வந்திருக்காங்க?” என் கேட்க
வேண்டும்.
இப்பொழுது பிள்ளை கதவுக்கு பின்னால் மணி்
நம் கையில்.
அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இருந்தால்
அவர்களையும் சேர்த்துக்கொண்டு விளையாடலாம்.
கதவை தாளிடக்கூடாது என்று சொல்ல மறக்காதீர்கள்!
சரி இந்த அழைப்புக்கு பதில் சொல்லுதலால் என்ன
பயன்??
1. குழந்தைக்கு கேட்கும் திறன் அதிகமாகிறது.
கேட்கும் தன்மையை இங்கே உபயோகப் படுத்துகிறோம்.
2. விருந்தோம்பலை, விருந்தினரை வரவேற்றலை
சிறு வயதிலேயே விதைத்துவிடுகிறோம்.
3. கதவைத் திறக்க கைகளை உபயோகிப்பதால்
கைகளை உபயோகிக்கும் திறனை அதிகமாக்குகிறது.
4. கதவுக்கு பின்னே இருந்து வருதல் போன்ற
செய்கைகளால் சின்னச் சின்ன உடற்பயிற்சிக்ள்
செய்யப்படுகிறது.
5.கை கால்களின் உந்து சக்தி (MOTOR ACTIVITY)
அதிகமாகிறது
இப்படி பழகிய பிள்ளை அழைப்பு மணி
அடித்தால் அடுத்தவர் வந்து கதவு
திறக்கட்டும் என்று காத்திராமல்
இன்முகத்தோடு கதவைத் திறந்து
பாராட்டைப் பெறும்.
குறள் வழிக்கதைகள்
5 years ago
16 comments:
ஹையா எங்க வீட்ல கதவ திறந்துவிடுவது எப்பவும் நான்தானே...
நல்ல ஆரம்பம்..
வாழ்த்துக்கள்..
புதிய முயற்சி பாராட்டுகள்
பாராடுக்கள் நிலா செல்லம்.
நன்றி வண்ணத்துப்பூச்சியாரே
நன்றி சொல்லரசன்.
Vaazhththukkal!
Nandri!
என் ஒரு வயது குழந்தையை சிறுவர் பூங்காவுக்கு அழைத்துச் செல்லலாம் என்று என் மனைவி சொன்னாள். அவளுக்கு இப்போது என்ன தெரியும்? என்று நான் கேட்டாலும், அழைத்துச் சென்றேன். அங்கு சென்றபிறகுதான் நான் எவ்வளவு தவறாக நினைத்துவிட்டேன் என்று உணர்நதேன். அங்கு உள்ள மயில், குரங்கு வாத்து, மான் என்று அனைத்தையும் பார்த்துவிட்டு அவள் மகிழ்ந்த அந்த கணம்... ச்சே.. என்னையே நான் பலமுறை திட்டிக்கொண்டேன். நீங்களும் தவறவிடாதீர்கள்! தங்களின் இந்த முயற்சியை நானும் பின்பற்ற ஆரம்பித்து விடுகிறேன். நன்றி!
வாங்க அன்புமணி,
இதைத்தான் நாங்கள் அனுபவமாக உணர்ந்து அறிதல் என்போம்.
பார்க்கு மட்டுமல்ல, பீச், கோவில்கள், மருத்துவமனை என எங்கு அழைத்துச் சென்றாலும் பிள்ளைகள் நிறைய கற்பார்கள்.
அன்பு பெற்றோர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்லும்பொழுது அந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லி அழைத்துச் செல்லுங்கள். மருத்துவமனையில் ஓடிப்பிடித்து விளையாடும் குழந்தைகளை பார்க்கும் போது அவர்களை பெற்றவர்களை நல்லதா நறுக்குன்னு கேக்கத்தோணும்.
நல்ல கல்வி :)
எங்க பொழில்குட்டி இப்பவே கதவ திறப்பதுல ஆர்வமா அலையுது! :)
லாக் செய்யும் செயினை எனக்கு முன்பே அவர் பிடித்து இழுப்பார் :)
The need of the hour post!!
good start...
anbudan aruna
அருமையான ஆரம்பம்.
எட்டிப் பார்க்கும் சுட்டிப் பையன் படமும் சூப்பர்.
எங்க பொழில்குட்டி இப்பவே கதவ திறப்பதுல ஆர்வமா அலையுது!
சந்தோஷமா இருக்கு.
The need of the hour post!!
good start...//
நன்றி அருணா
அருமையான ஆரம்பம்.
எட்டிப் பார்க்கும் சுட்டிப் பையன் படமும் சூப்பர்.//
நன்றி
Post a Comment