பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

நாம் பள்ளிகளில் படிக்கும் பொழுது வகுப்பிலிருந்து
வெளியில் எங்கு சென்றாலும் கிளாஸ் லீடரோ,
டீச்சரோ கொடுக்கும் குரல்,”எல்லாம் லைனா
போங்க!!” என்பது தான்.


நம் வகுப்பிலிருந்து பீடிக்கு, பாட்டுகிளாஸிற்கு
என எங்கு சென்றாலும் வரிசையாக சென்று
வரிசையாக வரவேண்டும். உயரத்தை
வைத்து யார் முதலில் நிற்க வேண்டும் என
சொல்லிக்கொடுப்பார் பீடி டீச்சர்.

பீடி வகுப்புக்களின் போது ஒரு மாணாக்கனுக்கும்
இன்னொரு மாணாக்கனுக்கு இடையே ஆன
தூரத்தை கைகளால் அளந்து நிற்க வேண்டும்.

தினமும் அசெம்பிளிக்கு செல்லும் பொழுது
வரிசை தவறினாலோ, சரியாக நிற்கா
விட்டாலோ அவ்வளவுதான். முழங்கால்
போட்டு பனிஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்கள்.

சரி ”இந்த வரிசையில் தான் செல்லவேண்டும்!”
என்ற கொள்கை பள்ளிகளில் ஏன் கட்டாயமாக்க
வைத்தார்கள்?
வளர்ந்த பிறகு வங்கி, ரயில்நிலையம் என
பொதுமக்கள் கூடும் இடங்களில் நாம்
வரிசையாக செல்லப் பழக வேண்டும்
என்பதற்காகத்தான்.

ஆனால் நம் மக்களுக்கு வரிசையில்
செல்வதெல்லாம் பிடிக்காது. கயிறு
கட்டியிருந்தாலும் தள்ளிக்கொண்டு,
முண்டியடித்து போனால் தான்
திருப்தி.!! அதுவும் வங்கிகளில்
பணம் போட ,எடுக்க என டென்ஷன்
இருந்தாலும் அடுத்தவரைப் பற்றி
கவலைப்படாமல் மேலே விழுவார்கள்.

விமான நிலையங்களில்
பாஸ்போர்ட்டில் குடியேற்றம் முத்திரை அடிக்க
நிற்கும் வரிசையில், கடவுச்சீட்டு கொடுத்திருக்கும்
நபருக்கு அவருக்கு பின்னால் நிற்கும் நபருக்கும்
இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்
என்பதால்,”ஒருவர் மட்டும்!” என எழுதியிருப்பார்கள்.

ஆனால் நிஜம் எப்படி இருக்கும் என்பது
பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
(குறிப்பாக நம் நாட்டில்)

வாஷிங்கடனில் திருமணம் நாவலில்
திரு. சாவி அவர்கள், அம்மாஞ்சி தக்களி
நூற்றதை மக்கள்.”வாராவதி மேல்
வாராவதியாக கவிழ்ந்து நின்று பார்த்ததாக
எழுதியிருப்பார்.”

எதுவாக இருந்தாலும் நம் மக்கள்
ஒருவர் மேல் ஒருவர் கவிழ்ந்து நின்றுதான்
பார்ப்பார்கள். சாலையில் ஏற்படும்
விபத்துக்களில் இவர்கள் கூட்டம் கூடி
பார்க்கும் பொழுது போதிய காற்று இல்லாத
காரணத்தால் விபத்துக்குள்ளானவர்
மயக்கமுறும் நிலமையும் ஏற்படு்ம்.


மாண்டிசோரி கல்வியில் இந்த
வரிசையில் செல்லும் பழக்கத்தை
போதிப்பது கட்டாயப் பாடம்.

வட்டமாகவோ, சதுரமாகவோ
சாக்பீஸால் வரைந்து மாணவர்களை
நிற்க வைத்து நடந்து வரப் பழக்குவோம்.









இதனால் பிள்ளைக்கு வரிசையில் செல்ல
பழக்கமாகிறது. கோட்டிற்கு மேல் நடக்க
வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதால்
கண்கள் பார்க்க கால்கள் அந்த தடம்
பிரழாமல் நடக்க பயிற்சி கிடைக்கிறது.


பிள்ளை தனது முறை வரும் வரை
பொறுமையாக காத்திருக்க பழகுகிறது.







ரயிலின் பெட்டிகள் வரிசையாக செல்லாமல்
தடம்புரண்டால் அது விபத்து. நாம் வரிசையில்
நிற்க வேண்டிய இடத்தில் வரிசையில் நில்லாமல்
போனாலும் பிரச்சனையே!

எறும்புக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் வரிசையில்
செல்ல வேண்டுமென?

அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது.


பெற்றோர் தான் குழந்தைக்கு ஒரு உதாரணம்.
வளரும் குழந்தை சுற்றுப்புரத்திலிருந்தும்
கற்றுக்கொள்கிறது.


நம்மைப் பார்த்து குழந்தை கெடாமல்
இருக்க நாமும் பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!




7 comments:

Yes, we need to tell kutties stand in Q (we even tell them what to do/play while doing) !

Ture for every Indian.. Now-a-days no one care to stop when some is crossing the road, many try to jump lane(be smart) to go first in traffic ..

VS Balajee

thanks balajee

//பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!//

இது ரொம்ப அவசியம்.

//பெற்றோர் தான் குழந்தைக்கு ஒரு உதாரணம்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

//
எறும்புக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் வரிசையில்
செல்ல வேண்டுமென?

அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது.//

அட ஆமாங்க, இதையேதான் ”சரியான வாத்துக்கள்” என நான் எடுத்த படத்தைக் காட்டி
இங்கே சொல்லியிருக்கிறேன் பாருங்கள்!

//நம்மைப் பார்த்து குழந்தை கெடாமல்
இருக்க நாமும் பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
நாம் திருந்திவிட்டால் மற்றவர்கள் திருந்திவிடப் போவதில்லை என்று நினைக்காமல், முதலில் நாம் திருந்த வேண்டும். மற்றவர்கள் திருந்துவார்களோ இல்லயோ, நம் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்கள் தானாகவே வரும்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் இப்படி கியூவில் செல்ல வேண்டும் நேர்மையாக இருக்கவேண்டும் என்றால் என் மகன் பிறக்குழந்தைகள் முன்னிலையில் ஏமாளியாய் நிற்பதை நானே பார்க்கிறேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் நம்மை கடந்து எவ்வளவோ பேர் லஞ்சம் ஊழல் துணையோடு முன்னுக்கு போய்விடுகிறார்கள். நம்மால் கூட அதனால் ஏற்படும் ஏமாற்றத்தை சமாளிக்க முடியாது போகிறது.கீயூவில் முந்தி அடித்துச் செல்லும் பிள்ளைகள் இவனை கேலி செய்யும் போது நாம் போதித்தது தவறு என்றமுடிவுக்கு வந்து விடுகிறது குழந்தைகள்.'உன்னால் தான் நான் கடைசியாக வந்தேன்,நானும் பிறரை தள்ளிவிட்டு வந்திருந்தால் ஃபர்ஸ்ட் வந்திருப்பேன்'என்று சொல்லும் போது என்ன பதில் நான் சொல்வது.சரி என்று சொல்லவில்லை அனால் பிள்ளைகளை நல்லக்குழந்தைகளாக வளர்ப்பதுகூட கஷ்டமானதுதான். நேர்மையாய் வாழ்வதே வெற்றிமேல் வெற்றிதான்' இதை குழந்தகள் புரிந்துக்கொள்வது ரொம்ப கஷ்டம்.

வாங்க ட்ரூத்,

வருகைக்கும் கருத்துக்கும் தாமதமான நன்றி

உங்க கருத்தில் பல விடயங்கள் உண்மைதான். ஆனா அதுக்காக நெகட்டீவா பாத்துகிட்டு இருக்க முடியாதே. பாசிடீவா நம்ம பிள்ளைய வளர்ப்போம்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்னு- வள்ளுவர் சொல்லி வெச்சிருக்கார்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்