6 வருடம் முன்பு அம்ருதாவின் ப்ரீஸ்கூல் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்
வாங்க பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆசிரியர்
மிக கணிவாக பேசினார்.
”உங்க பொண்ணு புது இடத்தில நல்லா
செட்டாகிட்டா” இந்தாங்க அவ ரிப்போர்ட்.
இதுல சில இடங்கள் பிளாங்கா இருக்கும்.
அவைகள் அம்ருதா கற்றுக்கொள்ள வேண்டியது.
இந்த பரிமாணம் மெல்ல நிகளும், கவலைப்படாதீர்கள்”
என்றார். ரிப்போர்ட் பார்த்ததில் DRESSING, UNDRESSING
SKILL - NIL என இருந்தது.
அந்த 21/2 வயதில் அது கற்றுக்கொடுக்க வேண்டுமென
தோணவில்லை.( மாண்டிசோரி பயிற்சி அதற்கப்புறம்தான்
செய்தேன்.)சொல்லிக்கொடுத்ததில்
1 மாதத்தில் அம்ருதா தன் உடையை தானே
கழற்ற, போடக் கற்றுக்கொண்டாள்.
பல வீடுகளில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு கூட
வீட்டுப் பெரியவர்கள் தான் உடை போட்டுவிடுவார்கள்.
(சரி சரி, ரங்குவுக்கு சட்டை பொத்தான் போட்டதெல்லாம்
ரொமான்ஸ் கணக்குல போகும். அதெல்லாம் இங்க
சேத்துக்காதீங்க :)) )
இப்படி பிள்ளைகள் அந்தந்த வளர்ச்சிக்கு உரியவைகளைக்
கற்றுக்கொள்ளாமல் போவதை வளர்ச்சி குறைவு என
மாண்டிசோரி கல்வியில் சொல்கிறார்கள்.
தனது சட்டையை கழட்டி தானே போட்டுக்கொள்ள
பழக்க வேண்டும். தனது உடையலங்காரத்தை தானே
செய்துகொள்ள பழக்க வேண்டும்.
“பிள்ளை பெருசானா தானா கத்துக்க போவுது!
அதுக்கெதுக்கு இப்பவே கஷ்டப்படுத்தணும்!!!”
”வீட்டுல சும்மா தான(!!) இருக்கா உங்கம்மா!
குழந்தைக்கு ட்ரெஸ் போட்டுவிட்டா என்னாவாம்”
இப்படி வீட்டுல இருக்கற பெரியவங்க
சொல்வாங்க.
செல்லம் கொடுத்து கெடுக்கன்னே வீட்டுல ஒரு கூட்டம்
இருக்கும். அதையெல்லாம் புறம் தள்ளி குழந்தைக்கு
சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மாண்டிசோரிக் கல்வியில் இந்த சட்டங்களை
வைத்து பிள்ளைகளுக்கு பட்டன் போட,
முடிச்சு போட, பெல்ட் பக்கிள்ஸ் போட
சொல்லிக்கொடுப்போம்
இது சொல்லிக்கொடுத்த பிள்ளைகள் தன்
வேலையை தானே செய்துகொள்ளப் பழக்கப்படுவார்கள்
என்பதோடு கைகளுக்கு வேலை, சிந்தனை சக்தி,
செயல்திறன் ஆகியவைகளும் அதிகமாகும்.
HAND AND EYE CO ORDINATION எனப்படும் கண்கள்
பார்த்து கைகள் செய்வது இந்த பயிற்சியில்
கிடைக்கிறது
குறள் வழிக்கதைகள்
5 years ago
17 comments:
ஹய்! நாந்தான் பர்ஸ்ட்டூ :))
அட ஜமால் வர்றதுக்குள்ள வந்திட்டீகளா?
வாங்க
//செல்லம் கொடுத்து கெடுக்கன்னே வீட்டுல ஒரு கூட்டம்
இருக்கும்.//
க க க்க ப்ப்போ!!!!
க க க்க ப்ப்போ!!!!//
பிரியலைப்பா, விளக்க்மா சொல்லுங்க.
:)))))))))
//வீட்டுல சும்மா தான(!!) இருக்கா உங்கம்மா!
குழந்தைக்கு ட்ரெஸ் போட்டுவிட்டா என்னாவாம்//
வரலாறு முக்கியம் அக்கா!
கண்டினியூ பண்ணுங்க
23rd pulikese
வரலாறு முக்கியம் அக்கா!
கண்டினியூ பண்ணுங்க//
:) ஏன் இந்த மர்டர் வெறி
23rd pulikese//
ஓ நான் அந்தப் படம் பார்க்கலை.
நான் அனைக்கு லீவு
:)))
//இது சொல்லிக்கொடுத்த பிள்ளைகள் தன்
வேலையை தானே செய்துகொள்ளப் பழக்கப்படுவார்கள்
என்பதோடு கைகளுக்கு வேலை, சிந்தனை சக்தி,
செயல்திறன் ஆகியவைகளும் அதிகமாகும்.//
மிகச் சரி. இதை உணர்ந்து செல்லம் கொடுக்காமல் இவற்றைச் செய்யப் பழக்க வேண்டும் குழந்தைகளை.
உணர்ந்து செல்லம் கொடுக்காமல் //
இந்த வரிகளை கொட்டை எழுத்தில் பெரிய சைஸில் சொல்லனும் ராமலக்ஷ்மி.
வருகைக்கு மிக்க நன்றி
“பிள்ளை பெருசானா தானா கத்துக்க போவுது!
அதுக்கெதுக்கு இப்பவே கஷ்டப்படுத்தணும்!!!”
”வீட்டுல சும்மா தான(!!) இருக்கா உங்கம்மா!
குழந்தைக்கு ட்ரெஸ் போட்டுவிட்டா என்னாவாம்”
இப்படி வீட்டுல இருக்கற பெரியவங்க
சொல்வாங்க//
அனுபவிச்சு சொல்லியிருக்கீங்க.
”வீட்டுல சும்மா தான(!!) இருக்கா உங்கம்மா!
குழந்தைக்கு ட்ரெஸ் போட்டுவிட்டா என்னாவாம்”
இப்படி வீட்டுல இருக்கற பெரியவங்க
சொல்வாங்க//
அனுபவிச்சு சொல்லியிருக்கீங்க./
வாங்க அமித்து அம்மா,
என்னை அப்படிச் சொல்ல ஆளில்லை என்றாலும் பலரது அனுபவம் ஏன்? என் அம்மாவின் அனுபவத்தைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.
உங்க லிங்க்கை இங்கே பார்த்தேன் - "குட்... Blogs" - க்குக் கீழ்...
http://youthful.vikatan.com/youth/index.asp
:) வாழ்த்துகள்.
thanks kavinaya
I saw about the blog in Vikatan and went in to yday, I have 2 kids one 31/2 and one 2 yrs old .. this blog is really usefull
I visited the blog on seeing vikatan y/day
I have 2 kids one is 31/2 and another 2 yrs old the blog is so useful.. thank u
மகிழ்ச்சி மாலா,
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment