முன்பே சொல்லியிருப்பது போல அவ்வளவு சுலபமான வேலையல்ல
இது. கஷ்டமென்றும் சொல்லிவிட முடியாது. நல்ல திட்டமிடல்
பிள்ளை வளர்ப்பிற்க்கு மிக அவசியம்.
பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த பின்
பிராகரஸ் ரிப்போர்ட் வாங்கவோ அல்லது பிரச்சனை இருந்தாலோதான்
செல்வார்கள். நானும் கூட ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன்.
ஒரு முறை என் மகனை சக மாணவர்கள் கிண்டல் செய்வது
மட்டுமல்லாமல் நெஞ்சில் மிதித்து எல்லாம் செய்த உடன்
பொங்கி எழுந்து பிரின்சிபலிடம் முறையிட்டேன். அந்தப்
பையனின் பெற்றோரை அழைத்து பேசி ஒரு வாரம் அந்தப்
பையனை சஸ்பெண்ட் செய்தனர்.
விஷயம் அறிந்த தெரிந்த பெண் வம்பு செய்யும் பிள்ளையிடம்
போய் பேசிப்பார் அப்போதுதான் பிரச்சனையை தீர்க்க முடியும்
என்றார். இது எவ்வளவு தூரம் சாத்தியமென்று விட்டு விட்டேன்.
இந்தியா வந்த பிறகு எங்கள் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு
பையன் மகனுடம் ஒரே பள்ளியில் படிக்கிறான். இருவரும்
ஒரே வேனில் செல்கிறார்கள். ஆனால் அந்தப் பையன் கொஞ்சம்
முரட்டுத்தனமாக ஆஷிஷிடம் நடந்து கொள்வானாம்.
ஏதாவது பேசினால் அப்பார்ட்மெண்டில் இருக்கும் கொஞ்சம்
குண்டான இன்னொரு பையனிடம் சொல்லி இவனை
அடிக்க போவதாகவும் மிரட்டினான்.
அவனின் அம்மா தெரிந்தவர்கள். நட்பை இழக்கவும்
விருப்பமில்லை. அந்தப் பையனின் அம்மாவுக்குச் சொன்னால்
பிரச்சனை பெரிதாகலாம். எனவே அந்தப் பையன் கீழே
விளையாடும்போது தனியாக சென்று அவனிடம் பேசினேன்.
ஹாய் என்று ஆரம்பித்தேன்.
ஆஷிஷ் இங்கே புதியவன். வந்தவர்களை வரவேற்பது நம்
பண்பாடு. அவனை விட மூத்தவனான நீ அவனை
பாதுகாப்பதை விட்டு அவனுடம் இப்படி தேவையில்லாமல்
சண்டை போடலாமா? ஆஷிஷ் உண்ணை துன்புறுத்தினால்
என்னிடம் சொல் என்றேன்.
”அப்படில்லாம் இல்லை ஆண்டி, ஹீ இஸ் எ நைஸ் பாய்.
நான் தான் உடனிருக்கும் மாணவர்கள் தூண்டுதலால்
தவறாக நடந்து கொண்டேன். இனி நாங்கள் இருவரும்
ஃப்ரெண்ட்ஸ்” என்றான். நல்லவேளை நீங்கள் என் அம்மாவிடம்
சொல்லவில்லை என்று சொன்ன பிள்ளையை கை குலுக்கி
நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.
இப்போது வரை எந்தப் பிரச்சனையையும் இல்லை.
பிள்ளையை பள்ளியில் சேர்த்த பின் நாம் அடிக்கடி
பள்ளிக்கு சென்று வர வேண்டும். ஏன்???
அடுத்த பதிவில் அதுதானே!!!!
vandhaan vadivelan
1 year ago
10 comments:
நல்லவேளை நீங்கள் என் அம்மாவிடம்
சொல்லவில்லை என்று சொன்ன பிள்ளையை கை குலுக்கி
நன்றி சொல்லிவிட்டு வந்தேன்]]
குட் அப்ரோச் ...
:) நல்ல பதிவுங்க. தொடருங்கள்.
-வித்யா
திரட்டிகளில் புதுப் பதிவுகளை இணையுங்கள்.
-வித்யா
நானும் படாதா பாடு படுறேங்க, மகளின் மேல் உள்ள பாசத்தால் கண்டிப்பு அப்படிங்கற வழக்கமே கிடையாது. அப்பா திட்டுவாங்கன்னு சொன்னா பயங்கரமா சிரிக்கிறாங்க, அப்பாவுக்கு முதுகுவலி தரையில் ஒரு வாரமா படுத்திருக்கேன் அவளும் தரையிலேயே தூங்குறா.
உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
////நல்லவேளை நீங்கள் என் அம்மாவிடம்
சொல்லவில்லை என்று சொன்ன பிள்ளையை கை குலுக்கி
நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.
இப்போது வரை எந்தப் பிரச்சனையையும் இல்லை.////
இதுகூட நல்ல விதம்தான். ஜமால் சொன்னமாதிரி குட் அப்ரோச்.
குட் அப்ரோச் ...//
சொல்லிக்கொடுத்த தோழிக்கு நன்றி தெரிவிச்சுக்கறேன்.
வருகைக்கு நன்றி ஜமால்
நன்றி வித்யா
உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//
கண்டிப்பாய் பதிவு போடறேன் குடுகுடுப்பை
வருகைக்கு நன்றி நவாஸுதீன்
//நல்லவேளை நீங்கள் என் அம்மாவிடம்
சொல்லவில்லை என்று சொன்ன பிள்ளையை கை குலுக்கி
நன்றி சொல்லிவிட்டு வந்தேன்//
அப்படி சொல்லியிருந்தால் அந்தப் பையன் நிரந்தர எதிரியாகியிருப்பான். நீங்கள் கையாண்ட முறை பாராட்டுக்குரியது. தொடருங்கள்...
Post a Comment