பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

அனைவருக்கும் வணக்கம்,

பேரண்ட்ஸ் கிளப்பில் இணைய விருப்பம் தெரிவித்து
பல மடல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பலரை சென்றடைந்திருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதுவும் விகடன் வரவேற்பறையில் வந்த பிறகு
அதிக ரெஸ்பான்ஸ். ஃபாலோயர்களும் 100ஐத் தாண்டி
விட்டது.

இணைய விரும்புபவர்களுக்கு வேண்டுகோள்.

தாங்கள் பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து மெம்பரானால்
மட்டும் போதாது தங்களின் பங்களிப்பும் மிக அவசியம்.

தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அவசியம்.
அதுதான் இந்த வலைப்பூ துவங்கப்பட்டதன் காரணம்.



பல் வேறு பதிவர்கள் இந்த வலைப்பூவில் பதிகிறார்கள்.
குறைந்த பட்சம் அதை படித்து பின்னூட்டமாவது போட
வேண்டுகிறேன்.


தங்கள் கருத்துக்களை பதிந்து, பல பெற்றோர்களுக்கு
உதவும் எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே இந்த
வலைப்பூவில் இணைந்து பதிவுகளைத் தர வேண்டுகிறேன்.

நானும் இணைய விருப்பம் என விருப்பம் தெரிவித்த
பலரை இணைத்து 2 மாதமாகியும் 1 பதிவு கூட
போடப்படவில்லை!!! இணைந்ததன் நோக்கம் என்ன??

தவறாக நினைக்க வேண்டாம். இப்போது வைரஸ்
தாக்கம் வலைப்பூக்களில் அதிகமாக இருப்பதால்
அதிகமான எண்ணிக்கையில் மெம்பர்கள் இருந்தால்
வலைப்பூவுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கின்ற அச்சமே
இந்தப் பதிவுக்கு காரணம்.

உண்மையாக இணைந்து கருத்துக்களை பதிய
விரும்புபவர்களை இருகரம் நீட்டி இந்த வலைப்பூ
வரவேற்கிறது.

6 comments:

அன்பின் புதுகை தென்றல்: ஒரு சின்ன வேண்டுகோள். புதிய உறுப்பினர்களுக்கு மடல் வழி (ஈமெயில்) பதிவிடவும், அப்படி வருவதை draft-ஆக சேமிக்கவும் வழி செய்யுங்கள். குறைந்த பட்சம் ஐந்து பதிவுகளாவது இட்ட பிறகு அவர்களுக்கு நேரிடையாக பதிவிடும் படி செய்து விடுங்கள். கொஞ்சம் சிரமமான வேலைதான். ஆனால் இது பாதுகாப்பானது என்று கருதுகிறேன்.

-வித்யா

அல்லது அவரவர் பதிவில் வெளியிட்டு பின் அந்த லிங்க் கொடுத்து, பதிவர் பெயர் போட்டு, மீள் பதிவாகக் கூட வெளியிடலாம். தனிப்பட்டக் கருத்துதான். யாரையும் புண்படுத்தினால் / தவறானதென்றால் மன்னிக்க.

நன்றி.

நானும் இதில் இணைந்து இருக்கின்றேன்.

கற்றுகொள்ளும் தந்தையாகவே இன்னும்.

-----------------

யோசிக்க வைக்கிற பதிவு தான் ...

ஹூம்ம் ...

எனக்கும் இதில் இணைய விருப்பம்தான். ஆனால் தற்சமயம் வாசகனாகவே இருக்க விரும்புகிறேன். ஏதேனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் வித்யா சொன்னதுபோல் ஈமெயில் வழி அனுப்பி அதை இடுகையாக இங்கே இடுவது நல்ல வழியாகத்தான் தோன்றுகிறது. பாதுக்காப்பானதும்கூட.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் வித்யா.

கருத்துக்கு மிக்க நன்றி,

யாரையும் தவறாக சொல்லவில்லை. அதிக எண்ணிக்கை மெம்பர்களால் தேன் கிண்ணத்தை காக்கா தூக்கிகிட்டு போய் போராடி திரும்ப வந்ததிலிருந்து கொஞ்சம் பயமாக இருக்கு.

ஏதேனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் வித்யா சொன்னதுபோல் ஈமெயில் வழி அனுப்பி அதை இடுகையாக இங்கே இடுவது நல்ல வழியாகத்தான் தோன்றுகிறது. பாதுக்காப்பானதும்கூட.//

அப்ப என்ன தயக்கம் சீக்கிரம் மடலிடுங்க. வீ த வெயிட்டிங்

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்