பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை.
குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...
குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத் திறமைகள் எனக்கு ரொம்ப பயன்பட்டது. ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பயன் படுத்தினேன்.என் பையனுக்கும் அதைக்கற்றுத் தந்திருக்கிறேன்.
வாழ்க்கை ரொம்ப சுலபம் இல்லை.திடீர் திடீர் என்று கிறுக்கல் அடித்து நம்மை வேடிக்கைப் பார்க்கும்.
பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால படிப்பாளி.திறமைசாலி அல்ல. நூற்றுக்கு நூறு மார்க் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தரும். பள்ளி படிப்பில் முதலில் இருக்கும் சில பேர் பொரோபஷனல் (professional) வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒளியற்று இருப்பார்கள்.மக்குத்தனம் இருக்கும்.படிப்பு வேறு.புத்திசாலித்தனம் வேறு.
குழந்தைகள் நூற்றுக்கு நூறு பார்டியாக இல்லாவிட்டாலும் “உஷார் பார்ட்டி”யாக (சாமர்த்தியசாலியாக..) இருக்கவேண்டும்.இப்போது இருக்கும் உலக நடப்புக்கு அதுதான் யதார்த்தம்.“உஷார் பார்ட்டி” with நேர்மை/ஒழுக்கம்/பக்தி/அன்பு. Be practical. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வர வேண்டும்.
அது என்ன வாழ்க்கைத் திற்மைகள்(Life Skills):-
உதாரணம்- 1
பக்கத்துவீட்டுப் பையன் படிப்பில் கில்லாடி.ஆனால் தன் சைக்கிளின் செயின் கழண்டால் அதை சரி செய்யக் கூடத்தெரியாது.தள்ளிக்கொண்டுதான் வருவான்.ஆறு கிலோ மீட்டர்.காற்று கூட அடிக்கத் தெரியாது. அடிப்பது அவன் அப்பா.இழப்பு யாருக்கு?
உதாரணம்- 2
பல வலைப்பதிவர்கள் மெது மெதுவாக தங்கள் திறமைகளை(skills) பயன்படுத்தி வலையை ஜொலிக்க வைக்கிறார்கள்.எல்லாம் ரெடிமேடாக கிடைத்தாலும் அதை நிறுவும் பொழுதில் கிடைக்கும் அனுபவம் அடுத்த முயற்சிக்கு தூண்டுகிறது.அறிவு /அனுபவம் வளருகிறது.திறமைகள் வளர்கிறது.
உதாரணம்- 3
நடிகர் கமல் நாலாவதுதான் படித்திருக்கிறார்.புகழின் உச்சியில் இருக்கிறார்.அவர் கால கதாநாயகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.காரணம் கமல் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். தொலை நோக்குப் பார்வையில் சினிமாவை எடைப்போட்டு காணாமல் போகாமல் தன்னை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய சிவப்பு நிறம் அழகான முகம் ரொம்ப நாள் “தாக்குப்பிடிக்காது” என்று தெரியும்.
உதாரணம்- 4
பக்கத்து வீட்டுப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டி நின்று விட்டது.காரணம் தெரியவில்லை மெயின் ரோட்.ஆள் நடமாட்டம் கம்மி.மெக்கனிக் ஆறு கிலோ மீட்டர் தள்ளி.எப்படி நடுரோடில் விட்டு வருவது. ஐடியா! பக்கத்து பங்களாவின் மாடியில் நின்றவரைக் தையரிமாக கூப்பிட்டு ”excuse me, if you don't mind" சொல்லி புன்னகைத்து வண்டியை உள்ளே விட்டு விட்டாள்.சாமர்த்தியம்!
பிறகு ரிப்பேர்.
உதாரணம்- 5
பிளாட் லிப்டில் கரெண்ட் போய் ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான்.எமர்ஜென்சி அலாரம் வேலைச் செய்யவில்லை.”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”என்று பெரும் குரலில் கத்தினான். ஷூவைக் கழட்டி லிப்ட் கதவில் அடித்தான். அடுத்த கணத்தில் உதவி வந்தது.அலாரம் வேலைச் செய்யா விட்டால்”அய்யோ அம்மா, அய்யோ அம்மா”..கதவைத் தட்டுதல்...” போன்றவற்றை செய்யவேண்டும் என்று சொன்னது அவன் அப்பா.அப்பா கே.ரவிஷங்கர். பையன் ஆதித்யா.
உதாரணம்- 6
பக்கத்து வீட்டு மாமிக்கு காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் புதுசு மாட்டத் தெரியாது.வாட்ச்மேன் அல்லது எதிர்வீடுதான் உதவி செய்யவேண்டும்.அந்த இரண்டு பேர் இல்லாவிட்டால் என்ன செய்வார்?
இந்த திறமைகளைப்(skills) பற்றிச்சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.
நான் கடையில் ஒரு நாள் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தேன்.அப்போது என் மகன்
(வயது 10) என்னைக் கடந்து சைக்கிளில் போய் சிக்னலில் நின்றான்.என்னை கவனிக்கவில்லைஅப்போது எதிரில் வந்த தண்ணீர் லாரி சடன் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி தண்ணீர் பீச்சியடித்து அவன், சைக்கிள்,புத்தகப்பை எல்லாம் அருவியில் குளித்த மாதிரி ஆகிவிட்டது.
வாழ்க்கையைப் பச்சையாக (raw formஇல்) சந்திக்கிறான்.என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்னசெய்யப்போகிறான் என்று பார்த்தேன்.
நனைந்ததால் உடலோடு ஆடைகள் ஒட்டி கட் பனியன்,ஜட்டி ஷேப் தெரிந்தது.(வெள்ளை யூனிபார்ம்).அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது. வாழ்க்கையின் ஒரத்தில் இருந்தான்.(பொது ஜனங்கள் “உச்” கொட்டிவிட்டு ”பாத்துத் தம்பி” என்று நகர்ந்தார்கள்).
தண்ணீரில் நனைந்ததிலிருந்து வீடு வந்து சேரும் வரை அவனுடைய திறமைகள்:-
1.அடுத்த வினாடி முக்கியமான புத்தகங்களை பையின் பின் அறைக்கு மாற்றினான்.(அங்கு ஈரமில்லை). (மெயிண்டனென்ஸ்/வாழ்வாதாரம்(survival)
2.TNEB Junction Boxலிருந்து தள்ளி நின்று கொண்டு தலையை கர்சீப்பால் தவிட்டிக்கொண்டான். (பாதுகாப்பு)
3.அடுத்து வேறு சந்தில் நுழைந்து சில நிமிடம் காத்திருந்து கிளாஸ் டீச்சரை ரோடில் சந்தித்து “see my position" என்று லேட்டாக வருவேன் என்று பர்மிஷன் வாங்கினான். (முன் யோசனை/சமயோசிதம்/பயம்)
4.PCOக்குப் போய் எனக்கு செல்லடித்தான்.(உதவி/தகவல்) நான் செல் எடுக்கவில்லை காரணமாக. (இவனுக்கு பணம் எப்படி? இதை தனியாக கவனிக்க வேண்டும்)
திறமையின்மை:
1,வண்டியை ஓட்டாமல் தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தான். உலகமே தன்னைப் பார்த்து பரிதாபப் பட வேண்டும்.(சுய பச்சாதாபம்)
2.பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று லாஜிக் யோசிக்கமால் செல்லடித்தது. (முன் யோசனையில்லாமை)
3.ஸ்கூலுக்கு மறுபடியும் திரும்பி போகும்போது வேற சுத்து ரூட்.ஏன்? திரும்பவும் தண்ணீர் லாரி வந்து விட்டால்? (பயம்/வெறுப்பு/உஷார்)
4.அவன் என்னை வரச் சொல்லியிருந்தான்.செக்யூரிட்டி/லேட் மிஸ் என்று வாசலில் இருப்பவரிடம் நான் விளக்கிச் சொல்லி உள்ளே அனுப்ப.அவன் தன் சொந்த திறமையில் இதை சமாளிக்க வேண்டும்.செய்யவில்லை. (தன்னம்பிக்கையின்மை)
எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.
”என் பையன் மாதிரி கம்பூயட்டர் கேம்ஸ் விளையாட.....என்றும் செல்போனக் கொடுத்துட்டா போதும் அதுல பூந்து விளையாடுவான்...அவன மாதிரி..” என்று மற்றவர்கள் முன்னால் குழந்தைகளை செல்லம் கொஞ்சுவார்கள்.இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை காமெடி. ஏனென்றால் 99% சதவீதம் குழந்தைகளுக்குத் இதெல்லாம் தெரியும்.
”கண்ணே...செல்லம்...உச்சு புச்சு..”என்று கொஞ்சிக் கொண்டு இருக்காமல் வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அடிப்படை எதார்த்தங்களை (ground realities) கற்றுக் கொடுங்கள்.
குழந்தையை வளர்ப்பதும் ஒரு பெரிய(life skill) திறமைதான். (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவதில் என்ன நன்மைகள்:-
1.சுயசிந்தனை
2.அடுத்தவரை சாராமை
3.அனுபவம்
4.அனுபவத்தில் பெறப்படும் அறிவு
5.சுறுசுறுப்பு
6.பொது அறிவு
7.பிரச்சனை எதிர் நோக்கும் துணிவு
8.ஒரு வித சுய சந்தோஷம்(நானே செய்தேன்!)
9.சமயோசிதம்
10.கெளரவம் பார்க்காமை
ஒரு தலைமுறை குழந்தைகளுக்குக்கு(நகர்புறம் சார்ந்த) இருக்கும் lifeskills அடுத்த தலைமுறைக்கு இல்லை.இப்போது இருக்கும் தலைமுறைக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.
பாதுகாக்கபட்ட சுழ்நிலையில் வளர்கிறது.(highly protected zone).போனதலைமுறை மாதிரி அல்லதுஅதற்கு முந்திய தலைமுறை அலைந்துதான் எல்லாம் பெற வேண்டும் .கையில் எதுவும் தொப்பென்று விழாது.
கடைசியாக... மிருகங்கள தங்கள் வாழ்வாதர திறமைகளை எப்படி பயன்படுத்துகிறது என்று டிஸ்கவரி சேனல்,அனிமல் பிளானெட்டில் பாருங்கள். Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொருந்தும்.
.
9 comments:
good
நல்ல போஸ்ட் ..நன்றி ரவிசங்கர் நன்றி விதூஷ்..
ஆனா பாவம் பையனுக்கு எமர்ஜென்சிக்கு கையில் போன் அடிக்கவோ ,சைக்கிளில் போறதால் காத்திரங்கினா அடிக்கவோ, பஞ்சரான ரிப்பேருக்கோ.. கொஞ்சூண்டு காசு இருந்தா பரவாயில்லயே.. :)
January 19, 2010 9:32 AM
வெறும் படிப்பறிவு பத்தாதுன்னு நம்ம பெரியவங்க முன்னாடியே பழமொழியா சொல்லி வெச்சிருக்காங்க.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவாது. சரிதானே.
பகிர்வுக்கு நன்றி ரவிஷங்கர், வித்யா
Good Post.
அருமையான பகிர்வு. நன்றி வித்யா.
ரவிஷங்கர் சாருக்கு ஸ்பெஷல் நன்றி.
எவ்வளவு திறமைகள் இருப்பினும் அந்த நொடி என்ன செய்யவேண்டும் என்ற செயல்திறன் நாம் எதற்கு லாயக்கு என்று தீர்மானிக்கிறது. யார் எது சொல்லியும் புரியாத எனக்கு, அனுபவம் சம்மட்டி அடித்து கற்றுத்தந்தது அதிகம்.
நல்ல பதிவு. குழந்தைகளும் நம்முடன் சினேகமாகும். சுயமாய் முடிவெடுக்கும் தைரியத்தையும் தரும்.
ஆனால் இது கத்திமேல் நடக்கும் வித்தை, குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள், நாம் ஒழுக்கமாய் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
மிக்க நன்றி::)).
நன்றி வித்யா
ரொம்ப நல்ல பகிர்வு.
குறிப்பாக உதாரணம் அத்தனையும் கலக்கல் :-)
நல்ல பகிர்வு வித்யா.
நல்லா சொல்லியிருக்கீங்க ரவிஷங்கர். அதிலும் முத்தாய்ப்பாய் சொன்னது //Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொருந்தும்.// மிகச் சரி.
Post a Comment