பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

ஏன் இந்த வெறுப்பு?
சில குழந்தைகள் குறிப்பிட்ட சில உணவுவகைகளைத் தவிர்த்து, வேறு எதையும் திரும்பிப் பார்க்க கூட மாட்டார்கள். இது குழந்தையின் தவறல்ல.

வீட்டில் பெரியவர்கள் பிடிக்காது என்று ஒதுக்கும், பல விஷயங்களைப் பார்த்து தானும், அவ்வாறே செய்ய முயலுகிறது.

கஷ்டப்பட்டு சமைத்து அனுப்புவதை கொட்டிவிட்டும் பிள்ளைகள், நமக்குத் தெரியாமல் தேய்க்கப்போடும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

குழந்தைகள் ஒரே மாதிரியான உணவை வெறுக்கிறார்கள்.

நான் மாண்டிசோரி ஆசிரியையாக பணிபுரிந்த போது, எனக்கு மிகவும் கடினமான பீரியடாக நான் நினைத்து, "பிரேக் டயம்" தான்.

தினமும் "சால்ட் பிஸ்கெட்" மாத்திரமே கொண்டுவரும் பையனனப் பார்க்க பாவமாய் இருக்கும். வேறொரு குழந்தை தினமும் "ப்ரெட் ஸ்ப்ரெட்" தடவிய ரொட்டித்துண்டுகள். வெரைட்டியாக இருக்கட்டும் என்று கடையிலிருந்து பன், பேட்டீஸ் கொண்டுவரும் குழந்தைகளூம் சரியாக சாப்பிட மாட்டார்கள். அடுத்த குழந்தையின் டப்பாவை
ஏக்கமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

காலையிலும் ஒன்றும் உண்ணாமல், வீடு போகும்வரை வெறும் வயிற்றோடு இருக்கும் அவர்களைப் பார்க்கும்போது பரிதாபப் படத்தான் முடியும்.

"என் மகன் சாப்பிடுவதே இல்லை , கொஞ்சம் பாருங்கள்", என்று என்னிடம் குறை கூறுவார்கள் பெற்றோர்.

விதம் விதமாக, மாறுபட்ட உணவைத் தான் பிள்ளைகள் விரும்புகிறார்கள். உங்களுக்கு உதவ சில உணவுவகைகள்.
(இவை காலை உணவாகவும் கொடுக்கலாம், டிபன் பாக்சிலும்
வைத்து அனுப்பலாம்)

முதலில் ஈசி உணவாகிய பிரெட் வகைகளைப் பார்ப்போம்.

1. பிரெட் மசாலா:
தேவையானவை: சான்ட்விச் பிரெட்- 4, தக்காளி-2, வெங்காயம்-2,
ப.மிளகாய-1 கொத்தமல்லி இழை-கொஞ்சம்.

செய்முறை :- பிரெட் தவிர மீதி அனனத்தையும், நன்கு பேஸ்டாக
அரைத்துக் கொள்ளவும், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் முதலில் பட்டர் கொஞ்சம் போட்டு,
அதன் மேல் அரைத்த மசாலா பேஸ்ட் தடவிய பக்கத்தை
முதலில் வைத்து, பிறகு மெல்ல திருப்பி டோஸ்ட் செய்தால்
மசாலா டோஸ்ட் ரெடி.

2. பிரட் சீஸ் டோஸ்ட். (சீஸில் பிள்ளைகளுக்குத் தேவையான
பாலின் சத்து முழுதும் கிடைக்கிறது)

சீஸைத் துருவி வைத்துக் கொள்ளவும். பிரட்டில் பட்டர்
தடவி, அதில் கொஞ்சம், டொமேடோ சாஸ், (விரும்பினால்
சில்லி சாஸ் கொஞ்சம்) சீஸ் வைத்து மற்றொரு பிரட்டால்
மூடி டோஸ்டரிலோ/தோசைக்கல்லிலோ வைத்து
டோஸ்ட் செய்தால் பிரட் சீஸ் டோஸ்ட் ரெடி.

3. பாவ் மசாலா:
சாண்ட்விச் பிரெட் அல்லது வடா பாவ் பிரெடில் பட்டர்
தடவி, கரம் மசாலா பவுடர் கொஞ்சம் சேர்த்து தோசைக்கல்லில் டோஸ்ட் செய்ததால் பாவ் மசாலா/ மசாலா பால் (Masala ball) ரெடி.

4. 2பிரெட்டை ஒரு புறம் பட்டர் தடவி, தோசைக்கல்லில் கிரிஸ்பாக டோஸ்ட் செய்து கொள்ளவும். தக்காளி, வெள்ளரிக்காயை
வட்டமாக வெட்டி, அதன் நடுவில் வைத்து, மேலே சீரகம், மிளகுத்தூள் கொஞ்ச்மாகத் தூவி இன்னொரு பிரட்டால் மூடினால் சாண்ட்விச் டோஸ்ட் ரெடி.

5. உருளைக் கிழங்கு கறி செய்து அதை பிரட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.

6 கேரட், கோஸ், வெங்காயம் ஆகியவற்றை வதக்கி, அதை பிரட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்யலாம்.

7. முட்டையை அடித்து அதில் மிளகுத்தூள்,உப்பு, சேர்த்து, அந்தக்கலவையில் பிரெட்டை நனைத்து பட்டர் சேர்த்த தவாவில் பிரை செய்து "பாம்பே டோஸ்டாக" கொடுக்கலாம்.

தொடரும்....
அன்புடன்,
புதுகைத் தென்றல்

13 comments:

நல்லா...நயமா சொல்லியிருக்கீங்க.>

தங்கமணி படிச்சுப்பாத்துட்டு
செயலில் இறங்குறென்ன்னுட்டாங்க!

ஆமா.இதில் எப்படி உறுப்பினராகறது?

வாய்ப்பு கொடுங்களேன்..!

வாங்க சுரேகா,

அழைப்பு அனுப்பிடறேன்.

சிறு சிறு மாற்றங்கள் உணவில் நமக்கே வேண்டியிருக்கிறதே..குழந்தைகளுக்குப் பிடிக்காமலா?..நல்ல டிப்ஸ்..

வாங்க பாசமலர்,

நன்றி.

பேரன்ட்ஸ் கிளப்ல உங்க பதிவு படிக்கும் போது ரொம்ப நேர்த்தியான பதிவா இருக்கே ஒருவேளை நீங்க ஒரு ஆசிரியையா இருப்பீங்களோன்னு ஒரு சந்தேகம் இருந்தது. இப்ப தெளிவாயிடுச்சி

வாங்க நிஜமா நல்லவன்,

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

அப்பாடி நல்லவேளை பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு அப்படின்னு போட்டு இருக்கீங்க, எனக்கு பிரெட்னாலே அலர்ஜி... ஆனாலும் நீங்க போட்டுஇருக்க மாதிரி செய்தா நல்லாதான் இருக்கும் போல... எதுக்கும் பவன் கிட்ட டெஸ்ட் பண்ணி பாத்திட்டு நான் டிரை பண்ணரேன்.

முன்னாடி சுரேகா சொன்னத அப்படியே நான் சொன்னதா நெனெச்சிக்கொங்கோவ்....:-)

வாங்க இம்சை,

நானும் இங்கே வந்த புதுசுல பிரெட் சாப்பிடறதை அதிசயமா பார்ப்பேன்.

நம்ம ஊர்ல ஜுரம் வந்தாதான் பிரெட் சாப்பிடுவோம். அதுக்கே அழுவாச்சியா வரும்.

இங்கே வந்ததுக்குப்புறம் தான் பிரெட்டில் இத்தனை வகை செய்யக் கத்துகிட்டேன். பவனுக்கு மாத்திரம் இல்ல நீங்களும் சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்க.

(ஆஷிஷும் அம்ருதாவும் அங்கிள் பவன் மேல எதுக்கு டெஸ்ட் செய்யனும்னு சண்டைக்கு வர்றாங்க!!!!!!!)

வாங்க ச்சின்னப்பையன்.

வருகைக்கு நன்றி.

இந்த பிரெட் , சப்பாத்தி இத தவிர எதுனா சொல்லி குடுங்க...ஆனா என்ன இருந்தாலும் நம்ம ஊரு தோசை, இட்லி, சாம்பார், சட்னி, தயிர் சாதம், சாம்பார் சாதம் போல வருமா...

இம்சை,

மத்த அயிட்டங்களூம் வருது.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா பிள்ளைகள் பள்ளிக்கு சாதம் கொண்டு போக விரும்ப மாட்டாங்க.

அதைப் பத்தியும் சொல்றேன்.

Good knowledge best chance children maintenance

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்