பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

சின்னக்குழந்தை என்பதால் நாமே எல்லாம் செய்துவிடுவோம். அதனால் குழந்தை தானாக செய்துகொள்ளத் தெரியாமலேயே வளருகிறது. குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு இந்த நிலை வளர்ச்சிகள். (SELF CONFIDENCE)

கொஞ்சம் ஊக்கப்படுத்தினால் தன் வேலையைத் தானே செய்யப் பழகும் குழந்தை.

நம் விரும்பும், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சில விடயங்களை பாயிண்டுகளாக பெரிய சார்டிலோ, white board - லோ குழந்தைக்கு சேரில் ஏறினால் மட்டுமே எட்டும் உயர்த்திற்கு மாட்டுங்கள். HAPPY FACE,
STAR, STICKERS இப்படி மாதத்திற்கு ஒரு பெயர் வைத்து அன்றாடம் அந்தந்த பாயிண்டுகளுக்கு கொடுங்கள்.

பாயிண்டுகளுக்கு ஏற்ப பொம்மை வாங்கிக் கொடுப்பதினால்,
விளையாட்டுத்தனம் தான் அதிகமாகும். அதற்கு பதில் PIGGY BANK, DOG HOUSE போன்ற உண்டியல்களை வாங்கிக் கொடுத்து, ஹேப்பி பேஸிற்கு தக்க காசுகளைக்கொடுத்து அதில் போடச் சொல்லுங்கள்.

விரும்பிய பொழுது, குழந்தை ஆசைப் பட்ட பொம்மை, குழந்தை விரும்பி உண்ணும் பண்டம் ஆகியவற்றை அந்த பணத்திலிருந்து வாங்கிக் கொடுங்கள். சேமிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியது போலும் இருக்கும், தனக்குத் தேவையானதை வாங்க தான் பணம் சேர்க்கவேண்டும் என்ற தூண்டுதலும் இருக்கும்.

நடைமுறைப் படுத்தி பார்த்தால்தான் தெரியும்.

உதாரணத்திற்கு சில பாயிண்டுகள் கொடுத்திருக்கிறேன்.

1. குட்மார்னிங் சொல்லி சிரித்த முகத்துடன் எழுந்து, ஒழுங்கா பல்லு தேச்சு, பாலைக் குடிச்ச சபாஷ் பையனுக்கு 3 HAPPY FACE

2. அழாமல் குளித்து காலைஉணவு சாப்பிட்ட mr.clean/ms.clean க்கு 2 "

3. விருந்தினர் எதிரில் ஒழுங்காய் நடந்து கொண்ட well behaved boy/girl 2

4. அடம்பிடிக்காமல் ஒழுங்காய் சீக்கிரம் சாப்பிட்ட FAST FOOD EATER ku 2

5. விளையாடிமுடித்து விளையாட்டு சாமாங்களை பெட்டியில்
அழகாய் எடுத்து வைத்த mr.perfect/ms.perfect 1 "

6. மிச்சம் வைக்காமல் பாலைக் 1 " குடித்த.............

7. THE GOOD GIRL/BOY WHO USED THE TOILET 2 "

8. CHANGING THE DRESS AND PUTTING THE SHOES BY THEMSELVES. HE/SHE IS GOOD GIRL/BOY 2 "

9. WALKING BY THEMSELVES IS A PROUD PEACOCK gets 2 "

10. 9.OOPM, ITS TIME TO SAY GOODNIGHT AND KICK THE BED. A GOOD BOY/GIRL GETS

10 comments:

சூப்பர், இது 3 வயதுக்கு மேல இருக்க குட்டீஸ்க்குன்னு நினைக்கிறேன்... எங்க வீட்டு வாலு இத எல்லாம் கேக்க மாட்டானே...

இல்ல 2 வயசுலேர்ந்து துவங்கலாம்.
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டம் இருக்கலாம். முரண்டு பண்ணுவாங்க.

பழகினா சரியாகும். ஆனா நாம் கொஞ்சம் திடமா இருந்து செய்ய வெக்கணும். இது என் அனுபவம்.

அதனாலத்தான் கொடுத்திருக்கிறேன்.

//ஒழுங்கா பல்லு தேச்சு//

இது யாரு வீட்லங்க ஒழுங்கா நடந்திருக்கு? அவ்வ்வ்வ்வ்....

நீங்க சொலறது ரொம்ப சரி சேதுக்கரசி,
பேஸ்ட்டைத் தின்னுன்னு வெச்சுக்கலாமா?

அவங்க பேஸ்ட்டை சுவக்கைட்டும் நாம தேய்க்கச் சொல்லிக் கொடுப்போம்.

அநியாத்துக்கு ரொம்ப நல்ல விஷயமா எழுதுறீங்க தென்றல்

யப்பா..குட்டீஸை சமாளிக்க எத்தனை டிப்ஸ் இருந்தாலும் பத்தாது..

ம் மைண்ட்ல வெச்சிக்கிறேன்!!

வேற என்னத்தை சொல்ல!!

நன்றி நிஜமா நல்லவன்.

அதென்னமோ சரிதான் பாசமலர்.

நாம தடுக்குள பாஞ்சா அவங்க கோலத்துல பாய்வாங்களே!!!!

இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுகிட்டா
உங்களுக்கு ரொம்ப உதவியாய் இருக்கும் சிவா.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

பகிர்வுகள்

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்