பிறந்த குழந்தை பேசமுடியாது, அசைய முடியாது, தன்நிலையை எடுத்துச் சொல்ல முடியாது என்பதாலேயே பசிக்குப் பால கொடுத்தால் போதும்,
தூங்கிவிடும் குழந்தை என்ற மனநிலைதான் அனைவருக்கும்.
பிரசவம் முடிந்தபின் தாய் சோர்வாக இருப்பதாலும், மருத்துவ உதவி தேவைப்படுவதாலும், தாய்தான் அதிகம் கவனிக்கப் படுகிறாள். இங்கு கவனிக்கப் படவேண்டியது குழந்தையும் தான்.
பிரசவமான களைப்பு தாய்க்கு என்றால், பிறந்த களைப்பு குழந்தைக்கும் இருக்கும். பிறப்பு என்பது குழந்தைக்கு ஒரு வித கொடிய அனுபவமாகும்.
இத்தனை நாட்களாக கருவறையில், தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்த குழந்தைக்கு, வெளிச்சம், சத்தம், தன் உடல் எடையை உணர்தல், வெளி உலகில் தன் முதல் சுவாசத்தை அனுபவிக்கும் அவஸ்தை.... இப்படி எத்தனனயோ வகையில் குழந்தையின் அனுபவம் இருக்கும்.
பிரசவகால ஆபத்துக்கள் (Birth Trauma or Birth terror) கூட பிள்ளையின் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாகும். (ஆய்த கேஸ் ஆக பிறக்கும் குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது என்று எங்கள் உரில் அவ்வகை
பிரசவத்திற்கு court stay order இருந்தது)
ஒரு சாதாரண குழந்தை தூங்கும், பயப்படும் என்று மாத்திரம் நினைப்பது தவறு. சந்தோஷமான, எதிர் பார்ப்புடைய, சுதந்திரமாக இருக்கு விழையும். எப்போதும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் விருப்பதுடனும், சாதிக்க விரும்பும் குழந்தையாக இருக்கும். ( கை அழகை காணுதல், ஒலி எழுப்பி தன் குரலைக் கேட்டல், குப்புற விழுதல், நகர்தல்................. போன்றவை.)
நாம் பின்பற்றும் முறைகளுக்கும், அறிவியலாளர்கள் கூறும் முறைகளுக்கும் பலத்த வித்தியாசம் இருக்கும். ஒவ்வொரு குழந்தைக்கு இது மாறுபடும்.
முறைகளை பார்ப்பதை தவிர்த்து நாம் குழந்தையைப் பார்க்க வேண்டும். குழந்தையை அன்புடன் பார்த்து, அந்த சின்ன உயிரை மதித்து நாம் அந்தக் குழந்தையை முறையாகப் பேண முடியும்.
(இங்கு கொடுக்கப்படும் பாடம் மரியா மாண்டிசோரி அவர்களின் படைப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். குழந்தைகளின் கல்வியில் மாண்டிசோரி முறை மிகப் ப்ரபலமானது. )
(Dr. Montessori said people talked much about her wonderful method of education but she had never deviced any method: she had wanted to observe the children, and the results superised her more than anyone else.)
தொடரும்.....
புதுகைத் தென்றல்
vandhaan vadivelan
1 year ago
3 comments:
///(இங்கு கொடுக்கப்படும் பாடம் மரியா மாண்டிசோரி
அவர்களின் படைப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட
குறிப்புகள். குழந்தைகளின் கல்வியில் மாண்டிசோரி முறை
மிகப் ப்ரபலமானது. )///
உண்மைதான்.
வாங்க நிஜமா நல்லவன்.
அடுத்த பாடம் வருது...
இன்னைக்கு தான் இந்த பாடம் படிக்க முடிஞ்சது. நன்றி பாடம் அருமை.
Post a Comment