இவற்றையெல்லாம் வெறும் இலட்சிய குறிக்கோள்களாகக் கொள்ளமால் நாம் தொடர்ந்து நம் தினசரி நடவடிக்கைகளில் கைகொள்வோமானால் ஒரு நல்ல குடிமகனை/மகளை உருவாக்க முடியும்.
1. குழந்தைகளோடு நாம் பழகும்போது நம் ஒவ்வொரு வெளிப்பாடும் அவர்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும். பிரிதொரு சமயம் அவர்களும் அதையொத்த சூழ்நிலை உருவாகும்போது அதை மீள் பாவனை செய்ய முற்படுவர். அதற்காக புறச்சூழலில் நாம் எத்தனையோ நிகழ்வுகளைத் தாண்டிவரும் போது நாம் எப்பொழுதும் ஒரு ஆதர்சமான நடவடிக்கைகளையே மேற்கொள்ளுவதும் சாத்தியமில்லை. அது போன்ற சமயங்களில் நாம் நம் குழந்தைகளிடம் மிகவும் உண்மையாக அவர்களுக்கு ஒரு பெரியவர்களுக்குரிய (நாம் மிகவும் மதிப்பவர்களில் ஒருவராகக் கொண்டு) மரியாதை கொடுத்து, அந்த சூழலின் ஆதர்சமான எதிர்விளைவுகள் எவ்வாறு இருந்திருக்கும் என்றும் நாம் எதற்காக இப்படி எதிர்வினையாற்றினோம் என்றும் விளக்க முற்படுவோமேயானால் அவர்களிடத்து ஒரு மிகப்பெரும் புரிதலும் நிகழ்வுகளை சீர்தூக்கிப்பார்க்கும் மனப்பக்குவமும் உண்டாகும். இது போன்ற நடவடிக்கைகள் இருவருக்கும் உண்டான நெருக்கத்தை அதிகரிக்கும்.
२. கணவன் மனைவி இருவருமே தனித்தனியாக குழந்தைகளோடு சிறிது நேரமாயினும் செலவிடவேண்டும். அது எங்காவது சிறிய கடைகளுக்குச் செல்லும் நேரமாகக் கூட இருக்கலாம். அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்து நாம் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது குறிப்பிட்டு பேச முயலவேண்டும் அது நாம் அவர்கள் பேச்சிற்கு அளிக்கும் மரியாதையையும், அவர்கள் பேச தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் குறித்தான விழிப்புணர்வையும் தோற்றுவிக்கும்.
சிறு துளி பெறுவெள்ளம் தானே.. ஒவ்வொரு வீடும் தலைப்பட்டால் ஒரு மிகச்சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் நாமாகலாம். இன்னும் தொடரும்….
vandhaan vadivelan
1 year ago
6 comments:
நல்வரவு கிருத்திகா..நன்று சொன்னீர்கள்...
வாங்க முதல் போஸ்டே கலக்கரீங்க.
நல்வரவு
///முதல் போஸ்டே ////////
என்ன பு.தெ.தூக்கமா?????
வாங்க அறிவன்,
கிருத்திகாவின் முதல் போஸ்ட்.
எனக்கு தூக்கம் இல்லை.
நல்ல பதிவு தான். இன்னும் பல நல்ல பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்
ஆகா வாங்க வாங்க கூட்டணி பலம் ஜாஸ்தி ஆகிட்டே போகுது...
கலக்கிட்டீங்க நல்லா இருக்கு...
Post a Comment