முதல் நிலை வளர்ச்சி( 0-6 வயதுவரை) அவ்வளவு முக்கியம் ஏன்?
"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
பெற்றவர் வளர்ப்பினிலே"
இது சத்தியமான வார்த்தை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் நன்கு சாதித்து இருக்கிறான் என்றால் அது அவனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினால் அல்ல. குழந்தையாய் இருக்கும் போதே அதற்கான அஸ்திவாரம் போடப் பட்டிருக்கிறது. பெற்றோர் குழந்தையின் வளர்ச்சியில் பங்கு பெறாவிட்டால், பிற்காலத்தில் பேராசிரியர் கூட உதவி செய்ய முடியாது. வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது.
குழந்தை பிராயத்தில், முறையாக கவனித்து வளர்க்கப் படாத பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போகும். பயமுறுத்தவில்லை. பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அறிவியலாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள உண்மை இது. இந்த நிலைக் குழந்தைகளைப் புறக்கணித்தல் அபாயகரமானது என்று
அபாயச் சங்கு ஊதுகிறார்கள். இதைத்தான் நம் முன்னோர்கள் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது", என்றார்கள்
சமுதாயமும் குழந்தைகளுக்கு நல்ல முறையான கவனிப்பு கிடைக்கிறதா என்பதில் அக்கறைக் காட்ட வேண்டும். (Society plays the vital role in childrens develpment)
Psychology எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் குழந்தையின் மீது அன்பும், அரவணைப்பும் முறையாகக் கொடுத்து பெற்றோர்கள் கவனம் செலுத்தினால் போதும். தவறினால் ஒரு தலைமுறையே நாசமாகிறது.
எனவே குழந்தை பிறந்தது முதல் ஏற்படும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அறிதல் அவசியமாகிறது.
பெற்றோருக்கானப் பாடம் தொடரும்....
புதுகைத் தென்றல்
vandhaan vadivelan
1 year ago
4 comments:
அடுத்த பாடத்திற்கான பதிவுக்கு காத்திருக்கிறேன்.
வாங்க நிஜமா நல்லவன்,
ரெடியாகி கிட்டே இருக்கு. அடுத்தவாரம் போட்டுவோம்.
குழந்தை வளர்ப்பில் நல்ல சூழல் எவ்வளவு முக்கியம் என்று நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்..
நன்றி அனைவருக்கும் தெரிய வேண்டிய பாடம்.
Post a Comment