குழந்தைகள் நமக்குப் பிறந்தவர்களே அன்றி
நமக்காகப் பிறந்தவர்கள் அல்ல!
அவர்களுக்கு வேண்டியதை அழகுற உண்ண,
ஊட்டாமல் பழக்குவதுதான் அழகு!
அடிக்கத் தொடங்கிவிட்டால் அடங்கவே மாட்டார்
அணைத்துப் பழக்குவோம் அடிக்காமல்!
நாம் பேசுவதைக்கேட்க காதுகளைப்பெற்ற அவருக்கு
வாயும் உண்டென்று நம்புவோம்.
காதுகொடுத்துக் கேட்டால் கடலளவு கஷ்டத்தையும்
கடுகளவாக்கி மகிழ்வான் அவன்!
அவருக்குமுன்னே சண்டைகள் போட்டுவிட்டு அவர்களுக்குள்
சண்டையை தடுப்பது மடமை!
- திருக்குறள் ஸ்டைலில் நாலு , மூணு ன்னு முயற்சி செஞ்சேன் அவ்வளவுதான்!
நல்லா இருந்தா தொடர்ந்துடுவோம்!