பேரண்ட்ஸ் கிளப்பில்
அப்பாக்கள் வலைப்பூ துவங்கி பிள்ளைவளர்த்தலில்
அவர்களும் தங்கள் பங்கினை வகிக்க, கருத்தினை
கூற வேண்டுமென கேட்டிருந்தேன்.
பதிவர் நண்பர் விஜய்கோபால்சாமி
அப்பாக்களுக்கான வலைப்பூவை ஆரம்பித்து
விட்டார்.
தந்தையர் வலைப்பூ
இந்த வலைத்தளத்தில் இணைந்து
கொள்ள விருப்பமுள்ளவர்கள்
dadsweblog@gmail.com என்ற முகவரிக்கு
மடலிட வேண்டுகிறேன்.
வாருங்கள். தாரைத் தப்பட்டைகள்
முழங்க அதிரடியாக ஆரம்பமாகட்டும்
தந்தையர் வலைப்பூ.
குழந்தையின் வளர்ச்சிக் காலங்கள்.
பொதுவாக குழந்தைகயின் வளர்ச்சிக் காலங்கள் 3 ஆக பிரிக்கப்படுகிறது.
0-6 வயது வரை, 6-12 வயது வரை, 12-18வயது வரை ஆகும்.
முதல்நிலை வளர்ச்சி மிக வேகமாக ஏற்படும். முதல்பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது குழந்தையின் எடை, பிறந்தபொழுதில் இருந்ததைவிட 3 மடங்காக இருக்கும். அதன் பிறகு 6 வயது வரை எடை 10ல் 1 பாதிதான் எடை அதிகரிக்கும். (இது ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசப்படும்.
அதனால் இந்த முதல்நிலையில் அதாவது (0-6 வயது) குழந்தைகள் அதிக கவனத்துடன் வளர்க்கப்படவேண்டும். நல்ல உறக்கம், முழூ சமச்சீர் உணவு (புரதம் மற்றும் அனனத்துச் சத்துக்களும் நிறைந்ததாக இருக்கவேண்டும்.)ஆகியவை குழந்தையின் முழூ வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.
நோய்க்கிருமிகளின் தாக்குதல்களிருந்தும், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவை தாக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமானதாக இருக்கும். அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மொத்ததில் குழந்தைகளின் வாழ்க்கை இயல்பானதும், மிகுந்த சுறுசுறுப்புடனும், அதே சமயம் அதிக சோர்வளிக்காத வகையிலும், over-excitement ஆகாத வகையிலும் இருத்தல் நலம்.
குழந்தையின் வளர்ச்சியும், பயிற்ச்சியும் தாயின் வயிற்றிலிருந்த்து தான் ஆரம்பம்.
நாம் அனைவருக்குமே நீச்சல் தெரியும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா? அது தான் உண்மை. 10 மாதக்காலம் தாயின்வயிற்றில் நாம் நீந்திக் கொண்டிருந்தோமே. அங்கே ஆரம்பிக்கிறது நம் நீச்சல் திறமை.
(வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் நாம் எல்லாவற்றையும் மறந்து, மாறிப் போகிறோம்.)
தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்கும் திறன், உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகியவை ஆரம்பம் ஆகிறது.
புராணத்தில் "பிரகலாதன்" தாயின்வயிற்றில் இருக்கும் போது நாராயணனைப் பற்றி நாரதர் சொல்லக் கேட்டுபிறகு சிறந்த விஷ்ணுபக்தனாக திகழ்ந்தான்.
இசைக் கேட்டு துள்ளும் குழந்தைகள் உண்டு. ( இம்சை அவர்கள் கூட தன் மகன் கருவில் இருக்கும் போது ஒரு பாடலைக் கேட்டு குழந்தை அதிகம் உதைத்து விளையாண்டதாக சொல்லியிருக்கிறார்.)
இதெல்லாம் நமக்கு சொல்லும் பாடம் என்ன? ஒரு பெண் கருவுற்றிற்கும் போது பெண்ணிற்கு கிடைக்கும் சூழ்நிலையை பொறுத்துதான் ஒரு குழந்தையின் தன்மை இருக்கும். நல்லதையே கேட்டு வளரும் குழந்தை நல்ல பிள்ளையாக பிறந்து, நாட்டிற்கு நல்லது செய்யும் நல்ல குடிமகனாகிறான்.
கருவுற்றிற்கும் பெண் அழுவது, படப்படப்புடன் வேலைப் பார்ப்பது, துக்கம், கோபம் எல்லாம் கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கிறது. HYPERACTIVE குழந்தைகளின் காரணம் தாய் கருவுற்றிருக்கும் போது இருந்த மனோபாவம்தான்.
உடனே பெண்ணால்தான் எல்லாம் என்று குற்றம் சாற்றக் கூடாது. கணவனும், கணவன் வீட்டைச் சார்ந்தவர்களும் இதற்கு கருவுற்றிற்கும்
பெண்ணிற்கு உதவினால், கர்ப்ப காலத்தை அனுபவித்து, ஆனந்தமாக பிள்ளை பெற ஏதுவாக இருக்கும்.
குழந்தைபிறந்த பிறகு குழந்தைமருத்துவர் குழந்தையின் கையில் பென்சில் ஒன்றைக் கொடுத்து, பார்ப்பார். குழந்தை பென்சிலை பிடித்துக் கொண்டால் திறன் சரியாக இருக்கிறது என்று அர்த்தமாம். பிறந்து ஒரு சில நிமிடங்களே ஆன குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்து பென்சிலைப் பிடிக்கிறது?
இதிலிருந்தே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அளற்கறிய திறனுடன்தான்
பிறக்கிறது என்பது ஊர்ச்சிதமாகிறதல்லவா?
தொடரும்...
புதுகைத் தென்றல்.
பெற்றோர்களுக்கான புதிய பாடம்(child psychology) - 1
பெரியவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி, உரிமை மீரல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் சமுதாயம், குழந்தைகளைப்பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை.
இது மாபெரும் தவறு. ஒரு பெரிய மனிதனாக வளர்வதற்கு உண்டான அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு வளர்வது இன்றைய குழந்தைதானே?
"The adult is a procreator, but the child is a creator" என்பார்கள். குழந்தைகளின் உலகம் ஆரோக்கியமானதாகவும், தடைகளற்றதாகவும் இருந்தால்தான் அவன் வளர்ந்து ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்?
உண்மையான உதவியை குழந்தைகளுக்கு கொடுக்க நாம் முதலில் குழந்தைகளின் உலகத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
"EVERYTHING BEGINS IN CHILDHOOD" என்கிறார்கள் அறிஞர்கள். ஒரு நல்ல முழு மனிதனன உருவாக்குவது என்பது மிகப்பெரிய காரியம்.
குழந்தையிலிருந்து முழு மனிதனாக மாறுவதற்கு இடையில் இருக்கும் காலகட்டத்தை ஒரு குழந்தை கடந்தாகவேண்டும்.
வழித்தட முன்னேற்றத்தை (path of development) அறிந்து சின்னஞ்சிறார்களுக்கு உதவுவதனாலேயே, பிறக்கும்போதே அளற்கறிய சக்தியுடன் பிற்ந்திருக்கும் குழந்தையை, முழு சக்தி, ஆற்றலுடன் கூடிய மனிதனாக மாற உதவலாம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தைகளை அன்புடன் புரிந்து கொண்டு, பாதுகாத்து, சரியான/தேவையான உதவிகளை செய்தால் நம்மால் ஒரு வலுவான, அன்பு நிறைந்த தலைமுறையை உருவாக்கமுடியும்.
இதனால் தான் குழந்தைகளை வருங்காலத் தூண்கள் என்கிறோம். இப்படி வளரும் குழந்தைகள்தான் இப்போது இருப்பதைவிட மேலும் சிறந்த உலகத்தை படைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.
உங்களுக்குத் தெரியுமா? குழந்தையின் வளர்ச்சியும், பயிற்ச்சியும்
துவங்குவது தாயின் கருவறையில் இருந்துதான்.
குழந்தைகளைப் படிப்போம். வலுவான உலகைப் படைக்க அவர்களுக்கு உதவுவோம்.
(பாடம் எடுப்பதாக நினைக்கவேண்டாம். நான் ஒரு MONTIESSORY METHOD OF TEACHING DIPLOMA முடித்த ஆசிரியை. அங்கு படித்ததை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்)
கலா ஸ்ரீராம்.
பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதை சரிவர செய்தால் தான் ஆரோக்கியமான தலைமுறை உருவாகும்.
முதலில் ஒவ்வொரு ஸ்டேஜ் ஆக குழந்தை வளரும் முறைகளை அறிந்து, அதன் பிறகு பிள்ளை வளர்ப்பு, சுட்டிக் குழந்தையை மேய்த்தல், பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், பெற்றவர்கள் கையாளும் முறை,
குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வது எப்படி?
அவர்களிடம் என்ன மாதிரி வேலைகள் சொல்லலாம்?
பள்ளியினை தேர்வு செய்வது எப்படி? பள்ளியில் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, விடுமுறை பயிற்சிகள்.
பருவ வயதில் இருபால் குழந்தைகளுக்கான பிரச்சனை, அவ்ர்களை கையாளும்முறைகள், பெற்றோர்களுக்குத் தேவையான அறிவுரை, குழந்தை மருத்துவம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த, குழந்தைகள் விரும்பும் உணவு ரெசிபிக்கள், என பல வகையான பதிவுகளை இங்கே பார்க்கலாம்.
வாங்க பெற்றோர்களே! இது உங்கள் பிளாக்.
பிள்ளைகளை பெறுவதால் மாத்திரமே பெற்றவர்கள் ஆகிவிடுவதில்லை.
நம்மில் இருந்து பிறந்தவர்கள் என்பதனாலேயே நம் பிள்ளைகள் நமக்கு அடிமையும் இல்லை.
அதனாலே நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.
சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் parentsclub08@gmail.com ற்கு மெயில் தட்டுங்க.
வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்.