பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label குட்டீஸ் உணவு. Show all posts
Showing posts with label குட்டீஸ் உணவு. Show all posts

என்ன எல்லோரும் நலமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்.


கொஞ்சம் பிஸியாகிட்டேன். அதான்.


நீங்களும் பசங்க பரிட்சை, விடுமுறைன்னு பிசியா இருந்திருப்பீங்க.. :)




பிளையின் நூடில்ஸில் என்னென்ன செய்யலாம் அப்படின்னு
பார்ப்போமா?





1. வெஜி நூடில்ஸ்:


தேவையான பொருட்கள்:
ஹக்கா நூடில்ஸ் (பிளையின் நூடில்ஸ்) தேவையான அளவு.
பட்டர், மிளகுத்தூள், (துருவிய கேரட், முட்டை கோஸ்,
வெங்காயத்தாள், பீன்ஸ், மெலிதாக அரிந்தது..)
சோயா சாஸ்.


செய்முறை.
கொதிக்கும் தண்ணீரில் சமைய்ல எண்ணைய் 1 ஸ்பூன்,
உப்பு கொஞ்சம் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும்
சல்லடையில் போட்டு, குளிர்ந்த நீர் ஊற்றி வடிய வைக்கவும்.

வானலியில் பட்டர் போட்டு, காய்கறிகளை சேர்த்து வதக்கி,

வெந்ததும், உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சேர்த்து வெந்த

நூடில்சையும் போட்டு பிரட்டி எடுத்தால் வெஜி நூடில்ஸ்

ரெடி. காய் சாப்பிட அழும் குழந்தையும் அழாமல் இந்த

காய்கறி நூடில்சை சாப்பிட்டு விடும் :)

நூடில்ஸ் மஞ்சூரியன்:

நூடுல்ஸ் 1/2 கப், மைதா 1- ஸ்பூன்,

கார்ன்ஃபிலார் - 1 ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள்,

அஜினோமோட்டோ, சில்லி சாஸ் தேவைக்கேற்ப..

செய்முறை :

வேகவைத்த நூடுல்ஸ் உடன் எல்லாவற்றையும் சேர்த்து

பிசைந்து உருண்டை செய்து நன்கு கிரிச்பியாக பொரித்து

வைத்தால் தட்டில் ஒன்று கூட மிச்சம் இருக்காது.

1.நூடில்ஸ்/ பாஸ்தா இவைகளை மேற்சொன்ன முறையில்

செய்து அசத்தலாம்.

2. மேற்சொன்ன முறையிலேயே செய்து, மிளகுத்தூள், சோயாசாஸ்,

சேர்க்காமல், பாஸ்தா சாஸ் சேர்த்தால் டொமாடோ நூடில்ஸ்.

3. காய்கறிகள் சேர்க்காமல், பாஸ்தா சாஸ் சேர்த்து மேலே

சீஸை துருவி போட்டால் கிரீமி நூடில்ஸ்/பாஸ்தா ரெடி.


மதியம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என நினைத்து சமைத்து அனுப்புவேன். ஆனால் வீடு திரும்பும் பிள்ளையின் டப்பாவில் சோறு அப்படியே இருக்கும்.

ஒரு வாய் மட்டும்தான் சாப்பிட்டு இருப்பான். மனம் பதைத்துப்போகும். தினமும் இப்படியே என்றால் என்ன செய்ய? ஒரு நாள் மகனைப் பக்கத்தில் இருத்தி கேட்டபோது கிடைத்த விடயம்
இதுதான்.

சோறு சாப்பிட பிடிக்கவில்லை. ஆறிப்போய் இருகிவிடுகிறது. சோறு சாப்பிட்டு கொண்டிருந்தால் விளையாட நேரம் குறைவாகி விடுகிறாதாம். :(

அன்றுமுதல் மதியம் சோறு கொடுத்தனுப்பாமல் வித்தியாசமாக செய்து கொடுத்தனுப்ப
ஆரம்பித்தேன். மகனின் வயறும், என் மனதும் நிறைந்தது.

Nesessity is the mother of invention என்பது மறுபடியும் உண்மையாகி விட்டது.

வித்தியாசமான, பிள்ளை விரும்பும் சமையல் கற்க ஆரம்பித்தேன். சரி இன்னைக்கு என்ன ரெசிப்பின்னு பார்ப்போம்:

தோசை வகைகள்:

பொதுவாக தோசை ஆறி வரட்டி மாதிரி ஆகிவிடும். மெலிதாக ஊற்றாமல் ஊத்தப்பம் மாதிரி
செய்யலாம்.

1. சின்னச் சின்ன ஊத்தப்பங்கள் ஊற்றி அதில் ஏதாவது ஒரு சட்னி, (தேங்காய்ச் சட்னி தவிர்த்து)வைத்தால் தோசை சாண்ட்விச் ரெடி. (இங்கே தான் நாம் புதினா சட்னி, கொத்துமல்லி சட்னி ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம்)

2. ஊத்தப்பங்களுக்குள் தோசை மிளகாய்ப்பொடி நெய் தடவி கொடுக்கலாம்.

3. ஊத்தப்பத்தில் தக்காளி, வெங்காயம், கொத்துமல்லி தழை சேர்த்து, மேலே சீஸ் தூவினால்
"ஹோம் மேட் பிட்சா" ரெடி.

4. தோசையை கட் செய்து, வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ்,, ப.மிள்காய சேர்த்து வதக்கினால், "கொத்து தோசை".

5. நெய் தோசை செய்து அதில் தோசை மிளகாய்ப் பொடி தூவி மடக்கி கொடுக்கலாம்.

6. சட்னியைத்தடவி மடித்து கொடுத்தால், தோசை ரோல் ரெடி.

7. டொமேடோ சாஸ், சில்லி சாஸ் தடவி கொஞ்சம் சீஸ் சேர்துக்க்கொடுக்கலாம்.

8. தோசை மாவில், வெங்காயம், கொத்தமல்லித் தழை, சீரக, மிளகுப்பொடி சேர்த்து கலக்கி
குழிப்பணியாரக் கல்லில் ஊற்றினால், மசாலா பணியாரம் ரெடி.

9. துருவிய கேரட், கோஸ் இவற்றை வதக்கி மாவில் கலக்கி குழிப்பணியாரம் செய்யலாம்.


இந்த தோசை மாவில் alphabet dosa,கடிகார தோசை, பூனை தோசை(டிசைன்ஸ்தான்)
இப்படி விதவிதமா ஊத்தினா கணக்கு வழக்கே இல்லாம சாப்பாடு உள்ள போகும்..

இப்போதைக்கு இதை செய்து பாருங்கள் மேலும் சிலக் குறிப்புகளோடு சந்திக்கிறேன்...

தொடரும்.
புதுகைத்தென்றல்

நாளின் முதல் உணவாகிய காலை உணவு எவ்வளவு
அவசியம் என்பது சொல்லத்த் தேவையில்லை.
இருந்தாலும் ஒரு ஞாபகத்திற்காக இங்கே.


ஆகவே பிள்ளைகளை வெறும் வயிற்றோடு பள்ளிக்கு
அனுப்பாதீர்கள். (நாங்க எங்க அனுப்பரோம். அவங்கதான்
சாப்பிடறதில்லைன்னு சொல்வது காதுல விழுது)

நான் பற்றும் முறை உங்களுக்கு சரிவருமா என்று
பாருங்கள். இதோ தருகிறேன்:

இரவு 9 மணிக்கு பிள்ளைகள் தூங்கப் போயிவிடவேண்டும்.
(நானும் தூங்கிவீடுவேன்.) அப்போதுதான் காலையில்
எழுவது ஒரு பெரிய எபிசோட் டிராமாவாக இராது.

காலையில் எழுந்ததும், பல்துலக்கியு உடன் பால்
அருந்தாமல், ஒரு டம்பளர் தண்ணீர் குடித்து, சின்ன
உடற்பயிற்சி ( 5 நிமிஷம் தான். யோகா மாதிரி)
செய்வார்கள். இதனால் "காலைக்கடன்கள்"
ஒழுங்காக முடிந்து, குளித்து காலை உணவு
(2 இட்லியாவது) சாப்பிட்ட உடன், பாலைக் குடித்து
செல்வார்கள். வயிறும் நிறைந்திருக்கும்.

பள்ளி சென்றபின் வயிறு உபாதை பிரச்சனனயும்
இல்லை.

சரி இப்போ உணவு என்னன்னு பார்ப்போம்:

ஆபாத்பாந்தவன், அனாத ரட்ச்கன் என்று கொண்டாடப்
படும் இட்லி மாவை வைத்து என்ன செய்யலாம்? (இட்லி
மாவை வைத்து இட்லிதான் சுடுவாங்கன்னு கடிக்காதீங்க :) )

இட்லி இது சில பிள்ளைகளுக்கு பிடிக்காது. கொடுக்கும்
விதத்தில் கொடுத்தால் விரும்மி சாப்பிடுவார்கள். இனி
உங்கள் வீட்டில் இட்லி வேண்டாம் என்று யாரும் சொல்ல
மாட்டார்கள். ரெசிபிக்கு போகலாம்.

1. குட்லி:

பட்டன் இட்லி/14 இட்லி எனப்படும் இட்லிதான். அந்த
சின்ன இட்லி பிளேட்டில் இட்லி செய்து கொள்ளுங்கள்.

சாம்பார் செய்து, அதைக் குட்டி இட்லியின் மேல் ஊற்றி
(விரும்பினால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து) 1 ஸ்பூனையும்
வைத்து அனுப்புங்கள்.


2. இட்லி மஞ்சூரியன்:

பட்டன் இட்லி அல்லது சாதாரண இட்லி தட்டில் செய்த
இட்லியாக இருந்தால் 4 ஆக வெட்டிக்கொள்ளவும் .

பட்டர் கொஞ்சம். பாஸ்தா சாஸ் (மெக்ரோணி சாஸ் என்றும்
சொல்வார்கள். இதில் சிக்கன் ஸ்டாக் சேர்த்ததும்
கிடைக்கும்)

வாணலியில் பட்டர் போட்டு உறுகியதும், இட்லி
துண்டுகளைப் போட்டு வறுக்கவும். தேவையான
அளவு பாஸ்தா சாஸ் சேர்த்து கிளறி இரக்கி,
கொத்துமல்லி தழை தூவினால் இட்லி
மஞ்சூரியன் ரெடி.


3. இட்லி ஃப்ரை:

இட்லியை வெட்டி, பட்டர் சேர்த்து வறுத்து,
மேலே இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து
பிரட்டினால் ஃப்ரை ரெடி.

விரூம்பும் பிள்ளைகளுக்கு மேலே
கெட்டித்தயிர் விட்டு அனுப்பலாம்.


4. இட்லி காய்கறி உருண்டை:

வேகவைத்த இட்லி - 4, கேரட்- துருவியது கொஞ்சம்,
கோஸ், பொடியாக அரிந்தது, வெங்காயம்- பொடியாக
நறுக்கியது, உப்பு, ப.மிளகாய் தேவைக்கேற்ப.

செய்முறை: இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய்
வெங்காயம் வதக்கவும், பிறகு காய்கறிகள் சேர்த்து வதக்கி
உதிர்த்த இட்லி, உப்புசேர்த்து வதக்கி இரக்கவும்.

இதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி
டப்பாவில் வைத்து அனுப்பினால் மிச்சம் வைக்காமல்
சாப்பிடுவார்கள்.

5. இட்லி உசிலி:

டலைப் பருப்பு, கறிவேப்பிலை, கடுகு தாளித்து,
மிளகாய், வெங்காயம் வதக்கி அதில் உதிர்த்த
இட்லி சேர்த்து உருண்டை பிடித்து செய்யலாம்.

துருவிய சீஸை சேர்க்கலாம்.


6. இட்லி Finger chips:

இட்லியை நீளவாக்கில் நறுக்கி எண்ணையில்
பொரித்து, டிஷ்யூ பேபரில் வைக்கவும். ஆறியதும்
எடுத்து மேலே மிளகு/சீரகத்தூள் உப்பு சேர்த்து
கொடுக்கலாம்.

7. ஸ்டஃப்டு இட்லி:

இட்லி உருண்டைக்கு சொன்னது போல் காய்கறிகளை
கல்நது, இட்லி அவிக்கும் போது நடுவில் வைத்து
அவித்தால் இட்லி ரெடி.

8. மசாலா இட்லி:

பட்டரில் வெட்டிய இட்லி சேர்த்து வதக்கி,
மேலே கரம் மசாலா, உப்பு சேர்த்து பிரட்டினால் ரெடி.

விரும்பினால் மேலே கெட்டித்தயிரும், வெங்காயமும்
சேர்க்கலாம்.

பிள்ளைங்க சாப்பிட என்னென்ன செய்ய வேண்டியது
இருக்கு என்று சொல்கிறீர்களா?ஆமாம் என்ன
செய்வது. நோகாமல் நோன்பு கும்பிட முடியாதே?!!!!!!

மேலும் சில ரெசிப்புக்களோடு சந்திக்கிறேன்.

அன்புடன்,
புதுகைத்தென்றல்

ஏன் இந்த வெறுப்பு?
சில குழந்தைகள் குறிப்பிட்ட சில உணவுவகைகளைத் தவிர்த்து, வேறு எதையும் திரும்பிப் பார்க்க கூட மாட்டார்கள். இது குழந்தையின் தவறல்ல.

வீட்டில் பெரியவர்கள் பிடிக்காது என்று ஒதுக்கும், பல விஷயங்களைப் பார்த்து தானும், அவ்வாறே செய்ய முயலுகிறது.

கஷ்டப்பட்டு சமைத்து அனுப்புவதை கொட்டிவிட்டும் பிள்ளைகள், நமக்குத் தெரியாமல் தேய்க்கப்போடும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

குழந்தைகள் ஒரே மாதிரியான உணவை வெறுக்கிறார்கள்.

நான் மாண்டிசோரி ஆசிரியையாக பணிபுரிந்த போது, எனக்கு மிகவும் கடினமான பீரியடாக நான் நினைத்து, "பிரேக் டயம்" தான்.

தினமும் "சால்ட் பிஸ்கெட்" மாத்திரமே கொண்டுவரும் பையனனப் பார்க்க பாவமாய் இருக்கும். வேறொரு குழந்தை தினமும் "ப்ரெட் ஸ்ப்ரெட்" தடவிய ரொட்டித்துண்டுகள். வெரைட்டியாக இருக்கட்டும் என்று கடையிலிருந்து பன், பேட்டீஸ் கொண்டுவரும் குழந்தைகளூம் சரியாக சாப்பிட மாட்டார்கள். அடுத்த குழந்தையின் டப்பாவை
ஏக்கமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

காலையிலும் ஒன்றும் உண்ணாமல், வீடு போகும்வரை வெறும் வயிற்றோடு இருக்கும் அவர்களைப் பார்க்கும்போது பரிதாபப் படத்தான் முடியும்.

"என் மகன் சாப்பிடுவதே இல்லை , கொஞ்சம் பாருங்கள்", என்று என்னிடம் குறை கூறுவார்கள் பெற்றோர்.

விதம் விதமாக, மாறுபட்ட உணவைத் தான் பிள்ளைகள் விரும்புகிறார்கள். உங்களுக்கு உதவ சில உணவுவகைகள்.
(இவை காலை உணவாகவும் கொடுக்கலாம், டிபன் பாக்சிலும்
வைத்து அனுப்பலாம்)

முதலில் ஈசி உணவாகிய பிரெட் வகைகளைப் பார்ப்போம்.

1. பிரெட் மசாலா:
தேவையானவை: சான்ட்விச் பிரெட்- 4, தக்காளி-2, வெங்காயம்-2,
ப.மிளகாய-1 கொத்தமல்லி இழை-கொஞ்சம்.

செய்முறை :- பிரெட் தவிர மீதி அனனத்தையும், நன்கு பேஸ்டாக
அரைத்துக் கொள்ளவும், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் முதலில் பட்டர் கொஞ்சம் போட்டு,
அதன் மேல் அரைத்த மசாலா பேஸ்ட் தடவிய பக்கத்தை
முதலில் வைத்து, பிறகு மெல்ல திருப்பி டோஸ்ட் செய்தால்
மசாலா டோஸ்ட் ரெடி.

2. பிரட் சீஸ் டோஸ்ட். (சீஸில் பிள்ளைகளுக்குத் தேவையான
பாலின் சத்து முழுதும் கிடைக்கிறது)

சீஸைத் துருவி வைத்துக் கொள்ளவும். பிரட்டில் பட்டர்
தடவி, அதில் கொஞ்சம், டொமேடோ சாஸ், (விரும்பினால்
சில்லி சாஸ் கொஞ்சம்) சீஸ் வைத்து மற்றொரு பிரட்டால்
மூடி டோஸ்டரிலோ/தோசைக்கல்லிலோ வைத்து
டோஸ்ட் செய்தால் பிரட் சீஸ் டோஸ்ட் ரெடி.

3. பாவ் மசாலா:
சாண்ட்விச் பிரெட் அல்லது வடா பாவ் பிரெடில் பட்டர்
தடவி, கரம் மசாலா பவுடர் கொஞ்சம் சேர்த்து தோசைக்கல்லில் டோஸ்ட் செய்ததால் பாவ் மசாலா/ மசாலா பால் (Masala ball) ரெடி.

4. 2பிரெட்டை ஒரு புறம் பட்டர் தடவி, தோசைக்கல்லில் கிரிஸ்பாக டோஸ்ட் செய்து கொள்ளவும். தக்காளி, வெள்ளரிக்காயை
வட்டமாக வெட்டி, அதன் நடுவில் வைத்து, மேலே சீரகம், மிளகுத்தூள் கொஞ்ச்மாகத் தூவி இன்னொரு பிரட்டால் மூடினால் சாண்ட்விச் டோஸ்ட் ரெடி.

5. உருளைக் கிழங்கு கறி செய்து அதை பிரட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.

6 கேரட், கோஸ், வெங்காயம் ஆகியவற்றை வதக்கி, அதை பிரட்டின் நடுவில் வைத்து டோஸ்ட் செய்யலாம்.

7. முட்டையை அடித்து அதில் மிளகுத்தூள்,உப்பு, சேர்த்து, அந்தக்கலவையில் பிரெட்டை நனைத்து பட்டர் சேர்த்த தவாவில் பிரை செய்து "பாம்பே டோஸ்டாக" கொடுக்கலாம்.

தொடரும்....
அன்புடன்,
புதுகைத் தென்றல்

இமயமலையைக் கூட சர்வ சாதாரணமாக ஏறிவிடலாம். குழந்தையைச் சாப்பிட வைப்பது "பிரம்ம ப்ரயத்தன்ம்" என்பார்களே அது மாதிரி மிக கஷ்டமான வேலை.

நேரத்திற்கு உண்ணாத குழந்தை வளர்ச்சி குறைந்து, மெலிவாக காணப்படும். சில குழந்தைகள் சரியாக சாப்பிடாவிட்டாலும் நாள் முழுதும் ஆக்டிவாக இருப்பார்கள்.

சிறுதீணிகளுக் கென்று ஒரு நேரம் வைத்துக் கொண்டு அப்போது மாத்திரம் கொடுப்பது நலம். பிஸ்கட், சாக்லெட் போன்றவை அடிக்கடி கொடுக்கக்கூடாது.
ஃபாஸ்ட் புட் எனப்படும் பிட்ஸா, பர்கர், சிப்ஸ், .... போன்றவைகளை அதிகமாக உட்கொள்ளும் குழந்தைகள் "ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள் - HYPER ACTIVE KIDS"ஆக இருப்பார்களாம்.

மகா பயங்கரம் இந்த 2 நிமிட நூடில்ஸ்கள். அதில் இருக்கும் மெழுகு வயிற்றுவலியை கொடுத்து, பக்க விளைவுகளைத் தருகிறது.

சில குழந்தைகள் அடிக்கடி ஜலதோஷத்திற்கு ஆளாவர்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுவதனால் மாத்திரம் அல்ல, அவர்களுக்கு ஒவ்வாத்தன்மை (Allergy) இருக்கலாம். உணவுகளில் சேர்க்கப்படும் பிரிஸர்வேடிவ் (preservative)
(தக்காளி சாஸ், ஜாம்கள், பெப்ஸி, கோக் போன்ற குளிர் பானங்கள், சாக்லெட்...... இப்படி பல இருக்கின்றன.) ஒவ்வாத்தன்மையை ஏற்படுத்துகின்றன்.

கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் இருக்கும் வினிகர் கூட ஒவ்வாத்தன்மையைத் தரலாம்.

சில வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை குழந்தைகளும் எடுத்து அப்படியே குடிக்கின்றனர். அது மிகத் தவறு. குளிர் சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து அறையின் வெப்பநிலைக்கு வந்த பிறகே எதையும்
உட்கொள்ளலாம்.

சின்னச்சின்ன விஷயங்கள் தான் என்றாலும் அவற்றையும் கவனத்தில் வைத்து பார்த்து பிள்ளைகளை வளர்ப்பது முக்கியம்.

(விண்ணப்பம்)
வீட்டிலேயே நமக்கு டேக்கா கொடுத்துவிட்டு ஓடும் பிள்ளைகள், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸ் அப்படியே திரும்ப வரும்போது மனது படும் வேதனை. அவர்களை எப்படி பள்ளியிலும் சாப்பிட வைப்பது? குழந்தைகளுக்கு என்ன கொடுத்தனுப்பலாம்?, அதற்கான் ப்ர்த்யேக சமையற்குறிப்புக்களை பற்றி ஒரு தொடர் பதிவு போட இருக்கிறேன். அதற்கு தங்களின் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன்.

parentsclub08@gmail.com க்கு எழுதுங்கள். தங்களின் பெயரோடு பதிவாகப் போடலாம்.

மீண்டும் சந்திப்போம் புதுகைத் தென்றல்.

தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.

குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் கொடுக்கத் துவங்க வேண்டும்.

(வெறும் பால் மாத்திரமே (6/7 மாதம் வரை) குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள்)

சத்துமாவு கஞ்சியும் நல்லது தான். அத்துடன் NESTUM (RICE), CERELAC, போன்றவையும் கொடுக்கலாம்.


நெஸ்டம் (புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது) செரிலாக- கோதுமையின்
அடிப்படையில் தயாரிக்கப் படுகிறது.

நெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்டலாம்.

குழந்தை கூட்டி உண்ண பழகினால்தான் பிறகு திட ஆகாரம் உண்ணமுடியும்.

நெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்து , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்து கொடுக்கலாம்.

மசித்த உருளைக்கிழங்கு, பழவகைகள் மசித்துக் கொடுக்கலாம்.

இட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின்
வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.

உதாரணமாக ஒரு டைம்டேபிள் கொடுத்திருக்கிறேன். (இதன் குறிக்கோள் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவுக் கொடுப்பதுதான். )

காலை 5 மணீ - தாய்ப்பால்.

காலை 8. மணி- இட்லி அல்லது நெஸ்டம்

காலை 9.30 மணி - கொஞ்சம் பால்.

12.மணீ - கஞ்சி, நெஸ்டம்.

1.30 மணி - பால்

4 மணீ - பழ மசியல் + நெஸ்டம்/ செரிலாக் / பிஸ்கெட் பாலில் நனனத்தது.

6 மணி - தாய்ப்பால்

8மணி - திட ஆகாரம்.

இரவு 10.மணி - தாய்ப்பால்.

செரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவையே நாக்கிற்கு
பழக்கமாகிவிடும். நெஸ்டம் ரைஸில் பருப்புத் தண்ணீர், 9/10
மாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக உப்பு/காரம் பழக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை,
இறைச்சி ஆகியவையும் மெல்ல மெல்ல அறிமுகப் படுத்த வேண்டும்.

மிக முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால்
குழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை
உட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது.

குழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது
ஒரு சிறு தட்டீல் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண
பழக்க வேண்டும்.


(கீழே, மேலே சிதறி சுத்தம் செய்வது கஷ்டம் என்று சொல்வது
தெரிகிறது)

கறை நல்லது. கறை இல்லாமல் கற்க முடியாது.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்