பிள்ளை வளர்ப்பு ஒரு கலை.
பிள்ளை வளர்ப்பு என்று சொல்வதை விட
வளரும் குழந்தைக்கு தேவையான நேரத்தில்
தேவையான உதவி செய்தல்- என்பதே சரி.
நம் நண்பர் எஸ்.கே. இந்த தளத்தை பற்றி
எனக்கு மடலிட்டிருந்தார்.
அனைவருக்கும் உபயோகப்படும் என்பதால்
இங்கே கொடுத்திருக்கிறேன்.
பாருங்களேன்!!!!
வலைத்தளம்:
2007 டிசம்பரில் ஹைதைக்கு வந்திருந்த பொழுது
“தாரே ஜமீன் பர்” ஹிந்தித் திரைப்படம் பார்த்தோம்.
படம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே மனதில்
பலவகையான ஓட்டங்கள்.
“நீயும் ஒரு ஆசிரியைதானே? நீ என்ன
சாதித்திருக்கிறாய்” என்றுதான் என் மனசாட்சி
என்னிடம் முதலில் கேட்டது.
“என்னால் என்ன செய்ய முடியும்? நானும்
ஒரு சாதாரண மனுஷிதானே?” இது என்
பதில்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும்
தொடர்ந்து எங்கள் உரையாடலின் தாக்கமே
இந்த வலைப்பூ. 16.01.08 அன்று தொடங்கப்பட்டது.
பெற்றோர்கள் ஒன்று கூடி நமக்குள்
ஓரு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும்,
ஒருவரின் அனுபவம் மற்றவருக்கு உதவுமானால்
பகிர்ந்துகொள்ளவும் ஒரு களமாக இருக்கத்தான்
இந்த வலைப்பூ.
நண்பர் இம்சை வெங்கியின் உதவியுடன்
அமோகமாக துவங்கப்பட்டு இன்று
* நந்து f/o நிலா
* இம்சை
* விசயக்குமார்
* பாச மலர்
* புதுகை.அப்துல்லா
* சுரேகா..
* Jeeves
* வெண்பூ
* புதுகைத் தென்றல்
* கிருத்திகா என இந்த வலைப்பூவின்
உறுப்பினர் பட்டியல் நீள்கிறது.
இந்த வலைப்பூவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து உங்களின் ஆதரவோடு பல நல்ல
பதிவுகளை இந்த வலைப்பூ தரவிருக்கிறது.
இதில் சேர்ந்துகொள்ள விரும்புவோர்கள்
சேர்ந்துகொள்ளலாம்.
நமது பேரன்ட்ஸ் கிளப்பில் பதிவெழுத உங்களை அழைக்கிறோம்.
குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜிலும் தேவையானவற்றை
இங்கே பதிகிறோம்.
அடலச்ன்ஸ் வயதில் பெண் பிள்ளைகளுக்கும்,
ஆண் குழந்தைகளுக்கும் தேவையான
அறிவுரைகள், ஊட்டச் சத்து மிக்க உணவுகள்
(பெண் குழந்தைக்கு உளுந்தங்க களி)
]அந்த வயதினரைக் கையாள்வது எப்படி?
இது போன்ற இன்னும் பல தலைப்புகளில்
உங்களுக்குத் தெரிந்ததை இங்கே பகிர்ந்துக்
கொள்ளுங்கள்.
ஒரு உறவாகவோ, நட்பாகவோ உங்களை'உருவக
படுத்திக்கொண்டு எதிர் கால சமுதாயத்திற்கு
உதவுங்கள்.
நீங்கள் மடல் அனுப்பினாலும் சரி.
தொடர்ந்து உறுப்பினராக விரும்பினாலும் சரி.
எமக்குத் தெரியப் படுத்துங்கள்.
முகவரி: parentsclub08@gmail.com/ pdkt2007@gmail.com