குழந்தைகள் நமக்குப் பிறந்தவர்களே அன்றி
நமக்காகப் பிறந்தவர்கள் அல்ல!
அவர்களுக்கு வேண்டியதை அழகுற உண்ண,
ஊட்டாமல் பழக்குவதுதான் அழகு!
அடிக்கத் தொடங்கிவிட்டால் அடங்கவே மாட்டார்
அணைத்துப் பழக்குவோம் அடிக்காமல்!
நாம் பேசுவதைக்கேட்க காதுகளைப்பெற்ற அவருக்கு
வாயும் உண்டென்று நம்புவோம்.
காதுகொடுத்துக் கேட்டால் கடலளவு கஷ்டத்தையும்
கடுகளவாக்கி மகிழ்வான் அவன்!
அவருக்குமுன்னே சண்டைகள் போட்டுவிட்டு அவர்களுக்குள்
சண்டையை தடுப்பது மடமை!
- திருக்குறள் ஸ்டைலில் நாலு , மூணு ன்னு முயற்சி செஞ்சேன் அவ்வளவுதான்!
நல்லா இருந்தா தொடர்ந்துடுவோம்!
6 comments:
சொன்னவை எல்லாம் நிஜங்கள் என்பவற்றுக்கப்பால் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையும் கூட.
திருக்குறள் ஸடைல 4,3 ன்னு முயற்சி பண்ணியிருக்கிறீங்க. ஆனா திருக்குறள் மாதிரி வாறதுக்கு இன்னும் முயற்சிபண்ணணும். கொஞ்சம் எதுகை மோனைகள், சந்தங்கள் மற்றும் ஒத்த கருத்துடைய சொற்கள் என மாற்ற்ப் போட்டீங்கன்னா சரி.
வேற வழியே இல்லை!நீங்க தொடர்ந்துதான் ஆகணும்.ரொம்ப நல்லாருக்குண்ணே.
ஆஹா,
கூட்டணியில் சேர்ந்தப்பின் சுரேகாவின் முதல் பதிவே கலக்கலா இருக்கே.
வாழ்த்துக்கள் நல்லா சொல்லியிருக்கீங்க. தொடருங்க. தொடர்ந்துத்தான் ஆகணும்
சொல்லியிருக்கும் அத்தனையும் முத்துக்கள். நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.
///குழந்தைகள் நமக்குப் பிறந்தவர்களே அன்றி
நமக்காகப் பிறந்தவர்கள் அல்ல!///
சும்மா நச்சுன்னு இருக்கு.(பேச்சு வழக்கிற்கு மன்னிக்கவும்)
இன்றைய குழந்தைகளின் தலையில்
ஏற்றப்படும் சுமைகளைக்கூட நாசூக்கச்
சொல்லி அழகாக வரையப்பட்ட உண்மையின்
வரலாற்றுக் கவிதை அருமை வாழ்த்துக்கள்.....
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
Post a Comment