பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Barbara Hacker என்பவர் பிள்ளைகளுக்கு நாம் எவ்வாறெல்லாம்
உதவலாம் என்று கூறியிருக்கிறார். ஒன்று, இரண்டல்ல
101 ஐடியாக்கள்.

என்ன சொல்லியிருக்கிறார்? இதோ சில உங்களுக்காக.

1. குழந்தைகள் தானாகவே உடை உடுத்திக்கொள்ள அனுமதியுங்கள்.
(நேரம் அதிகமானாலும் பரவாயில்லை)

2. குட்டி செஃபாக குழந்தையையும் பக்கத்தில் இருத்தி
இருவரும் சேர்ந்து உணவை சமைக்கலாமாம்.
(நல்ல ஐடியா தான். உணவு தயாரிக்க ஆகும் நேரம்,
சாமான்களின் விலை எல்லாம் தெரிந்த குழந்தை
உணவை வீணக்காது)

3.குழந்தைக்கு சின்ன சின்ன பாடல்களை சொல்லிக்கொடுத்து
குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் பாடுங்கள்.

4. உங்களின் வேலை எத்தகையது? எங்கு வேலை பார்க்கிறீர்கள்?
போன்றவற்றை பிள்ளைக்கு சொல்லுங்கள்.

5. குழந்தை கேட்பது எல்லாம் அவசியமானதல்ல. ஆகவே
கோபமாக இல்லாமல் ஸ்திரமாக “நோ” சொல்லுங்கள்.

6. குழந்தை தானாகவே செய்யக்கூடியதை நீங்களே
செய்து கொடுக்காதீர்கள்.

7. நாம் தவறு செய்த பட்சத்தில் பிள்ளையிடம்
மன்னிப்பு கேட்பது தவறல்ல.

8.எப்போதும் உண்மையே பேசுங்கள்.

9. பஸ்ஸில், டிரையினில் பயணிப்பதின் சுகத்தை
குழந்தைக்கும் அறியத் தாருங்கள்.

10. குழந்தைக்கு போதுமான தூக்கம் கிடைக்கிறதா
என்று பாருங்கள்.

101 யோசனைகளும் மொழி பெயர்க்க நேரம் போதவில்லை.
முடிந்தபோது ஒரு எட்டு இங்கே போய்
பார்க்கலாமே!


மீண்டும் சந்திப்போம்.

நமது வலைப்பூ பிடித்து நமக்காக தூயா
ஒரு பரிசு தந்திருக்கிறார்.

அவரின் அந்தப் பதிவு இதோ:

பேரன்ட்ஸ் க்ளப் அங்கத்தவர்களுக்காக

பரிசு என்ன? நான் சொல்ல மாட்டேன். :)

நீங்களே சகோதரியின் பதிவில் பாருங்கள்.

தங்களின் அருமையானப் பரிசு அனைவருக்கும்
உபயோகமாக இருக்கும் தூயா.

அங்கத்தினர்கள் சார்பில் மிக்க நன்றி.

குழந்தைகள் நமக்குப் பிறந்தவர்களே அன்றி
நமக்காகப் பிறந்தவர்கள் அல்ல!

அவர்களுக்கு வேண்டியதை அழகுற உண்ண,
ஊட்டாமல் பழக்குவதுதான் அழகு!


அடிக்கத் தொடங்கிவிட்டால் அடங்கவே மாட்டார்
அணைத்துப் பழக்குவோம் அடிக்காமல்!


நாம் பேசுவதைக்கேட்க காதுகளைப்பெற்ற அவருக்கு
வாயும் உண்டென்று நம்புவோம்.

காதுகொடுத்துக் கேட்டால் கடலளவு கஷ்டத்தையும்
கடுகளவாக்கி மகிழ்வான் அவன்!

அவருக்குமுன்னே சண்டைகள் போட்டுவிட்டு அவர்களுக்குள்
சண்டையை தடுப்பது மடமை!


- திருக்குறள்  ஸ்டைலில் நாலு , மூணு ன்னு முயற்சி செஞ்சேன் அவ்வளவுதான்!

நல்லா இருந்தா தொடர்ந்துடுவோம்!


பேரண்ட்ஸ் கிளப்பிற்கு வலையுலகில் நல்ல ஆதரவு
இருக்கிறது.

நமது கிளப்பிற்கு மேலும் பெருமை சேர்க்க விதமாக
எனக்கு இந்த மடல் மின்னஞ்சலில் வந்தது.

அன்புடையீர்!

தங்கள் கூட்டு வலைப்பதிவான " பேரண்ட்ஸ்கிளப்" (http://parentsclub08.blogspot.com/) எங்கள் www.4tamilmedia.com செய்தித் தளத்தில் இவ்வார அறிமுகம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும் அறியத் தந்து மகிழுங்கள்.

நன்றி.


இதற்கு முன் மல்லிகை மகள் இதழில் நமது பேரண்ட்ஸ் கிளப்பிலிருந்து ஒரு போஸ்ட்
எடுத்து போட்டிருக்கிறார்கள்.

இது நம் அனைவருக்கு கிடைத்திருக்கும் பெருமை.

தொடர்ந்து பதிவிட்டு நல்லது செய்வோம்.
அன்புடன்
புதுகைத் தென்றல்.

இப்போதெல்லாம் நம்முன் இருக்கும் மிகப்பெரும் சவால் மீட்டிங் த டெட்லைன் தான் இல்லையா அது குடும்பத்திலாகட்டும் இல்லை அலுவல் சம்பந்தமானதாயிருக்கட்டும் அதன் கோணங்களும் விகிதாசாரங்களும் மாறுவதேயில்லை. மாதம் பிறந்தால் மின்சாரக்கட்டணத்தில் இருந்து பால் அட்டை வரை குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்த வேண்டியுள்ளது, இரு பால் உறவுகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நேரம் தவறாமால் செய்யத்தவறினால் அவர்கள் பால் இருக்கும் அக்கறை கேள்விக்குறியாகிறது. அலுவல்கத்திலோ கேட்கவே வேண்டாம், இது போன்ற இன்றியமையாத பண்பை நம் பிள்ளைகளிடத்தில் சிறுவயதில் இருந்து வளர்ப்பது எப்படி என்று ஒரு எண்ண ஓட்டம் வந்ததும் அதற்கு நான் கடைப்படித்த வழி முறைகள் இதுவே.

01. மாதாந்திர சிறுவர் சஞ்சிகைக்கு பணம் கட்டி விட்டு முதல் சில மாதங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு புத்தகம் வந்து விட்டதா என்று அவர்களிடமே விசாரிப்பது. அதன் பலன் அடுத்த மாதத்தில் இருந்து அவனே அந்த தேதிகளில் தாபால் பெட்டிகளில் பார்க்கத்துவங்கிவிட்டான்.

02. அவர்களுக்கு வேண்டிய பேப்பர் பேனா போன்றவைகளை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாங்கித்தருவது என்றும் அந்த குறிப்பிட்ட தேதி வரை இருப்பை கணக்கு வைத்துக்கொள்வதும் பின் தேவைகளைச்சொல்வதும் அவர்கள் பொறுப்பு என்று நடைமுறைப்படுத்தினேன்.

03. கேபிள் காரனுக்கு பணம் தருவதை அவர்கள் பொறுப்பில் கொடுத்தேன். (தவறினாலும் நமக்கேதும் பாதகமில்லை தானே)

இது போல் இன்னும் பலதும் செய்யலாம் உங்கள் அனுபவங்களை/நடைமுறைகளள பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகளும் ஒருவேளை உங்களுக்குப் பயன்படலாம் முயற்சி செய்து பாருங்களேன்.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்