பேரன்ட்ஸ் கிளப்

இது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.

Showing posts with label புதுகைத் தென்றல். Show all posts
Showing posts with label புதுகைத் தென்றல். Show all posts

பெற்றோருக்கு எந்த வயதுப்பிள்ளையும் குழந்தைதான். அந்தக்குழந்தையின் நல்லபடியாக பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து, கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து, என ஒவ்வொரு வயதிலும் ஒரு ரகமாக அவர்களுடன் நம் பயணம் இருக்கும். ஒவ்வொரு வயதிலும் பிரச்சனை ஒவ்வொரு ரகமாக இருக்கும். அவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.


 சின்னக்குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றோ, டீன் ஏஜ்ல என்ன படிப்புல கான்சண்ட்ரேட் பண்ணாம என்றோ இருந்துவிட முடியாத விடயம் பிள்ளை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான நிகழ்வாக குழந்தையை புரிந்துக்கொள்வதை சொல்லலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகம் என்பதால் புரிந்து கொண்டால் தவிர அந்தக்குழந்தையின் வளர்ச்சியில் நம்மால் முழு பங்கு எடுத்துக்கொள்ள முடியாது.

 பெற்றோருக்கும் குழந்தைக்குமான உறவு: பெற்றோரும் குழந்தையுமே உறவுதானே!! இதுல என்ன தனியாக இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். ஒவ்வொரு உறவிலும் ஒரு தனித்தன்மை. அதை பேணிக்காக்க வேண்டும். கணவன் - மனைவி உறவுக்குள் அந்த புரிதல், பேணல் இல்லாவிட்டால் வாழ்வில் ஜீவனே இருக்காது. அது போலத்தான் பெற்றோர்- குழந்தை உறவு.

அன்பு - இது எந்த உறவுக்கும் தேவையான விஷயம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே கலப்படமில்லாத அன்பு இருக்க வேண்டும். திகட்ட திகட்ட அன்பை கொடுக்கும் அதே வேளையில் அன்பு எனும் பெயரால் பிள்ளைகளை கெடுத்துவிடவும் கூடாது. தவறைத் திருத்தி, பாராட்டி, என சமமாக அன்பு இருக்க வேண்டும். எதைக்கொடுத்தும் நிவர்த்தி செய்து விட முடியாத அளக்க முடியாத அன்பை குழந்தைக்கு கொடுப்பதை விட சிறந்தது வேறெதுவும் இருக்காது.

கேட்டதை உடனே வாங்கி கொடுப்பதோ, கேட்காததையும் முன் கூட்டியே வாங்கி கொடுப்பதோ அன்பாகாது. அது அவர்களை கெடுத்து விடும்.
 அன்பு  காட்டும்  அதே சமயம்  நாம் குழந்தைகளுக்கு தேவையான நீதி போதனைகளை, ஒழுக்கத்தை, நல்லெண்ணத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அதை தவற விட்டால் ரொம்ப கஷ்டம். 5 வளையாதது 50ல் வளையாது!!

இளம்ப்ராயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் ரோல்மாடல். எதற்கெடுத்தாலும் பெற்றோரிடம் தான் ஓடிவருவார்கள். அந்தச் சமயத்தில் நாம் நம் குழந்தையை எப்படி இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோமோ அப்படி நாம் அவர்கள் முன் நடந்து கொள்ள வேண்டும். கற்றல் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பெற்றோர்தான் சிறந்த முன்னுதாரணம் என்பதை நாம் மறக்க கூடாது. அதே நேரம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளும் அளவளாவ வேண்டும். அதுதான் முக்கியம். குழந்தைகளுடன் செலவிடும் அந்த நேரம் அவர்கள் மனதில் பாசத்தை உண்டு செய்யும்.

 வாரி எடுத்து அணைப்பது என்பது அன்பின் வெளிப்பாடு. வயது ஆக ஆக அது குறைந்துவிடாமல் என்றும் குழந்தைக்கு நம் ஸ்பரிசத்தை தந்தால் குழந்தை பாதுகாப்பாக, கதகதப்பாக உணரும் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளரும்.

அவர்களின் பேச்சை பொறுமையாக கேட்க வேண்டும். நாம் சொல்வதை பெற்றோர் காதுகொடுத்து கேட்கிறார்கள் எனும் எண்ணம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை தரும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு அலுத்து கொள்ளாமல் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு பதில் சொல்வது அவசியம். குழந்தைகளிடம் பொறுமை இழந்து கத்துவது கூடவே கொடாது.
பொறுமையாகத்தான் அவர்களை கையாள வேண்டும்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக நம் பேச்சு இருக்கவேண்டும்.
அவர்களிடம் பேசுவது, அவர்கள் பேசுவதை நாம் கேட்பது என இருவருக்குமிடையே ஆன கருத்து பரிமாற்றம் எப்போதும் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும்.

 வெளியிடங்களில் பிள்ளைகள் பலவிதமான எதிர்மறைக்கருத்துக்களை கேட்கநேர்கிறது. பள்ளியில், விளையாட்டில் என ஈடுபடும் பொழுது பாராட்டு அவசியமாகிறது. பெற்றோர் பாராட்டி ஊக்குவித்தால்தான் குழந்தை தன் முயற்சியை விடாமல் செய்யும் பக்குவத்தை அடையும். ஞாபகமிருக்க வேண்டிய விஷயம். பெற்றோரின் பாராட்டு ஓவர் டோஸாக போய்விடக்கூடாது. “தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்” என்பதனால் தூக்க மருந்து ஓவர் டோஸாகிடாமல் ஊக்கமருந்தாக அவர்களை முன்னேறச்செய்யும் அளவுக்கு இருக்கட்டும்.

பிள்ளைகள் தவறு செய்தால் மிதமான கண்டிப்புடன் புரிய வைக்க வேண்டும். நல்லது எது கெட்டது எது என புரியவைப்பது அவசியம். ஏன் நல்லபாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி புரியவைப்பது அவசியம். ஆனால் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்ககூடாது. அவர்கள் பிள்ளைகள்!!


”நீ ஒரு முட்டாள்!” “ உனக்கு ஒன்றும் தெரியாது!” போன்ற எதிர்மறையான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்ப்பது நலம். இது குழந்தையின் மனதில் அதீத பாதிப்பை உண்டு செய்துவிடும். மாறாக “ நான் உன்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்!!” என்று “இப்படி செய்தால் மகிழ்ச்சியாக இருக்கு” என்றோ சொல்வதனால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் அதிகம்.


அடுத்த பதிவு குழந்தைக்கு என்ன தேவை? (அடுத்த வாரம் )
இனி ஒவ்வொரு புதன்கிழமையும் சைக்காலஜி பதிவுகள் வெளிவரும் என்பதை தெரிவித்திக்கொள்கிறேன்.


பிள்ளைகளுக்கு பள்ளி துவங்கியாச்சு. எல்லா பெற்றோரும்
பிசியா இருக்கும் நேரம் இது. என் மனசுல ரொம்ப நாளா
ஓடிக்கிட்டு இருக்கற ஒரு கேள்விதான் இந்தப் பதிவு.

CURSIVE WRITINGல் தான் சில பள்ளிகளில் எழுத வேண்டும்னு
ரூலே வெச்சிருக்காங்க. ஆனா இந்த CURSIVE WRITING
தேவையா என்பதுதான் என் கேள்வி. இப்படி சேர்த்து
எழுதும் முறையை நாம அதிகமா எங்கேயும் உபயோகிப்பதில்லை.
இப்ப simple letters or printing letters இதுதான்
அதிகமா உபயோகத்தில் இருக்கு. ஏன் பிள்ளைகளின்
பாடப்புத்தகமே இந்த முறையில் தான் அச்சிடப்பட்டு இருக்கு.

அப்படி இருக்க கூட்டெழுத்து அல்லது சேர்த்தெழுதினாத்தான்
நல்லதுன்னு சொல்வதில் அர்த்தம் இல்லைன்னு எனக்குப் படுது.
அதுவும் இந்த எல்கேஜி பிள்ளைகளை கூட்டெழுத்து கத்துக்க
சொல்லி கட்டாயப்படுத்துவது மகா கொடுமை. அந்த வயசு
குழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்.
அப்படி இருக்க அவங்களுக்கு கூட்டெழுத்து கட்டாயமா
சொல்லிக்கொடுப்பதன் அவசியம் என்ன?





சில குழந்தைகளுக்கு எழுத வரும். சில குழந்தைகளுக்கு இப்படி
எழுத கஷ்டமா இருக்கு. b, d இந்த ரெண்டு எழுத்தையும் எழுதும்
பொழுது குழப்பமா இருக்கும். சேர்த்து வார்த்தைகள் எழுதும் பொழுது
படிக்க கஷ்டமா இருக்கும். அதைவிட கஷ்டம் பெற்றோருக்கு!!!
என்ன கேள்வி பதில் எழுதி வந்திருக்காங்கன்னு படிக்க
கஷ்டமோ கஷ்டம்தான். கூட்டெழுத்து நல்லா எழுத கற்ற பின்
எங்கே அதை உபயோகிக்க போறாங்க? கல்லூரிகளிலா? இல்லை
அலுவலகங்களிலா??

ஆங்கிலேயர்கள் டைப்ரைட்டர் கண்டுபிடிக்கும் முன்னாடி கூட்டெழுத்தில்
எழுதிக்கிட்டு இருந்தாங்க. "fair hand" அப்படின்னு சொல்வாங்க.
அதாவது எழுத்துக்கள் அழகா இருக்குன்னு அர்த்தம். ஆனா
அப்பக்கூட 2 ஆம் வகுப்புக்கு மேலதான் இந்த கையெழுத்துப்
பயிற்சியை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா
இப்ப பள்ளிகளில் எழுதுவதே CURSIVE தான்னு கஷ்டப் படுத்தறாங்க.
சிலருக்கு இப்படி எழுத முடியும். சிலருக்கு எழுத முடியாது.
கூட்டெழுத்துல எழுதுவது ரொம்ப ஈசியும் கிடையாது.

இப்ப கிளர்க் வேலையில் கூட எழுத்து வேலை குறைவு.
எல்லா இடத்திலையும் கணிணி ஆக்கிரமிச்சாச்சு. புத்தகங்கள்
எல்லாமே பிரிண்டிங் சிம்பிள் லெட்டர்ஸ்தான். அப்படி இருக்க
கூட்டெழுத்தில் எழுதக்கற்றுக்கொள்வதை கட்டாயம்னு சொல்வது
நியாயமே இல்லை. இப்ப பல இடங்களில் கூட்டெழுத்து முறை
குறைஞ்சுகிட்டே வருது. 2006 வருடத்தில் SAT
( standardized test for college admissions in the United States.)
15 சதவிகிதத்தினர்தான் கூட்டெழுத்துல எழுதியிருக்காங்க.

டிஸெலக்ஸியா பிள்ளைகளுக்கு எழுத்து என்பதே
கஷ்டமா இருக்கும். அப்படி இருக்க அவர்களை கூட்டெழுத்தில்
எழுதச் சொன்னா ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் எனக்குத்
தெரிந்து மாண்டிசொரி முறையில் பாடங்கள் ஆரம்ப
வகுப்புக்களில் நடத்தப்படுவதில்லை. அதாவது ஒரு
எழுத்தை தொட்டு உணர்ந்து, அதை பல முறை
பார்த்து அதன் பிறகு எழுதுவது. (என்னுடைய முந்தைய
மாண்டிசோரி கல்வி முறை பதிவுகளில் பார்க்கலாம்)

எடுத்த உடனேயே A,B,C, ஆரம்பிக்கறாங்க.
சில பள்ளிகளில் ஸ்ட்ரோக்ஸ் போடச் சொல்லிக்
கொடுப்பதே இல்லை. அதிலும் a,b,c ஈசியா இருக்க,
கேபிடல் ஏ,பி,சி ஆரம்பிச்சிருவாங்க. பாவம் பசங்க.

கையெழுத்து பயிற்சிக்காக பிள்ளைகள் விரும்பினா மட்டுமே
கூட்டெழுத்து சொல்லிக்கொடுக்கணும் என்பது என் எண்ணம்.
வற்புறுத்தாம விருப்பம் இருந்தா எழுதட்டும்னு சொல்லிக்
கொடுக்கலாம். நடைமுறை உபயோகத்தில் இருக்கும்
பிரிண்டிங் ஆல்ஃபபெட் எழுதப்பழகுவதில் எந்த தவறும் இல்லை.

அம்ருதா, ஆஷிஷ்ற்கு கர்சிவ் ரைட்டிங் தெரியாது. ஆனா
அவர்கள் இந்தியா வந்து பள்ளியில் சேர்த்த பொழுது
அதை அவர்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஷிஷாவது
அப்போது 7ஆம் வகுப்பு. அம்ருதா 4 ஆம் வகுப்புதான்.
அவர்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ”முடிந்தால் ட்ரை செய்,
இல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடு ”என்று சொல்லிவிட்டார்கள்.
D'Nealian style of writing:

D'Nealian 1978ஆம் ஆண்டு இப்படி எழுதும் ஸ்டைலை
கொண்டு வந்தார்.





பிரிண்டிங் மெத்தட் இல்லாமல் கர்சிவ் ரைட்டிங்கும் இல்லாம
நடுவாந்திரமா இருக்கும் இந்த முறை பிள்ளைகள் கற்க
எளிதா இருக்கும்.

இந்த முறையில் எழுத சொல்லிக்கொடுப்பது நல்லா இருக்கும்னு
சில அறிஞர்கள், ஆசிரியர்கள் சொல்றாங்க. இந்த முறையில்
எழுத சொல்லிக்கொடுக்கும் பொழுது கையெழுத்து பார்க்க
அழகா இருக்கும். (ஆஷிஷ் அம்ருதா இந்த ஸ்டைல்லதான்
எழுதுவாங்க.)
இங்க போய் பாருங்க.

கூட்டெழுத்து கையெழுத்து போல வேணாம் நல்லா இருக்கும்.
நடைமுறைக்கு ஒத்துவராது, அதனால அதை கற்பது
கட்டாயம்னு சொல்லக்கூடாது என்பது என் எண்ணம்.
உங்க எண்ணத்தையும் சொல்லிட்டு போங்க.

இப்ப டீவி, மாத இதழ்கள், வார இதழ்கள் எல்லாத்துலயும் ஒரே
டாபிக்தான் அதிகமா பேசப்படுது. அது தனது ஆசிரியையை
குத்தி கொன்ற மாணவன்.

தப்பு யார் மேலன்னு விவாதங்கள் நடக்குது. யாரைச் சொல்லி
நோவது கொஞ்சம் அலசி பாப்போமா?!!

நான் எப்பவுமே சொல்லிக்கிட்டு இருக்கும் மாரல் ஸ்டெடி வகுப்புக்கள்,
நீதி போதனைகள் எதுவும் பள்ளிகளில் கிடையாது. அவற்றிற்கு பதில்
எங்கள் பள்ளி மாணவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்
என மார்தட்டிக்கொள்ள பள்ளி நிர்வாகம் விரும்புவதால ஆசிரியர்கள்
இயக்கி விடப்பட்ட மிஷின்களாக தங்களுக்கு இடப்பட்டிருக்கும் வேலையை
மட்டும் செய்து முடிக்க முனைகிறார்கள். CBSC பாடத்திட்டத்தில்
இப்ப சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பாடங்களை ஸ்ட்ரெஸ்
இல்லாம பரிச்சார்த்தம் செய்யும் முறை வந்திருக்கு. ஆனாலும்
இந்த CONTINUOUS CLASS ROOM ASSESSMENT கேள்வித்தாள் செட்
செய்து, பரிட்சை வைத்து, பேப்பர் திருத்தி ரிப்போர்ட் கார்ட்
தருவதை விட ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும் தொடர்ச்சியான
ஒரு ஸ்ட்ரெஸ் என்றே சொல்ல வேண்டும்.

யோகா, டான்ஸ், விளையாட்டு இதெல்லாம் கட்டாயமா வெச்சிருக்காங்க.
இத்தோடு வேல்யூஸ், மாரல் ஸ்டெடி வகுப்புக்களையும் கட்டாயமாக்கணும்.
அப்போ இழந்த நீதி போதனைகள் பிள்ளைகளுக்கு கிடைக்கும். அப்படியும்
ஒரு தலைமுறை பள்ளிக்குழந்தைகள் இவற்றை இழந்ததை ஈடு செய்ய
முடியாம போகும். அதனால கல்லூரிகளில் (அதாவது நீதிப்பாடங்களை
பள்ளியில் கற்றிராதவர்களுக்கு என அமைத்தல் வேண்டும்.

மெத்த படிச்ச மேதாவியா மட்டும் இருந்தா போதாது. அதனால
நல்ல குடிமகனாக்க இதை கல்வித்துறை செய்ய வேண்டும்.


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. CHARITIY BEGINS AT HOME.
சத்தியமான உண்மை இது. எதுவும் நம்ம வீடுகளில் இருந்துதான்
துவங்கனும். எனக்கு வேலை இருக்கு. இரண்டு பேரும் வேலை
பார்க்கிறோம்னு சொல்லி ஓடிட முடியாது. தப்பிக்கவும் வழி இல்லை.
நம்ம பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான கடமை
நமக்கு இருக்கு. பெற்றால் மட்டும் போதாதே! நல்லது கெட்டது
சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய
கடமை. பள்ளியில் சேர்த்தோமா... ஃபீஸ் கட்டினோமா,
வேண்டியதை வாங்கிக்கொடுத்தோமா!!ன்னு இருக்க கூடாது.

மார்க்கு, ரேங்கு என ஓடாத பள்ளியாக பார்த்து பிள்ளைகளை
சேர்த்து, ஆசிரியரைப் பற்றி எந்த வித தவறான கமெண்டுகளும்
பிள்ளைகளின் காதில் விழாமல், ஒரு மாணவனின் வாழ்வில்
குருவின் அவசியத்தை சொல்லிகொடுத்து அந்த உன்னதமான
தொழிலின் மூலம் அறிவுக்கண்ணை திறக்க வைக்கும் தெய்வங்களுக்கு
என்றும் நன்றியுடையவர்களாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

உங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் பொழுது
உங்களின் ஆசிரியர்கள் பற்றியும் நினைத்து மனதில் ஒரு
குதூகலம் ஏற்ப்படுகிறதுதானே!!! அந்த ஒரு நிலயை,
சந்தோஷத்தை நம் குழந்தைகளும் அடைய உதவி செய்ய
வேண்டும். பள்ளியில் ஏதும் பிரச்சனை இருந்தால், ஆசிரியர்
ஏதும் திட்டியது தெரிந்தால் உடன் பள்ளிக்குச் சென்று
கத்தி சண்டை போடாமல் என்ன நடந்திருக்கிறது என்பதை
அறிந்துக்கொள்ள வேண்டும். ”அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதுதானே அறிவு!!!!

பள்ளியில் ஆசிரியருக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ் அவ்வளவு
இவ்வளவு இல்லை. அதிலும் இந்த பதின்ம வயதுக்கு
குழந்தைகள் இருக்கும் ஆசிரியருக்கும் இருக்கும் கஷ்டம்
அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வீட்டில் இருக்கும்
நமக்கு புரியாத கஷ்டம். ஒரு பதின்ம வயதுக்குழந்தை
இருக்கும் வீட்டில் எப்படி இருக்கும் என உணர்ந்தவர்கள்,
அதே போல 30க்கும் மேற்பட்ட குழந்தையை ஒரு இடத்தில்
உட்கார வைத்து பாடம் சொல்ல என்ன பாடு படுவார்கள்
என தெரிந்தால், புரிந்தால் போதும்.

எதுவும் நடந்த பிறகு பேசி புண்ணியம் ஏதுமில்லை.
ஆகவே முன்பே நன்கு யோசித்து, இப்படி இப்படி
நடக்கலாம் என அவதானித்து நாம் செய்ய வேண்டியவற்றை
செய்ய வேண்டும்.

யார்மேலும் தவறு இல்லை என்றோ, ஒருவர் மீது
தவறு என்றோ சொல்ல முடியாத சூழல். ஆகாவே
நம் கடமையை நாம் சரியாக செய்ய வேண்டும்
எனும் எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டால்
பிரச்சனைத் தீர வாய்ப்பிருக்கிறது

தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்
பொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.

பதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்
உரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த
அந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.

1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை!
பள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய?

நிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்
என நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்
அளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்
என்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.
அதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.

ஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்
நடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்
கூடாது.

2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.
நானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு
சென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.
நீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி?

நிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி
பிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை
நடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு
ஆதரவாக இருப்பது அவசியம்.

3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து
கொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)

நிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி
வேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை
புரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த
பொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்
சில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்
அவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த
தகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று
ஓடுவதால் மகன் பாவம்)

( எனக்கு இந்த இடத்தில் தோணிய
பாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்
அடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.
தானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டில்லாமல் இருக்கலாம்.)


4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.
ஏன் இப்படி செய்கிறார்கள்?

நிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு
உங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்
இந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது
பிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை
கட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.

5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது
மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.
பேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது
நம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் பெரிய மாற்றத்தை உண்டு
படுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்
கொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.

6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?
நிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்
குறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்
பிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.

இப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக
பல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்
என்னென்ன பிரச்சனைகளோ? அவற்றை எப்படிக்கையாள்வது என்பது
ஒரு கலை தான்.

3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று
சொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு
பிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்
நடப்பது போல!!! 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.
இந்த வயதுதான் கடினம்.

சோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.
அதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்
ஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
அது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு
விதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.

நவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்
எபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.
ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.
எங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்
9 மணிக்கே தூங்கப்போய்விடுவோம்.:))

காலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.
அப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்
என்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்
பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

வணக்கம்,

உங்களையெல்லாம் சந்திச்சு ரொம்ப நாளாச்சு. C.B.S.C பாடத்திட்டத்தில்
இப்பொழுது பல மாறுதல்கள். பாடத்தை மனப்பாடம் செய்து
பரிட்சை எழுதி மார்க் வாங்கிய காலமெல்லாம் போயிடிச்சு.

இப்போ சப்ஜெக்டுகளுடன் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸுக்கும்
மதிப்பெண் கொடுக்கப்படுது. பாட்டு, யோகா, படம் வரைதல்
என எத்தனையோ இருக்கு.

ரேங்கார்டில் உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள், ப்ராஜக்ட்களை
முறையாக சொன்ன தேதியில் சமர்ப்பித்தல், என பல அம்சங்களும்
சேர்க்கப்படுது. CONTINUOUS ASSESSMENT மூலம் பாடங்கள் மதிப்பீடு
செய்யப்படுவது போல மேற்சொன்னவைகளையும் பார்க்கிறார்கள்.
ஆகவே குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால்
உட்கார வைத்து பேசுங்கள். பள்ளியில் அன்றாடம் என்ன நடக்கிறது?
என கேட்டுத் தெரிந்து ப்ராஜக்ட் சரியாக சமர்ப்பிக்கிறார்களா? என
பார்க்க வேண்டியதும் நம் கடமை.



இந்த ப்ராஜக்ட் பத்தி பேசும் பொழுது அது என்னவோ பெற்றவர்களுக்கு
தரப்படுவது போல நினைக்கும் சூழல் ஏற்படுகிறது. நாம் செய்து
கொடுப்பதற்கு பதில், அருகிலிருந்து செய்ய உதவ வேண்டும்.
பல ப்ராஜக்டுகளுக்குத் தேவையான படங்கள் கடைகளில் கிடைப்பதில்லை.
ஆகவே, வீட்டில் கணிணி,இண்டர்நெட் கனெக்‌ஷன்,
பிரிண்டர் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டது. தனக்குத் தேவையான
விவரங்களை அவர்கள் தேடி கண்டுபிடித்து, வேர்ட் டாக்குமெண்டில்
போட்டு எப்படி பிரிண்ட் எடுப்பது என்பதை சொல்லிக்கொடுப்பது
அவசியம். நாமும் கவனமாக அவர்களை கண்காணிப்பது அவசியம்.



ப்ராஜக்டுக்கு தேவையான சில உதவிப் பொருட்களை முன்னக்கூடியே
வாங்கி வைத்துக்கொள்தல் நல்லது. அப்பொழுதென்று ஓட முடியாது.
ஒரு மினி ஷ்டேஷனரி ஷாப் போல சார்ட், க்ளூ, வகை வகையாக
வெட்டும் கத்திரிக்கோல், செலோ டேப், கலர் செலோடேப்கள்,
ஹேண்ட் மேட் பேப்பர், ஸ்ட்ரா, ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்( ஷ்டேஷனரி
ஷாப்பில் கிடைக்கும்), சாடின் ரிப்பன், சின்னசின்ன ஸ்டிக்கர்ஸ்,
நெற்றிக்கு வைக்கும் பொட்டுக்கள், கலர் நூற்கண்டு, ஊசி செட்,
என ஏற்பாடு செய்து வைத்துக்கொள்வதால் பிள்ளைகள் ப்ராஜக்டை
நேரத்தில் சமர்ப்பிக்க நாமும் உதவ முடியும். கடைசி நேரத்தில்
சொல்கிறாயே என பிள்ளைகளிடம் கோவப்படாமல் இருக்கவும்,
கடைசி நேரத்தில் கடைக்கு ஓடுவதை தவிர்க்கவும் இந்த முன்னேற்பாடுகள்
அவசியமாக இருக்கும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதே போல வெறும்
மனனம் செய்து மதிப்பெண் வாங்குவது வாழ்க்கைக்கு போதாது
என்பதால்தான் இந்த மாற்றம் கல்வித்துறையில் வந்திருக்கு. நல்லதொரு
மாற்றம் தான். மாற்றத்தை நாமும் உணர்ந்து குழந்தைகளுக்கு
உதவி செய்வோம்.

வெட்கம்... அழகான வார்த்தை. வெட்கப்படும்பொழுது சிலர்
இன்னும் அழகாக தெரிவார்கள். ஆனால் இந்த வெட்கமே
சிலருக்குத் தடையாக இருக்கும். பெரிய அளவில் முன்னேறாமல்
போய்விட இந்த வெட்கம் காரணமாக இருக்கலாம்.

SHY CHILD என அழைக்கப்படும் சில குழந்தைகளை வளர்ப்பது
அவ்வளவு சுலபமல்ல. சுற்றத்துடனும், நட்புடனும் கலந்து
விளையாடாத தன் குழந்தையால் மனவருத்தத்திற்கும்
வெறுப்புக்கும் ஆளாகும் பெற்றோர் எத்தனையோ பேர்.
தன் பெற்றோர் வேறு யாருடனும் பேசி மகிழ்ந்து கொள்ள விடாமல்
அழுது, பிடிவாதம் பிடித்து என கவனத்தை திசை திருப்ப
முயற்சி செய்வார்கள் இத்தகைய குழந்தைகள். பொறுமையாக
இத்தகைய குழந்தைகளை கையாள வேண்டும்.

பொது இடத்தில் சாப்பிட படுத்துவார்கள், பார்ட்டி, கல்யாணம்
போன்ற இடங்களுக்குச் சென்றால் அம்மாவின் காலை கெட்டியாக
பிடித்துக்கொண்டு எங்கும் நகர விடாமல் செய்வார்கள்.


வளர வளர சிலக்குழந்தைகள் எல்லோருடனும் கலந்து பழக
ஆரம்பிப்பாரள் என்றாலும் சிலர் அந்த வெட்கம் தயகக்த்துடனே
வளர்வார்கள். தன்னம்பிக்கை குறையும். யாருடனும் கலந்து
பேசாததால் தனிமை விரும்பிகளாகிவிடுவார்கள்.

என்ன செய்வது?? இந்தப் பிள்ளைகளை எப்படி சமாளித்து
வளர்ப்பது??

வாங்க பகிர்ந்துக்கலாம். நாளைய பதிவில் பார்க்கலாம்.

குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு பெற்றோர்களுக்கு
இருப்பது போல குழந்தை நல மருத்துவருக்கும் இருக்கு.
குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிரது இவர்களது
வேலை. மிகவும் ஸ்ட்ரெஸ் தரும் மருத்துவத்துறையில்
இருப்பதாலோ என்னவோ பல மருத்துவர்கள் எதையும்
பெற்றோர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நோய்க்குண்டான மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு
அனுப்பி விடுவார்கள்.

என் அம்மாவின் ஒன்று விட்ட தம்பி ஒரு குழந்தை
நல மருத்துவர். அம்ருதா பிறந்த உடன் தலையை இஞ்ச்
டேப் வைத்து அளந்து பார்த்து, கைகளில் பென்சில் கொடுத்து
பிடிக்கிறாளா என்றெல்லாம் செக் செய்தார். 1 1/2 நாளிலேயே
அம்ருதாவுக்கு ஜாண்டிஸ் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து
உடன் போட்டோதெரப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார்.

அப்போதுதான் எனக்கு குழந்தை நல மருத்துவரின்
முக்கியத்துவம் புரிந்தது. தலையின் அளவை வைத்து
மூளையின் சைஸை கண்டுபிடிப்பார்களாம்! கையில்
கொடுப்பதை பிடிக்கும் சக்தி, திறன் இவற்றை சோதித்து
ஏதும் பிரச்சனை என்றால் ஆரம்பித்திலேயே கண்டு
பிடிப்பார்கள் என குழந்தை நல மருத்துவரின் பங்கு
சொல்லிவிட முடியாது. வெறும் காய்ச்சலுக்கும், ஜுரத்துக்கும்
மட்டும் மருந்து கொடுக்கும் மருத்துவர் போல இல்லை.

சரி இவ்வளவு ராமாயணம் ஏன்? எனது சென்ற பதிவுக்கு
ஒரு குழந்தை நல மருத்துவரிடமிருந்து வந்திருந்த
பின்னூட்டத்தை தொடர்ந்து அவரின் வலைப்பூக்களை
சென்று பார்த்தேன். வியந்தேன். எப்படிப்பட்ட நிகழ்வுகள்
பெற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ அவற்றை
மிக அழகாக தொகுத்து தனது வலைப்பூவில் தந்திருக்கிறார்
டாக்டர்.ராஜ்மோஹன்.

பலருக்கும் உதவும் என்பதால் அவரின் வலைத்தளங்களை
இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

குழந்தை நலம் வலைப்பூ:


உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

குழந்தையின் ஜிப் அவிழ்க்கும் போது மாட்டிக்கொண்டால்?

உங்கள் குழந்தையின் உயரத்தைக் கணிக்க

இப்படி நிறைய்ய்ய இருக்குங்க அவரது வலைப்பூவில்.

இந்தப் பதிவின் மூலம் மதிப்பிற்குரிய டாக்டர்.ராஜமோஹன்
அவர்களுக்கு நமது பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து
பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து
வைத்து பதிவு போட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

என் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா
போதும்!

என் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா
பொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி!!

இப்படி சொல்லும் வகை பெற்றோரா! உங்கள் குழந்தை அதிக
நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

ADD - ATTENTION DEFICIT DISORDER
அதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு
ஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை
ஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்
அதீதமாக ஆக்டிவாக இருப்பதும்,(hyperactive)
முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)
போன்ற குறைபாடுகளும் இருக்கும்.

இந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது
பல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்
என்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

முறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு
பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,
சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை
கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்
நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்
பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்
இந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்
அடிக்கும் எச்சரிக்கை மணி.

பரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு
சாத்தியம் இருக்கிறது
நாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,
உண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்
ஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக
இருக்கக்கூடும்.




பல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி
குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி
பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி
பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு
கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி
வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்
காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து
இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.

நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்
பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான
மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்
போகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான
பழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி
அதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,
குறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்
செய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து
ஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.


தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,
நொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.
வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட
இதே விளைவைத் தருகின்றன.

கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை
நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை
ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத
பொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய
உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

ADD - ATTENTION DEFICIT DISORDER இதன் அறிகுறிக்கள்:

சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,
சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு
தாவுதல்.

ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய
முடியாது.

ஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது
சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.

முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்
செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்
அதை செய்ய மாட்டார்கள்.

ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து
முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.

பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை
காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்
பெற்றோருக்கு வரும்.


பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.
குழப்பமான மனநிலை.

இவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.
தகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று
ஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,
ட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்
அறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.


ஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து
குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து
அதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.
வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.
அதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை
எடுத்துக்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட
சக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை
அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முறையான மனநலமருத்துவரைச் சந்தித்து
தேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்
குழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான
வாழ்க்கையை குழந்தைக்கு வழங்கலாம்.

ஸ்கூல் திறக்க போவுது, சிலருக்கு திறந்திருக்கும்.
நேற்றுவரை அம்மாவின் துப்பட்டாவை கட்டிக்கொண்டு
அலைந்த பிள்ளை ,”புது யூனிஃபார்ம், புது டிபன் பாக்ஸ்,
புது பேக், புது வாட்டர் பாட்டில் கலக்கறே சந்துரு””!!
என்று பள்ளிக்கு செல்ல தயராக இருக்கும்.

எல்லாம் புதுசாதான் வாங்கிக் கொடுத்திருக்கோம்.
பையன்/பொண்ணு அழுகாம ஸ்கூலுக்கு போயிடுவாங்கன்னு
நினைச்சிருப்போம். அப்படியே கவுத்து ரகளை செஞ்சு
நம்மளை, டீச்சரை ஒரு வழி ஆக்கிடுவாங்க.

அம்மாவோட கழுத்தை கட்டிக்கிட்டு தொங்கிய என்
கிளாஸ் பையன் ஞாபகத்துக்கு வர்றான். ஆரம்பப்பள்ளி
ஆசிரியைகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே
குழந்தையை முதலில் அழாமல் வகுப்பில் உட்கார
வைப்பதுதான். ஒரு குழந்தை அழுகை நிப்பாட்டிய
நேரத்தில் இன்னொன்று மூலையில் உட்கார்ந்து
அழுவதைப் பார்த்து மத்ததுக்கும் பொங்கும்.

கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகும் இந்த நிலை மாற.
அப்புறம் நாம் ஸ்கூல் கேட்கிட்ட போறவரைக்கும்தான்.
கையை ஒதறிட்டு டாடா காட்டக்கூட மறந்துட்டு
பிள்ளை ஓடிடும்.

வீட்டிலேயே நாம் குழந்தையை இந்தப் பிரிவுக்கு
தயார் படுத்த வேண்டும்.

சொல்லாதீங்க பதிவை படிச்சிருக்கீங்களா!

இதுவும் முக்கியம்:

சரி பிரிவுக்கு தயார் செய்வது எப்படின்னு பாக்கலாம்.

டே கேர் செண்டரிலோ/பள்ளியிலோ விடுவதை
ஆரம்பத்தில் குழந்தை விரும்பாது. பிரிவை தாங்க
இயலாத இந்த சுபாவம் ரொம்ப இயற்கையானது.
பெற்றோரின்  அணுகுமுறை ரொம்ப முக்கியம்.

அடிப்பதோ, திட்டுவதோ கோபப்படுவதோ சுத்தமாக
உதவாது. பொறுமை, பொறுமை, முறையாக கையாளுதல்
தான் உதவும். கீழே கொடுத்திருக்கும் முறைகள்
உளவியலாளர்களின் கருத்துக்களும் கூட. 


1. முத்த மழை பொழிந்து:
அன்னையின் அரவணைப்பு பிள்ளைக்கு தரும்
இதம் சொல்ல முடியாது. அழும் குழந்தையை
ஏதும் சொல்லமால் பக்கத்தில் இருத்தி
முத்தம் கொடுப்பது நல்லது. இப்பொழுதெல்லாம்
1 வாரம் வரை பெற்றோர்களும் வகுப்பிலேயே
உடன் இருக்க அனுமதிக்கிறார்கள்.

2. குழந்தையின் பையில் ஒரு நோட்டிலோ
அல்லது பள்ளி டயரியிலோ குடும்ப
புகைப்படம் ஒன்றை வைத்து அனுப்புவதும்
உதவுமாம். ஞாபகம் வரும் பொழுது
புகைப்படத்தை எடுத்து பார்த்து குழந்தை
கொஞ்சம் திருப்தி பட்டுக்கொள்ளும்.

3.  நல்லபிள்ளை விளையாட்டு:

நீ அழாம நல்ல பிள்ளையாய் ஸ்கூலுக்கு
ரெடியாகும் ஒவ்வொரு நாளும் பாயிண்ட்ஸ்
கொடுப்பேன், அதை வைத்து உனக்குத்
தேவையான விளையாட்டு சாமான்கள்
வாங்கிக்கொள்ளலாம், என்றோ ஹாப்பி
ஃபேஸ் சார்ட் ஒட்டி அதில் எத்தனை ஹாப்பி
ஃபேஸ் வருகிறதோ அதுக்குத் தகுந்த மாதிரி
பிள்ளை விரும்பும் சாமான் அல்லது தின்பண்டம்
என்றும் வைக்கலாம்.

4. பேசாமல் இருத்தல்:
அழும் குழந்தையோடு “டூ” விடுவதல்ல.
சில சமயம் குழந்தை அழும் பொழுது
நாம் உடன் ரியாக்ட் செய்யாமல் 10 நிமிடம்
போல நம் வேலையை அருகிலேயே
உட்கார்ந்து செய்து கொண்டிருந்தால்
தன் நடவடிக்கையை கவனிப்பார் இல்லாமல்
தானே சமாதானமாகி விடும். சில சமயம்
அழும் குழந்தையை சமாதானம் செய்கிறேன்
என்று பெற்றோர் செய்யும் ஆட்டம் அதிகமாக
இருக்கும்.

5. உறுதி மொழி:

எங்கே நம்மை அப்படியே விட்டுவிடுவார்களோ!
எனும் பயம் குழந்தைக்கு இருக்கும். அதனால்
ஸ்கூல் 11 மணிக்கு முடிஞ்சிடும், வீட்டுக்கு
வந்திடலாம், உனக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சு
வெச்சுகிட்டு அம்மா ரெடியா காத்திருப்பேனாம்!/
ஸ்கூல் பெல் அடிச்சதும் வெளியே யார் இருப்பாங்கன்னு
பாரு!போன்ற  உறுதிமொழிகள் பயத்தை குறைக்கும்.

6. நேற்று என்பது வரலாறு அதைப்பற்றி பேசலாம்:
தான் சாதித்தவற்றைப் பற்றி பேசுவது குழந்தைகளுக்கு
ரொம்ப பிடிக்கும். நேத்து எவ்வளவு குட் பாயா எந்திரிச்சு
ரெடியான!, ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும்
நாம பைக்ல ஒரு ரவுண்ட் கூட போனோம்ல என
பேசுவது  தான் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவோம்
என்ற எண்ணமும் நல்லபடியாக கிளம்பி போனால்
ட்ரீட் கிடைக்கும் என்பதும் புரியும்.

7.  பிள்ளை விரும்பும் பூ, பொம்மை, மிக விரும்பும்
வகை உணவு, போன்றவற்றை மறைத்துவைத்து
சர்ப்ரைஸாக கொடுக்கலாம்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர் ரிலாக்ஸ்டாக
இருக்க வேண்டும். இந்த மாறுதலை குழந்தை புரிந்து
கொள்ளும் வரை நாம் புரிய வைக்க முயற்சி செய்து
கொண்டே இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் நம் கோபத்தையோ டென்ஷனையோ
குழந்தை மீது காட்டினால் அது நிலமையை இன்னும்
மோசமாக்கும். “அழாதே! அழுகையை நிப்பாட்டு”
போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவது நலம்.
நம் முன்னால் ஏதும் நடவாத மாதிரி பொறுமையாக
சிரித்த முகத்துடன் இருந்தாலே போதும். குழந்தையை
பிரிகிறோமே, பிரிக்கிறோமோ என்று தேவையில்லாமல்
குழம்பாமல் நிம்மதியாக குழந்தையை பள்ளியில்
விட்டுவிட்டு வரவேண்டும்.

ஆசிரியை, பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சியினால்தான்
ஒரு குழந்தையின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
பெற்றோரும் சிலவற்றைச் சொல்லிக்கொடுத்து
பிள்ளையை வளர்த்தால்தான் பள்ளியில் மேலும்
கற்க அது உதவும்.

புதுகை மாவட்டம் ராயவரம் ஒன்றியத்தைச் சேர்ந்த
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின்
பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

பள்ளி செல்ல விரும்பு
பாடம் நல்லக் கரும்பு
படித்து விட்டுத் திரும்பு
பண்ண வேண்டாம் குறும்பு;
அரும்பு போல சிரிப்பாய்
  எறும்பு போல இருப்பாய்!



ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.
கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.
அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.
அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?
நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?
எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்
கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பது
போல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே
சொல்லவில்லை.

1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்
இருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்
போட்டு விழுவான். வகை வகையா சமைச்சு
போடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு
பாத்து பாத்து செய்யறோமே! என்னாச்சோன்னு
பயந்து டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப்போனா
உடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.
அதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால
லோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு
சொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு
பால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்
கூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு
கொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,
கொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.

எங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்
6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.
என் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.
அதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு
ஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்
எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு
வேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.
ஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.
ஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.

உயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா
ரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த
உயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்
வலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.
பாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்
கொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது
உயரம் அதிகமான பிள்ளைகளுக்கு.


நார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத
எடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.

போன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்
கிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட
என்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு
தூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா
என் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.
”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே
வளர்ச்சி!!”

நல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.
டயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.
வயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு
வயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.
டயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட
பேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது
BALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்
இருக்கணும்.


ஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த
நல்ல உடலமைப்பை இப்ப உருவாக்கினாத்தான் உண்டு.
இந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,
இப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்
உடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு
கொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.

இந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.
எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்
அளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்
கொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே
ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.

ஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.
இப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.

பால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,
பருப்பு,இட்லி/தோசை/உப்புமா,அரிசி/சப்பாத்தி,
சோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.
அசைவம் சாப்பிடறவங்க
முட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு
இல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்
கொடுக்கலாம்.

இரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து
அதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.
இதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.
உடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.

இரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்
கொடுக்கலாம். பேரிச்சம்பழம் விரும்பாதவங்களுக்கு
அந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,
கீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்
நல்லா கொடுக்கணும்.

இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான
தேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,
ஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்
தேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக
கொடுக்க வேண்டும்.

இதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்
சைக்கிளிங், டான்ஸ், விளையாட்டுக்கள்னு
வைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு
ஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.
இல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி
அவஸ்தையைக் கொடுக்கும்.முறையான உடற்பயிற்சி
பதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்
heart disease, certain cancers, diabetes,
hypertension, bowel problems மற்றும் osteoporosis
போன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.

ஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு
சாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால
கவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு
எப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி
பதின்மவயதுக்குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
இதில் ஆண்குழந்தை, பெண்குழ்ந்தைன்னு
பாகுபாடே இல்லை.

இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு
கொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்
தேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.
அப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.
உடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்
பளிச், பளிச் தானே!

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்,
எமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்
பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு
குறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.
உடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்
ரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,
தயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ
சொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை
ரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.
இல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது
பல பிரச்சனைகள் வருமாம்.

முறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி
கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட
நாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ
பிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன??

குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்
வரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.
பதின்மவயதின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம்.

முடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு
டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.
அவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்
அவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,
நாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு
கொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்
குழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.
(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்
கவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல
மேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா
கொடுக்கலாம்.


இப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே
என் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப
சந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்
வெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,
அயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட
ஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.


இந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்
கிடைக்கும்.

குழந்தைகளை நர்சரியிலோ, ப்ரீஸ்கூலிலோ சேர்க்கும்
முன் குழந்தைகளை தயார் செய்வது மிக முக்கியம்.
இண்டர்வ்யூவுக்கு தயார் செய்வது பத்தி நான் சொல்லவில்லை.

பசங்களுக்கு மைண்ட்செட் செய்வதற்கு முன்னாடி
பெற்றோர்கள் இதை ஒருவாட்டி படிச்சிக்கணும்.
ரொம்ப முக்கியம்.


பள்ளியில் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகமல்
இருக்க சில அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுப்பது
நல்லது. பள்ளிக்கு அனுப்பும்முன் பெற்றோர்கள் இதை
மனதில் வைத்து பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த
வேண்டியது அவசியம்.



1.TOILET TRAINING:

6 மாதம் முடிந்ததுமே இந்த பழக்கத்தை துவக்கிவிடலாம்.
டாய்லட் சீட்டில் உட்காரவைத்து பழக்கினால் பழகிவிடும்.
இது வீட்டில் பழக்கப்படாவிட்டால், பள்ளியில் பிரச்சனைதான்.
அதனால் கவனமாக, முக்கியமாக பழக்கவேண்டிய
விஷயம் இது.

2. தானாகவே சாப்பிடுவது:
”என் பிள்ளைக்கு நான் ஊட்டினால்தான் வயிறு நிறைஞ்சா மாதிரி!!”
அப்படின்னு சொல்லி சொல்லி ஊட்டி விட்டு பழக்கப்படுத்தியிருப்பீங்க.
ஆனா பள்ளியில யாரும் ஊட்டி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்க.
குழந்தை உட்கார ஆரம்பித்த உடனேயே தட்டு போட்டு
சாப்பிட வைப்பது அதுவும் தானாகவே சாப்பிட் வைப்பது
நல்லது.

3.பகிர்ந்து கொள்ளுதல்:
சில குழந்தைகள் யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள
மாட்டார்கள். இதனால் யாருடனும் எளிதில் பழகவும்
மாட்டார்கள். பகிர்ந்து கொள்ள பழக்கினால் பள்ளியில்
வாழ்க்கை இனிதாகும்.

4. சின்னச் சின்ன வேலைகள் செய்வதை பழக்கப்படுத்த
வேண்டும். தன் உடையை கழற்ற மாட்ட, ஷூ அணிய
என பழக்கப் படுத்துவது அவசியம்.

பிறருக்கு உதவும் பாங்கு, sorry, thank u சொல்லப்
பழக்குதல், மரியாதையாக நடந்து கொள்ளுதல்,
தன் சாமான்களை பாதுகாத்துக்கொள்ளுதல் எல்லாமும்
மெல்ல மெல்ல பழக்க வேண்டும்.

இவை பள்ளியில் குழந்தை நல்ல முறையில்
செட்டாக உதவும்.

பிள்ளைகள் மனது கல்மிஷமில்லாதது, பரிசுத்தமானது.
அதனால் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள்.

கள்ளங்கபடமற்ற அந்த பூக்களின் சுகந்தம் தரும்
சுகம் சுகமோ சுகம்.

அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விளைவிப்பது போல
பெரியவர்கள் நாமே பல செய்கைகள் செய்கிறோம்.
இது மிக மிக தவறு.

அப்படி என்னங்க செஞ்சிடறோம்னு கேட்டா...
பல பெரியவங்க அந்தக்கால ஆளுங்க மட்டுமில்ல
மாடன் காலத்து காரங்களும் தான் ஒரு குழந்தையை
பார்த்தா கொஞ்சினோமா, பேசினோமான்னு வாரது இல்ல.

கலர் குறைவா இருக்கற குழந்தையா இருந்தா
“உங்கப்பா,அம்மா என்ன நேரம்!! நீ மட்டும்
ஏண்டி கரிக்கட்டையா பொறந்திருக்க” என்று
சொல்வது.

”உங்க கலர் உங்க குழந்தைக்கு வரலை சார்”என்பது
இதெல்லாம் குழந்தையின் மனதில் நஞ்சை கட்டாயம்
விதைக்கிறது.

நிறத்தில் என்ன இருக்கிறது??? புற அழகு முக்கியாமா?
அக அழகு முக்கியமா??? அகம் அழுக்கு இல்லாமல்
இருந்தால் புறத்தில் தானாகவே தெரியும்.


பாரதியின் இந்தக் கவிதையை எப்போதும்
மறக்காதீர்கள் பெற்றோர்களே, பெரிய்வர்களே!!!


வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.



அடுத்த நஞ்சு,” பிள்ளைக்கு சோறே போட மாட்டீங்களா!!இப்படி
நோஞ்சானா இருக்கு!!”

பிள்ளை பெத்த பிறகு நீ நல்லா ஊறியிருக்க, உன் பிள்ளை
சவங்கி கிடக்கு”

இத்தகைய வார்த்தைகள் பிள்ளைகளின் மனதில் ஆறாத
காயத்தை உண்டாக்கி விடுகின்றன. எதிர்த்து பேசாமல்
குழந்தை இருக்கிறது என்பதற்காக பெரியவர்கள் செய்வது
எல்லாமும் சரியில்லை.

பல பிள்ளைகள் மனதுக்குள் வைத்து கொண்டே மெல்ல
மொளனமாக அழுவார்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


தயவு செய்து பிள்ளை மனத்தில் நஞ்சு வளர்க்க வேண்டாம்.

வீட்டில் இன்னொரு உயிரின் வரவு அதே குதூகலத்தையும் சந்தோஷத்தையும் தரும். ஆனால் மூத்த குழந்தை??!!
அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கு? அதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும், இதுஎல்லாம் இன்னொரு குழந்தை பெற வேண்டும் என முடிவு செய்த உடனே பெற்றோர் இருவரும் முடிவெடுத்து, கலந்தோலாசித்து
செய்ய வேண்டிய மிக முக்கியமான விசயம்.

சகோதரி ஜெயந்தி தனது வலைப்பூவில் இதைப்பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார். அவரின் அனுமதியோடு அந்த பதிவை நம் வலைப்பூவில் அனைவரின் நலன் கருதியும் வெளியிடுவதில் மகிழ்ச்சி. தங்களது
பதிவை இங்கே பதிய ஒத்துக்கொண்டதற்கு நன்றி ஜெயந்தி.

ஜெயந்தியின் பதிவு:
***************************************************

முதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.

நமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.
மூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா?

அலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.

இரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.

எனவே பெற்றோர்களே! கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்!

**************************************************************

மேலும் சில எண்ணங்கள்:

1. முதல் குழந்தையை முன்னிருத்தி சுபாவோட தம்பி/தங்கை
என அறிமுகம் செய்வதால் குழந்தை நமக்கும் உறவு எனும் எண்ணம்
ஏற்படும்.

2. விவரம் தெரியும் வரை இருவரின் பிறந்தநாளுக்கும் இருவருக்கும்
உடை எடுத்துக்கொடுப்பதால் பாதி பிரச்சனை தீரும்.

3. இருவரும் ஒரு செடியின் மலர்கள் என்பதை பெற்றவர்கள்
மறக்கக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் பெரிய குழந்தையை
உதாசினப்படுத்தக்கூடாது.

4. அதற்காக சின்னக் குழந்தையும், அதன் விருப்பு வெறுப்பையும்
ஏற்கத் தயங்ககூடாது.

5. ஆணோ, பெண்ணோ இரு குழந்தைகளும் இரு கண்கள்.
எதில் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய்
எனும் பாகுபாடு தயவு செய்து வேண்டாம்.

பிள்ளை மனதில் நஞ்சு நாமே கலக்க வேண்டாம்.





.

அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.


13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????


பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....


பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.


ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???


பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.



பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???


இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.


பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.


பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

குட்டி ரோஜாக்களாய் என்றும் எங்கும் மணம் பரப்புவது
குழந்தைகள் தான்.

அந்த அழகு குட்டிச் செல்லங்களுக்கு எங்கள் பேரண்ட்ஸ்
கிளப் சார்பில் மனமார்ந்த குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.



எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின் நல்லவர்
ஆவதும் தீயவராவது பெற்றவர் வளர்ப்பினிலேன்னு
பாட்டே இருக்கு.

உண்மையில் குழந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
குழந்தை பிறந்த பிறகு நாம் நிறைய்ய கற்கிறோம்.
கதை சொல்ல, அமுதூட்ட, பொறுமையாக அவர்களின்
நள்ளிரவு விளையாட்டை ரசிக்க என பல கற்றல்கள்
நடக்கின்றன்.




நம்மை கற்க வைத்த அந்த குழந்தைகளுக்கு,
பெற்றவர்களாக்கிய பெருந்தெய்வங்களுக்கு
இந்த நல்ல நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

”நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா”!!!

”எனக்கொரு முயல்குட்டி வேணும்”

ஐயோ, இந்த பூனையை பாருங்களே”ன் எவ்வளவு
அழகா இருக்கு, நாம வளக்கலாம்”!!

இதெல்லாம் உங்க வீட்டுல பிள்ளைங்க அடிக்கடி
சொல்ற வார்த்தைகள் மாதிரி இருக்கா???

பிள்ளைகளுக்கு செல்லப்பிராணி வெச்சுக்கணும்னு
ரொம்ப ஆசை இருக்கும். அது நல்லதும் கூட.





செல்லப்பிராணி வீட்டுல வளர்ப்பதால பிள்ளைகளுக்கு
மனதளவில் நல்ல மாற்றம் இருக்கும். தனது
தோழனா நினைச்சு அவங்க அந்தப் பிராணியோடு
நேரம் போக்குவது அவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும்.

செல்லப்பிராணியை வளர்க்கும் பொறுப்பை
பிள்ளைகளிடம் கொடுப்பதால் அவர்களுக்கு
பொறுப்பு கூடுகிறது, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை
கவனித்துக்கொள்ளும் வளர்ச்சி ஏற்படும்.

உங்கள் வீட்டின் சூழ்நிலை, உங்களின் நிலை
எல்லாவற்றையும் யோசித்து, பிள்ளைகளுடன்
கலந்தாலோசித்து அவர்கள் விரும்பும் செல்லப்
பிராணியை பரிசளிக்கலாம்.






pets and kids எனும் இந்த வலைத்தளத்தை
பாருங்கள். நமக்கு சில ஐடியாக்கள் கிடைக்கும்.

ஆனால் எல்லா குழந்தைகளாலும் செல்லப்பிராணிகள்
வைத்துக்கொள்ள முடியாது. வசதியைப் பற்றிச்
சொல்லவில்லை. அவர்களின் உடல்நிலையை
பற்றி சொல்கிறேன்.

சைனஸ்,அலர்ஜி, சுவாச பிரச்சனை உள்ள
குழந்தைகளுக்கு நாய்,பூனை இவற்றின் முடியினால்
பிரச்சனை அதிகமாகும்.

இது தெரியாமல் பிள்ளை ஆசை படுகிறானே என
வாங்கிக்கொடுத்து அவஸ்தைக்கு ஆளாக நேரும்.
குழந்தை நல மருத்துவரிடம் கேட்டு பிள்ளைக்கு
எந்த பாதிப்பும் இராத பட்சத்தில் செல்லப்பிராணி
ஒன்றை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

இல்லையேல் இப்படி பட்ட குழந்தைகள் இருக்கும்
வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன்கள் வளர்க்கலாம்.


பதிவர் கிருஷ்ணாவின் வலைப்பூவில் இந்தப் பதிவு
பார்த்தேன்.

போரடித்துக்கிடக்கும் பிள்ளைகளுக்கு,தானும்
வலையை மேய நினைக்கும் பிள்ளைகளுக்கு
என சில வலைத்தளங்கள் இருப்பது பற்றி
பதிவிட்டிருந்தார்.

”நாள் தோறும் நீங்கள் இணையத்தில் நேரம் போக்கிக் கொண்டோ அல்லது உருப்படியாக எதாவது செய்து கொண்டோ இருப்பீர்கள்.

குழந்தைகளுக்காக எதாவது வலைப் பக்கங்கள் இருக்கின்றனவா என்று தேடிய போது தான் கிடைத்தது இந்த வலைப் பக்கம்.”

அவரின் பதிவு இங்கே

உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வீட்டு வாண்டும் அழகாக இனி
கணிணி்யில் உபயோகமாக நேரம் போக்கும்.
வாழ்த்துக்கள்.
நன்றி கிருஷ்ணகுமார்





பெற்றோர்கள் கூட்டாக நடத்தும் இந்த வலைப்பூ
வலையுலகில் ஒரு புது முயற்சி என விகடன்
பாராட்டியிருக்கிறது.




அங்கத்தினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஆதரவு அளிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

புதுகைத் தென்றல்

முன்பெல்லாம் பள்ளியில் மாரல் ஸ்டடி என்று ஒரு
வகுப்பு உண்டு. நல்லது கெட்டது கதைகளாக
சொல்லப்படும்.

value education என்று பிறகு மாற்றினார்கள்.

இப்போது இரண்டு வகையும் இல்லை. அதனால்
பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை
நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.

இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு
செல்கிறது.


குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும்
பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால்
உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால்
அடித்து திட்டி செய்வோம்.

தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி
நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்
சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள்
என்னவென்று பார்ப்போம்.

************************************

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது
கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி
முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக
சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில்
சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில்
இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/
தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது
கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன
வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை
தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது
நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை
திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள்
வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.
கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.
இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.

4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்
சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது
"You're welcome" சொல்ல மறக்காதீங்க.

5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.
பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே
போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எஜமான் பட நெப்போலியன்
போல,”கல்யாண வீட்டுல நான் தான் மாப்பிள்ளை, செத்த
வீட்டுல நா தான் பொணம், மாலையும் மரியாதையும்
எனக்குத்தான்” எனும் அந்த வசனம் சினிமாவில் சரி
நிஜத்தில் வெற்றி/தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை
வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப்
பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின்
மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு
வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால்
என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க
வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே
நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியே
வந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே
செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான்
நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது
மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு
படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின்
பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க
வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை
அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணரவேண்டு.



குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளா? கேள்வி ரொம்பவே
யோசிக்க வைக்குதுல்ல???

நண்பர் பதிவர் கதிர் அவர்கள் எழுதியிருப்பதை படிங்க.
பல பெற்றோர்களுக்கு உதவியாய் இருக்கும்.

***************************************************

என் மகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. (ஒன்னாப்பு தானுங்க படிக்குது) கடந்த மாதம் காலண்டுத் தேர்வுகள் முடிந்த பின், அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பிள்ளைகளின் தரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு.

முதலில் வகுப்பாசிரியையோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அடுத்து சோசியல் பாடம் எடுக்கும் ஆசிரியை சந்திக்கச் சென்றபோது, அந்த வகுப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரி மற்ற ஆசிரியைகளைப் பார்த்து விட்டு பின்னர் அவரைச் சந்திக்கலாம் என நினைத்து, மற்ற ஆசிரியைகளிடம் சில சில நிமிடங்களைச் செலவழித்து விட்டு கடைசியாக வந்த போதும், அந்த அறை கூட்டமாகவே இருந்தது.

சரி வேறு வழியில்லையென்று கூட்டத்தோடு நின்று கவனிக்கும் போது தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாப் பெற்றோர்களும்
* எப்பா பார்த்தாலும் விளையாட்டு
* அடங்காத குறும்பு
* வீட்டிலே படிக்கிறதேயில்லை
* சீக்கிரம் தூங்கறதில்லை
என அந்த ஆசிரியையைச் சுற்றி நின்று கொண்டு ஒவ்வொருவராக புகார் சொல்லிக் கொண்டேயிருந்தனர்.

என் மகள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அடிக்கண்ணால் என்னைப் குறுகுறுப்பாக பார்த்தது.

என் மகள் குறும்பு என்ற புகார் எப்போது என்னிடம் இருந்ததில்லை. நாற்காலியில் நான் உட்கார்ந்து இருக்கும் போது, பெரும்பாலும் என் கால்களின் மேலேயேதான் நின்று கொண்டிருக்கும், சில சமயம் பக்கவாட்டில் ஏறி கழுத்து மேல் உட்கார்ந்து சரிந்து சறுக்கல் விளையாடுவதும் நடக்கும்.

எல்லோருக்கும் ஒரு புன்னைகையோடு அந்த ஆசிரியை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். “இதுகெல்லாம் குழந்தைங்க, குழந்தைங்னா விளையாடத்தானே செய்யும். தயவுசெய்து குறும்பு செய்யும் குழந்தையை மிரட்டி மிரட்டி அடக்கி வைக்காதீங்க. நீங்க வீட்டில் அதைத் தொடாதே, அங்க போகாதேனு தொடர்ந்து மிரட்டினா, எதற்கெடுத்தாலும் அந்த குழந்தைக்கு பயம் வர ஆரம்பிக்கும் அல்லது அங்கே அடக்கி வைத்ததெல்லாம் பள்ளியில் வந்து வெளிப்படுத்த முயலும். நான் 40 நிமிட வகுப்பில் 25 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்துவதில்லை. மீதி 15 நிமிடங்கள் கட்டாயம் கதை பேசுவேன்” என்றார்.

இது போல் தொடர்ந்து நிறைய பகிர்ந்து கொண்டேயிருந்தார்...

மனது விட்டேத்தியாக இருந்தது. ‘ஏன் குழந்தைகள் பற்றி பெற்றோரிடம் இத்தனை புலம்பல்கள்’

*சமீபகாலமாக குழந்தைகளை அதிகமாக பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ?
அதிக தூரம் நடக்க பழக்குவதில்லை
*வீட்டு வாசலிலிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறோம்
*வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை
*நமக்கு சிரமம் கொடுக்கும் நேரங்களில் ஒன்று மிரட்டி தூங்க வைக்கிறோம் அல்லது தொலைக்காட்சி பார் என ஒதுக்கி வைக்கிறோம்.

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகளை அழகாகவும், சொகுசாகவும் குரோட்டன்ஸ் செடி போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோமோ என அச்சம் வருகிறது.

(உங்க கருத்தை கண்டிப்பா பதிஞ்சிட்டு போங்க.

-------------------------------------------------------------------------

ஒரிஜின்ல் பதிவு இங்கே இருக்கு.

Blog Widget by LinkWithin

About this blog

நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.

சேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில்
அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.
First come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.

வாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.

நன்றி!

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

மகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்

Subscribe Now: iheart

I heart FeedBurner

Followers

தமிழ் திரட்டி: தமிழிஷ்